Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய பகுதியை தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்க முயற்சி 25 Views கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய சூழலிலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு குருந்துார் மற்றும் படலைக்கல்லு (கல்யாணணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதே போல் நிலாவரை கிணறு பகுதிகளிலும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2…

  2. கே .குமணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் …

  3. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 9 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்! 22 Views யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 9 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதாக ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மாநகர சபையைச் சேர்ந்த உறுப்பினர்களும், நல்லூர் பிரதேசசபையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட…

  4. மார்ச் மாதம் 31 முதல் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை – வர்த்தமானி ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளன. இந்த தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக் கூடிய விளையாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு பிளாஸ்டிக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியனவும் குறித்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மார்ச்-மாத…

  5. ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் – சுமந்திரன் நாடொன்று தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல் ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேசநியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல் பயண தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார். நாங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம்,மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக…

  6. ”தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை” : டக்ளஸ் தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் அதற்கு அவர்களால் ஒத்துப் போக முடியுமோ? என கேள்வி எனக்குள் இருக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கட்சிகள் என கூறுபவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீராப் பி…

  7. தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து ஒதுங்கியுள்ளேன் January 31, 2021 பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார். ஹட்டனில் இன்று (31.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நான் றாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முக்கிய 3 பிரேரணைகளை முன்வைத்திருந்தேன். இதில் குறிப்பாக சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதனை இரு பிரேரண…

  8. பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் கடந்த 30வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலையிருந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…

    • 40 replies
    • 4.7k views
  9. (இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் பௌத்த மதத் தலைவர்கள் ஒருமித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். தனி சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். எனவே அரசாங்கம் பௌத்த தேரர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தேசிய வளங்களை பாதுகாப்போம், பிற நாட்டவர்களுக்கு அவற்றை தாரைவார்க்க மாட்டோம் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக தேர்தல் காலங்களில்…

  10. முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா | Virakesari.lk

  11. விடுதலை புலிகளின் ஆயுதங்களை விற்க முற்பட்டவர்களுக்கு விளகக்கமறியல் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை விற்க முயன்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் 15 ஒழுங்கமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹைல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெடித்த குண்டுகள் மற்றும் டி 56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையே சந்தேகநபர்கள் விற்கமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ந…

  12. அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத்தை இழந…

  13. ஐ.நாவில் நெருக்கடியை ஏற்படுத்தவே வடக்கு, கிழக்கில் போராட்டம்.! - பதறுகின்றது கோட்டா அரசு ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரு…

    • 1 reply
    • 868 views
  14. வடக்கு கிழக்கில், தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது January 30, 2021 வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்…

  15. இலங்கை சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது! - ரஷ்யா ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா ஜாகரோவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமானதாகவே காணப்படுகின்றது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை நாம் உயர் மட்டத்தில் தொடர்ந்து பேணி வருகின்றோம். மேலும் ரஷ்யா…

    • 1 reply
    • 1.1k views
  16. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பம் 15 Views மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர்,வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி…

  17. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.! ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்க…

    • 6 replies
    • 1.4k views
  18. (நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான நிதியினளவு 8 பில்லியன் ரூபாவாகும். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளது. இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மீளவலுப்படுத்த முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144140/champika.jpg அநுராதபுரத்தில் 27 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க…

  19. வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ் பேசும் அலுவலர்களே பயிற்சியளிக்க வேண்டும். இல்லையேல் பயிற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் கருத்து தொடர்பிலேயே இதனை தெரிவித்தார். இது தொடர்பான அவரது கேள்விக்கு பதில் அறிக்கையில், https://newuthayan.com/வட-கிழக்கு-மாணவர்கள்-இரா/ See more Previous article

  20. எமது கடல் இறைமையை எவருக்கும் தாரை வார்க்க முடியாது!- மூத்த கடலோடி அண்ணாமலை சீற்றம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றமை தொடர்கதையாகி வருகிறது.இந்தியாவின் சில அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் படகு முதலாளிகளாக இருந்து கொண்டு மீன்பிடி தொழிலாளிகளை இலங்கை கடற்கரைக்கு சென்று மீன்பிடித்து வருமாறு விரட்டுவதாகவும் இதனால் எமது மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் அறுக்கப்படுவதுடன், எமது மீன்வளமும், மீன்களின் வாழிடங்களும் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சிறிய படகுகளில் இன்றும் மீன்பிடித்து வரும் எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமையில் சிக்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.அத்து…

  21. சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்த…

  22. தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியி…

    • 6 replies
    • 1.2k views
  23. 2019 ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாக கிடைத்த வெளிநாட்டு உளவுத் தகவல் தொடர்பில் அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கண்டிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை அறிவுறுத்தி இருப்பார் எனவும், அவ்வாறு அவர் அறிவுறுத்தவில்லை என கூறுவது நம்பும் படியாக இல்லை எனவும் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கூறினார். உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். க…

  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது. மட்டக்களப்பு நகரில் பிரபல கனிஷ்ட பாடசாலையான கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று இன்று (29.01.2021) காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார். இம்மாணவானுக்கு தொற்று உறுதியானதையடுத்து குறித்த பாடசாலையில் அம்மாணவனின் வகுப்பில் பயிலும் 30 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான மாணவனின் தாதி உத்தியோகத்தரான தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாகி சிகச்சை பெற்றுவரும் நிலையில் மகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில தினங்களின் முன்னர் மட்டக்…

  25. இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கும் நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மோசமடையும் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கும் கடந்த கால சம்பவங்கள் குறித்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மிகமோசமான குற்றங்களிற்கு தண்டனையின்மை பற்…

    • 0 replies
    • 377 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.