நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods “ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே... மிளகு ரசம் தமிழர்களின் அன்றாடச் சமையல…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி சோம்பு பொடி - 1 மேஜைக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை - சிறிது தாளிக்க: பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி செய்முறை : 1.மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2.வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள் மண் பாண்டங்களில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் தனி சுவையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன. உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதி காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்ப…
-
- 0 replies
- 898 views
-
-
சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...! தேவையானப் பொருட்கள்: பாஸ்தா - ஒரு கப் இறால் - கால் கப் வெங்காயம் - 2 தக்காளி - 4 - 5 குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 2 …
-
- 0 replies
- 985 views
-
-
செட்டிநாட்டு சிக்கன் கிரேவி தேவையானவை: சிக்கன் - ஒரு கிலோ மிளகு மற்றும் சீரகத்தூள் - 5 கிராம் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடலை எண்ணெய் - 100 மில்லி சோம்பு - ஒரு கிராம் பட்டை - ஒரு கிராம் கிராம்பு - ஒரு கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் ஏலக்காய் - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - 1 வதக்க: சின்ன வெங்காயம் - 150 கிராம் (இரண்டாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - 2 கிராம் பூண்டு விழுது - 30 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மஞ்சள்தூள் - 2 கிராம் தக்காளி - 75 கிராம் (பொடியாக நறுக்கவும்) மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம் மிளகாய்த்தூள் - 30 கிராம் புளிக்கரைசல் / எலுமிச்சைச்சா…
-
- 0 replies
- 719 views
-
-
கிரில்லிங், பார்பிக்கியூ, பொரித்தல்... எந்தச் சமையல் முறை உடல்நலத்துக்கு ஏற்றது? #Grill #Barbeque உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமையல் செய்யும் முறைக்குக் கொடுக்கத் தவறிவிடுகிறோம். ஓர் உணவை ஊட்டச்சத்துகளை இழந்துவிடாமல் சமைக்க வேண்டும். அதுதான் சிறந்த சமையல் முறைக்கான அடையாளம். இன்றைக்கு ஆரோக்கிய சமையல் முறை பலரின் கவனத்திலிருந்தும் கலைந்துபோன ஒன்றாக இருக்கிறது. வறுத்தல், அவித்தல், பொங்குதல், வாட்டுதல்... எனச் சமையல் செய்யும் முறைகளில் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில சமையல் முறைகளையும், அவற்றில் ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது என்பதையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நி…
-
- 0 replies
- 1k views
-
-
ஆலு பன்னீர் கோப்தா செய்ய...! மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (துருவியது) உருளைக்கிழங்கு - 3 (வே…
-
- 1 reply
- 764 views
-
-
மொச்சை நெத்திலி மீன் குழம்பு நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி மீன் - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 10 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை…
-
- 1 reply
- 968 views
-
-
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு காய்கறிகளின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்துகிற பலரும் பழங்களின் தோலைத் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால், அவற்றில் தேர்ந்தெடுத்த சில பழங்களின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரஞ்சுப் பழத் தோலில் தொக்கு செய்யக் கற்றுத்தரும் இவர், வேறு சில சுவையான உணவு வகைகளையும் செய்யக் கற்றுத் தருகிறார். ஆரஞ்சுப் பழத் தோல் தொக்கு என்னென்ன தேவை? ஆரஞ்சுப் பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கப் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - அரை கப் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி …
-
- 0 replies
- 524 views
-
-
-
- 22 replies
- 3.3k views
-
-
l இது தொடர்பான மேலதிக செய்தி... https://www.yarl.com/forum3/topic/164638-இளமை-புதுமை-பல்சுவை/?do=findComment&comment=1237553
-
- 12 replies
- 1.9k views
-
-
சத்தான சுவையான வெந்தயக்கீரை சாதம் வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி - 250 கிராம், வெந்தயக்கீரை - 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்ப் பால் - அரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
முட்டையை ஃபிரிட்ஜில் எங்கே வைக்க வேண்டும் தெரியுமா? “ராத்திரி லேட்டானா என்ன.. ஃபிரிட்ஜ்ல முட்டை இருக்கு.. ஆம்லெட் போட்டு சாப்டுக்கலாம்” என அர்த்த ராத்திரியானாலும், அவசர காலையானாலும் சமயத்துக்கு கைகொடுப்பது முட்டை. பசிக்கும், ருசிக்கும் துணையான முட்டை பிரிட்ஜில் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முட்டை கெடாமல் இருப்பது அதைவிட முக்கியம் இல்லையா? நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டை விரைவில் கெட்டுப் போவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் லாட்கா லேக். இதென்ன புதுக்கதை? ஆம். பொதுவாக ஃபிரிட்ஜின் கதவுப் பகுதில் உள்ள பிளாஸ்டிக் ‘முட்டைக் கூடை’யில் தான் முட்டைகளை வைக…
-
- 0 replies
- 1.5k views
-
-
காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ ரசம் செய்ய...! உடல் வலி, காய்ச்சல், சளி வந்தவர்களுக்கும் ஏற்றது இந்த மருந்து ரசம். இதை செய்வது மிகவும் எளிமையானது. தேவையான பொருட்கள்: கண்டந் திப்பிலி குச்சிகள் - 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) பூண்டு - 4 பல் புளி - நெல்லிகாய் அளவு துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன் தனியா - ஒரு டீஸ்பூன் …
-
- 2 replies
- 985 views
-
-
மருத்துவ குணம் நிறைந்த சீரகக் குழம்பு செய்ய...! தேவையானவை: சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 5 அல்லது 6 பல் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் வெல்லம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்…
-
- 1 reply
- 1k views
-
-
என்னென்ன தேவை? பச்சரிசி - 2 டம்ளர், புளி - 100 கிராம், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 10 அல்லது தேவைக்கு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கு. கடுகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவைக்கு, நல்லெண்ணெய் - 1 கப், வெல்லம் - 1 கட்டி. எப்படிச் செய்வது? பச்சரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். இதில் சிறிது மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிசறி, தட்டில் ஆற விடவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். இப்போது வெறும் கடாயில் தனிய…
-
- 6 replies
- 1.1k views
-
-
மட்டன் நெஞ்சுக்கறி சாப்ஸ் தேவையானவை: மட்டன் நெஞ்சுக்கறி - ஒரு கிலோ கடலை எண்ணெய் - 150 மில்லி சோம்பு - 2 கிராம் பட்டை - 2 கிராம் கிராம்பு - 2 கிராம் கல்பாசி - 2 கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - ஒரு கிராம் வெந்தயம் - ஒரு கிராம் சின்ன வெங்காயம் - கால் கிலோ கறிவேப்பிலை - 2 கிராம் மஞ்சள்தூள் - 5 கிராம் பூண்டு விழுது - 30 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 25 கிராம் தக்காளி - 100 கிராம் மிளகாய்த்தூள் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு மட்டன் மசாலா: சோம்பு - 3 சிட்டிகை சீரகம் - 3 சிட்டிகை பட்டை - 1 துண்டு கிராம்பு - 2 அன்னாசிப்பூ - 2 கிராம் இவற்றை மிக்ஸியில் தண்ணீர் …
-
- 1 reply
- 1.4k views
-
-
சனிக்கிழமை சமையல்: ருசியியல் சில குறிப்புகள் 20-ம் நூற்றாண்டின் விரோதி கிருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக் கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக் குள் சொன்னான். அன்று முதல் இன்று வரை நான் மற்றொன்றினைப் பாராதவன். பாரத தேசத்தில் தாவர உணவாளி களின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும், இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க் கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசா…
-
- 46 replies
- 14.1k views
-
-
கிராமத்துச் சமையல் விறகு அடுப்பு தகதகவென எரிந்துகொண்டிருக்கும்போது சூடான பணியாரக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் நெய்யைவிட்டால் அந்த வாசனை ஊரையே தூக்கும். புட்டுக்கு மாவு இடிக்க உலக்கையை உரலில் போட்டால் அந்த வீட்டில் விசேஷம் என்று அர்த்தம். இப்படி கிராமத்துச் சமையல் ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்தது. இங்கே, உடலுக்குக் கேடு இல்லாத மண்மணம் கமழும் சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன். சுரைக்காய் கடலைக் கூட்டு தேவையானவை: சிறிய சுரைக்காய் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) வறுத்த வேர்க்கடலை - 2 கைப்பிடி அளவு (தோல் நீக்கி, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 மஞ்…
-
- 0 replies
- 1.8k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மஞ்சூரியன் மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 8 மைதா மாவு - 2 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 குடமிளகாய் - 1 சிறியது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப எண்ணெய், உப்பு - தேவைகேற்ப செய்முறை : * வெங்காயம், குடமிளகாய்…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேவையான பொருட்கள் ; ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம், பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப) தக்காளி - 200 கிராம், மிளகாய் - 4, மல்லி கருவேப் பிலை -சிறிது, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை ஸ்பூன், சீரகத் தூள் -அரை ஸ்பூன், மல்லித் தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்ய...! தேவையான பொருட்கள்: பரோட்டா - 2 முட்டை - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - 4 ஸ்பூன் கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி பூண்டு - 8 பல் கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத…
-
- 11 replies
- 2.8k views
-
-
மாங்காய் சாம்பார் FacebookTwitterPinterestEmailGmailViber தேவையானவை மாங்காய் – 1, துவரம் பருப்பு – 3/4 கப், சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி பழப்புளி – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 (நறுக்கியது) வெந்தயம் – 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு. தாளிப்பதற்கு. எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு – 1 1/2 கரண்டி கறிவேப்பிலை – சிறிது செத்தல் மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி,…
-
- 0 replies
- 931 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள் தற்போது சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வம் அதிகரித்திருக்கின்றன. சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று பார்க்கலாம். தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ, விவரம்... கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவற…
-
- 0 replies
- 733 views
-