கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..! சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து, அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும். சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வ…
-
- 0 replies
- 905 views
-
-
கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்! ஜீ. உமாஜி pro Created: 27 November 2016 செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு மொட்டையடித்துவிட்டால் ஒருவேளை காந்தித் தாத்தாவைப்போல இருப்பாரோ என யோசித்ததுண்டு - சின்ன வயதில். அப்போதெல்லாம் சின்னட்டித் தாத்தா வீட்டிற்குப் போகிறோம் என்றதுமே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். பிரயாணஞ்செய்தல் கொடுக்கும் மகிழ்ச்ச…
-
- 0 replies
- 954 views
-
-
இந்நாவலின் வாசிப்பின்போத ு வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. தரவிறக்கம் செய்ய: http://books.sharedaa.com/2008/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-karuvachi-kaviyam.html நன்றி
-
- 0 replies
- 2.1k views
-
-
"காலம் மாறும் கவலைகள் தீரும்?" 'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது! அவன் அப…
-
- 0 replies
- 416 views
-
-
ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது. பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான். ‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்…
-
- 0 replies
- 577 views
-
-
ஒரு நிமிடக் கதை: மன்னிப்பு “இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன். ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள். ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவற…
-
- 0 replies
- 2k views
-
-
தேவிச்சித்ரா சொன்ன பதில்... தேவிச்சித்ரா தன் அறையில் ஆளுயரத்திற்கு இருந்த கண்ணாடி முன்பாக நின்று தன்னையே அதில் உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். சென்ற வருடத்தைக் காட்டிலும் சோபை இழந்து விட்ட முகமாக தன் முகவடிவு மாறியிருப்பதைக் கண்டாள். ஐயம்பாளையம் கிராமத்தில் நூற்றி ஐம்பது வீடுகள் இருக்கின்றன. தேவிச்சித்ராவின் வீடு ஊரின் கிழக்குக் கடைசியில் காட்டுக்குள் நின்றிருந்தது. இவளின் சித்தப்பா ஊருக்குள் மெத்தை வீடு கட்டிக்கொண்டு போய் ஐந்தாறு வருடங்களாயிற்று. இங்கிருந்து அவர் அண்ணனோடு பாகம் பிரித்துக் கொண்டு சென்ற நாளில் இருந்தே அவர் குடும்பம் மகிழ்ச்சியாய் இருப்பதை ஊரே பேசிக்கொண்டு தானிருக்கிறது, இன்றுவரை. மெத்தை வீடு கட்டி குடி புகுந்த ராசியோ என்னவோ, அவரின் இரண்டு…
-
- 0 replies
- 860 views
-
-
ஊனம் விடைபெற வேண்டும்! ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை. மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் சாலையில், நிமிர்ந்தும், சரிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அது, சிவகுமாருக்கு எரிச்சலாகவும், அவனது மனைவிக்கும், மகனுக்கும் புது அனுபவமாகவும் இருந்தது. பரந்து விரிந்து கிடந்த பொட்டல் க…
-
- 0 replies
- 966 views
-
-
மனதில் தோன்றிய எண்ணங்கள் சரியான இடத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் பயணம் எளிதாக இல்லாமல் போகலாம். வாழ்கையில் அந்த சரியான இடம் எது என்றே தோன்றாமல் குழம்பிக் கொண்டிருக்க, மிகச் சரியான இடத்தில் ஆரம்பித்திருந்தும், தொடர்ந்த பயணங்கள் திருப்தியை அளிக்காமல் திசை மாறி நீர்த்துப் போகலாம். அந்த மாதிரியான நிலைமை நிஜவாழ்கையில் பலருக்கு நடக்குது. சிலரோட வெற்றியும் தோல்வியும் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமில்லை, சூழ்ந்து வரும் நிலைமைகளாலும் ஏற்படலாம். சின்னக்காவின் உண்மையான பெயர் யாருக்கும் ஊருக்குள்ள அவா உசிரோடு இருந்த காலத்தில் தெரியாது, அது என்ன என்று , இந்தக் கதையின் முடிவில் நடந்த சம்பவத்தில் ஒரு நாள் அவா உயிர் இல்லாமால்ப் போன அந்த நா…
-
- 0 replies
- 1k views
-
-
உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி – கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி இந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது. அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவி…
-
- 0 replies
- 1.7k views
-
-
அற்புதம் by மஹாத்மன் அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்வோரிடம் விசேஷக் கூட்டத்தைக் குறித்தான கைப்பிரதிகள் கட்டுக்கட்டாக கொடுக்கப்படும். இவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் கம்பங்களுக்கும் பக்கத்துப் பட்டணங்கள் வரையிலும் வீடு வீடாகச்சென்று கொடுத்துவிட்டு வரு…
-
- 0 replies
- 810 views
-
-
காணாமற்போனவர்கள்- பொ.கருணாகரமூர்த்தி நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஒராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை உங்கட தாசந்தான் பிடிச்சு வைச்சிருக்கிறாராம். அந்த அப்பாவிக்குழந்தையை எங்களிட்ட மீட்டுத்தந்திடுங்கோ ஐயா…………” என்றபடி அவரின் கால்களில் விழுந்தனர். செம்மியன் பார்த்தனனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அவனது ஐந்து இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டதால அவன்மீது கோபத்தில இருந்தவன்தான், ஆனாலும் அருளல் மறைத்தல் போன்ற சாங்கியங்களில் இறங…
-
- 0 replies
- 596 views
-
-
பாம்பும் ஏணியும் கே.எஸ்.சுதாகர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் - சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கட…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனிதனும்... மனிதமும்! பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை. நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் த…
-
- 0 replies
- 574 views
-
-
ஈழமும் புலமும்(புலம்பெயர் வாழ்வும்) | ஈழத்தில் வாழ்ந்த கோ(கா)லம் பகுதி 01: http://karumpu.com/archives/217 பகுதி 02: http://karumpu.com/archives/212 பகுதி 03: http://karumpu.com/archives/206 பகுதி 04: http://karumpu.com/archives/199 பகுதி 05: http://karumpu.com/archives/194 பகுதி 06: http://karumpu.com/archives/178 பகுதி 07: http://karumpu.com/archives/173 பகுதி 08: http://karumpu.com/archives/170 பகுதி 09: http://karumpu.com/archives/166 பகுதி 10: http://karumpu.com/archives/161 பகுதி 11: http://karumpu.com/archives/154 பகுதி 12: http://karumpu.com/archives/149 பகுதி 13: http://karumpu.com/archives/307 பகுதி 14: http://karumpu.com/archives/…
-
- 0 replies
- 733 views
-
-
நாக்குகள் “சாந்தி, நேத்து தான் தங்க மலர் சினிமாவுக்குப் போயிருந்தேண்டி.” “அப்படியா? நல்லாருக்குதா?” “ஓ.. ஒரு பணக்காரன் பொண்ணு தன் அந்தஸ்துக்கு கீழே இருக்கற ஒரு வேலைக்காரனை லவ் பண்றாடி. ஆனா பாவம், வழக்கம் போல அவளோட அப்பாவும், அம்மாவும் கலயானத்துக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசியிலே எப்படியோ ரெண்டு பேரும் ஏதோ ட்ரிக் பண்ணிப் பெரியவங்களைச் சம்மதிக்க வச்சுடறாங்க. அதுதான் கதையிலே சஸ்பென்ஸ்...” “என்ன ட்ரிக்டி பண்றாங்க?” “அதைச் சொல்லிட்டா அப்புறம் நாலைக்கு நீ படம் பார்க்கிறப்ப என்ன சுவாரஸ்யம்டீ இருக்கும்? நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா? கொஞ்சூண்டு இருக்கற சஸ்பெ…
-
- 0 replies
- 806 views
-
-
ஷூட் தி பப்பி - அருண் சரண்யா தவிப்போடு காத்திருந்தோம். தனக்கு வந்திருந்த அவசரத் தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந் தார் கோபி. எங்கள் நிறுவனத்தின் முக்கிய செயலதிகாரி. நிர்வாகத்தின் முகம். ‘‘போயிட்டு வா அனு. என்னாலே வர முடியாதும்மா. சாரி. ஆல் தி பெஸ்ட்...’’ மறுமுனையில் பேசுவது அவர் மனைவி என்பது புரிந்தது. மொபைலை ஆஃப் செய்தார். அடுத்த கணம் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார். நீளமாக ஏதோ உரையாற்றுவார் என நினைத்தோம். ஊஹூம். ‘‘ஷூட் தி பப்பி’’ என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறிவிட்டு மாநாட்டு அறையிலிருந்து கிளம்பத் தயாரானார் கோபி. போகும்போது ஒரு பட்டியலை நீட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பட்டியலை மேம்போக்காகப் பார்த்தேன். ஒவ்வொரு பெயரும் வலியைக் கிளப்பியது. கடைச…
-
- 0 replies
- 742 views
-
-
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! எஸ்.ராமகிருஷ்ணன் ஜி. சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்…
-
- 0 replies
- 781 views
-
-
அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம். அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்ற ஞாயிற்றுக்கிழமை நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன். Clichy sous Bois கடந்து (இந்த இடம் எல்லோக்கும் தெரிந்ததே) ஒரு 3 கிலோமீற்றர் தான் போயிருப்பேன். காடுகளும் சோலைகளுமாக அதிசயமாக இருந்தது. பிரதான நகரிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இவ்வளவு தூய்மையாகவும் இயற்கையை பாதுகாத்தும் பராமரித்தும் வைத்திருக்கிறார்களே என. அதிசயத்தபடி கொஞ்சம் காரை நிறுத்தி காற்று வாங்குவோமா என முயன்றபோது இப்படியொரு கார் எரிந்தநிலை தெரிந்தது. அரசு நல்லது தான் மக்கள் தான்.......????
-
- 0 replies
- 1.6k views
-
-
காக்கா! பெரியவர் அண்ணாமலையின், 60ம் கல்யாணத்தை, மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர், அவரது குடும்பத்தினர். அதற்கு காரணமில்லாமல் இல்லை. ஊரின் பெரும்புள்ளி, அண்ணாமலை; அவரது மகள் அமெரிக்காவிலும், மகன் கனடாவிலும் இருந்தனர். பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதது, உள்ளூர அவருக்கு கவலை தான். ஆனாலும், அதை வெளிக்காட்டி, தன் கம்பீரத்தை குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் மனைவியோ, மனதில் பட்டதை சொல்லி, 'அந்த நாள்ல, எங்கய்யா, ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கர்ன்னு சொத்தை சேர்த்து வச்சாரு... ஆனா, என்னைய படிக்க வைக்கல. அது, என் மனசுக்குள்ள பெரிய கொறையா மண்டிக் கிடந்ததால, புள்ளைங்கள பெரிய படிப்பா படிக்க வச்சேன்; என்ன பிரயோஜனம்...' என, …
-
- 0 replies
- 672 views
-
-
ஒரு நிமிடக் கதை: நாணயம் காலை நேர நெரிசலில் குமார் பஸ்ஸில் ஏறினான். தினமும் பைக்கில் அலு வலகம் சென்று வருபவன், அன்று வண்டியை சர்வீஸுக்கு விட்டதால் வேறு வழி இல்லாமல் பேருந்து பயணம். அன்று நல்ல முகூர்த்த நாள் வேறு. பேருந்தில் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே வந்தான். ‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி நடத்துநர் வந்தார். குமார் பத்து ரூபாய் தாளை கொடுத்து “முனிசிபல் ஆபீஸ் ஸ்டாப் கொடுங்க” என்றான் . நடத்துநர் டிக்கெட்டையும் , மீதி சில்லறை யும் கொடுத்தவாறு கூட்டத்தில் முன்னே நகர்ந்து விட்டார். குமார் சில்லறையை எண்ணி பார்த்த போது, ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது…
-
- 0 replies
- 772 views
-
-
மனக்கோலம் தமிழ்நதி விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான். மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெந்து தணிந்தது காலம்...- சிறுகதை வெந்துதணிந்ததுகாலம்...- மு.சிவலிங்கம் அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
புறவழிச்சாலைப் புண்ணியங்கள் காலை மணி ஒன்பதரை. காசி விஸ்வநாதனுக்கு அன்றைய காலைக் கடமைகள் முடிந்தன. ஐந்தரை மணிக்கு எழுதல். பயோரியா பற்பொடியில் பல் துலக்குதல். மனைவி கற்பகம் கையால் தரப்படும் காபியை ருசித்துக் குடித்தல். அரை கிலோ மீட்டர் தொலைவு வியர்வை அரும்ப நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடித்து வந்து குளிர்ந்த நீரில் குளித்தல். அடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான விநாயகர் கோயில் பூஜை. பூஜை முடிந்து கற்பகத்துடன் சேர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு கடிகாரம் பார்த்தால்... அது மணி ஒன்பதரையைக் காட்டும். அதன் பிறகு அன்றையச் செய்தித் தாளை வரி விடாமல் வாசிக்கத் தொடங்குவார் காசி விஸ்வநாதன். வேலையில்…
-
- 0 replies
- 697 views
-