Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 AUG, 2025 | 05:08 PM வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர். தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் ச…

  2. 13 AUG, 2025 | 05:02 PM ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று புதன்கிழமை (13) மதியம் 12.30 மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்ற…

  3. Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 02:56 PM செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம், என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.("if they were already dead, the bodies wouldn't be bent," with some of them displaying twisted limbs.) சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எத…

  4. Published By: VISHNU 13 AUG, 2025 | 08:05 PM 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை. குறித்த குடும்பஸ்தரின் தலை மற…

  5. “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம். கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட…

      • Thanks
    • 2 replies
    • 215 views
  6. மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்! யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறாத நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச…

  7. அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்! நாட்டில் நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளுகின்ற பேருந்துகள் மூலம் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்ளை குறைப்பதற்கு புதிய திட்டம் ஒன்று தயரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தனியார் துறையின் தலையீட்டில் முதலாவது முன்னோட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னோடித் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று கதிர்காமம் டிப்போவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கெமராக்கள் பொருத்தப்பட்டன. பல நீண்ட…

  8. கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம் Published By: Rajeeban 13 Aug, 2025 | 10:25 AM கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு சர்வதேச அளவில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை நிலவரம் குறித்த அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த வருடம் முழுவதும் அரசாங்கமும் அதன் முகவர…

  9. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2023 | 08:29 PM இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 55 பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக் காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால் வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும் கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன்…

  10. சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது! சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை ப…

  11. தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ள அவர் நேற்று 12காலை செல்வச் சன்னதி ஆலயத்திற…

  12. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை! செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என …

  13. ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி! ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்த…

  14. மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் 13 Aug, 2025 | 10:49 AM மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது…

  15. எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442800

  16. மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் 13 August 2025 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். அதற்கமைய, இந்த விவகா…

  17. கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12.08.2025) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https:/…

  18. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல் Published By: VISHNU 12 AUG, 2025 | 02:06 AM (எம்.மனோசித்ரா) இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார். இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும…

  19. மேல் நிலை அதிகாரிகளால் பழிவாங்கப்படும் மனைவியான கிராம அலுவலர்; நீதியை பெற்று தருமாறு கணவன் கோரிக்கை! Published By: Digital Desk 3 05 Aug, 2025 | 02:54 PM கிராம அலுவலராக கடமையாற்றி வரும் தனது மனைவி பழிவாங்கப்பட்டு கட்டாய பணியிடம் மாற்றப்பட்ட நிலையில் குறித்த பணியிட மாற்றமானது நீதி அற்ற நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலரின் கணவரான செல்வரத்தினம் கிருஸ்ணரூபன் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரட்சி நிவாரண தெரிவு பட்டியிலில் இடம்பெற்ற முறைகேடான தெரிவு எனும் அடிப்படையிலேயே குறித்த பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனது மனைவியான கிராம அலுவலர் சுற்றுநிருப விதி முறைகளுக்கு அமைவாகவே குறித்த தெரிவு பட்டியலை வழங்கியுள்ளார் என்றும் ஆனால் ஒருசில அ…

  20. தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந் Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட…

  21. சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்! கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாது…

  22. 07 AUG, 2025 | 04:33 PM (எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பா…

  23. யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா! யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியாக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாக் காய்ச்சல் காரணமாக இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- மலேரியாக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் 38 வயதுடையவர். மற்றையவர் 29 வயதுடைய நபர். 38 வயதுடைய நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 29 வயதுடைய நபர் மருத்துவ விடுதியிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவுக்குச் செல்வதற்காகச் சென்று ஆபி…

  24. Published By: DIGITAL DESK 2 11 AUG, 2025 | 08:26 PM யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை பெய்த கனமழையால், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/351, ஜே/363, ஜே/364 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222348

  25. 11 AUG, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.