ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
18 JUL, 2025 | 04:04 PM மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, …
-
- 3 replies
- 293 views
- 1 follower
-
-
18 JUL, 2025 | 03:31 PM (எம்.நியூட்டன்) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளை தாவரங்களை அகற்றி, கடற்கரையை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் தெரிவித்தார். அத்துடன் இந்த நடவடிக்கையின்போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான சிறந்த பசளையாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் இந்த சாதாளையை மிகக் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக இந்த செயற்பாட்டை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதால் கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவ…
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் மொழி கட்டாயம் பொறிக்கப்படல், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் 8 வது சபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெற்று வரும் பிரத்தியேக வகுப்புக்களை ஞாயிறு மற்றும் போயா தினங்களில் சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என சபை உறுப்பினர் தயாளராசா தரணிராஜ் பிரேரணையை …
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை! வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, இலகுவான முறையில் விமான நிலையத்திலேயே குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த புதிய சேவை ஒகஸ்ட் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் , இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது, இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்…
-
-
- 12 replies
- 645 views
- 1 follower
-
-
கட்டண அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மெய்நிகர் பேச்சுவார்த்தை! இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்க முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விவாதங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று (18) இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற உள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தலைமையில், தொடர்புடைய அரசு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலை நடத்துவார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாகும். ஆரம்பத்தில் இலங்கை மீத…
-
- 0 replies
- 88 views
-
-
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்! இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது. அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர் பணிக்கு 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275 மற்றும் பெண்களுக்கு 25) உள்ளன. விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 ஆ…
-
- 1 reply
- 211 views
-
-
9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு July 18, 2025 11:03 am எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப…
-
- 0 replies
- 147 views
-
-
காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. அத்துடன், காயங்களை ஏற்படுத்திய, வாகனங்கள் சேதமடைந்து பல விபத்துகளும் அண்மையில் இடம்பெற்றுள்ளன. வல்லைப் பாலம் மேலும்மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி ந…
-
- 0 replies
- 125 views
-
-
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி! ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்…
-
- 2 replies
- 167 views
-
-
யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் கூட்டுப்பாய்ச்சல் யாழ் மாவட்டச் செயலர் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அவை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் குவிந்தபடி உள்ளன என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவரான வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. அப்போது ஒருகட்டத்தில், யாழ். மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மணல் கடத்தலின்போ…
-
- 0 replies
- 108 views
-
-
இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை! ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மாநியங்கள் அல்லது உதவிகளை வழங்குவதாக கூறி, தனி நபர்களிடமிருந்து பண மோசடி செய்யும் நபர் தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள உத்தியோப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்ட நபர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, குறிப்பாக இளம் தொழில்முனைவோருக்கு மானியங்கள் அல்லது நிதி வழங்குவதாகக் கூறுவது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நபர் பொய்யான வாக்குறுதிகளின் பேரில் தனிநபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு மோசடி என்பத…
-
- 1 reply
- 147 views
- 1 follower
-
-
தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்? தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்…
-
- 1 reply
- 152 views
-
-
தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்ட…
-
- 0 replies
- 90 views
-
-
17 JUL, 2025 | 05:16 PM தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்துக்காக அரச நிறுவனமொன்று நிலத்தை பகிர்ந்தளித்தமையானது அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே முறுகல் நிலையை உருவாக்கியுள்ளது. தங்கள் விவசாய நிலங்களை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்கள் புதிதாக காடழிப்பிலும் ஈடுபடுவதாக தமிழ் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில், சிங்கள மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தும் காணி தமது பரம்பரைக் காணி எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் அந்தக் காணியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்தக் காணியில் விவசாயம் செய்துவரும் ஒரு சிங்கள வி…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - ரவிகரன் வலியுறுத்து 17 JUL, 2025 | 02:17 PM துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன் மூலம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! 17 JUL, 2025 | 01:20 PM வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/220…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று! யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில், இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் (17) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராசா , ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன், க. இளங்குமரன் , சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திணைக்…
-
- 0 replies
- 91 views
-
-
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1439568
-
- 5 replies
- 373 views
- 1 follower
-
-
வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு â தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் இது தொடர்பில் அறிவித்தாரா? இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள புதிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்…
-
- 0 replies
- 158 views
-
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல் July 17, 2025 இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும…
-
- 1 reply
- 179 views
-
-
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு! Vhg ஜூலை 17, 2025 சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியூடாக, அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் (20-07-2025)ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் காணி உரிமை, கடற்றொழிலாளர் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்…
-
- 2 replies
- 193 views
- 1 follower
-
-
மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு! மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை …
-
- 0 replies
- 122 views
-
-
முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்! யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வின் போது, முதல்வர் இருக்கத்தக்கதாக, முதல்வர் பதில் வழங்க வேண்டிய விடயங்களில் துணை முதல்வர் அடிக்கடி தலையீடு செய்து கொண்டிருந்ததால் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது. விவாதங்களின் போது உறுப்பினர்கள் முதல்வரிடம் குறிப்பிடும் விடயங்களுக்கும், முதல்வர் தெரிவிக்கவேண்டிய பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் முதல்வர் தேவையற்றவகையில் தலையிட்டுக் கருத்துகளை வெளியிட்டபடி கொண்டிருந்தார். ஒவ்வொரு விடயத்திலும் தலையிட்டு நீண்ட விளக்கத்தையும் அவர் வழங்கினார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை இடம்பெற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. https://newuthayan.com/article/ம…
-
- 1 reply
- 127 views
-
-
சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம் சாவகச்சேரி நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றபோதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை வரவேற்ற சபை உறுப்பினர்கள், இடைநடுவில் கைவிடும் திட்டம் போலல்லாமல் சிறப்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு குறித்த பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர். https://newuthayan.com/article/சாவகச்சேரியில்_நாய்கள்_காப்பகம்;_நகரசபையில்_தீர்…
-
-
- 4 replies
- 258 views
- 1 follower
-
-
நடந்து முடிந்ததே வரலாறு தணிக்கைக்கு இடமில்லை! தேசியத் தலைவரின் நிலை தொடர்பில் முன்னாள் போராளி பஷீர் காக்கா அறிக்கை எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் வேண்டும் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி பஷீர் காக்கா(மு.மனோகர்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- 2009ஆம் ஆண்டின் பின்னர் தாயகத்திலும் உலகப்பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நிற்கின்ற வினா, எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது. பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் கள நிலைமையைச் சரியாகவே புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்தி…
-
- 0 replies
- 146 views
-