Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்! ஒருக்களித்து மூடி இருந்த கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. சத்தமில்லாமல் கதவைச் சாத்தினாள். உள்ளே பெரியவர் நிறுத்தி நிதானமாக மூச்சிழுத்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடி இருக்க, அது தூக்கத்தையோ, மயக்கத்தையோ காட்டின. பக்கத்து ஸ்டூலில் அமர்ந்தபடி கதவை மறுபடியும் பார்த்து உறுதி செய்து கொண்டாள். கைப்பேசியை கைப்பையிலிருந்து எடுத்து ஆன் செய்தாள். டிடிங் என்று அது ஆன் ஆகிற ஓசை பொன்னுசாமியின் நாயனம் கேட்டது போல் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. கதவை மறுபடியும் பார்த்தாள். யாரும் வரவில்லை …

  2. நட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா (மணிக்கொடி எழுத்தாளர்) ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப.... ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!’ ‘அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம் விடப் பெரியவர்.’ ‘அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?’ ‘சாயங்காலத்தில்.’ ‘எப்படியப…

  3. மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்.. ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்கும…

  4. அவன் கே.ஜே.அசோக்குமார் அவனைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை எனப் பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவனைப் பற்றிச் சொல்ல அதிகமும் இருக்கவே செய்கிறது என எப்போதும் தோன்றும். அவனுக்கொன்று சில கொள்கைகள், செய்கைகள், பழக்கவழக்கங்கள் என்று தனித்து உண்டு. ஆனால் அவைகளை அவன் அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. என்னை அவனிடமிருந்து பிரிப்பது இந்த ஒரு விஷய‌ம்தான் என அவ்வப்போது நினைத்து கொள்வேன். அவனை என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடியான‌ அன்யோன்யம் என்றாலும் சில விஷய‌ங்களுக்காக அவன் என்னைவிட்டு விலகிச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்குப் புரியாத பல விஷய‌ங்கள் அவனுக்குப் புரிவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனக்குப் புரிந்த சில விஷய‌ங்கள் அவனுக்குப் புரியாததும்,…

  5. மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை நரன் சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில் பழனி, சிறு வயது முதலே பெரியாண்டவர் சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன் கொஞ்சம் கெந்திக் கெந்தி நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின் சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல் கடை முன் இருக்கும் மண்ணைச் சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும் வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிர…

  6. பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! | சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் | பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான்.

  7. ஒரு நிமிடக் கதை: ஆத்திரம்! “இந்தாடா பிறந்த நாள் கேக். முந்நூறு ரூபாய்… மூணாவது படிக்கிற, உனக்கு இது தேவையா? நீ என்ன பெரிய மனுஷனா? உங்க டீச்சருக்கு பிறந்த நாள்னு உங்க வகுப்பில் உள்ள முப்பது பையன்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாயா முப்பது ரூபாய வசூல் பண்ணி வைச்சுக்கிட்டு கேக் வாங்கித் தாங்கன்னு அடம்பிடிக்கிறே. முப்பது ரூபாய்க்கு கேக் வாங்க முடியுமா? இதெல்லாம் யாரு ஏற்பாடு பண்ணச் சொன்னா?” கடுப்பாகக் கேட்டார் செல்லையா. “நாங்களாகத்தான் ஏற்பாடு செய்யுறோம். எங்க கமலா டீச்சருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு அவங்களே சொன்னாங்க. ‘பிறந்த நாளுக்கு நீங்க எனக்கு என்ன பண்ணப்போறீங்க?’ன்னு வேற கேட்டாங்க. அதுதான் நா…

  8. மனைவியின் காதலனை கொன்ற கணவன்! | நானாவதி கொலை வழக்கு | ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது? இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.

  9. Started by நவீனன்,

    சொத்தையா - ஜி.தமிழினியன் சொத்தையாவுக்கு எப்போது இந்தக் குறை வந்தது? தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டி.நாராயண ரெட்டியாலும் முடியாது. அவன் ‘அப்படி’ என்று வெளியுலகத்துக்குத் தெரியாமலிருக்க கட்டை மீசை வைத்திருந்தான். எவரும் அவன் கெத்தாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஓட்டுவதைப் பார்த்தும் பொறாமைப் பட்டதில்லை. உறுதியாகத் தெரியும் ‘கன்னிப் பருவத்திலே’ மாடும் முட்டிவிடவில்லை. ஆனாலும் அந்தக் குறை வந்துவிட்டது. மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த தமிழக வாலிபர் கைதாவாரா? திருப்பூர், ஆக. 21: மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த வாலிபரைத் தேடி நாளை தமிழகம் வரும் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். முகநூல் திருப்பூர் அவிநாசி ரோடு கம்பன் நகரில…

  10. இன்னும் ஓர் அம்மா! அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான். பாத் ரூமிலிருந்து " தடால்' என்று ஒரு சத்தம். அவன் வீட்டில் இல்லை. தெருக்கோடியில் உள்ள நெல்லை குசலம்பாள் காய்கனிக்கடை கடைக்குச் சென்று இருக்கிறான். காய் ஏதாவது வாங்கி வரலாம் என்றுதான் போயிருக்கிறான். அவன் மனைவி அச்சத்துடன் பாத்ரூம் அருகே சென்றாள். என்ன சத்தம் என்று பார்த்தாள். "மாமா மாமா என்ன ஆச்சு, கதவைத் திறங்கோ'' நான்கு முறை கத்தி நிறுத்தினாள். "அம்ம்ம்மா.... அம்ம்ம்ம்மா'' என்று இரண்டு தடவை ஈன சுவரத்தில் ஒரு குரல். பாத்ரூமிலிருந்து வந…

  11. [ A+ ] /[ A- ] பெயர் : நரேன். தொழில் : பாண் போடுவது. தகுதி : இலங்கை அகதி . தந்தை பெயர் :வல்லிபுரம் . தொழில் :பாண்போடுவது. உபதொழில் :கள்ளு அடிப்பது . ************************************************************* 1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெ…

  12. போர்வை – அனோஜன் பாலகிருஷ்ணன் 1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும், சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது. 1 மேயர் அல்பேர்ட் துரையப்பா ‘முஸ்தபா’ தையல்கடையில் மிகச்சாதாரணமாக த…

  13. உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய் மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1... (முதல் பாகம்) அத்தியாயம் – 1 விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன் இன்னும் சுடர்ந்து கொண்டிருந்தன. எனினும் கீழ்த்திசையில் வானம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் இருளிலிருந்து சிறிது சிறிதாகப் புலப்படலாயின. திடீரென அவற்றின் முடிகள் மீது பலத்த குளிர் காற்று வீசியடித்தது. உடனேயே காடு உயிர்த்தெழுந்து முழுக்குரலுடன் கணீரென அரவமிட்டது. தணிந்த சீழ்க்கை ஒலியால் ஒன்றையொன்று கூவி அழைத்தன. நூறாண்டுப் பைன் மரங்கள், பனி அ…

  14. பிரிகூட்டில் துயிலும் விதைகள் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பாப்லோ அறிவுக்குயில், ஓவியங்கள்: ம.செ., சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய 'மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும் உள்ளிழுத்தபடியே மிக வேகமாகச் சுழல்வதைக் கண்டு, தலையைத் தூக்கிப் பார்த்த மறுகணமே தீய்ந்துகிடந்த புல்பூண்டுகளைக் கரண்டத் தொடங்கின. தரிசு நிலம் எங்கும் வெயில் கொளுத்தியது. கோவணத்துணியாக விழுந்திருந்த நிழலில் ஒதுங்கிய பெருமாள், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். செம்மறிகள் என்றால் மேய்ப்பதில், வளைப்பதில் இவ்வளவு சிரமம் இருக்காது. இவை யாவும் வெள்ளாடுகள்... சிறிது நேரம் கண்ணயர்ந்தாலோ, தலை மற…

  15. இறுதி யுத்தத்தின் பின்னான நாட்களில் அனைவரும் வவுனியா முகாம்களிற்கு கொண்டு வரப்பட்டிருந்தபோது உணவு, உடை, இருப்பிடம்,தண்ணீர் என அனைத்தையும் பெறுவதற்கு பெரிய நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முழுக் குடும்பமுமே இவற்றை பெறுவதற்கு ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டியிருந்தது. பெண்கள் தண்ணீர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களின் வரிசையில் காத்திருக்க, ஆண்கள் உணவு வண்டிகளின் பின்னால் ஓடி உணவு பெறுவது, கூடாரமமைப்பது, பொருட்கள் வாங்க அலைவது எனத் திரிந்தார்கள். இந்த நாட்களில் அனைவருக்கும் இருந்த ஒரே சந்தோசமெனில், யுத்த வலயத்தில் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் பற்றிய தகவல்களே. ஓவ்வொருவரும் ஒவ்வொரு முகாம், வலயம், கூடாரமாக அலைந்து திரிந்தோம். ஒவ்வொரு காலடி வைக…

  16. கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம் ``சார், சொல்லச் சொல்லக் கேட்காம வெளியே அருணகிரி உங்க காரைக் கழுவிக்கிட்டு இருக்காரு. என்ன செய்றதுனு தெரியலை’’ என்றான் உதவி இயக்குநர் ஸ்ரீ. மகேந்திர குமாருக்கு ஆத்திரமாக வந்தது. ``அந்த ஆள் என்ன எழவுக்கு இங்கே வந்து உசுரை எடுக்கிறான். அவனை யாரு கார் கழுவச் சொன்னது?’’ எனக் கத்தினான். ``ஆளு செம போதை. சட்டைகூடப் போடலை. வெறும் பனியனோட வந்திருக்கார்’’ என்றான் சேகர். ``இருக்கிற இம்சை போதாதுனு இது வேறயா?’’ - சலிப்புடன் அறைக் கதவைத் திறந்து படி இறங்கி கிழே வரத் தொடங்கினான் மகேந்திர குமார். அவன் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து ஆறு வெற்றிப் படங்களைத் தந்த உச்ச இயக்குநர். கீழே அவனது காரைத் துடைத்துக்கொண்டிருந்த…

  17. அப்சரஸ் வந்திருந்தாள் தனது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள் அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு மூச்சு முட்டியது.. அப்போதுதான்…

    • 0 replies
    • 1.6k views
  18. பயங்கரமான அலுப்பு… தனியார் வைத்தியக்கல்லூரிக்கு எதிராக பதினைந்து கிலோ மீட்டர்கள் கால் தேய்த்தது, அதற்கான பலனை கொடுத்துக்கொண்டிருந்தது. அடமென்ரியம் உலோகத்தை உருக்கி காலுக்குள்ளே வார்த்தது போல் மலையாய் கனத்தது கால். ஆறு மணி நேர அளவான நித்திரை ஒன்றே அப்போதைக்கு என்னுடைய ஒரே தேவையாக இருப்பதை உணர்ந்து கொண்டு ஹொஸ்டலுக்கு ஏறும் மலைப்படிகளை ஊன்றிக்கொண்டிருந்தேன்… பேராதெனிய என்ற சிங்கள வார்த்தையால் பேராதனை என்ற தமிழ் உரு கொடுக்கப்பட்டிருந்த பிரதேசம் அது. மத்தியமாகாணத்தில் அதிக ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அதை கண்டி மாவட்டத்தில் இருந்து தெற்குப்புறமாக ஆறுகிலோ மீட்டர்கள் சென்றால் அடையலாம்.. அதை என்பதை விட அவள் என்று விளித்தல் ரசமாக இருக்கும்.. எனக்கு நன்றாய்த்தெரிந்த வன…

    • 0 replies
    • 736 views
  19. டிஜிட்டல் செத்தவீடு! நேரம் அகாலத்தைக் கடந்திருந்தது. இன்னும் சிலமணித்தியாலங்களில் பொழுது பொலபொலவென விடிந்துவிடும். ஆனாலும் சூரியனின் கதிர்கள் பூமியைத் தொடுவதற்கிடையில் வேலை முடிந்துவிட வேண்டும் என்ற அவசரத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பனியைக் குடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது. அரைமணித்தியாலப் பயணத்தின் பின் ஸ்ரூடியோ ஒன்றின் முன்னால் அந்தமோட்டார் சைக்கிள் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள, ஸ்ரூடியோவின் கதவு தட்டப்பட்டது. கொலைகளும் கொள்ளைகளும் மலிந்துவிட்ட சூழலில் நள்ளிரவு தாண்டிய பின்னர், இருட்டு வேளையில் கதவு பலமாகத் தட்டப்பட்டதால் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் இருவருக்கும் ஈரற்குலை ஒருநொடியில் தீய்ந்தே போய்விட்டது. நடப்பது நடக்கட்டும் என்ற நினை…

  20. உயிரின் நிழல்! "யாரு'' என்றபடி வீட்டுக்குள் இருந்து கதவைத் திறந்தபடி வயதொத்த பெண். "வா தர்மு என்ன? பத்திரிகையெல்லாம்'' அவளுக்கு ஆச்சரியம். "நாளைக்கு அம்மாவுக்கு பெயர் சூட்டு விழா... வந்துருங்க'' என்றவனின் வார்த்தையை ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டவளாய். "என்னப்பா புரியலையே'' "நாளைக்கு புரிஞ்சு போயிரும்'' சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த தெருவின் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான். யாருக்கும் புரியாத புதிராக இருப்பது உண்மைதான். அவன் அம்மா இறந்து பதினாறாம் நாள். காரியத்துக்காகத்தான் கூப்பிடுவான் என்றிருந்தாள். காரணம் தர்முவின் அம்மா மேகலை, எழுபத்தி ஐந்து வயதில் தடுமாற்ற நிலை ஏற்பட்டப…

  21. பாதுகை! — டொமினிக் ஜீவா. சிறப்புச் சிறுகதைகள் (24) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – டொமினிக் ஜீவா எழுதிய ‘பாதுகை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால் பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான், முத்து முகம்மது. வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப் போல, அவனைச் சுட்டிக்காட்டின. சே! சே! காலிலே ஒரு செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதி…

  22. Started by Athavan CH,

    பாத்திமா - ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஒரு மௌன இரைச்சல் என் மனதைக் கிழிக்கிறது. பிச்சை எடுப்பவளிடம் இத்தனை தன்னம்பிக்கையை எதிர்பார்த்திராததால் பாத்திமா எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே எ…

    • 0 replies
    • 2.6k views
  23. Started by கிருபன்,

    பொலிடோல் நடேசன் (மிருக வைத்தியர் - அவுஸ்திரேலியா) ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் …

  24. கப்பல் எப்பவரும் கருணை ரவி முள்ளிவாய்க்கால் அ.த.க.பாடசாலையில்தான் நிலானியை கண்டேன். பாடசாலையில்தான் வைத்தியசாலை இயங்குகிறது. சின்னக்கட்டடம். அதுக்குள் உயிருக்காகப் போரடிக் கொண்டிருப்பவர்கள் சிலர் தனித்துமாய்… சிலர் உறவினர்களோடும்… சிலர் உயிர் பிரியும் தறுவாயிலும் கிடந்தார்கள். வெளியில், மர நிழல்களில் கால் கைகளை இழந்தவர்களும் இறந்தவர்களும் குற்றுயிராய்த் துடிப்பவர்களுமாய்… வெறும் நிலத்திலும் தறப்பாள்களிலுமாய்க் கிடந்தார்கள். நான் சஜீத்தை இறந்தவர்களிலும் காயப்பட்டவர்களிலும் தேடிக்கொண்டிருக்கையில்தான் நிலானியைக் கண்டேன். கறுத்திருந்தாள். முன்னைய வடிவெதுவுமில்லை. இரண்டு பின்னல்கள். முன் மயிர் மங்கிக்கட். சிரித்த முகம். இப்போ எதையோ தொலைத்தவளாய் அரைச்சுவரில் முகத…

  25. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா . யாழ் எஸ். பாஸ்கர். அவுஸ்திரேலியாவில் 12 ஆவது எழுத்தாளர் விழா கடந்த 13.05.2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேணில். பிறஸ்ரன் நகர மண்டபத்தில், திருவள்ளுவர் அரங்கில், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படவிருந்த விழா சீரற்ற காலநிலை காரணமாக 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடைவேளையின்றித் தொடர்ந்து நடைபெற்றது. இடையே பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், விழா முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டன. ஓவியர் ஞானம், கலைவளன் சிசு நாகேந்திரம்…

    • 0 replies
    • 892 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.