Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. கைது செய்யப்பட்டபோது என் மனைவி நளினி, 50 கிலோ எடை இருந்தார். நான் 60 கிலோ. இரண்டு மாத கர்ப்பிணியாக 'மல்லிகை’யின் குரூர அறைகளுக்குள் அடி எடுத்துவைத்த நளினி, அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஜுடிஷியல் கஸ்டடியில் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது நளினியின் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 35 கிலோ. 15 கிலோ எடையைக் குறைக்கிற அளவுக்கு சித்ரவதைகள் குரூரமாகவும் கொடுமையாகவும் இருந்தன. நான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது, வெறும் 30 கிலோதான் இருந்தேன். பாதியாக என்னைக் கழித்து, வெறி தீர்த்திருந்தார்கள். வெறும் வார்த்தைகளுக்காக இதை நான் சொல்லவில்லை. ராஜீவ் வழக்கில் நாங்கள் வளைக்கப்பட்டபோது எவ்வளவு எடை இருந்தோம், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எந்த அளவுக்கு…

  2. ஆழத்தில் ஆறாத ரணம் (தொடர்ச்சி ) தலை நகரில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் காலத்தில் ,ஒரு நாள் அவளையும் குழந்தைகளையும் முகவர் மூலம் எடுக்க இருப்பதாக சொன்னான். ஊரவரின் வக்கனை கதை களுக்கு மத்தியில் வாழ்வதை விட ,அப்பாவிடம் போய் சேரும் ஆர்வத்தில் நாளை எண்ணி காத்திருந்தார்கள். நாளும் வந்தது, முகவருடன் விமான நிலையம் சென்ற போது ,அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்ப பட்டு விட்டார்கள் . ராஜிக்கு ஏமாற்றமும் , மேலும் தலையிடியும் ஆகியது,மீண்டும் முகவர் காசை தர மறுப்பதாகவும் அவளை தன் தாய் தந்தையுடன் குழந்தைகளை விட்டு வர சொல்லி ராகுலன் சொல்லவே ராஜி மறுத்து விட்டாள். பல வித மனப்போராடங்களுக்கு மத்தியில் ,பயணத்தை தொடர்ந்தாள். விமான…

  3. ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி விளையாடும் பாப்பா – நீ ஓளிந்து கொள்ள எண்ணாதே பாப்பா, கூடி வரும் காலமடி பாப்பா – உன் குறைகள் ஒழியுமடி பாப்பா. சிங்களப் படைகளை பாப்பா – நீ சிதைத்திட எண்ணங்கொள் பாப்பா சித்தத்தைக் கலக்கிடும் கருத்தை – உன் சிந்தையில் கொள்ளாதே பாப்பா. சோகத்தை மறந்திடடி பாப்பா – நீ சுதந்திரத்தை நினைத்திடடி பாப்பா, வேகத்தில் காட்டிவிடு செயலை – உன் வீரம் தெரியுமப்போதடி பாப்பா. பயத்தை உதறிவிடு பாப்பா – நீ பண்டமல்ல உயிர்ப் பொருள்; பாப்பா, சுயத்தை உணர்ந்து கொள் பாப்பா – உன் சுயநலத்தை அகற்றிடடி பாப்பா. நாடுகளை நாடாதே பாப்பா – நீ நம்பலத்தை உணர்ந்திடடி பாப்பா, வாடுவதை விட்டுவிடு பாப்பா – உன் வலுவை நீ பெருக்கிடடி பாப்பா. …

    • 0 replies
    • 816 views
  4. அலி : ஒரு விமர்சகன் சொன்ன கதை அலியிடம் எப்பொழுதாவது அதைக் கேட்டுவிடவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், ‘என்ன மச்சான்… நீயே இப்புடிக் கேக்காய்?’ என்று திருப்பிக்கேட்டுவிடுவானோ என நினைத்து, தவிர்த்துவந்தேன். நிறைய நேரங்களில் அவன் ஜோக்கும் பாட்டும் சிரிப்புமாக இருக்கும்போதெல்லாம் அந்தக்கேள்வி என் அடித்தொண்டை வரை வந்துசெல்லும். அதைத் துப்பிவிடத் தகுந்த சந்தர்ப்பம் நோக்கியிருந்தேன். கூட்டாளிமாருடன் சேர்ந்து எங்காவது முசுப்பாத்தியாகச் செல்வதென்றால் அலியைத் தவறாமல் கூட்டிச்செல்வோம். செல்லுமிடங்களையெல்லாம் மகிழ்ச்சியால் நிறைத்துவிடக்கூடியவன் அவன். சிங்களப்புறத்தில் நீண்டகாலம் வேலைசெய்தவன் என்பதால், சிங்கள் செக்ஸ் ஜோக்குகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. ஒரே ஜோக்கை அவன…

  5. பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…

  6. வெளிச்சம் ஜாக்கிரதை திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை ஏதும் தோன்றவில்லை. அதன் பிறகு ஓர் இரவு கடிகாரத்தைப் பார்த்தேன்... மணி இரண்டு. அடுத்த இரவு எழுந்தேன்... மணி இரண்டு. அடுத்த இரவு, அடுத்த இரவு... என வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்தது. எது காரணமாக இருக்கும்? சீக்கிரம் சாப்பிட்டுப் படுத்தேன். அப்போதும், இரண்டு மணி. தாமதமாகச் சாப்பிட்டுத் தூங்கப் போனேன். அப்போதும் இரண்டு மணிக்கு விழிப்பு வந்தது. என் படுக்கையை திசை மாற்றிப் போட்டேன். இரண்டு தலையணைகள் வைத்துப் பார்த்தேன். தலையணையே இல்லாது படுத்துப் பார…

  7. மாற்றமா ? தடுமாற்றமா? அ. முத்துலிங்கம் பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். ‘என்ன தான் என்று பார்ப்போமோ?’ என்று வந்திருந்தேன். குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பா…

  8. ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம் எழுத்தாளர் ஜெயமோகனை தெரியாதவர்கள் நவீன இலக்கிய உலகில் இருக்க முடியாது. கணிசமான இலக்கிய வாசகர்கள் காலையில் எழுந்தவுடன் அவரது வலைதளம் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஜெயமோகன் தனது முதல் நாவலான ‘ரப்பர்’ தொடங்கி விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், கொற்றவை ஆகிய நாவல்களால் பரவலான வாசகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அவரது ‘அறம்’, ‘வெண்கடல்’ சிறுகதை தொகுதிகளும் இலக்கிய உலகில் நன்றாகப் பேசப்பட்டன. தற்போது, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் மகாபாரதம் குறித்த தொடர் நாவல்களை எழுதி வருகிறார். ஜெயமோகன் இலக்கிய உலகில் மட்டுமல்ல; திரைப்பட உலகிலும் பரிச்சயமானவர். இயக்குநர் லோகிததாஸின் ‘கஸ்தூரிமான்’ தொடங்கி…

  9. தேவன் வருவாரா? ஜெயகாந்தன் சிறுகதை! தேவன் வருவாரா? ஜெயகாந்தன் சிறுகதை! பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பிவிட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு,குடிசைக்கு வெளியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது. 'நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போணா ? 'கிழவிக்கு நெஞ்சு படபடத்தது. இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை. சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது.…

    • 0 replies
    • 1.2k views
  10. ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்? காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணுடன் உறவு என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது. தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி கடுமையான வசவுகள் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். அத்துமீறி நடந்த ஆண்டைகளின் குறிகளை தலித் பெண்கள் வெட்டி எறிந்த கதைகளையும் படித்திருக்கிறேன். கிராமத்துப் பெண்க…

  11. திரை - சிறுகதை ஜா.தீபா, ஓவியங்கள்: ஸ்யாம் சுபலன் அமைதியாக அமர்ந்திருந்தார். சிக்கலான முடிவுகள் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் அன்று, அவரது மனம் கொதிப்பில் இருந்தது. தூரமாகத் தெரிந்த மலைச்சிகரங்களை இலக்கு இன்றி பார்த்துக்கொண்டே இருந்தார். குரு நாட்டில் இருந்து காந்தார தேசத்துக்கு, இதுவரை திருமணத்துக்கான அழைப்புகள் மட்டுமே வந்திருக்கின்றன; முதன்முறையாக திருமணச் சம்பந்தம் தொடர்பாக தூது வந்திருக்கிறது. `இது சரிப்படாது. இல்லை... ஏன் சரிப்படாது? குரு வம்சத்தின் பட்டத்து மகிஷியாகும் யோகம் காந்தாரிக்கு இருக்கக்கூடும். ஆனால்...' நினைக்கும்போதே அவர் அடிவயிற்றை என்னவோ செய்தது. அப்போதுதான் அந்த அலறலும் கேட்டிருக்க வேண்டும். ஆழ…

  12. பாக்கியம்,அம்மா பாக்கியம் கெதியா வெளிக்கிட சொன்னனான் எல்லே ஏதோ பொண்ணு பார்க்கிறதுக்கு வெளிக்கிடுற மாதிரி இருக்கு சீக்கிரமா வாடி, இதோ ஒரு நிமிசத்திலை வந்துடுறன் ஆமா என்னை வெளிக்கிட சொல்லிட்டிங்கள் ஏன் என்று சொல்லலையே. அதுவா வா சொல்றேன் அது ரகசியம் நீயே நேரிலை பாரு என்றார் சண்முகம் சரி சரி வா நேரம் போட்டுது என்று கூறியவாறே இருவரும் காரில் புறப்பட்டனர். காரும் வந்து நின்றது என்னங்க இங்கை வந்திருக்கிறியள் ?..........ஆம் அது ஒரு அநாதை இல்லம் சண்முகம் பாக்கியம் தம்பதி திருமணம் முடித்து பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பாக்கியம் இல்லை அந்தக்குறையைத் தீர்க்கத்தான் இங்கு வந்திருந்தார்கள். இஞ்சை பாரு பாக்கியம் எத்தனை நாளைக்குத்தான் மழலைக்குரல் கேட்காமல் இருப்பது அதுதான்…

    • 0 replies
    • 855 views
  13. பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்டை தரை மட்டமாக்கினார். பதறவைக்கும் அரசியல் கொலைகளில் இதுவும் ஒன்று.

  14. Started by நவீனன்,

    உறவுகள் "பார்த்தீங்களா...எங்கண்ணான்னா அண்ணாதான்...'' தேவகி அவள் கணவன் ஸ்ரீநிவாசனிடம் துள்ளலோடு சொன்னாள். கையில் அந்தச் சேலை பளபளத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு அற்புதமான டிசைன்...? புடவை தேர்வு செய்யவும் ஆழ்ந்த ரசனையுடன் கூடிய ஒரு கற்பனை வளம் வேண்டும்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி. பெண்களுக்கு எத்தனை சேலை வாங்கினாலும் திருப்தியே வருவதில்லை. புதிது புதிதாய்க் கட்டிக் கொள்வதில் அப்படியொரு உற்சாகம். பீரோவைத் திறந்தால், காத்திருந்ததுபோல் ஒன்வொன்றாய் வழுக்கி வழுக்கிக் கீழே விழும் புடவைகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஸ்ரீநிவாசன், கண்ணாடி முன் நிற்கும் அவளைப் பார்த்தான். புடவையினால் அவளுக்கு அழகா? அவளால் புட…

  15. ஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட் உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏகலைவன் யார் தெரியுமல்லவா? மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோண…

  16. முக்குளி வாத்துகளின் கதை சிறுகதை: மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சின்ன முட்டிகளின் மீது நெற்றியை வைத்துக்கொண்டு ஒரு நத்தை ஊர்வதைப் போல மெள்ள நகர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தினங்களின்மீது, குட்டி முயல் பார்வைகொண்ட தேவதையாகக் காத்திருக்கும் என் பரிபூரணமான ஸ்ரீ குட்டியே... நீ என் வேர்களுக்கு இடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நம் மண் எத்தனை செழிப்பானது என்பதற்கு, நம் முற்றத்தில் திடீரென முளைத்திருக்கும் இந்த மாமரமே சாட்சி. நீ கொஞ்சம் அப்படியே இரு. அதோ மெள்ள ஊர்ந்துபோகும் அந்த நத்தையைப் பார்த்துக்கொண்டே இரு. அது தன் கூடு அடைவதற்குள், நான் உனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். பதற்றப்படாதே... கதை என்றதும்…

  17. என்ன கமலா அங்கை பார் அது சண்முகத்தின்ரை பெட்டை போல கிடக்கு? என்னடி உடுப்பு, ஜீன்ஸ் என்ன? சேட் என்ன? ஒரு பொட்டுகிட்டையும் காணேல்லை? அடி மாலா நீ வெள்ளவத்தைக்கு புதுசு தானே அதுதான் அப்படி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இருப்பாய் தானே அப்ப பார் எங்கண்டை பொடி,பெட்டையளின்ரை உடுப்பு,மேக்கப்,நாகரீகம் எல்லாத்தையும். இப்ப பெட்டையள் எல்லாம் சாறி,பஞ்சாபி போடுறதில்லை ஜீன்ஷும், டீ-சேட்டும் தான். கேட்டால் ஏதோ கிளாமரா இருக்க வேணுமாம் எண்டுதுகள். பொட்டுக்கூட வைப்பதில்லை, வைத்தால் தமிழர் என்று கண்டுபிடிச்சிடுவங்களாம் என்ன காலம் தமிழனின் நிலையை பார்த்தியே? பொடியள் மட்டும் குறைஞ்சவங்கள் இல்லை, கட்டைக் காற்சட்டையும் அதிலையும் முன்னுக்கும்,பின்னுக்கும் கிழிச்ச்விட்டு கசங்கின சேட்டும் போட்டு,கழுத்…

  18. சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி சிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ``தொடர்ந்தாப்ல ஸ்கூல வெச்சு ஏன்தான் உயிர வாங்குறாங்களோ'' என்று அலுத்துக்கொண்டாள் சம்ரிஷ்தா. படுக்கை அறையில் இருந்து அவளை எழுப்பி, கூடத்துக்கு அழைத்துவருவது பெரும்பாடாக இருந்தது அப்பாவுக்கு. ``பின்ன எப்படி ஸ்கூல் வைக்கிறதாம்?'' என்று அவளிடம் கேட்டார். ``திங்கள்-செவ்வாய் ஸ்கூல், புதன் லீவு; வியாழன்-வெள்ளி ஸ்கூல், சனிக்கிழமை லீவு'' என்று கூறினாள். குரலில் அவ்வளவு சந்தோஷம். ``அப்ப, ஞாயித்துக்கிழமை ஸ்கூல் வைக்கலாமா?'' என்று கேட்டார். ``லூஸாப்பா நீ? ஞாயித்துக்கிழமை வார விடுமுறைனுகூடவா தெரியாது உனக்கு?'' - அதைக் கேட்டு அனைவரும் சிரி…

  19. Started by நவீனன்,

    பகை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில் ஒரு நொடி மயான அமைதி. `எங்கே... செல்வம் பதிலுக்கு ஏதாவது சொல்லி, மீண்டும் பெரிய சண்டை மூண்டுவிடப்போகிறதோ' என்ற அச்ச முடிச்சு, ஒவ்வொருவரின் பார்வையிலும் விழுந்திருந்தது. மீண்டும் கத்தினார் குமாரசாமி. “ஏன்டா, இங்கன என்ன கொமரியா கொள்ளையில போயிட்டா? `போறேன் போறேன்'னு இழுத்துக்கிட்டுக்கெடந்த கெழவி, கல்யாணச்சாவாப் போயிருக்கா. ஒம் பொண்டாட்டி நெற மாசமா இருக்காளாம்ல... அப்ப நீ காட்டுப் பக்கம் வரலாமா, ஆகுமா, என்னா இதுக்கு…

  20. ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்! நானும் புருஷோத்தும் பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனியில் அறை எடுத்து தங்கியிருந்தோம். புருஷோத் அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கம்பெனியிலும், நான் ஒரு பத்திரிகையிலும் வேலை செய்ய நாட்கள் நகர்ந்தன. வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமுமே இல்லை என்று அடிக்கடி புருஷோத் சொல்லிக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி நீண்...ட பிரசங்கம் நடத்திய ஒரு மாலைப்பொழுதில் வந்த ஃபோன் கால் புருஷோத்தை புரட்டிப்போடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ... கார்த்தி இருக்காரா?'' என்றது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல். ''நான் அவர் தம்பி பேசுறேன். அண்ணன் ரெடியாகிறார். நீங்க?'' ''…

  21. பிள்ளை மனம் கல்லு "ஏம்மா உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அதான் மாச மாச பெட்ரோல் போட்டு உன்ன பாக்க வரோம்ல நீ ஏன் இப்படி வந்து நிக்கிற காலங்காத்தாலே அழுதுட்டு வந்து நிக்கிற உன் மூஞ்சியை பாத்தா வெலங்குமா என் பொண்டாட்டி காலையிலயே ராமாயணம் பாட ஆரம்பிச்சுட்டா தேவையா எனக்கு உன் வயித்துல பொறந்தேன் பாரு...ச்சே.'' இதை கேட்ட மூத்தவள் பங்கஜத்தின் நெஞ்சம் வெடித்து விடாதா என்று தன் கையாலாகாத நிலையை எண்ணி மருகினாலே தவிர, வேறு ஏதும் செய்ய முடியாத நிலை. பெண்டாட்டி பேச்சை கேட்டு பணம் ஒன்றே பெரிது என்று கருதும் பிள்ளைகளை பெற்ற தன் இழிநிலை. பெண்பிள்ளையின் அருமை இப்போதல்லவா புரிகிறது? எவ்வளவு சந்தோஷத்துடன் பெற்ற இரண்டு…

  22. நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார் அந்நியன் மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை. இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது. அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண…

  23. வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. “”எப்படியிருக்கிறது உன் விடு தலை?” என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: “”வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.” அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்க…

  24. Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did, expelled from Rome .-Baudelaire. சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர். 'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது. ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து…

  25. ஜோக் மகள் காயத்ரியின் குரல் போனில் உற்சாகமாய் ஒலித்தது.‘‘அம்மா... நான் எழுதுன ஜோக் ஒண்ணு பத்திரிகையில வந்துருக்கும்மா. படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லேன்!’’ - போனை வைத்துவிட்டாள். கமலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘‘இது எவ்வளவு பெரிய பெருமை. இதுக்காகவே அவ புகுந்த வீட்டுல அவளைக் கொண்டாடுவாங்க. எனக்குத்தான் மருமகளா ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே... ஒண்ணும் தெரியாது!’’ - எரிச்சலாய் சொல்லிக்கொண்டே சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள். மருமகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லி, தெருமுனைக் கடையில் அந்தப் பத்திரிகையை வாங்கி வரச் செய்தாள். ‘‘என் மகளைப் பார்த்து நீயும் இது மாதிரி விஷயத்தை எல்லாம் கத்துக்க. புரியுதா? எங்கே அந்த ஜோக்கை சட்டுன்னு உரக்கப் படி பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.