Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.ராம்) மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் தொடரும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அடுத்து வரும் காலத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…

    • 2 replies
    • 568 views
  2. கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக கனத்த மழை – குளங்களின் நீர் மட்டம் உயர்வு! கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழைகாரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்த நிலயைில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வன்னுரிக்குளம் இன்று (செவ்வாய்க்கிழமை) வான்பாய ஆரம்பித்துள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த நிலையில் குளங்களிற்கு நீர்வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட…

  3. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வோருக்கான அவசர அறிவித்தல்! யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்ததன் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். கிளினிக் பகுதி மற்றும் இது இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீ…

  4. தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்! மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்…

  5. வெள்ளத்தில்... மூழ்கியது, நல்லூர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1248863

  6. சீன சேதனப் பசளை விவகாரம் : விவசாய அமைச்சரை சந்திக்க கொழும்பிற்கு வந்த சீன நிறுவனம்! சீன சேதனப் பசளை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு சீன தூதுவருக்கு தெரிவிக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சீன சேதனப் பசளை நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று திங்கட்கிழமை விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதை மேற்கோள் காட்டி அமைச்சர் மேலதிகமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். சீனத் தூதுவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க விவசாய அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சர்…

  7. முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் – ஜி.எல் பீரிஸ் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். கூட்டணி அரசாங்கத்திற்குள் பிரிவுகள் எழுந்துள்ள நிலையில் புத்தமத போதனைக்கு அமைய பங்காளி கட்சியினர் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 2019 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது சர்வதேச மட்டத்தில் பெரும் சவாலையையும் தற்போதுவரை கொரோனாவையும் எதிர்கொள்வதை பங்காளிக் கட்சியினர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆகவே அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடனும் பொறுமையுடனும் செயற்படுவது அவசியம் என்…

  8. மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு, இன்றும் இடியுடன் கூடிய மழை ! நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் நாட்டில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 700 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெர…

  9. மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தல்! சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவ்வாறு கோரியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”யாழ்.மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்.மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை யாழ்.மாவட்டத்திலே பெய்துள்ளது. இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதி…

  10. (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர்கள் பாதுகாப்புத் துறையினர் முன்நின்று செயற்பட வேண்டும். அவர்கள் தங்களையும் , தங்களது குடும்பங்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொள்வதற்காக மாத்திரம் செயற்படலாகது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ளவர்கள், உண்மையை மூடி மறைப்பவர்கள் ஆகியோரை தேடிப்பார்க்குமாறு நாம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அராசங்கத்திடம் கேட்டு நிற்கிறோம். இந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது என அவர் மேல…

    • 1 reply
    • 423 views
  11. நல்லூரில் உள்ள ராஜதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை November 6, 2021 யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் எடுத்துரைத்துள்ளாா். இன்று (06.11.2021) காலை இடம்பெற்ற கள விஜயத்தின்போது, இவ்விடயங்கள் அவரால் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டன. இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்…

  12. முஸ்லிம் அரசியல் நாறிப்போய்க் கிடக்கின்றது ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்து காப்பாத்த முடியாத அரசியல் இந்த சமூகத்திற்கு தேவையா என்று என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன் ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது மேற…

  13. இவ்வாண்டு மாத்திரம் அரசாங்கம் 2.3 டிரில்லியன் ரூபாய் கடனை பெற்றுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கம் 2021 இல் மாத்திரம் 2.3 டிரில்லியன் ரூபாய் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்வளவு பாரிய தொகை எதற்கு பயன்படுத்தப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் கூற்றுப்படி கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள் மூலம் கடன் திரட்டப்பட்டதாக எனவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், வ…

    • 0 replies
    • 264 views
  14. 69 இலட்ச மக்கள் என் முகத்திற்காக வாக்களிக்கவில்லை : புரட்சிகர மாற்றம் கடினமானது -ஜனாதிபதி (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்ச மக்கள் என் முகத்திற்காக வாக்களிக்கவில்லை. சுபீட்சமான கொள்கை திட்டத்தின் உள்ளடக்கத்தை கருத்திற் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். என்பதற்காக வாக்களித்தார்கள்.எதிர்பார்ப்பிற்கமைய புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.அது கடினமானதாக அமைந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்,ஏனெனில் அதுவே நிலையானது.என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.மிலிட்டரி நிர்வாக கொள்கையுடைய கோத்தபயவை எதிர்பார்த்தோம். சிலபேர் குறிப்பிடுகிறார்கள்.விவசாயியின் கழுத்தை பிடித்து சேதன பசளையை பயன்படுத்து என்று குறிப்…

  15. சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு தீயாக வேலை செய்யும் அங்கயன்-பா.கஜதீபன் November 7, 2021 தமிழரின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்கு அங்கயன் இராமநாதன் தீவிரமாக வேலை செய்கின்றார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றம் சாட்டியுள்ளார். கோட்டபாய அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து மக்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குட்படுத்திய நிலையில் சிங்கள மக்களின் கடும் எதிர்ப்பினை சமாளிப்பதற்கும் மக்களை திசை திருப்புவதற்கும் தனி பௌத்த சிங்களம் என்ற கோட்பாட்டை கையிலெடுத்துள்ளது. அதிலொரு பகுதியாகத்தான் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வடக்கில் முகாமிட்டு தமிழர்…

  16. காணாமல் போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டமையை ஏற்க முடியாது – சாணக்கியன் November 7, 2021 காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது, தொடர்ந்தும் கருத்து வௌயிட்ட அவர், “இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம். அனைத்து விடயங்களிலும் பொய்யும் ஊழலும் மோசடியும் மக்களுக்கு சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கத்தின் அமைச்சர்…

  17. புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. கடற்படையின் தேவைக்காக வல்லன் பகுதியில் சுமார் 14 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக இன்று (திங்கட்கிழமை) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை நாளை புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையினை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதியை அண்மித்ததாக அமைந்துள்ள காணியொன்றும் கடற்படையினரின் முகாம்கள் அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் இரண்டு தடவைகள் இக்காணிகளை கடற்படையினர் சுவீகரிக்க முயன்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் …

  18. தமிழர் பகுதிகளில் பௌத்த சின்னங்கள் -தொல்லியல்துறையின் கருத்துக்கு வரலாற்று ஆசிரியர் பதில் November 7, 2021 வெடுக்குநாறிமலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்ப்பது மிகவும் தவறானது என யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை மூத்த பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (P.Pushparatnam) தெரிவித்துள்ளார். பௌத்த விகாரையின் சிதைவுகளே வெடுக்கு நாறிமலையில் உள்ளது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மூத்த பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், “ஆதியிலே பௌத்தம் என்பது த…

  19. சித்திரவதைகளில் ஈடுபடும் இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என ஐநாவின் முன்னாள் அதிகாரி வேண்டுகோள் — இலங்கையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சித்திரவதைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை அதிகாரிகளிற்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பேராசிரியர் மன்பிரெட் நொவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்த அகதிகள் இலங்கை பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மை குறித்து தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எ…

  20. இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல் November 8, 2021 இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்மாதம் 20ஆம் திகதி “மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினை…

  21. மட்டக்களப்பு: மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு November 8, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறிய குடியேற்றங்களை செய்ய முனைவதாக அப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று சனிக்கிழமை தொடக்கம் பெருமளவான வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் காடுகளை துப்புரவு செய்வதுடன் கொட்டில்களை அமைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியானது பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாகவுள்ள நிலையில் தொடர்ச்சியாக அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கு வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முயற்சி செய்துவரும் நிலையி…

  22. அருட்தந்தை சிறில் காமினி... கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக அரச புலனாய்வுப் பணிப்பாளர் சி.ஐ.டியில் முறையிட்டிருந்தார். அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்பு…

  23. நாட்டில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு – 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்! சீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 4 ஆம் திகதிவரை 22 ஆயிரத்து 902 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேநேரம், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 59 அதிக அபாயமிக்க வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர…

  24. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் கருத்துப்படி, எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெ…

  25. மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் – ஜீ.எல்.பீரிஸ் மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்றும் அது தவறான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை என்பதோடு, இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.