Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பினார். அதன்படி, அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவே அவர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1242722 ############## ################# ############# நன்னிச் சோழன்... சொன்ன மாதிரி, கோட்டாவின் வலது கண்... சின்னனாகத்தான் இருக்கிறது.

  2. அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக... யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை! கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தலைமை முகாமையாளர் செ.குணபாலசெல்வம் அறிவித்துள்ளார். இந்தப் பேருந்தில் பயணிக்கும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்களது திணைக்கள அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உத்தியோகத்தர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் https://ath…

  3. ஒன்பது முக்கிய... நீண்ட கொரோனா அறிகுறிகள் – புதிய ஆய்வில் அடையாளம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கூறினார். இந்தப் புதிய ஆய்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீவிரமான கொரோனா தொற்றுக்குப் பிறகு தொடரும் அல்லது உருவாகும் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளை விவரிக்க ‘நீண்ட கோவிட்’ என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். ‘நீண்ட-கோவிட் அறிகுறிகள் மருத்துவமனை…

  4. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசாங்கம் மேற்கொண்ட மந்தமான முயற்சிகள் குறித்து கவலை வெளியிடப்பட்டது. மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் வெளிப்படையாக இழுத்தடிப்பை செய்க…

    • 0 replies
    • 280 views
  5. 'மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா' என்ற பதாதைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்! By Shana மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருவதாக அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா என்ற பதாதைகளுடன் சிறுவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரச அதிகாரிகளே கணிய வளத்தை சுரண்டுவதற்கு துணை போவது ஏன்? ராஜபக்சக்களின் பெயர்களால் மண் சுரண்டல்,எமது வளத்தை சூரையாடாதே.பிரதேச செயலாளரே விவசாய …

  6. நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம் நேற்று கூட அனைத்து மத தலைவர்களும் இணைந்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டோம்.எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்று இணைந்து செயற்படுகின்றோம்.சிலர் தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி விட யோசிக்கிறார்கள் மக்களை தூண்டி விடுகிறார்கள் எனவே இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ அனைவரும் முயற்சிக்கின்றோம்.எனவே ஒரு சிலரின் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மதங்களுடையில் ப…

  7. ஆரியகுள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை – யாழ் மாநகர முதல்வர் ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக நேற்று சனிக்கிழமை ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஆரியகுளம் புனரமைப்பு என்பது என்னால் தயாரிக்கப்பட்ட திட்டம். அதில் என்ன உள்ளது என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளோம். ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதத சார்பு அடையா…

  8. நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா (kenichi yokoyama) விடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நெடுஞ்சாலை அமைச்சர் பெர்ணான்டோவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா வுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வீதி பாதூகாப்பு, போக்குவரத்து நெரிசல் முகாமைத்துவ திட்டமொன்றை புதிதாக ஆரம்பித்தல…

  9. இந்தியா- இலங்கை இணைந்து.. மெகா இராணுவ பயிற்சி இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் 8ஆவது கட்ட மெகா இராணுவ பயிற்சி, இலங்கையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 15 ஆம் திகதி வரை 12 நாட்கள் நாட்கள் நடைபெற இருக்கின்றன. இரு நாட்டு இராணுவங்களின் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சி நடைபெறுவதாக இராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இரு இராணுவத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும் எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. …

  10. பிளவுபடாத நாட்டுக்குள்... நிலையான தீர்வை அடைய, ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து. ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து விசேட சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிற்குள் ஒரு சிலர் பிளவுகளை ஏற்படுத்த காத்திருக்கும் நிலையில் தமது ஒற்றுமையை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் சம்பந்தன் தெரிவித்…

  11. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழிற்கு விஜயம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (ஞயாயிற்றுக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில், அவர் இலங்கையில் தங்கியிருக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அதேபோல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெள…

  12. நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு! நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கலால் திணைக்களம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினைத்தை முன்னிட்டே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1242542

  13. எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்க்க... ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம் இலங்கையின் எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளது. குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது வரைபில் உள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகைய…

  14. இவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களிற்கான அரசியலை செய்பவர்களாகயிருந்தால் ரத்வத்தையை மட்டக்களப்பிற்கு அனுப்பும் தலைமையின் முடிவை எதிர்த்திருக்கவேண்டும்- ஸ்ரீநேசன் வாழைச்சேனை அரசியற் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சரின் வருகை தொடர்பான விடயத்திற்கே தலைமையிடம் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை என்றால். இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எதனைப் பேசிப் பெற்றுத் தரப் போகின்றார்கள். அவர்கள் நினைக்கின்ற அரசியலைத் தான் இவர்கள் செய்ய முடியுமே ஒழிய இவர்கள் நினைக்கின்ற, எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். …

    • 0 replies
    • 253 views
  15. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை- சரத் வீரசேகரவின் கருத்து குறித்து ஆசிரிய தொழிற்சங்கள் கடும் சீற்றம் – இராணுவமயப்படுத்தும் முயற்சி என குற்றச்சாட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அமைச்சரின் கருத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான எங்கள் உரிமைக்கான அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள ஆசிரிய தொழிற்சங்கங்கள் இராணுவமயப்படுத்தல் குறித்த ஆர்வத்தை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன. அமைச்சரின் அறிக்…

    • 0 replies
    • 234 views
  16. கிளிநொச்சி, இரணைமடுகுளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி 20,882 ஏக்கர் பரளப்பளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (01) இரணைமடு குளத்தின் கீழான பயிர்ச் செய்கை கூட்டம் மெய்நிகர் செயலி ஊடாக இடம்பெற்றது இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம் முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற் பயிர்ச் செய்கைக்கு உள் வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனை பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. கால போக பயிர்ச் செய்கை ஆரம்ப திகதியாக 06.10.2021 …

    • 0 replies
    • 285 views
  17. டக்ளஸ் தேவானந்தா அதிரடி அறிவிப்பு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளருடன் இன்று(02 ) இடம்பெற்ற மெய்நிகர் வழியினூடான கலந்துரையாடலின் போதே, யாழ் மாவட்டத்தின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில், சமுர்த்தி திட்டத்தின் ஊடாக 2 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத…

    • 0 replies
    • 351 views
  18. அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம் – நாக விகாரையின் விகாராதிபதி தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுள பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரிய குள அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்…

  19. பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் பின்வாங்கினால் பாரிய நெருக்கடி உருவாகும் - தயான் ஜெயதிலக (ஆர்.யசி) மனித உரிமைகளை பாதுகாப்பதில், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதில், ஜனநாயக செயற்பாடுகளை கையாள்வதில், தொழிலாளர் சட்டத்தை பலப்படுத்துவது குறித்தெல்லாம் ஏன் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை ? இவ்வாறான காரணங்களை சுட்டிக்காட்டி ஜி.எஸ்.,பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் பாரிய அடிவிழும் என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவரும் பிரான்ஸ் மற்றும் யுனெஸ்கோவிக்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/32191/dayan_jg.jpg தமிழ் மக்களின்…

    • 1 reply
    • 328 views
  20. அரசாங்கமொன்று சட்டத்தின் ஆட்சியை மதிக்காததாக காணப்படும்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது – அம்பிகா சற்குணநாதன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறான நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையிலும் இதனை தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.பொலிஸ் அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த சதிகாரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சரத்வீரசேகர மேலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக…

  21. போருக்கு பின் கைவிடப்பட்டிருந்த ஆழியவளை திலீபன் வைத்தியசாலையை புனரமைத்து ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்க நடவடிக்கை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக, பிரதமரின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவினால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்கள், அங்கஜன் இராமநாதனால் ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. …

  22. பலிக்கடாக்களாக பூஜித், ஹேமசிறி! குற்றப்பத்திரிகை கையளிப்பு! October 2, 2021 போதிய சாட்சியங்கள் இருந்த போதும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கடமைகளை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு காரணமானமை தொடர்பில் முன்னாள் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கைகளை கையளித்துள்ளது. மேற்படி வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (01.10.21) அழைக்கப்பட்டது. இதன்போது, அவ்விருவரும் நீதிமன்றில் முன்னிலையாகி இயிருந்தனர். அதன்போது அவர்களிடம் குற்றப்பத்திரிக்கைகள் கையளிக்கப்ப…

  23. இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர். நவராத்திரி விழாவில் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் என அறியமுடிகின்றது. இந்நிலையில், இலங்கை படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || சுப்பிரமணியன் சுவாமி கொழும்பு வருகிறார்

    • 8 replies
    • 938 views
  24. (எம்.நியூட்டன்) வடமராட்சி கிழக்கில் பாரம்பரிய மீன்பிடி தொழில்களான கரவலை மற்றும் சிறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம்பெற இருக்கின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பாரிய அளவிலான போராட்டங்களும் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றிருந்தன.நடைபெற்ற போராட்டங்களில் வடமராட்சி கிழக்கு மக்கள் முழுமையாக பங்கெடுத்திருந்தார்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.