கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
''வணக்கம் சார், வாங்க... வாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி. இதோ இப்ப முடிஞ்சிரும். அதுக்கு அப்புறமா ரூமைப் பார்க்கலாம். பத்து நிமிஷம் அப்படி ஃபேனுக்குக் கீழே காத்தாட உக்காருங்க. நல்ல வெயில்ல வந்திருக்கீங்க. வேர்த்து வேர்த்து ஊத்துதே' எனச் சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை, பாலகுருவின் மனதில் பிறந்தது. ஆனால், அவனுக்கு எப்படி அந்த எண்ணம் வந்தது எனத் தெரியவில்லை. ராஜாராமனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறு இடங்கள் மாறியதில் கசப்பான பல அனுபவங்கள் ஏற்பட்டுவிட்டன. அனைத்துமே எளிதில் மறக்க முடியாதவை. சில அற்பக் காரணங்களை முன்னிட்டு வீட்டுச் சொந்தக்காரர்களோடு உர…
-
- 0 replies
- 1.7k views
-
-
முன்னர் அவன் நாமம் கேட்டாள் May 31, 2020 காலம் செல்வம் பெயர் என்ன..? பெயர் தானே எண்டிட்டு எங்கட பெயரைச் சும்மா சொல்லிப்போட்டு போகேலாது. அகதியாய் வெளிநாட்டிக்கு வந்த பிறகு, வெளிநாட்டு அதிகாரிகள் எங்கடை பெயரை சொல்லத் தெரியாமல் நக்கலும் கலந்து பிழையாய்ச் சொல்ல, எங்கட தாழ்வுச் சிக்கல் அங்கேயே தொடங்கிடும். இத்தனைக்கும் அவங்கடை பெயரைப் பார்த்தால் ஸ்ரோன், பிறவுன். பிளாக், வூட் என்ற மாதிரி மனிசருக்கு ஏத்த பெயரா இருக்காது. கல், கறுப்பு, மரம் எண்டு தமிழில கூப்பிட்டா எப்பிடியிருக்கும்? பெயராலையும் சண்டை வரும் எண்டு நான் அறிஞ்சது லோறன்சின்ர இரண்டு தம்பிமாரும் “பனியன் “கிறிஸ்தோப்பனை அடிச்ச நேரத்திலைதான். இந்தப் பிரச்சனை கோவில் சபை வரைக்கும் போச்சுது. த…
-
- 0 replies
- 968 views
-
-
முதலாளி முருகேசன் தன் மகன் கார்த்தியுடன் குடோனுக்கு ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததும் முருகேசன் டென்ஷன் ஆகிவிட்டார். ‘‘எதுக்குய்யா வேலை செய்யிற இடத்துக்கெல்லாம் பையனை கூட்டிட்டு வர்றே..?’’ என்று அந்தத் தொழிலாளியை அதட்டிவிட்டு அலுவலகம் திரும்பினார். அங்கே... மேனேஜர் அழைத்து வந்திருந்த அவருடைய ஆறு வயது மகன் அமர்ந்திருந்தான். புன்னகைத்தபடி அவனிடம் கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். கார்த்திக்கு கோபம். உயர் பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... அடிமட்டத் தொழிலாளிக்கு ஒரு சட்டமா? இதை தந்தையிடம் நேரடியாகவே கேட்டான். ‘‘அது அப்படியில்லப்பா... ஒவ்வொருத்தனுக்கும் அவனுடைய அப்பா தெரிஞ்சோ, தெரியா…
-
- 0 replies
- 2.4k views
-
-
கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்? வவுனியா நகரை எங்களின் கார் நெருங்கிக் கொண்டிருந்தது. நாட்டு நிலவரங்களை எங்களோடு துணையாக வந்த சிவா களைப்பில்லாது கொழும்பிலிருந்து சொல்லி வந்துகொண்டிருந்தான். பின்னணியில் சக்தி எப்ஃ எம்மில் ‘வேணாம் மச்சான் வேணாம்’ என்கிற பாடல் போய்க் கொண்டிருந்தது. காதலாய் இருந்தாலென்ன வீரமாய் இருந்தாலென்ன தோற்றுப் போனவர்களின் கதைகளின் உள்ளடுக்குகளில் துயரமே ததும்புகிறது. சிவா பேசிக்கொண்டிருக்கும் விடயங்கள் தற்போதைய மோஸ்தரில் கறுப்பிலா வெள்ளையிலா அல்லது பழுப்பிலா வருமெனத் தெரியாது நான் குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் சிவப்பும் மஞ்சளுமான வர்ணங்களைத் தெரிவு செய்து சிவா ஒரு பெரும் கனவுக்காய்த் தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தும் இருக்கின்றான். சிவாவும் ந…
-
- 0 replies
- 2.7k views
-
-
இட்லிக்கடை - சிறுகதை மனுஷி பாரதி, ஓவியம்: எஸ்.ஏவி.இளையபாரதி வயிற்றுக்கு மட்டும் எப்படித்தான் பசி என்கிற மணி மிகச்சரியாக அடித்துவிடுகிறதோ? எங்காவது இட்லிக் கடையில் சாப்பிடலாம் எனக் கண்களை மேயவிட்டபடியே போய்க் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட தெரு முழுக்க பெட்டிக்கடைகள், பானிபூரி கடைகள் நிறைந்திருந்தன. ஆனால், எல்லாமே பூட்டப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தன. ஒன்றிரண்டு டீக்கடைகளிலும் ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள். மீன்குழம்புடன், மெத்தென்ற இட்லிக்கு நாக்கு ஏங்கிக்கொண்டிருந்தது. அஜந்தா சிக்னல் வளைவில் மிக உயர்ந்த ஸ்டார் ஹோட்டல் புதிதாக முளைத்திருந்தது. பத்து வருடத்துக்கு முன்பு அங்கே ஒரு திரையரங்கம் இருந்ததாக நினைவு. அஜந்தா சிக்னல் என்ற பெயரும்கூட, …
-
- 0 replies
- 2.1k views
-
-
’ஸ்மாட் போன்’ ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர் வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன். I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன். “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்! கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது. மனைவி…
-
- 0 replies
- 735 views
-
-
இது நகைச்சுவை பகுதிக்கு உரியது என்று நினைக்கிறன் எனினும் குட்டி கதை என்று..share பண்ணுபட்டிருந்ததால்..கதை பகுதியில் இணைக்கிறேன்.. from .... facebook அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத்தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது.என்ன செய்வது அந்த புலியைப் பிடிக்க முடியவில்லை .அமெரிக்காவில் முப்படைகளாலும் அந்தப் புலியை பிடிக்க முடியாத நிலையில் வேறு நாடுகளிடம் உதவி கோரியது லண்டன், கனடா,பிரான்ஸ் ,யப்பான் இவை யாராலும் முடியவில்லை எங்களை கேட்கலையே நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்குறோம் இதைப் பிடிக்க மாட்டோமா ? என்று ஒரு குரல் . யார் ? இலங்கை அரசுதான்............. இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது இலங்கை படை காட்டுக்குள்போய் பல மாதங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் பிரார்த்தனை! பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிற நாள்... மதியம் 12 மணியிலிருந்தே ‘நெட்’டில் ரிசல்ட் பார்த்துக்கொள்ளலாம் என…
-
- 0 replies
- 893 views
-
-
"குடியை கெடுத்த குடி" “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார் வள்ளுவர். அப்படியான ஒருவர் தான் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வசித்த கந்தசாமி ஆவார். அவர் ஒரு குடிசை வீட்டில் மனைவியுடனும் ஒரு மகளுடனும் வாழ்ந்து வந்தார். அவரின் மகள் பெரிய அழகு ராணி என்று கூற முடியாவிட்டாலும், அவர் ஒரு இளைஞனை பிரமிக்க வைக்கும் ஓரளவு அழகு உள்ளவரே! அவரின் பெயர் ரோஜா என்று எண்ணுகிறேன். மனைவி காலையில் அப்பமும் இடியாப்பமும், தன் குடிசையில் சுட்டு , அயலவர்க்கு விற்பார். மாலையில் இட்டலி, பிட்…
-
- 0 replies
- 509 views
-
-
காலத்தின் சாட்சிகள் – ஆதிலட்சுமி சிவகுமார்…. உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை On May 17, 2020 வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தின் சுற்றாடலில் ஒரு கல்வீடு. அந்த வீட்டைச் சுற்றியிருந்த வெளிமுமுவதும் சனங்கள். திருவிழாக்கால வீதிகள்போல தோற்றங்காட்டியது அந்நிலப்பகுதி. மேலே வானம் வில்லாய் வளைந்திருந்தது. ஒவ்வொரு இடத்திலும் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைய…. நகர்ந்து நகர்ந்து வலைஞர்மடம் என்ற இந்த கடலோரக் கிராமத்தை வந்தடைந்துவிட்டோம். மேலே அடிக்கடி வந்து சுற்றிச் சுழன்று மிரட்டிவிட்டு… எங்காவது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும் விமானங்கள். கூடவே எறிகணைகளின் இரைச்சலும் வெடிப்புகளும்….. தூரத்தே இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் வேட்டொலிகள்….. சனங்கள் ஆற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
திரை மறைவில் ! அம்மா இதுதானா அப்பா படிக்கும் பள்ளிக்கூடம்? தோளில் சால்வை சாரம் சண்டிக்கட்டு சவரம் செய்யாத முகம். அருணன் கூடாரத்தின் முன் நிற்கிறான். பின்புறமாக கைக்குள் மேல் கைவைத்து ஆழ்ந்து யோசனை கதிரவன் கண்திறந்து இரு மணித்தியாலம். செங்கதிர்கள் சுடத்தொடங்கின. "எட்டு மணியாச்சு வேலைக்கு போக இல்லையே..? " மனைவி மதியின் குரல். 'ம்.. போகத்தான் வேணும்" தொடராமல் முடித்துவிட்டான். அருணன் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயர் பதவி வகித்தவன். இப்போ ச.தொ.ச வியாபார நிலையத்தின் விற்பனையாளர். ஜுன்ஸ் அணிந்து கீரோ கொண்டாவில் அலுவலகம் சென்றவன் இன்று மரக்கறி, மா மூடைகள் சுமக்கிறான். வெற்றிலை சுவை தெரியாதவன் இன்று அது இல்லாமல் இருக்கமாட்டான். சிகரட் வாசம் அறியாதவன் இப்போ அதற்க…
-
- 0 replies
- 961 views
-
-
வலி நேற்று இரவு முதலே கொஞ்சம் படபடப்புதான். சரியான தூக்கம் கூட இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து இருப்புக்கொள்ளவில்லை. டிபன் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வந்தது. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆட்டோவில்தான் கிளம்பினோம். அம்மா நிமிஷத்திற்கொரு முறை ஆட்டோக்காரரிடம் மெதுவாகப் போகும்படி கேட்டுக்கொண்டார். வேகத்தடை வரும் இடங்களில் எல்லாம் நான் என் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டேன். ஆம். 15 நாட்களுக்கு முன்தான் அதை உறுதிப்படுத்தினார்கள். அன்று அம்மா எல்லாருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தாள். இந்த சந்தோஷத்திற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் வற்புறுத்தவில்லை எனினும் ‘என் ஆபீஸ் டிரைவருக்குக் குழந்தை பிறந்திருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=5]மச்சம் - இஸ்மத் சுக்தாய்[/size] உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி “சௌத்ரி… ஓ சௌத்ரி… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… “எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?” “எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு” “மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா…” “இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்” “ச்சு… ச்சு… “எனக்கு அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு” சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை. “இங்கே… தோ… இங்கேதான். இங்கே பின்பக்கமா எறும்பு க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு மரங்கொத்திப் பறவைகள் மரங்களில் ‘டொக்... டொக்...' எனக் கொத்தும் சத்தம், அந்தக் காட்டின் அடர்த்தியான மௌனத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. எங்கோ காட்டாறு ஓடும் சத்தம், பின்னணி இசைபோல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காற்றில் பெயர் தெரியாத ஏதேதோ பூக்களின் வாசம். அந்தப் பெரிய குமிழ் தேக்கு மரத்துக்கு மேலே, வெள்ளிச்சரம் போல் மழை சடசடவெனப் பெய்துகொண்டிருக்க, அவளும் அவனும் மரத்தில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தனர். அவள் தனது முகத்தில் வழிந்த மழைநீரை, தனது மெல்லிய விரல்களால் வழித்தபடி, மேல் கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அப்போது மரத்…
-
- 0 replies
- 3.5k views
-
-
‘ஓ பார்த்திட்டன்’ என்று சொன்னான். ஆனால் அவன் நாங்கள் இருந்த வீட்டைப் பார்க்கவில்லை. அவன் அன்று நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்திருந்தால் அவனுக்கு பெரிய வெள்ளி. அலட்சியம் செய்ததால் அன்று நாம் பிழைத்தோம். நாங்கள் தொடர்ந்து நகர்வை மேற்கொள்ள முடியாது புதுக்குடியிருப்பை நோக்கி ஆமிக்காரரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனங்களின் தொடர் போக்கும், நவீன கருவிகளைப் பொருத்திய பெரிய வாகனங்களும் சென்றவாறே இருந்ததோடு, புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து பெரும் வெடிச் சத்தங்களோடு, கடும் சண்டை நடைபெறும் சத்தமும் கேட்டவாறேயிருந்தது. அப்போது நாங்கள் எங்களுக்குள்ளேயே எங்கட ஆட்கள் அடிக்கிறாங்கள் போல எனக் கதைத்துக் கொண்டோம். எங்கட (ரீமில்) அணியில் இப்ப ஐந்து (05) பேருக்கு சின்னமுத்து (அம்மாள் வ…
-
- 0 replies
- 2k views
-
-
ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்! ஒருக்களித்து மூடி இருந்த கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. சத்தமில்லாமல் கதவைச் சாத்தினாள். உள்ளே பெரியவர் நிறுத்தி நிதானமாக மூச்சிழுத்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடி இருக்க, அது தூக்கத்தையோ, மயக்கத்தையோ காட்டின. பக்கத்து ஸ்டூலில் அமர்ந்தபடி கதவை மறுபடியும் பார்த்து உறுதி செய்து கொண்டாள். கைப்பேசியை கைப்பையிலிருந்து எடுத்து ஆன் செய்தாள். டிடிங் என்று அது ஆன் ஆகிற ஓசை பொன்னுசாமியின் நாயனம் கேட்டது போல் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. கதவை மறுபடியும் பார்த்தாள். யாரும் வரவில்லை …
-
- 0 replies
- 1.1k views
-
-
நட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா (மணிக்கொடி எழுத்தாளர்) ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப.... ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!’ ‘அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம் விடப் பெரியவர்.’ ‘அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?’ ‘சாயங்காலத்தில்.’ ‘எப்படியப…
-
- 0 replies
- 2.3k views
-
-
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்.. ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்கும…
-
- 0 replies
- 803 views
-
-
அவன் கே.ஜே.அசோக்குமார் அவனைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை எனப் பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவனைப் பற்றிச் சொல்ல அதிகமும் இருக்கவே செய்கிறது என எப்போதும் தோன்றும். அவனுக்கொன்று சில கொள்கைகள், செய்கைகள், பழக்கவழக்கங்கள் என்று தனித்து உண்டு. ஆனால் அவைகளை அவன் அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. என்னை அவனிடமிருந்து பிரிப்பது இந்த ஒரு விஷயம்தான் என அவ்வப்போது நினைத்து கொள்வேன். அவனை என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடியான அன்யோன்யம் என்றாலும் சில விஷயங்களுக்காக அவன் என்னைவிட்டு விலகிச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்குப் புரியாத பல விஷயங்கள் அவனுக்குப் புரிவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனக்குப் புரிந்த சில விஷயங்கள் அவனுக்குப் புரியாததும்,…
-
- 0 replies
- 856 views
-
-
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை நரன் சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில் பழனி, சிறு வயது முதலே பெரியாண்டவர் சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன் கொஞ்சம் கெந்திக் கெந்தி நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின் சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல் கடை முன் இருக்கும் மண்ணைச் சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும் வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிர…
-
- 0 replies
- 3.9k views
-
-
பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! | சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் | பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான்.
-
- 0 replies
- 3.9k views
-
-
ஒரு நிமிடக் கதை: ஆத்திரம்! “இந்தாடா பிறந்த நாள் கேக். முந்நூறு ரூபாய்… மூணாவது படிக்கிற, உனக்கு இது தேவையா? நீ என்ன பெரிய மனுஷனா? உங்க டீச்சருக்கு பிறந்த நாள்னு உங்க வகுப்பில் உள்ள முப்பது பையன்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாயா முப்பது ரூபாய வசூல் பண்ணி வைச்சுக்கிட்டு கேக் வாங்கித் தாங்கன்னு அடம்பிடிக்கிறே. முப்பது ரூபாய்க்கு கேக் வாங்க முடியுமா? இதெல்லாம் யாரு ஏற்பாடு பண்ணச் சொன்னா?” கடுப்பாகக் கேட்டார் செல்லையா. “நாங்களாகத்தான் ஏற்பாடு செய்யுறோம். எங்க கமலா டீச்சருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு அவங்களே சொன்னாங்க. ‘பிறந்த நாளுக்கு நீங்க எனக்கு என்ன பண்ணப்போறீங்க?’ன்னு வேற கேட்டாங்க. அதுதான் நா…
-
- 0 replies
- 496 views
-
-
மனைவியின் காதலனை கொன்ற கணவன்! | நானாவதி கொலை வழக்கு | ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது? இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.
-
- 0 replies
- 1.2k views
-
-
சொத்தையா - ஜி.தமிழினியன் சொத்தையாவுக்கு எப்போது இந்தக் குறை வந்தது? தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டி.நாராயண ரெட்டியாலும் முடியாது. அவன் ‘அப்படி’ என்று வெளியுலகத்துக்குத் தெரியாமலிருக்க கட்டை மீசை வைத்திருந்தான். எவரும் அவன் கெத்தாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஓட்டுவதைப் பார்த்தும் பொறாமைப் பட்டதில்லை. உறுதியாகத் தெரியும் ‘கன்னிப் பருவத்திலே’ மாடும் முட்டிவிடவில்லை. ஆனாலும் அந்தக் குறை வந்துவிட்டது. மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த தமிழக வாலிபர் கைதாவாரா? திருப்பூர், ஆக. 21: மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த வாலிபரைத் தேடி நாளை தமிழகம் வரும் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். முகநூல் திருப்பூர் அவிநாசி ரோடு கம்பன் நகரில…
-
- 0 replies
- 1.2k views
-