ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
“எனது மனைவியிடம் கேளுங்கள்” தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்து கொண்டிருக்கின்றார். கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், “ சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, “எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, காஸ் தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும்” என்றார். Tamilmirror Online || “எனது மனைவியிடம் கேளுங்கள்”
-
- 2 replies
- 405 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியினரின்... யாழ் போராட்டத்தில், குழப்பம்! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது. முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்…
-
- 16 replies
- 861 views
-
-
ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் - ஜே.வி.பி. (எம்.மனோசித்ரா) நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் பொறுப்பு கூறுவதற்கு எவரும் அற்ற ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் பாரதூரமான நெருக்கடி நிலைமையே நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஒவ்வொரு கணமும் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு தருணத்…
-
- 0 replies
- 168 views
-
-
“நாட்டில்... அரபு வசந்தத்தை, உருவாக்குவோம்“ என கோசமிட்டு... போராட்டத்தை முன்னெடுத்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை! நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏ…
-
- 23 replies
- 1.2k views
-
-
அமைச்சர்களின்... வீடுகளுக்கு, இராணுவ பாதுகாப்பு? அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இரவு (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அத்துடன், வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டையும் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்ச…
-
- 1 reply
- 332 views
-
-
இலங்கையின் பணவீக்கம்... கடந்த மார்ச் மாதம், 18.8 சதவீதமாக அதிகரிப்பு! இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது. https://athavannews.com/2022/1274210
-
- 0 replies
- 261 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்.. விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. https://athavannews.com/2022/1274216
-
- 0 replies
- 173 views
-
-
பல்வேறு துறைகளுக்கு... மேலும் மூன்று நாடுகள், ஒத்துழைப்பு! வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பி…
-
- 0 replies
- 198 views
-
-
சீமெந்தின் விலை... அதிகரிக்கப் பட்டது! சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1274232
-
- 0 replies
- 275 views
-
-
தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க... பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன் தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றியிடம்(Henry Donati) கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றிக்கும் (Henry Donati) இடையிலா…
-
- 0 replies
- 177 views
-
-
ஞாயிறன்று நடைபெறும் அரசவிரோதப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மனோ மலையக மக்களுக்கு அழைப்பு (நா.தனுஜா) அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தமது கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் தலவாக்கலை உட்பட மலையக மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ் முற்போக்குக்கூட்டணி என்ற ரீதியில் நாம் எதிர…
-
- 0 replies
- 210 views
-
-
மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. நேற்று (31) இரவு நுகேகொடை மிரிஹான பெங்கிரிவத்தையிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டது. பொலிஸா…
-
- 10 replies
- 527 views
- 1 follower
-
-
பல இடங்களில் காலையில் பதற்றம் நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. 1) பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்கள் ஆர்ப்பாட்டம். செய்கின்றனர். மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 2) புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 3) குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கையுடன்... எதிர்வரும் சில நாட்களில், சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை! இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1274230
-
- 0 replies
- 223 views
-
-
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இணக்கம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இன்று வியாழக்கிழமை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாகவும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாக மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார்.(…
-
- 0 replies
- 200 views
-
-
நேற்றய போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு நேற்றிரவு வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நுகோகொடை, ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி…
-
- 6 replies
- 362 views
-
-
தீவிரமடைந்தது போராட்டம்! கண்ணீர் புகைக்கும் கலையாத கூட்டம்!
-
- 3 replies
- 368 views
-
-
(நா.தனுஜா) வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்திற்கு முரணான வகையில் உயர்வான நாணயமாற்று வீதத்தை அடிப்படையாகக்கொண்டு கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டமையின் காரணமாக வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் நாணயமாற்று நிறுவனமொன்றின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச்செய்வதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வரையறுக்கப்பட்ட இந்த நாணயமாற்று நிறுவனமானது உயர்வான நாணயமாற்றுவீதத்தைப் பேணுவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, இதுகுறித்து மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயமாற்றுப்பிரிவு நேற்று முன்தினம் புதன்கிழமை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இவ்விசாரண…
-
- 1 reply
- 348 views
-
-
மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. களனி தலுகம பகுதியில் கண்டி வீதியின் குறுக்கே பலகைகளையும் ரயர்களையும் இட்டு கொழுத்தி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கொழும்பு - கண்டி வீதியூடான போக்குவரத்து களனி தலுகம பகுதியில் தடைப்பட்டுள்ளது. Tamilmirror Online || மீரிஹானையைத் தொடர்ந்து களன…
-
- 0 replies
- 318 views
-
-
ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Tamilmirror Online || உடன் அமலாகும் வகையில்கொழும்புக்கு ஊரடங்குச் சட்டம்
-
- 0 replies
- 259 views
-
-
முல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி அம்பலவன்பொக்கணைக்கு மாலை நேர வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 மற்றும் 15 வயதுச் சிறுமிகள் இருவர் வீடு திரும்பவில்லை. மாலை நேர வகுப்புக்கும் அவர்கள் செல்லவில்லை. பெற்றோர் இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இரு நாள்கள் கழித்து இரு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிறுமிகளில் ஒருவருடன் பேஸ்புக் ஊடாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதற்காக சிறும…
-
- 1 reply
- 271 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து வருகின்றனர். நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. Tamilmirror Online || ஜனாதிபதியின் இல்லத்துக்…
-
- 6 replies
- 543 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயமான குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை கடந்துள்ளது. இதன்படி, தனியார் வங்கிகளில் குவைத் தினார் ஒன்று 1001.70. ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை ஏனைய மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. பஹ்ரைன் தினார் ஒன்றின் பெறுமதி 797.33 ரூபாவாகவும் ஓமான் ரியால் ஒன்றின் பெறுமதி 785.59 ரூபாவாகவும் கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 83.98 ரூபாவாகவும் சவூதி அரேபிய ரியால் ஒன்றின் பெறுமதி 84.24 ரூபாவாகவும் ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் ஒன்றின் பெறுமதி 84.87 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. முதன்முறையாக வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ஆயிரத்தை கடந்தது | Virakesari.lk
-
- 0 replies
- 214 views
-
-
ரெலோ த .தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும்;சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு! ரெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே எனவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளரொருவர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ரெலோ தமிழரசுக்கட்சியை…
-
- 6 replies
- 669 views
-
-
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம் நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு நாணய கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவ…
-
- 0 replies
- 242 views
-