Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடைக்கால நிர்வாகத்தை... உருவாக்கும் போதுதான், எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகரலாம் – எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வட்டிதுறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் கோரிக்கையின்படி காபந்து அரசாங்கத்தை பிரதான …

    • 2 replies
    • 253 views
  2. நிதி அமைச்சராக... இன்று பதவியேற்கின்றார், பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற பந்துல ! முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (புதன்கிழமை) நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அறியமுடிகின்றது. இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் இலங்கையில் பதவியேற்கும் 3 ஆவது நிதி அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துல குணவர்தன பெய்ஜிங் வெளிநாட்டுக் கற்கைகள் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் ஆவார். பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தனவுடன் முரண்பட்டதாக பொதுஜன பெரமுனவின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. https://a…

  3. எந்தவொரு அமைச்சுப் பதவியையும்.... ஏற்கப் போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவித்தது மைத்திரி தரப்பு! எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிந்தது. இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275305

    • 1 reply
    • 219 views
  4. "பண்டோரா" ஆவணங்களில்.... சிக்கிய, நிருபமா ராஜபக்ச.... டுபாய்க்கு பறந்தார் ! முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275295

    • 1 reply
    • 250 views
  5. பெரும் பான்மையை... தக்கவைக்க, பஷில் கடும் பிரயத்தனம் – கொழும்பில் தொடர் பேச்சுகள் முன்னெடுப்பு? நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர். அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வா…

  6. பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின்... இராஜினாமா கடித்தை, ஏற்க மறுத்தார் ஜனாதிபதி! பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடித்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறும் ஜனாதிபதி இவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275294

    • 1 reply
    • 228 views
  7. பாடசாலைகளின்... கல்வி நடவடிக்கை, மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு !! எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணையிலிருந்து டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். https://athavannews.com/2022/1275299

  8. கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!

    • 18 replies
    • 1.1k views
  9. அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி! by யே.பெனிற்லஸ் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2022/1275286

  10. இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியுமா? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு ஆளுங் கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் விலகி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள். இப்போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்…

  11. ஜனாதிபதி... பதவி விலக வேண்டிய, அவசியம் இல்லை – நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதால், அது நிறைவேறினால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் கட்சிக்கு அரசாங்கம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதால், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்குள் 113 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியு…

  12. நாட்டின்... தற்போதைய நிலைமை குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் ! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275269

  13. ஒஸ்லோ, பாக்தாத் மற்றும் சிட்னி... தூதரகங்கள் மூடப்பட்டன! வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி ஒஸ்லோ, நோர்வே மற்றும் பாக்தாத், ஈராக் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூடப்படவுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275271

  14. அரசாங்கத்தில் இருந்து விலகிய... சுதந்திரக் கட்சியின், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில், சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது https://athavannews.com/2022/1275256

  15. இலங்கையின்... அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை... கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரின் வருகை உட்பட, கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்று 24 மணித்தியாலங்களின் பின்னர் இன்று (05) இராஜினாமா செய்திருந்தமை …

  16. இலங்கை... தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள, ரணில் யோசனை! நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை கண்டிராத நெருக்கடியாகும் என்றும் அரசியல் பிரச்சினையைவிட பொருளாதார நெருக்கடியே மேலோங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் சுமையை குறைக்க அரசாங்கம் எப்படியாவது அந்நிய செலாவணியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். …

  17. அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக... செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். அதன்படி, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா…

  18. எதிர்க்கட்சிகளின்... ஆட்சேபனைகளுக்கு, மத்தியிலும்... நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ! எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முன்கூட்டியே நிறைவுக்கு வந்துள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றம் நாளை (6) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவர் பிரேம்நாத் சி டோலவத்த அறிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதுடன், நாடாளுமன்ற வீதி மக்கள் பிரவேசிக்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275206

  19. அரசதரப்பு உறுப்பினர்கள்... கோட்டாவை, பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் – பொன்சேகா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி மீது பழியை சுமத்திவிட்டு நாடாளுமன்றில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த அவர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்தார். https://athavannews.com/2022/1275201

    • 2 replies
    • 224 views
  20. அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் – அதிகாரத்தை, பயன்படுத்துமாறு... ஜனாதிபதியிடம் ரொஷான் ரணசிங்க கோரிக்கை! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்தை பயன்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர்களின் வீடுகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஜாதிக ஜன பலவேகய, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வீதிக்கு வந்ததாக கூறிய அவர், ஆனால் பல கட்சி உறுப்பினர்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கு…

  21. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது... பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கவும் – பாதுகாப்புச் செயலாளர் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களை வலியுறுத்தினார். அத்தோடு, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் தொலைக்காட்சி அறிக்கையொன்றில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அமைதியாக இருக்கும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதாகவும் கூறி சில போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரண்டு குழுக்கள் இந்த போராட்டங்களை நடத்துவதை அவதானிக்க முடிகிறது என்றும் பா…

  22. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்த முதல் நபர் தான் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் மூத்தவர்களை பரிசீலிக்க பரிந்துரைத போதும், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தவறான முடிவை எடுத்தார் என்றும் அதுவே இன்று முழு நாடும் ந…

  23. நான்கு மாதங்களுக்கு பின்னர், பசில் நாடாளுமன்றுக்கு வருகை! முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார். நிதியமைச்சராக அவர் இருந்தபோது நாடாளுமன்றத்திற்கு வராமையால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அத்தோடு, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. இறுதியாக அவரும் தனது பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, பசில் நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக அண்மைய நாட்களில் வதந்திகள் பரவிய நிலையில், அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகி அமைதியாக அமர்ந்திருந்த…

  24. வரலாற்றில் முதன்முறையாக... டொலரின் பெறுமதி, 300 ஐ தாண்டியது ! வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. https://athavannews.com/2022/1275140

  25. நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒருபோதும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். மக்களின் ஆசீர்வாதத்தோடு ஆட்சிக்கு வருவோம் என்றும் மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://athavannews.com/2022/1275132

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.