ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
கலாநிதி வஜிரா சித்ரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது! இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே அவர்களினால் இன்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2020 ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கும், இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக…
-
- 0 replies
- 379 views
-
-
கோழி இறைச்சியின், விலை அதிகரிப்பு! கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும், கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1250730
-
- 2 replies
- 217 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் பூர்த்தி! கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியிருந்தார். குறித்த தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் 18ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1250639
-
- 0 replies
- 254 views
-
-
நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு! தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் ஒருசிலர் உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், பல்வேறு இடங்களிலும் இவ்வாறு மணல் ஏற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு பாரிய த…
-
- 0 replies
- 141 views
-
-
கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் அரபிக்கடலுக்கு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை அண்மித்த வட தமிழக கடற்கரையை இன்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்க…
-
- 0 replies
- 99 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பற்றி அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அவ…
-
- 0 replies
- 190 views
-
-
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தி னராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, அ.சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி, மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங…
-
- 0 replies
- 266 views
-
-
மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். https://www.dailymirror.lk/breaking_news/Mano-Ganesan-contracts-COVID-19/108-224976 விரைவில் நலம் பெற வேண்டும்.
-
- 4 replies
- 488 views
-
-
இ.சுதாகரன் “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற…
-
- 0 replies
- 360 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி''எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம…
-
- 2 replies
- 317 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…
-
- 5 replies
- 475 views
-
-
’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் கு…
-
- 0 replies
- 408 views
-
-
வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ம…
-
- 3 replies
- 364 views
-
-
போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி- கா.ஜெயவனிதா November 17, 2021 எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இன்று 1738 ஆவது நாளாக போராடி கொண்டிருக்கின்றோம். எங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு ; இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை! இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. அந்நிலையில் 14ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவி இழக்க நேரிடும். வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் க…
-
- 0 replies
- 151 views
-
-
மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்-கதிர் November 17, 2021 மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர், “தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் என்பது …
-
- 0 replies
- 299 views
-
-
நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்; சித்தார்த்தன் November 17, 2021 “இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: …
-
- 0 replies
- 320 views
-
-
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள் November 17, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி …
-
- 0 replies
- 228 views
-
-
கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில…
-
- 1 reply
- 301 views
-
-
கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு! கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன இந்த நிலையில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர் . இதனையடுத்து சம்பவ இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணி உரிமையாளர்கள்…
-
- 0 replies
- 154 views
-
-
பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை! நாடளாவிய ரீதியில் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். https://athavann…
-
- 0 replies
- 201 views
-
-
நரேந்திர மோடியின் இந்துத்துவா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசாங்கம் – சித்தார்த்தன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தினை திருப்திப்படுத்த இந்துத்வா இராஜதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கையிலெடுக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார். கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு செல்கின்றமை மற்றும் இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்ம் கொண்டுவரப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் இதன…
-
- 0 replies
- 176 views
-
-
அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை – அமைச்சர் வாசு அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆகவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது என்பது சிறைக்கு செல்வதற்கு சமமானது எனவும் நாடாளுமன்றில் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் விலை உயர்வு காணப்படுகின்ற நிலையிலும், ஏனைய பல சிக்கல்கள் உள்ள நிலையிலும் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கான தீர்வு எதிர்க்கட்சியிடம் உள்ளதா என கேள்வியெழுப்பிய வாசுதேவ நாணயக்கார, கொரோனா தொற்று இல்லையெனில் வேறுவிதமாக இந்த வரவு செலவு திட்டம் உருவாகியிருக்கும் என்றும…
-
- 0 replies
- 249 views
-
-
வடமாகாண, வீதிகளில்... நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை! வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பளிஹக்கார விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது. பணி முடியும் வரை சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலகைகள் வைக்க வேண்டுமென்றும் இப்பணியை உரிய…
-
- 0 replies
- 169 views
-
-
நாட்டில்... மார்ச்சில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை! இலங்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிடம் தற்போது 2 பில்லியன் அந்நியச் செலாவணியே கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் தங்கமா இருக்கின்றது. மீதமுள்ள 1.7. பில்லியனை வைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிக்கமுடியாது. அடுத்த வருடம் 5 முதல் 6 பில்லியன்வரை கடன் செலுத்த …
-
- 0 replies
- 125 views
-