Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாடசாலைகளின்... கல்வி நடவடிக்கை, மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு !! எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணையிலிருந்து டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். https://athavannews.com/2022/1275299

  2. இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியுமா? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு ஆளுங் கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் விலகி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள். இப்போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்…

  3. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தது ஆளும் கூட்டணி Getty ImagesCopyright: Getty Images இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது. இலங்கை மக்கள் பாரியளவிலான போராட்டங்களை ஆரம்பித்து, நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்றம் கூடிய வேளையில், அமைச்சர்கள் இல்லாமை குறித்து எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன. நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு பதில் வழங்க சபையில் எவரும் கிடையாது என தேசிய…

  4. அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் – அதிகாரத்தை, பயன்படுத்துமாறு... ஜனாதிபதியிடம் ரொஷான் ரணசிங்க கோரிக்கை! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்தை பயன்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர்களின் வீடுகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஜாதிக ஜன பலவேகய, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வீதிக்கு வந்ததாக கூறிய அவர், ஆனால் பல கட்சி உறுப்பினர்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கு…

  5. நாட்டின்... தற்போதைய நிலைமை குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் ! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275269

  6. ஒஸ்லோ, பாக்தாத் மற்றும் சிட்னி... தூதரகங்கள் மூடப்பட்டன! வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி ஒஸ்லோ, நோர்வே மற்றும் பாக்தாத், ஈராக் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூடப்படவுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275271

  7. அரசாங்கத்தில் இருந்து விலகிய... சுதந்திரக் கட்சியின், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில், சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது https://athavannews.com/2022/1275256

  8. இலங்கையின்... அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை... கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரின் வருகை உட்பட, கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்று 24 மணித்தியாலங்களின் பின்னர் இன்று (05) இராஜினாமா செய்திருந்தமை …

  9. இலங்கை... தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள, ரணில் யோசனை! நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை கண்டிராத நெருக்கடியாகும் என்றும் அரசியல் பிரச்சினையைவிட பொருளாதார நெருக்கடியே மேலோங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் சுமையை குறைக்க அரசாங்கம் எப்படியாவது அந்நிய செலாவணியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். …

  10. அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக... செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். அதன்படி, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா…

  11. எதிர்க்கட்சிகளின்... ஆட்சேபனைகளுக்கு, மத்தியிலும்... நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ! எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முன்கூட்டியே நிறைவுக்கு வந்துள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றம் நாளை (6) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவர் பிரேம்நாத் சி டோலவத்த அறிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதுடன், நாடாளுமன்ற வீதி மக்கள் பிரவேசிக்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275206

  12. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது... பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கவும் – பாதுகாப்புச் செயலாளர் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களை வலியுறுத்தினார். அத்தோடு, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் தொலைக்காட்சி அறிக்கையொன்றில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அமைதியாக இருக்கும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதாகவும் கூறி சில போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரண்டு குழுக்கள் இந்த போராட்டங்களை நடத்துவதை அவதானிக்க முடிகிறது என்றும் பா…

  13. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்த முதல் நபர் தான் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் மூத்தவர்களை பரிசீலிக்க பரிந்துரைத போதும், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தவறான முடிவை எடுத்தார் என்றும் அதுவே இன்று முழு நாடும் ந…

  14. நான்கு மாதங்களுக்கு பின்னர், பசில் நாடாளுமன்றுக்கு வருகை! முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார். நிதியமைச்சராக அவர் இருந்தபோது நாடாளுமன்றத்திற்கு வராமையால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அத்தோடு, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. இறுதியாக அவரும் தனது பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, பசில் நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக அண்மைய நாட்களில் வதந்திகள் பரவிய நிலையில், அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகி அமைதியாக அமர்ந்திருந்த…

  15. வரலாற்றில் முதன்முறையாக... டொலரின் பெறுமதி, 300 ஐ தாண்டியது ! வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. https://athavannews.com/2022/1275140

  16. நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒருபோதும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். மக்களின் ஆசீர்வாதத்தோடு ஆட்சிக்கு வருவோம் என்றும் மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://athavannews.com/2022/1275132

  17. புதிய நிதியமைச்சர் இராஜினாமா Editorial / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 12:29 - 0 - 14 நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புதிய-நிதியமைச்சர்-இராஜினாமா/150-294323

    • 9 replies
    • 608 views
  18. மட்டக்களப்பில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனங்களுடனும் கலன்களுடனும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.00 மணி தொடக்கம் காத்திருக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லை. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறுகட்டி மூடியுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல். டீசல் பெறுவ…

  19. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேராயர் களமிறங்கினார் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தும் இணைந்து கொண்டுள்ளார். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Cardinal-1.jpg பேராயருடன் பல அருட்த்ந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நாட்டின் குடிமக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Cardinal-3.jpg இன்று (5) பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியை…

    • 2 replies
    • 325 views
  20. பதவிகளை ஏற்க தயாராக இல்லை ; ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டும் - ரணில் (எம்.மனோசித்ரா) பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு தான் தயாராக இல்லை என்று அறிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் , தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சு பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே…

    • 2 replies
    • 318 views
  21. குற்றவாளிகள்... நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, விமான நிலையத்தை மூட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை. குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளின் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275086

    • 3 replies
    • 329 views
  22. மொத்தம் 43 எம்.பி.க்கள்... அரசாங்கத்தில் இருந்து, வெளியேறியுள்ளனர் இதுவரை 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும், சுதந்திரமாகச் செயற்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். விமல் வீரவன்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லன்சா ஆகிய தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுவரை, அரசாங்கத்தில் இருந்து 38 உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர் அது 50 ஐ தாண்டினால், அரசாங்கத்திற்கு பெரும்பாண்மை இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275125

    • 1 reply
    • 199 views
  23. புதிய அமைச்சர்களின் நியமனம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு : ஒரு போதும் அரசாங்கத்துடன் இணையோம் - தமிழ் கட்சிகள் (நா.தனுஜா) நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அழைப்பை தாம் நிராகரிப்பதாகவும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் இடைக்கால அரசாங்கத்தில் தாம் இணைந்துகொள்ளப்போவதில்லை என்று வடக்கு, கிழக்கு தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமைய…

    • 1 reply
    • 207 views
  24. அமைச்சர்கள் பதவி விலகல் கோமாளி நாடகம் : அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள் - ஜே.வி.பி. (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகக் கூடும். இதற்கு இடமளிக்காத வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். அதற்கமைய ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவி காலம் முடிவதற்கு முன்பதாக ஏதாவது காரணங்களினால் பதவியை இராஜிநாமா செய்தால் அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கே செல்ல வேண்டும் என்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். …

  25. 19 ஆவது திருத்தத்தை... மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனிமேல் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தத்திற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/127510…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.