கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அப்பா! - சிறுகதை விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள். “என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?” “அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.” அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை. எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது. “நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...” “எதுக்கு இப்…
-
- 0 replies
- 6.6k views
-
-
பேச்சு ‘‘இதோ பார்... இப்படி அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யாதே!’’ - வீடு தேடி வந்த நெருங்கிய நண்பனிடம் எகிறி விழுந்தான் ஏகாம்பரம். ‘‘டேய், மூணாம் மனுஷன்கிட்ட பேசற மாதிரி கத்தாதே! நான் உன் குளோஸ் ஃபிரண்டுடா...’’‘‘இதோட உன் நட்பை குளோஸ் பண்ணிட்டேன்... போதுமா?’’ பரிதாபமாகத் திரும்பிப் போனான், நாற்பது வருட நண்பன்.‘‘ஏங்க! பீச்சுக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு... சாயங்காலம் போலாமா?’’ - ஆசையுடன் கேட்ட மனைவியை எரித்து விடுவது போல் பார்த்தான் ஏகாம்பரம். ‘‘அங்கே போய் வாங்கினாத்தான் காத்தா? நம்ம வீட்டு மொட்டை மாடியில போய் நில்லு... அதே காத்து வரும்!’’‘‘அப்பா, செஸ் விளையாட வர்றீங்களா?’’ - கேட்ட மகனுக்கு முதுகிலேயே ஒன்று வைத்தான். ‘‘டேய்! ஏண்டா இப்படி எல்ல…
-
- 0 replies
- 1.2k views
-
-
பார்வை தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!’’ - கணவனிடம் சொன்னாள். ‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?’’ என்றான்.‘‘இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும்! இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்!’’ - வாதாடினாள் கமலா. அடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற…
-
- 0 replies
- 1.1k views
-
-
நன்னயம் செய்துவிடேல்! "வரப் போறாளாமா? வரட்டும்... வரட்டும்... நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்காம உட மாட்டேன் நான். இப்பதான் ஒடம்பொறப்பு தெரிஞ்சுதாமா? அம்மா செத்துப் போயி இந்தச் சித்திரை வந்தா பதினாலு மாசம் ஆகுது. மொத வருசம் திதி குடுக்கும்போது பாத்ததுதான்... அப்பறம் ஒரு கடிதாசி கூடப் போடலியே? இப்ப கூட வரப்போறோம்னு எதுக்காகப் போட்டிருக்கா தெரியுமா? தேவியம்மா வரப் போறங்கள்ல... நாங்க எங்கியாவது வேற ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது? அவ வர்றது வேஸ்டாப் பூடுமில்ல... அதுக்காகத்தான். எல்லாம் ஒரே காரியவாதிதான். ஆமாம்... இப்ப அவளுக்கு எல்லாக் காரியமும் முடிஞ்சு போச்சு... பசங்க எல்…
-
- 0 replies
- 870 views
-
-
கானல் நீர் காட்சிகள் வாட்ஸ்அப் பதிவு : 1 எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்'' 7.35 PM ""டூர் போயிருந்தேன்'' 7.36 PM ""டூரா ! எந்த ஊருக்கு ?'' 7.37 PM ""மூணாறு, கேரளா'' 7.39 PM ""சொல்லவே இல்லை'' 7.40 PM ""சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு'' 7.42 PM ""பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா'' 7.44 PM ""இல்ல... ப்ரெண்úஸாட போனேன்'' 7.46 PM ""பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்'' 7.38 PM ""கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்'' 7.48 PM ""ஏன் குடும்பத்தை கூட்டிப் போகல'' 7.51 PM ""அடுத்த வாரம் கூட்டிப் போகணும்'' 7.52 PM ""எதுல கூட்டிப் போவீங்க'' 7.55 PM ""வீட்ல…
-
- 0 replies
- 646 views
-
-
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... . இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது... . சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... . குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது... . வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... . அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... . வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் கதவு எண் 99 என இருந்தது.. . வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்…
-
- 0 replies
- 888 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஹோம்வொர்க் ‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு! - சாய்ராம் கஷ்டம் இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன். அதான் கஷ்டப்படுறேன்.” - வைத்தீஸ்வரன் பாலகிருஷ்ணன் லைக் “ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்! - எஸ்கா …
-
- 0 replies
- 1k views
-
-
துரோகம் தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன். பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர். ‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காக…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரு நண்பன் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ். ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!'' அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்! ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்க…
-
- 0 replies
- 7.7k views
-
-
சோளகம் பெயர்ந்துவிட்டது. சித்திரைமாதக் கழிவில் ஏற்படும் இடி மின்னற் புயுலுடன் சோளம் வீசத் தொடங்கிவிட்டது. மூன்று நாட்கள் இடைவிட்டு விட்டு மழை பொழிந்து தீர்த்தது. "ஒரு வரியமும் இல்லாதமாதிரி, இந்தமுறை சித்திரைக் குழப்பம் ஓமோம் சரியான மழை.....!" என்று வாங்கு மூலையில் இருந்த படி பொன்னு ஆச்சி முணுமுணுத்தாள். பொன்னு ஆச்சி முணு முணுத்தது, தலைவாசல் திண்ணையில் குந்தி இருந்து குளிருக்கு அடக்கமாகச் சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த கொக்கர்' மாரி முத்தரின் காதுகள் விழவே செய்தது. 'என்ன முணுமுணுக்கிறாய்' என்பதுபோல மனைவியை நிமிர்ந்து பார்த்தார். உர்'ரென்ற இரைச்சலோடு வீசிய காற்றினால், முற்றத்துப் பனையிலிருந்து பிடிகழன்ற கங்குமட்டை ஒன்று 'தொப்'பென்று தலைவாசல் கூரையில் விழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை “நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!” சுதா கேட்கிறாள். அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக “நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!” என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான். “இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?” அருண், மனைவியிடம் கேட்டான். அதற்கு சுதா, “என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போகப்போறேன். நீங்க நாம தனிக்க…
-
- 0 replies
- 563 views
-
-
பிரபு (எ) பிரபாகரன்! Wednesday, 17 September 2014 10:52 தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார். செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
நகல் சிமாமண்டா என்கோஜி அடிச்சீ - தமிழில்: வடகரை ரவிச்சந்திரன்ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி என்கெம் அவளது கணவனின் காதலி பற்றி அறியும்போது, வரவேற்பறையின் தட்டுமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெனின் முகமூடியின் துருத்திக்கொண்டு தெரிந்த கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘அவளுக்கு இளவயதுதான். இருபத்தி யொன்றுதான் இருக்கும்’ என்று தொலைபேசியில் இஜமமகா சொல்லிக் கொண்டிருந்தாள். “அவளது கேசம் குட்டையாகச் சுருண்டிருக்கும். கேசத்தைப் பதப்படுத்தும் தைலத்தைப் பயன்படுத்துவாள்போல. இளம்பெண்கள் இப்போது பதப்படுத்தும் தைலத்தையே அதிகம் விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதை உன்னிடம் சொல்லக்கூடாதுதான். நான் ஆண்களையும்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இஸ்தான்புல் இளவரசி யோ. கர்ணன் மூன்றுநாளாகப் போக வெளிக்கிட்டு, முடியாமலிருந்தது இன்றுதான் சாத்தியப்படுகிறது. தகவல் கிடைத்ததும் உடனே போக வேண்டுமென்றுதான் வெளிக்கிட்டன். வேற யாருமென்றாலும் போகாமலிருந்து விடலாம். இது வெள்ளைக் காக்கா. அவனுக்கு ஒன்றென்றால் போகாமலிருக்க ஏலாது. எங்கட குடும்பத்தில ஒராள் மாதிரி. ஆனால் கடந்த மூன்று நாட்களாக வெளிக்கிட வெளிக்கிட ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்குது. செல்லடிப் பிரச்சனைதான். ஒரு நாள் நாங்களிருக்கிற வலைஞர் மடத்தில செல்லடியிருந்தது. மற்ற நாள் அவனிருக்கிற மாத்தளன் ஆஸ்பத்திரியடியில செல்லடியாகயிருந்தது. நேற்று இடையில இருக்கிற பொக்கணையில செல்லடி. ஏதாவதொரு இடை பார்த்து போகலாமென்று இருக்கத் தான், இண்டைக்கு விடிஞ்சதில இருந்…
-
- 0 replies
- 910 views
-
-
இணைய களம்: ஒரு அப்பா, ஒரு பிள்ளை, ஒரு மீனு கதை! இரவில் பாய் விரித்துப் படுத்தவுடன், “அப்பா மீனு கதெ...” என்று ஆரம்பிப்பான் சந்துரு. பிறகு எங்கள் உரையாடல் இப்படிப்போகும். “ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.” “உம்..” “அந்த காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.” “உம்..” “அந்தக் கொளத்துல என்ன இருந்துச்சி?” “மீனு.” “என்ன கலர் மீனு?” “வெள்ளை, ஒயிட்டு, கருப்பு, ஆரஞ்சு, புளு.” “அப்ப அந்தக் கொளத்துக்கு யாரு வந்தா?” “ஆனை.” “யானை என்ன செஞ்சுது?” (துதிக்கை போல கையை உயர்த்தியபடி) “தண்ணி குச்ச…
-
- 0 replies
- 989 views
-
-
பெண்ணாய் பிறந்தால் என்னவாம்? ''தீபா... ஜன்னல் பக்கத்துல நின்னு, பொம்பள பிள்ள தெருவ வேடிக்கை பாக்கக் கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்றது... வா, வந்து இந்த மசாலாவ அரைச்சுக் குடு,'' என்று சமையற்கட்டிலிருந்து கூச்சல் போட்டாள், விமலா. உடனே, சமையற்கட்டிற்கு விரைந்து, அம்மியின் முன் உட்கார்ந்து, இறுகிய முகத்துடன் மசாலாவை அரைக்கலானாள், தீபா. ''என்னடி, உன் ஆத்திரத்த அம்மிக் குழவி மேல காட்டுறியா... மசாலா வழியுது பாரு...'' என்று அவள் தலையில் குட்டி,''நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு வாழப் போறவ நீ, இப்படி வீட்டு வேலை செய்தா, 'பொண்ணை சரியா வளர்க்கல'ன்னு என்னையதானே உன் மாமியார் கொறை…
-
- 0 replies
- 810 views
-
-
தேவதையைத் தரிசித்த மனிதன் ஜீ.முருகன், ஓவியங்கள்: செந்தில் “அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை. ஜெர்மன் கலைஞரான இ.டி.எ.ஆஃமேனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘ஆஃப்மேனியானா’ என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதியும் அவரால் இயக்க முடியாமல் போனது தெரியும். ஆனால் இது? முழு அளவு இஞ்சித் தேநீர் நிரம்பிய கோப்பையை, காலி கோப்பை ஒன்றால் தாங்கிப் பிடித்துச் சுவைத்தபடி, அவன் அந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர். “டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா. “கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா. “உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா. ‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். “யார் என்ன சொன்னாலும்…
-
- 0 replies
- 372 views
-
-
பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன் புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒருசிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர்முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார். தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன்அழும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித்தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, …
-
- 0 replies
- 537 views
-
-
எனது கிறுக்கல் –( facebook இல் லொள்ளு விடும் ஆண்களுக்கு சமர்ப்பணம்) வரதட்சனைக்கு முன் வரையறைகள் ராத்திரி நான் படுக்க போக முதல் "நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள் " எண்டு facebook இல message ஒண்டு போட்டிட்டுத்தான் படுத்தனான் , என்ன காரணம் என்று போட நிறையத்தயக்கம் அது என்னவாயிருக்கும் எண்டது உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் , சும்மா சொல்லகூடாது பாருங்கோ நான் “இனிய காலை வணக்கம்” எண்டு ஒரு மெசேஜ் போட்டாலே அதுக்கு குறைஞ்சது நூ று லைக்ஸ் உம் ஒரு பத்து comments உமாவது வரும் , இன்றைய நாள் இனிய நாளாகட்டும் எண்ணுவினம் , ரண்டு வரிலை கவிதை எழுதுவினம் , சினிமப்பாட்டில இருந்து சில வரிகளை எடுத்து விடுவினம் ...அதுவும் இரவில ‘குட் நைட்’ எண…
-
- 0 replies
- 964 views
-
-
பொம்மை - சிறுகதை பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில் மழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை. ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை. ``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார். அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன்.…
-
- 0 replies
- 4k views
-
-
கலைமாமணி சிறுகதை: பாவண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான். `எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு...' என மனசுக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள், அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்தில் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு “இருடா ராமு, நானும் வரேன்டா...” என்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்…
-
- 0 replies
- 2.1k views
-
-
மார்ட்டினா -ப. தெய்வீகன் (1) கறுத்த எறும்புகள் மார்ட்டினாவின் கைகளில் ஏறுவதும் விழுவதுமாக சிநேகித்தபடியிருந்தன. மார்ட்டினா பூரித்திருந்தாள். கால்களை விரித்து தரையில் அமர்ந்தபடி, உள்ளங்கைககளில் கூட்டி அள்ளிய மண்ணை மெதுவாக வருடினாள். ஆதி நிலத்தின் அழியாத அழகை தினமும் பருகுவதில் அவளுக்குள் அப்படியொரு இன்பம். கதிர் வற்றிய வானத்திலிருந்து விழுந்த அந்தியின் வெளிச்சம், மரக்கிளைகளின் வழியாக தரையில் சிறு நிழல்களை வரைந்தது. குளிரோடு தலைகோதும் காற்றின் வாசனையை உணரும்போதெல்லாம் மார்ட்டினா வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தாள். தோழமையான அவளது புன்னகையில் இயற்கையின் மொழி அடர்ந்திருந்தது. அருவமான அவள் எழில் கலந்திருந்தது. முதியோர் இல்லத்தின் நான்காவது …
-
- 0 replies
- 726 views
-
-
சூப் கடை முதல் தாதா வரை ! | திண்டுக்கல் பாண்டி என்கவுண்டர் | திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து 'white collar' பாண்டியாக மாறினான். வீட்டுக்கே செல்லாமல் காரிலே சுற்றி தான் வாழ்க்கையை ஒட்டிகொன்டு இருந்தான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகளுடன் இணைந்து பல கொலைகளை செய்தான் . சென்னையில் பாண்டி உள்ளான் என தெரிந்துகொண்ட போலீஸின் குண்டுகளுக்கு இறையானான் பாண்டி .
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆப்பிள் இ ப்போது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தைத் தொட்டுச் சரிந்த வேளையில் திறந்த வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கின்றன. ஊழிக்காலத்து உக்கிரம் இல்லை என்றாலும், நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப்படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார்? இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடை போட்டுக்கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து, மழையின் துளிகளைச் சிறிதளவாவது உடையில் சேமித்துச் சென்றன. நனைந்ததால் கேசம் கற்றையாய் ஆகின. நாய்கள…
-
- 0 replies
- 1.1k views
-