Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.எப்.எம்.பஸீர்) சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவ…

  2. பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் ; அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் (சி.எல்.சிசில்) கலப்பு தேர்தல் முறையும் புதிய தேர்தல் முறையும் அமையும் வரை பழைய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண சபைகளை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட…

  3. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் இலங்கையை சாடுவதாக வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு! இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான …

    • 2 replies
    • 307 views
  4. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்…

  5. உக்ரைனில்... அதிகரித்து வரும், வன்முறைகள் குறித்து இலங்கை கவலை! உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு, அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் விரோதங்களை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2022/1269…

    • 2 replies
    • 267 views
  6. வடக்கு ஆளுநருக்கு எதிராக வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம்! February 24, 2022 யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதன் போது, பிரதேச சபை உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தார். அதனை சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன் அதற்கு அவர் …

    • 4 replies
    • 465 views
  7. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். அத்துடன் இப்போதுள்ள நிலையில் 92 ரக பெட்ரோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெட்ரோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கைவசம் உள்ளது. எனினும் எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கும். மேலும் ஆறு நாட்களுக்கு தேவையான டீசல் இப்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. எனினும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான த…

  8. Published by T. Saranya on 2022-02-24 15:28:30 (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் வனவள பாதுகாப்பு எனத் தெரிவித்து இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். எனினும் இதுவரையில் காணி அபகரிப்பு நிறுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்டமாக ஆரம்பித்துள்ள போராட்டத்தினை வடக்கு, கிழக்கிலும் பாரியளவில் தொடர்வோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அ…

  9. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 'பறிக்காதே பறிக்காதே காணிகளை பறிக்காதே ' என சபைக்குள் கோஷல் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில்இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த தமிழ் தேசியக்கூட்…

    • 1 reply
    • 305 views
  10. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) உக்ரேன், ரஷ்யா மோதல் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான யுத்த நிலை காரணமாக, அதனால் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு எற்படும் பாதிப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்போகின்றது. எமது ஏற்றுமதியில் நுற்றுக்கு 1.49 வீதம் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று ரஷ்யாவுக்கு எமது ஏற்றுமதி வீதம் நூற்றுக்கு 9.57மாகும். சில நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க முயற்சிக்கின்றன. இவ்வாறான நிலையில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும…

  11. Published by T Yuwaraj on 2022-02-24 21:50:43 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல…

  12. நாடாளுமன்றில்... டோர்ச் லைட்களுடன், எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்! ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை (torches) கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையை அடுத்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2022/1268837

  13. யுத்தக் குற்றத்தில் இராணுவமும் ஈடுபட்டிருக்கலாம்! February 24, 2022 யுத்தக் குற்றத்தில் இராணுவ வீரர்கள் சிலர் ஈடுபட்டிருக்கலாமென தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (23.02.22) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்களும் எதுவும் அரசாங்கத்திடம்…

    • 1 reply
    • 311 views
  14. நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் February 23, 2022 நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பகல் 12மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. https://globaltamilnews.net/2022/173332

  15. எரிபொருள் கொள்வனவிற்கு முன்னுரிமை வழங்கி தடையின்றி டொலரை வழங்குங்கள் - ஆலோசனை ஜனாதிபதி (இராஜதுரை ஹஷான்) எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், எரிபொருள் கொள்வனவிற்கு முன்னுரிமை வழங்கி அதற்கு தேவையான டொலரை தடையின்றி விநியோகிக்குமாறும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நிதியமைச்சருக்கும்,மத்திய வங்கியின் ஆளுநருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கை மின்சார சபை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவை தொகையை அரச திறைச்சேரி ஊடாக செலுத்தவும் ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.எரிபொருள் விலையேற்றம் குறித்து எவ்வித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை. மின்னுற்பத்தி மற்றும் எரிபொருள் கொள்வனவ…

    • 1 reply
    • 242 views
  16. நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிப்பு ; நாட்டில் முதலீடு செய்வதற்கு யார் முன்வருவார்கள்? - ரோஹினி கவிரத்ன (நா.தனுஜா) உள்நாட்டு கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கும் அவற்றை ஊக்குவிப்பதற்கும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார். ஆனால் நாளொன்றில் சுமார் நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்படும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு யார் முன்வருவார்கள்? அத்தோடு இறக்குமதிகளும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்…

  17. 22 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/122986

  18. நிதி நெருக்கடிக்கு, தீர்வாக... இலங்கையில் முதலீடு செய்யத் தயார் – ஜெய்சங்கர் நிதி நெருக்கடியைக் குறைக்க இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் நிதி நெருக்கடியை குறைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குறிப்பாக அந்நியச் செலாவணியை பேணுவதற்கும், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா கடன் உதவியை வழங்கியுள்ளது. இருப்பினும் கடுமையான அந்நியச்…

  19. யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைப் போல மிக விரைவில் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலிலும் ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து இடங்களிலும் வெற்றியை பெற்றுக் கொள்வது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் பாரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.அதே போன்ற ஒரு வெற்றியை இலங்கையில் அடுத்து வருகின்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றி பெறும் அந்த காலம் மிக தூரத்தில் இல்லை. இன்று…

  20. ரணிலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கையா? முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் இரகசியஉடன்படிக்கையொன்று காணப்படுகின்றது என வெளியாகும் செய்திகளை ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக ஐக்கியதேசிய கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைப்பது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார் என வெளியான தகவல்களையே ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளார் இந்த பேச்சுவார்த்தைகளில் ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் இசினிவிக்கி…

  21. ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக இடம்பெறுகின்றது : நீதி அமைச்சர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவ…

  22. ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன் எச்சரிக்கை வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுத் தரத் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த…

  23. அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்! யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில…

  24. ஐ.நா. அமர்வு – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளை மறுதினம் ஜெனிவாவுக்கு பயணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த அறிக்கை ஏற்கனவ…

  25. 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு வருகிறது – ஜீ.எல்.பீரிஸ் 43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக்காட்டினார். பயங்கரவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.