Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கே.நந்தகுமாரன் நியமனம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர்.த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன்…

  2. யாழில் இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் இராணுவப் பொலிஸாரினால் கைது காங்கேசன்துறை காவல் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களி…

  3. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன் January 4, 2022 இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு என்பது வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பதை இலங்கை தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி சர்வதேச அரங்கில் ஆவணங்கள் அனுப்புவது எதிர்காலத்தில் எமது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம். சமஷ்டி அடிப்படையிலேயே சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்துமூல ஆவணமாக அனுப்பபடவேண்டுமே தவிர அதனை வெட்டிக்குறைத்து மாற்றம் செய்து அனுப்புவது என்பது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை …

  4. அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை! அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்கள் பதவியை இழக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயம் குறித்து திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சனம் செய்வோர், பதவி விலகி எதிர்க்கட்சிக்கு சென்று அங்கிருந்து எதிர்க்கட்சியின் பணிகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்யாது அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் அவர்களை பணி நீக்க தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளார். மிகவும் நெருக்கடியான தருணத்தில் அரசாங்கம்…

  5. மூடிய கதவுகளுக்குள் அமைச்சரவை – IMF க்கு செல்வது குறித்து ஆய்வு! January 3, 2022 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தலைமையில், இன்று (03.01.22) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது. இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய…

  6. நட்புறவு இனி நேர்மையாக இருக்காது – சீனாவிற்கு விஜேதாச பகிரங்க கடிதம்!! இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விஜேதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். உலக வல்லரசாக மாறுவதற்கான சீனாவின் பயணத்தில் இலங்கையும் போர்க்களங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம் என குறிப்பிட்டுள்ளார். ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீ…

  7. இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது – இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது.தற்போது அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றாலும், மருந்து இறக்குமதியில் உள்ள தடைகளை விரைவில் சரி செய்யாவிட்டால், அடுத்த சில மாதங்களில் பல அத்தியாவசிய மருந்து களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளட தங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என…

  8. இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசவுள்ளனர் இந்தக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. தமிழ் பேசும் கட்சிகளின் ஒருங்கிணைவுப் பணியை முன்னெடுத்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சொந்தக் காரணங்களின் காரணமாக அவசரமாக நேற்று முன்தினம் மன்னாருக்குத் திரும்பியுள்ள நிலையில் பெரும்பாலும் இன்றையதினத்திற்குள் அவர் மீண்டும் கொழும்பு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அவர் கொழும்பு திரும்பியதும் தமி…

  9. பிரதமர் இராஜினாமா?; அவசர ஊடக வெளியீடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமர்-இராஜினாமா-அவசர-ஊடக-வெளியீடு/175-288541

  10. இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது. January 2, 2022 டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்த…

    • 47 replies
    • 2.3k views
  11. பரந்தன் பகுதியில் அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி பரந்தன் வர்த்தக சங்கத்தினரால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலை, வாள்வெட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி எனப் பரந்தனில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கடையடைப்பை மேற்கொள்வதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவங்களில் தொடர்ச்சியாக ஒரு குழுவினரே ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் முறையிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கவில்…

  12. இலங்கை அரசியல்: "5 பிள்ளைகளை பெற்றெடுக்கும் சட்டம் வேண்டும்" - முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் திருமணமான தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்க்கக்கூடிய வகையில், சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ள பின…

  13. இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மசக…

  14. தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் ! தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அனுப்பிவைத்த …

  15. கிறிஸ்துமஸ் இரவில் துப்பாக்கிச் சூடு, 4 காவற்துறையினர் பலி! December 25, 2021 அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு காவற்துறையினர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (24.12.21) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவற்துறை உத்தியோகத்தர் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவற்துறை சார்ஜன் …

  16. இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்! December 29, 2021 இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இணக்கம் ஒன்றை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் என்று அறிய வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி இந்தியப…

  17. STFஆல் சுடப்பட்டதாக கருதப்படும், திருமலை மாணவர்களின் 16ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு! January 3, 2022 2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02.01.22) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக 7 மாணவர்கள் சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்…

  18. 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம்! 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. அதன்படி பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. 2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1259643

  19. எல்லை நிர்ணயம் – புனானை கிழக்கு மக்கள் போராட்டம்! மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராமசேவகர் பிரிவினை இணைப்பது தொடர்பாடன விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்ட்தில் ஈடுபட்டனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் சிங்களம் என இரு தரப்பும் இணைந்து இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் தி…

  20. ’இந்திய மீனவர்களை விடுவிக்க முயல்வேன்’ Freelancer / 2022 ஜனவரி 01 , பி.ப. 04:06 - 0 - 39 இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். “நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டு்ள்ள நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும். உங்களுடைய கருத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் முன்வைத்து உங்களது விடுதலை தொடர்…

  21. அக்கரப்பத்தனையில் மத முரண்பாட்டை உருவாக்க திட்டமா? January 2, 2022 அக்கரபத்தனை நகரில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் …

  22. பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், அந்தச்செய்தி முழுமையாகப் பொய்யானது எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக நின்றிருந்த வரிசை தொடர்பில் தேடியறியுங்களென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/கோத்தாவுக்…

  23. நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பேண புதிய நடைமுறை ஆரம்பம்! நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று (சனிக்கிழமை) ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்பட…

  24. புத்தாண்டில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன ? - ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள என்கிறார் தயான் (ஆர்.ராம்) புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகத்திற்கான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத்தளபதி ஜெ…

  25. இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் - சமூகப் பரவலாக மாறிவிட்டதா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கையில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதென ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதான மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இறுதியாக 41 கோவிட் ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அடையாளம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.