ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142870 topics in this forum
-
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம் – மாவை சேனாதிராஜா வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம். அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம். தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது. நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சமஸ்டி கட்டமைப்பில், சுயநிர்ணய …
-
- 3 replies
- 308 views
-
-
போராட்டங்களை நடத்துவதன் மூலம் தீர்வினை பெற்று விடமுடியாது போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. காணாமலாக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற…
-
- 1 reply
- 172 views
-
-
நாணய நிதியத்தை நாடுகிறது இலங்கை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அவர் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார். 6.9 பில்லியன் டொலர் கடனை இவ்வருடம் செலுத்துவது இலங்கைக்கு மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், எரிபொருள் உட்பட அனைத்துக்கும் நிதியைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். htt…
-
- 2 replies
- 225 views
-
-
ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் – த.கலையரசன் இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு, அதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது. இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனு…
-
- 0 replies
- 264 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று(சனிக்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக…
-
- 0 replies
- 177 views
-
-
அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என கோரிக்கை! இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை அவமதித்தற்கு, வடபிராந்திய தொழிலாளர்களிடம் அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கச்சேரியில் கடந்த 25ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதில் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரும் அழைக்கப்பட்டார். ஆனால், அக் கூட்டத்தில் சம்பந்தமில்லாத விடயம் கலந்துரையாடப்…
-
- 0 replies
- 227 views
-
-
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா.சாணக்கியன் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா.சாணக்கியனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையி…
-
- 0 replies
- 143 views
-
-
13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்! January 28, 2022 தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை தமிழ் சிவில் சமூக அமையம் Tamil Civil Society Forum 28 சனவரி 2022 13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வை சிறிலங்காவின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்திற்குள் முடக்கும் முயற்சி அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து வரும் சிங்களப் பேரினவாத அரசுகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பானது பல்வேறு முனைகளிலிருந்தும் பல்வேறு வடிவங்க…
-
- 0 replies
- 220 views
-
-
எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார். இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் தொடர்ந்து …
-
- 2 replies
- 391 views
-
-
ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் – வாகன ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது! ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்த்திப் பவனி நேற்று ( புதன்கிழமை) இரவு வவுனியாவை வந்தடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13 வது திருத்தச் சட்டத்தை நேடைமுஐறப்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று…
-
- 2 replies
- 353 views
-
-
ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு 2021 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலம் இலங்கை 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது 2020 இல் ஈட்டிய 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட 23% அதிகமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக பொருள்கள் ஏற்றுமதியில் ஈட்டப்படும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எல்லையை தாண்டி 2021 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் ஏற்றுமதி இலக்கை விட அதிகமாகும் எனவும் 2020 உடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, 2021 ஆம் ஆண்டின்…
-
- 4 replies
- 401 views
-
-
தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்! முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் நேற்று (26) மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா, கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜங்கயன் இராமநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று யுவதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். கடந்த 18.01.2022 அன்று பாகிஸ்தானில் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான 2 வது…
-
- 6 replies
- 650 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையினை உறுதிப்படுத்தினார் சமல் ராஜபக்ஷ! பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே கம்பளையில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக ஒப்புக்கொண்டார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த வார தொடக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் முள்ளந்தண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது தந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்த…
-
- 4 replies
- 362 views
-
-
பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது. அதேவேளை, “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐ.நா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்" என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்…
-
- 0 replies
- 257 views
-
-
விடுதலை புலிகள் குறித்து பேசிய விஜயகலாவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார். அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என விசாரணைகளை …
-
- 0 replies
- 292 views
-
-
கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு! மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று (28) மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. படுகொலை நடந்த இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை 2006ம் ஆண்டு இலங்கை இராணுவம் இடி…
-
- 0 replies
- 150 views
-
-
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்க வில்லை அதனை ஏற்க போவதும் இல்லை. ஆனால் தற்போ…
-
- 0 replies
- 249 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள…
-
- 0 replies
- 214 views
-
-
1950 முதல் மற்ற அனைத்து அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசு 20 மடங்கு அதிக பணத்தை அச்சிட்டுள்ளது : ரஜித் கீர்த்தி தென்னக்கோன் (சி.எல்.சிசில்) தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 149,905 கோடி அச்சிடப்பட்டதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அனைத்து பொருட்களும் நம்ப முடியாத அளவுக்கு விலைகள் அதிகரித்து வருவதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் அரசு ரூ. 15,704 கோடியை அச்சிட்டுள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை மட்டும், அரசாங்கம் ரூ. 67,833 கோடி (678.33 பி…
-
- 2 replies
- 383 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம்! இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் -ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசம் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் அங்கிருந்து ஊர்காவற்துறை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீ…
-
- 0 replies
- 326 views
-
-
யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2022/1263141
-
- 34 replies
- 1.9k views
-
-
இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள்குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரிட்டன்தெரிவித்துள்ளது. வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சர்வதேச மனிதஉரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் …
-
- 1 reply
- 390 views
-
-
வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில்போட்டியி…
-
- 13 replies
- 818 views
-
-
ஆர்.ஜெயஸ்ரீராம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, புளியங்கண்டலடி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான கு.விஜயதாஸ (வயது 30) பிணையில் இன்று (27) விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில், வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்றுக்காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நிபந்தனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டி, 2020.11.27 அன்று வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். வாழைச்சேனை மாவட்ட நீத…
-
- 0 replies
- 406 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-27 18:38:39 (எம்.எம்.சில்வெஸ்டர்) நாளொன்றுக்கு 4 மணித்தியால மின் துண்டிப்பை நாட்டு மக்கள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு தற்போது முதற் கொண்டே நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் முழு நாடும் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் மூலமான மின்சார உற்பத்தி தற்போது 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. மின்சாரத்தை தொடர்சியாக விநியோகித்து வருவதால் மின் உற்பத்தி நிலையங்களின் அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் குறைவடைந்து, …
-
- 0 replies
- 219 views
-