ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
Published by T Yuwaraj on 2022-02-10 16:14:40 தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) பகல் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு சென்றிருந்தனர். எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என கொள்வனவாளர்கள் தெரிவித்தனர். இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போது…
-
- 7 replies
- 476 views
-
-
கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை , கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார். இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறி…
-
- 37 replies
- 4.3k views
-
-
Published by J Anojan on 2022-02-10 17:43:18 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும் அரசாங்கமுமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள மக்கள் எமது எல்லைக்குள் வருவதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாது எமது வடக்கு மாகாண மீனவர்களின் மீன்படி வளங்களையும் சேதப்படுத்தும் நிலைமை காணப்படுகின்றது. வட மாகாணத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி துறையுடன் நேரடியான…
-
- 1 reply
- 247 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை – கூட்டமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 164 views
-
-
மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான யோசனையை முன்வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்! மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (வியாழக்கிழமை) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி எதிர்வரும் 22ம் த…
-
- 0 replies
- 523 views
-
-
reelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:51 - 0 - 109 FacebookTwitterWhatsApp எம்.றொசாந்த் அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார். அதனை அவதானித்த மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் …
-
- 3 replies
- 401 views
- 1 follower
-
-
குற்றவியல் சட்டத்தில் திருத்தம் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள ந…
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கையை... பாதுகாப்பான, திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு திட்டம்! இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மை, ஆடை வடிவமைப்பு மற்றும் பிற துணைத் துறைகளையும் மேம்படுத்த உதவும் என அந்த சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை சுற்றுலாத்துறையானது ‘திருமண சுற்றுலா’விற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள், …
-
- 0 replies
- 169 views
-
-
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுப்பு – சித்தார்த்தன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது.குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது. இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை ப…
-
- 0 replies
- 193 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவித்தல்! பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்கி, விடுதலை செய்வதற்கான நடைமுறை சாத்தியமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம்இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கையின் கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நடைபெற்றது. நேற்று நிறைவுபெற்ற கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் பின்னர் விடுக்கப்பட்ட இணைந்த அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வ…
-
- 0 replies
- 220 views
-
-
வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பிரச்சனை – ஜூலையில் மீண்டும் விசாரணை! February 9, 2022 கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 108 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர…
-
- 7 replies
- 425 views
-
-
கச்சதீவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம் – மகேசன் கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா தொடர்பில் ஊடகவியாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பக்கட்ட கூட்டத்திலேயே சுகாதார நிலைமை…
-
- 2 replies
- 318 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-09 21:33:24 (நா.தனுஜா) இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் வீரகேசரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொ…
-
- 3 replies
- 339 views
-
-
13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனம் என்கின்றார் சம்பந்தன் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார். இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என கூறினார். இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் இது இருப்பதை இழக்க செய்யும் நடவடிக்கை என…
-
- 2 replies
- 247 views
-
-
போராடும் மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம்- யேர்மனி பேர்லின். தமிழீழம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான தொடர் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இப் போராட்டத்தில் பங்கு பெறும் பெண் தலமைத்துவக் குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் நூறு குடும்பங்களுக்கு பேர்லின் அம்மா உணவகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. Video Player 00:00 02:19 …
-
- 2 replies
- 270 views
-
-
Published by J Anojan on 2022-02-09 11:30:51 கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பகுதிகளில் பதிவான இருவேறு சம்பவங்களில் ஜேர்மன் பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 28 வயதான இலங்கை வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஜேர்மன் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான குறித்த வர்த்தகர், …
-
- 2 replies
- 390 views
-
-
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இன்று (09) கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள் கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பூநகரியில் 8 இந்திய மீன்பிடி றோலர்கள் ஏலத்தில் | Virakesari.lk
-
- 5 replies
- 390 views
-
-
ஹிட்லர் மற்றும் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஆட்சி செய்யுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கோரிக்கை! சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். ஜனாதிபதி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டபோது மக்கள் ஹிட்…
-
- 7 replies
- 438 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-09 17:47:37 கொவிட் தொற்று நிலைமை காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் முகக்கவச கொள்வனவிற்காக 18,000 கோடிக்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஈடுசெய்ய முடியாது நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் முகக்கவச கொள்வனவிற்காக நாட்டு மக்கள் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் முகக்கவசங்களின் விலைகளை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது …
-
- 1 reply
- 240 views
-
-
Published by J Anojan on 2022-02-09 18:10:22 ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 667 நாட்கள் சிறைப்படுத்தலின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CA/ PHC/APN/10/22 எனும் மனுவின் உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர். அந்த உத்தரவுக்கு அமைவாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல அனுமதித்தார். அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறுமதி…
-
- 2 replies
- 289 views
-
-
Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 06:05 - 0 - 88 FacebookTwitterWhatsApp வெளிநாடுகளிலுள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வது ஆகியவற்றையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் த…
-
- 0 replies
- 239 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் மாதம் முதல் பல துறைகள் வங்குரோத்து நிலைமையினை அடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலும் விசேட பெற்றோலுக்காக 60 தொடக்கம் 80 ருபா வரை வரி அறவிடப்படுவதுடன், டீசல் லீட்டருக்காக 20 தொடக்கம் 30 ரூபா வரை வரி அறவிடப்படுகிறது. இலங்கை மின்சார சபைக்கான டீசல் மற்றும் உராய்வு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநிய…
-
- 0 replies
- 156 views
-
-
Published by J Anojan on 2022-02-09 16:23:22 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய, மூன்று மாதங்களுக்கு பயணத்தடையை நீக்கியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் கடவுச்சீட்டை விடுவிக்கவும் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிறுமியின்…
-
- 0 replies
- 142 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு தீர்வு – இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கான தீர்வாக அதிகாரப்பரவல் மிகவும் முக்கியமானது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸூடனான சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வ…
-
- 4 replies
- 444 views
-