ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது! கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது. குறித்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிதிகள் விழா இடம்பெறம் மண்டபத்த…
-
- 8 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமனம்! மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் தொடர்பாக வைத்தியர் ஜி.சுகுணன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “சுகாதார சேவைகள் பணிப்பாளரால் எனக்கு கடிதம் ஒன்றின் ஊடாக தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவை பதில் பணிப்பாளராக கடமையாற்றுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் என்னை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடமாற்றம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்டேன். மேலும் எனது பதிவிக்காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு உச்சக்கட்டத்தில…
-
- 0 replies
- 178 views
-
-
‘ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது’ தமுகூ தலைவர் மனோ கணேசன்! “அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள் இன்று பொய்த்தன. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கை நோக்கை விளக்கி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார். ஜனாதிபதிய…
-
- 0 replies
- 192 views
-
-
அரசியல் தீர்வுக்கு மோடியை நாடிய தமிழ் தலைவர்கள் – அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கம் என்கின்றார் ஜனாதிபதி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்ய இந்தியாவின் உதவியை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்தது. இலங்கையில் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள …
-
- 0 replies
- 155 views
-
-
Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 07:35 - 0 - 61 FacebookTwitterWhatsApp "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறியிருக்கிறார் சம்பந்தன் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை வ…
-
- 15 replies
- 750 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அனல் மின் நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மின்சாரத்துறை அமைச்சு தள்ளப்பட்டுள்ளது என மின்சாரத்துறை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சாரத்துறை அமைச்சுக்கு மின் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதால் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்சார சபை டொலர் வழங்கினால் தான் டொலர் விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட முடியாது. நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும…
-
- 3 replies
- 404 views
-
-
Published by T. Saranya on 2022-01-18 15:04:26 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர்களான ச.சிறீபவானந்தராஜா மற்றும் சி.யமுனாநந்தா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த திரவ ஒட்சிசன் தாங்கி வடக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையானஒட்சிசன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், 10 நாட்களுக்கு ஒரு முற…
-
- 24 replies
- 1.5k views
- 1 follower
-
-
Published on 2022-01-18 19:26:40 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் இன்று 18- 01-2022 மாலை 5.00 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது. இதன்போது, சம்பந்தன், நீதியரசர் விக்னேஸ்வரன், தமாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேக்ஷ் பிரேமசந்திரன், சுமந்திரன், சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த இந்தியப் பிரதமருக்கான கடிதம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. இந்தியப் பிரதமருக்கான கடிதம் கையளிக்கப்பட்டது | Virake…
-
- 4 replies
- 899 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது. http://www.newswire.lk/wp-content/uploads/2022/01/image_0d0e07851b.jpg இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை உறுதி செய்யும் வகையில் டெல்லி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இ…
-
- 3 replies
- 409 views
-
-
”எனது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள்களுக்கு இடமில்லை” என்கிறார் ஜனாதிபதி!!! January 18, 2022 தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை இன்று (18.01.22) ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் தெ ளிவுப்படுத்தி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி…
-
- 1 reply
- 286 views
-
-
தமிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் – சிறிதரன் உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் . முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள போரினல் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை கட்டியெழுப்பும் மக்கள் நலன் காப்பகத்தின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துளள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும…
-
- 0 replies
- 180 views
-
-
பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை. கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாத இறுதியில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கா…
-
- 11 replies
- 1.1k views
-
-
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதை பிரிட்டன் தாமதிப்பது ஏன் ? - எலியற் கொல்பர் கேள்வி (நா.தனுஜா) ஏனைய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சில இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைவிதிப்பதற்கு ஏன் காலதாமதமாகின்றது என்று பிரிட்டனில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரிட்டனில் வாழும் பரந்தளவிலான மற்றும் செல்வாக்குமிக்க தமிழ்ச்சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டுமெனில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகத் தடைவிதிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தும் இழுத்தடிப்பு…
-
- 1 reply
- 306 views
-
-
முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. டொம்லின் பூங்காவின் நினைவு பலகையை பிரதமர் திறந்து வைத்தார். பிரதமர் அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முதன்மை ஆலோசகர் எம்.எம்.ஜே.இ.ஜி.ப…
-
- 3 replies
- 500 views
-
-
ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !! கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது. ஜப்பானில் இருந்து பெறப்…
-
- 16 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வர…
-
- 9 replies
- 807 views
-
-
இலங்கையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணி இடைநீக்கம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி - பல்கலைக்கழக விடுதியி…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
மக்களை மேலும் சுமைக்குள் தள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு அரசாங்கம் இந்த மக்களை மேலும் சுமைக்குள் தள்ளவே விரும்புகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பாதகமான பொருளாதார நிலைமைக்கு இந்த அரசாங்கமே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று, அதில் சிலவற்றினை தமது பைகளுக்குள் போட்டுகொண்டு நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்துவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வ…
-
- 0 replies
- 206 views
-
-
சந்திரிகா, வெல்கம, அர்ஜுண, சுசில், அநுரவின் பங்கேற்பில் உருவாகின்றது புதிய அரசியல் அணி (ஆர்.ராம்) தென்னிலங்கை அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர். இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் குமா…
-
- 5 replies
- 773 views
-
-
ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று நடைபெற்றது ShanaJanuary 16, 2022 (ரூத் ருத்ரா) ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று வாகரை குஞ்சங் கல் குளத்தில் அவர்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இன்று நடைபெற்றது. ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் பங்கு கொண்டு தங்களது கலாச்சார ரீதியில் மண் பானையில் பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர். இதன்போது சிறுவர்கள் மற்றும் பொற்றோர்களுக்கான மரபு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்று போட்டி நிகழ்சிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்வர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பின்னர் மேற்படி கிராம மக்கள் இவ் பொங்கல் விழாவ…
-
- 3 replies
- 487 views
-
-
10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம் " இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின் கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவா…
-
- 0 replies
- 278 views
-
-
’செழுமையை நோக்கி செல்கிறது இலங்கை’ இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் நாடு செழுமையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத்திற்கு ஆசிர்வாதம் வழங்கும் விசேட நிகழ்வு கண்டி மல்வத்தை விகாரையில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டோம் எனவும் மேலும் 500 மில்லியன் டொலர் கடனையும் செலு…
-
- 5 replies
- 811 views
-
-
முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி! முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வளர்ச்சி திட்டங்களை செயற்படுத்துவது பற்றியும் முதலீடு செய்வது பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படு…
-
- 12 replies
- 832 views
-
-
இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது தம் தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்… ´நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நன்றியறிதலின் முக்கியதுவத்தை எடுத்துயம்பும் பொங்கல் நாளில்…
-
- 1 reply
- 503 views
-
-
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பெரும் பிரச்சினைகளை இலங்கைஎதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பாரிய அளவில் உள்ள போதும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன என அந்த அ…
-
- 0 replies
- 240 views
-