நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
நவராத்திரி வரப்போது, அதுக்கு நீங்க இலகுவா வீட்ட செய்து படைச்சு குடும்பத்தோட சாப்பிட கூடிய ஒரு இலகுவான கடலைப்பருப்பு வடை எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 4 replies
- 625 views
-
-
யாழ்ப்பாணம் எண்டதுமே யாபகத்துக்கு வாற ஒரு உணவு யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி. அவ்வளவு சுவையான ஒரு கறி. வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில ஒரு ஆட்டிறச்சி பங்கு வாங்கி, யாழ்ப்பாணத்து பாரம்பரிய முறையில தோட்டத்தில வச்சு கறி சமைச்சு சாப்பிடுவம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க
-
- 2 replies
- 686 views
-
-
வாங்க இண்டைக்கு நாம புரட்டாதி சனிக்கு செய்ய கூடிய ஒரு விரத சாப்பாடு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இந்த எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு விரதம் இருக்கும் பொதும் விசேஷமா செய்வாங்க, நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 3 replies
- 595 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஒரு ருசியான, சாப்பிட்டா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுற கோழி மிளகு வறுவலும் அதோட சாப்பிட அடுக்கு பரோட்டா ரொட்டியும் செய்வம் .நீங்களும் ஒரு நாள் இப்பிடி செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 3 replies
- 707 views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்துல செய்யிற ஒரு சுவையான வறை செய்வம், இது வெங்காய தாளில செய்யிற ஒரு வறை, சோறு கறியோட சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க,
-
- 4 replies
- 774 views
- 1 follower
-
-
-
வாங்க இண்டைக்கு நாம எங்க தோட்டத்துக்கு போய் அங்க மரவள்ளி கிழங்கு மரத்தில இருந்து கிழங்கு கிளப்பி, அத நெருப்பில சுட்டு, அதோட சாப்பிட ஒரு பச்சமிளகாய் சம்பலும் இடிச்சு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோட சாப்பிடுவம் வாங்க.
-
- 3 replies
- 498 views
-
-
வாங்க இண்டைக்கு நாம இந்த காலத்துக்கு மிகவும் தேவையான, எங்கட உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற ஒரு பாரம்பரிய மரக்கறி சூப் செய்வம், இப்பிடி தான் நாங்க சின்னனா இருக்கேக்க என்கட பாட்டி செய்து தாறவ, நீங்களும் இத மாதிரி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கவன்.
-
- 5 replies
- 784 views
-
-
வாங்க இண்டைக்கு நாம காரசாரமான அதே நேரம் உடம்புக்கு நல்ல ஒரு மல்லி சம்பல் செய்வம், இது எல்லா உணவுகளோடையும் நல்லா இருக்கும், செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ,
-
- 0 replies
- 411 views
-
-
பல அன்பு உள்ளங்கள் நாங்கள் பாவிக்கிற மிளகாய் தூள் என்ன எண்டுகேட்டு இருந்தீங்க, நாங்க மிளகாய் தூள் கடையில வாங்கிறது இல்ல, நாங்களே தான் திருச்சு எடுக்கிறது, வாங்க இண்டைக்கு நாம எப்பிடி இந்த யாழ்ப்பாணத்து யாழ் சமையல் மிளகாய் தூள் செய்யிறது எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து காத்து போகாத பேணிகளுக்குள்ள போட்டு வச்சா ஒரு வருஷம் மட்டும் சுவையும், மணமும் மாறாம இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என,
-
- 0 replies
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு உடம்புக்கு மிகவும் நல்லதும், தடிமல், இருமல், காய்ச்சல், நெஞ்சு சளி என்பவற்றை இலகுவா குணமாக்கும் ஒரு தேநீர் செய்யிற எப்பிடி எண்டு பாப்பம், முதலாவதா சுக்கு, மல்லி மிளகு வச்சு ஒரு தூள் செய்து, அத வச்சு எப்பிடி இலகுவான ஒரு தேனீர் செய்யிற எண்டும் பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்தது எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 945 views
-
-
இப்போ யாழ்ப்பாணத்தில பனங்காய் கிடைக்கிற நேரம், நாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தில விழுந்த பனங்காய்களை வச்சு யாழ்ப்பாணத்துக்கு பெயர் போன பனங்காய் பணியாரம் செய்வம் வாங்க. சீனி போட்டும், போடாமலும் ரெண்டு விதமா செய்வம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 737 views
-
-
வாங்க இண்டைக்கு நாம சக்கரை வியாதி இருக்க ஆக்களுக்கு மிகவும் நல்ல சுவையான ஒடியல் மா புட்டு செய்வம், நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 744 views
-
-
விறகிலும் ,எரிவாயுவிலும், மின்சாரத்திலும் தான் சமைக்க வேண்டும் என்று இல்லை. இப்படி குப்பையை கொழுத்தியும் சமைக்கலாம். 😂😂
-
- 32 replies
- 2.9k views
-
-
வாங்க இண்டைக்கு நாம எப்பிடி வெள்ளை இடியப்பமும், உருளைக்கிழங்கு போட்டு ஒரு தேங்காய் பால் சொதியும் செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து சொல்லுங்க.
-
- 5 replies
- 608 views
- 1 follower
-
-
2 & 5 ஆயிரம் டொலர் பேர்கர், பத்தாயிரம் டொலர் சீஸ் போர்ட் 17 ஆயிரம் டொலர் ஜப்பானிய முலாம்பழம் 70 ஆயிரம் டொலர் திருமண கேக் 1 லட்சம் டொலர் பீட்ஸாவரை... யாழ்கள பெரும் தனவந்தர்கள் வாங்கி உண்ணலாம்.
-
- 4 replies
- 1.1k views
-
-
இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
-
வெய்யில் காலத்துக்கு ஏத்த ஒரு சுவையான, இனிப்பான அன்னாசிப்பழ ஜூஸ் செய்வம் வாங்க, நீங்களும் செய்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க
-
- 1 reply
- 681 views
-
-
எப்பயும் புட்டு செய்து பிள்ளைகளுக்கு குடுக்காம, கொஞ்சம் வித்தியாசமா ஒரு புட்டு கொத்து எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, அதுவும் இறால், கணவாய் எல்லாம் போட்டு கடலுணவு புட்டு கொத்து எப்பிடி வீட்டிலயே சுவையா செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் செய்து குழந்தைகளுக்கு குடுத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 569 views
-
-
யாழ்ப்பாணத்தில யார கேட்டாலும் கயல் மீன் தான் ரொம்ப ரொம்ப ருசியான மீன் எண்டு சொல்லுவாங்க, ஏன் மீன்களின் அரசி எண்டு கூட ஊர் பக்கங்களில சொல்லுவாங்க. வாங்க இண்டைக்கு நாம இந்த கயல் மீனை எப்பிடி கண்டு பிடிக்கிற எண்டும், அத வச்சு தெருவுக்கே கம கமக்கிற ஒரு மீன் குழம்பு வைக்கிறது எண்டும் பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 6 replies
- 1.9k views
-
-
வாங்க இண்டைக்கு நாம என்க பாட்டி பலாகாய் கிடைக்கிற நேரங்களில அதுல இருக்க கொட்டைய எடுத்து வச்சு, பேந்து அத வச்சு செய்யிற ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இத மாறி செய்து பாருங்க, ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும், செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 306 views
-
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா காலிஃபிளவர், உருளைக்கிழங்கு வச்சு செய்ய கூடிய ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 311 views
-
-
தேவையான பொருட்கள்: 1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்) 2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் 2 - சிறிய தக்காளி, நறுக்கியது 2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது 1 - பச்சை மிளகாய், நறுக்கியது 2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு 1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு 2 தேக்கரண்டி - Chaat மசாலா செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார் சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்…
-
- 33 replies
- 5.1k views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் பல அன்பு உள்ளங்கள் தேங்காய் பால் விடாமல் எப்படி யாழ்ப்பாண சுவையில் கறிகள் செய்வது என்று கேட்டு இருந்தீர்கள், வாங்க இண்டைக்கு நாம எப்படி கோழி இறைச்சிக்கறி செய்யிற எண்டு பாப்பம் நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க என, அதோட வேற என்ன என்ன கறி தேங்காய் பால் விடாம செய்து காட்டனும் எண்டும் சொல்லுங்க.
-
- 3 replies
- 598 views
-