கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கற்படிகள் - சிறுகதை ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம் ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது. நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியத…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒருநிமிடக் கதை: டைம்..! அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள். என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் … “ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?” காத்திருப்பின் …
-
- 0 replies
- 929 views
-
-
[size=6]வண்டிற்சவாரி![/size] அ.செ.முருகானந்தன் 1 இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு …
-
- 3 replies
- 1.5k views
-
-
அம்மாவின் கைமணம்! கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..'' ""என்னப்பா செய்றது. நேரம் சரியா இருக்கே.. என்னோட ஆபீஸ் ஆட்களுக்கு இன்று கொடுத்து முடிக்கல. தபால்ல அனுப்புவோம்னு சொன்னா கேக்க மாட்டீங்கிறிங்க.. நேர்லதான் போய் கொடுக்கணும்னு சொல்றீங்க.. அதுலயும் நானும் ஒங்க கூட வரணும்ங்கிறீங்க'' ""இல்லப்பா. என்னோட ஒடம்பொறப்புக்களுக்கும் மூணாவது மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி தபால்ல அனுப்புறது சரி இல்லப்பா. நாம எல்லாரும் நேர்ல போய்த் தர்றதுதான் மரியாத..'' ""அப்ப கொஞ்சம் பொறுங்க.. என்னோட வேல…
-
- 0 replies
- 866 views
-
-
அழகி - க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு எமது திருமணம் வலிந்தே நடத்தப்பட்டதை ஓர் காரணமாகச் சொல்லலாம். எனக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாம் கிடைத்தபோதும் இந்தத் திருமணக் கேள்வியில் உண்மையிலேயே ஓர் குருடனாக இருந்துவிட்டேன். ஆம், திருமணத்துக்கு முன்னர் எனக்கு அவளது முகம் தெரியாது. அவளது மனத்தின் ஆசைகளும் தெரியாது. ஆம், என்னைப் பெற்றவர்கள் கேட்ட சீதனத் தொகை என்னைக் குருடனாக்கியது என்பதுதான் உண்மை. அவள் அழகி என்பதுகூட திருமண முதல் நாளில்தான் எனக்குத் தெரியும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…
-
- 0 replies
- 2.3k views
-
-
மகவு பொண்ணோட அம்மாவும் பையனோட அம்மாவும் சேர்ந்து நடத்துற திருமணம்ன்னாலும் எந்தக் குறையும் யாரும் காண முடியாத அளவுக்கு மூணுநாள் சடங்குகள் எல்லாத்தையும் சிறப்பா செய்து ஊரு, உறவெல்லாம் மெச்சும்படியா நடத்தி வெச்ச கல்யாணம் சங்கரன், பார்வதி கல்யாணம். வந்தவங்களெல்லாம் வாயார வாழ்த்தினர். தெய்வ சங்கல்பம் என்றே புகழ்ந்தனர். அந்த பரமசிவனும் பார்வதியும் கண்ணுக்கு காட்சி தருவதுபோல தம்பதிகள் இருந்ததா நெகிழ்ந்து புகழ்ந்தனர். பொருத்தமின்னா அப்படி ஒரு பொருத்தம். உறவினர்களிலும், நண்பர்களிலுமாக ஒருவர், "டேய் சங்கரா நல்லா ஷேமமா, அந்நியோன்யமா இருக்கணும்டா. சீக்கிரமா புதுவரவு இருக்கட்டும்டா'' லேசான வெட்கத்துடன் சங்கரனும…
-
- 0 replies
- 785 views
-
-
தோணி! … ( சிறுகதை ) … வ.அ.இராசரத்தினம். June 21, 2018 சிறப்புச் சிறுகதைகள் (3) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘தோணி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் ப…
-
- 0 replies
- 4.4k views
-
-
லதா ரகுநாதன் பரத்திற்கும் அனந்திற்கும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. " இந்த அப்பா காது டமாரமாகத்தான் போயிடுத்து" ஆம் என்று அனந்த் அவசரமாகத் தலையசைத்தான். "நேற்று இந்த மாதச் செலவு சற்றே அதிகம் ஆகும். அதனால் அதிகமாக பணம் தேவைப்படும் என்பதைச் சொல்ல முயன்று என் தொண்டைத்தண்ணி வத்திப்போனதுதான் மிச்சம்" அனந்த், தன் பக்கக் கதையைச்சொன்னான். "ஆமாண்டா.. ஹியரிங் ஏய்டெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை" பரத் அதோடு நிறுத்தாமல் செவிடு, கிழம், பணப்பிசாசு, சனியன் போன்ற அழகிய தமிழ் வார்த்தைகளுடன் அப்பாவின் பல கதைகளை அவிழ்த்துவிட்டான். ராமலிங்கம் காது கேட்காதவர்களுக்கான பிரத்தியேக அசட்டுப் புன…
-
- 0 replies
- 927 views
-
-
வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) அகரன்June 17, 2018 சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் க…
-
- 0 replies
- 6.4k views
-
-
எலியம் - உமா வரதராஜன் கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிலவிலே பேசுவோம்!… என்.கே.ரகுநாதன். சிறப்புச் சிறுகதைகள் (1) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.கே.ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள். அப்பொழுது மணி எட்டு இருக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
பறவைகளைத் தின்ன விரும்பிய சிலந்தியின் கதை. - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை யாராலும் வெற்றிகொள்ளமுடியாத ஒரு கொழுத்த சிலந்தி என்கிறேன். சாப்பாட்டுக்கு இன்னும் எத்தனை நாடகளுக்கு பூச்சிகளையே வேட்டையாடுவது என அந்தக் கொழுத்த சிலந்தி சிந்தனை செய்தது. . இனி கழுகு, நாரை, மயில் போன்ற பெரிய பெரிய பறவைகளையே உண்ணவேண்டுமென அந்தக் கொழுத்த சிலந்தி முடிவு செய்தது. . பெரிய பறவைகளைப் பிடித்து சாப்பிடும் ஆசையில் அந்தச் சிலந்தி தனது கரையோரங்களில் வலைகள் பின்னி வைச்சிருக்கு. தனது இராசதந்திரம் புரியாமல் முட்டாள் நாரைகள் ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்பு போட் சிற்றியிலும் தான் பின்னிவைத்த வலையில் வந்துமாட்டிக்கொண்டுவிட்டதென அந்தச் சிலந்தி குதூகலிக்கிறது.. இலங்கை சிலந்தி வடகிழக்கில் விரித்த …
-
- 3 replies
- 1.3k views
-
-
உறைந்த நதி -இளங்கோஅவன் 999 பக்கங்களில் எழுதத் திட்டமிட்ட தனது நாவலை பின்பக்கங்களிலிருந்து எழுத விரும்பினான். கனவிலும், காதலியைக் கொஞ்சும்போதும் நாவலைப் பற்றி சிந்தனைகள் ஓடுவதால் 999 பக்கங்களில் நாவலை எழுதுவது அவனுக்கு அவ்வளவு கடினமானதாய் இருக்கவில்லை. மேலும் எல்லாப் புகழ் மிகுந்த புனைகதையாளர்களும் சொல்வதுபோல இந்த நாவலை அவனல்ல, வேறு எதுவோ தான் எழுதவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அவன் நம்பத் தொடங்கியிருந்தான்.பின்பக்கங்களிலிருந்து எழுதத்தொடங்குகின்றேன் என்றவுடன் தனது வாசகர்கள் வேறு விதமான வாசிப்பைச் செய்யக்கூடுமென்பதால், 'பின்புறங்களில் அழகியல்-ஒரு தத்துவார்த்தமானஆய்வு' என்று தான் எழுதி, தன…
-
- 1 reply
- 912 views
-
-
கங்கம்மா "பெத்த புள்ளையத் தொலைச்சிட்டு... பேதையா நிக்கிறேனே.... ஒத்தப் புள்ளைய காணாம.... ஒறக்கமத்துப் போனேனே....'' காலங்காத்தால பிலாக்கணத்தை ஆரம்பிச்ச கங்கம்மாளப் பாத்த தங்கவேலுவுக்கும் வவுத்தெரிச்சலாதானிருக்கு. புள்ளைய நெனைச்சி கங்கம்மா அறுத்துப் போட்டக் கதுரா தொவண்டு போய்ட்டா. "இந்தா புள்ள, ஒரு வாயாவது குடி கொவளையில கஞ்சிய வைச்சிக்கிட்டு கெஞ்சறாரு தங்கவேலு.'' மூச்ச வுடலையே அவ. பின்னயென்ன கோவம்னா கோவம் அப்பிடியொரு கோவம் புருசங்காரருமேல. "சேத்து வைச்சிருக்க சொத்தே நாலு தலமொறைக்குத் தாங்கும். அந்நிய தேசத்துல எம்புள்ள போய் செரமப்படணும்னு தலையெளுத்தா என்ன?'' சீலத்தலப்பு நனைஞ்சது. "இந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
விற்பனைக்கு அல்ல... டவுன் பஸ் அந்த நகைக்கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மஞ்சள் பையைக் கைகளில் இறுக்கி வைத்தபடி கீழே இறங்கினாள். அது தீபாவளி சீசன் என்பதால் கூட்ட நெரிசலில் ஜேப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவள் கையில் சுருட்டி வைத்திருக்கும் மஞ்சள் பை அவளுடைய முழு வாழ்வின் கனவு. அதனை அத்தனை எளிதில் பறிகொடுக்க அவள் தயாராக இல்லை. அந்த நகைக் கடையை இதே வீதியில் கடந்து செல்லும்போது பலமுறை கவனித்திருக்கிறாள். அவள் சமையல் வேலைக்குச் செல்லும் இரண்டு மூன்று வீடுகளில் அந்த வீட்டு மனிதர்கள் அந்தக் கடையின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறும்போது செவி …
-
- 1 reply
- 1.1k views
-
-
கம்போடியா பரிசு - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சல…
-
- 0 replies
- 2.1k views
-
-
அண்மையில் படித்த நல்லதொரு கதை ************************************* காதல் காதல் காதல்..(1) ரிஷபன் சில சினிமாப் பாடல்கள் கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிடும். மனசுக்குள் டேப் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி சில மனிதர்களும். அதிலும் குறிப்பாய் அழகான பெண்கள். இங்கே அழகு என்று சொல்வது மனசைக் கவர்கிற ஏதோ ஒன்று. புற வடிவம் மட்டுமல்ல. அப்படித்தான் வித்யா என்னைக் கவர்ந்தாள். 'ரெண்டாவது மாடிக்குப் போ. கடைசி காபின். உன் புரபோசல் அவகிட்டேதான் இருக்கு. நேத்தே நாம வென்டார்க்கு பதில் போட்டிருக்கணும்' என் பாஸ் அனுப்பியபோது அரைமனதாய்த்தான் விவாதித்து விட்டு கிளம்பினேன். 'ஸார்.. ஃபைனான்ஸ் கேட்ட எல்லா டிடெய்லும் இருக்கு. அவங்க ரைஸ் ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் இன்று வரும் வழியில் பாதிரி செல்லையாவைப் பார்த்தேன். காய்கறி வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்தவர், என்னைப் பார்த்ததும் நிதானித்தார். “பச்சை படியும்விதம் ஷேவ் செய்யப்பட்டு, மீசையற்ற மொழுமொழு கன்னங்கள் கொண்ட ஆண்களைப் பார்த்தால் gay போலவே தோன்றுகிறது” என்றவுடன், திடுக்கிட்டு கன்னத்தைத் தடவியபடி சிரித்தார். எனது வெள்ளைப் பக்கங்கள், அவரது கறுப்புப் பக்கங்கள் மீது இருவரும் பரஸ்பர மரியாதைகொண்டிருந்தோம். உரையாடலைக் காய்கறிகளின் நச்சுத்தன்மையிலிருந்து தொடங்கியவர் பிறகு, சர்ச்சில் சிறு வேலைகள் செய்யும் லாரன்ஸும், விக்டரும் குடித்துவிட்டு சர்ச்சுக்கு வருவது குறித்தும், தேர்தல் காலங்களில் தேவாலயத்தை அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது. "பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான். …
-
- 1 reply
- 1k views
-
-
புகை( ப் )படம் செல்லமாய்ச் சிணுங்கியது இவனது செல்பேசி. மாலைக் குளியலில் சுகங்கொண்டிருந்த விசுவநாதன் உள்ளிருந்தவண்ணம் உரத்துக் குரல் கொடுக்கிறான் : "ஜானகி, ஃபோனை எடும்மா !'' முழு நிலவென மஞ்சள்முகங் காட்டும் உப்பிய பூரியும், கொதித்து மணத்துத் தளதளக்கும் உருளை மசாலாவிலும் கவனங்கொண்டிருந்த ஜானகி , அடுப்புச் சூட்டைக் குறைத்து, வேகமாக வந்து, செல்பேசியை எடுத்துப் பேசுகிறாள். அம்முனைச் செய்தி கேட்டு ஜானகி , ஆனந்தக் குரலில் , " ஓ , அப்படியா ! ரொம்ப மகிழ்ச்சி . அவர் குளிச்சிட்டு வந்ததும் உடனே பேசச் சொல்றேன்'' என்றவள், பேசியவர் பெயர் , எண்ணைப் பாதுகாத்துக் கொள்கிறாள். " மும்பையிலிருந்துத…
-
- 5 replies
- 2.3k views
-
-
நிரஞ்சனி நிரஞ்சன், நிரஞ்சனி. நல்ல பெயர் பொருத்தம் என்றுதான் வீட்டில் அனைவரும் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி ஒன்றும் பொருத்தமாக போய்விடவில்லை என்றே நிரஞ்சன் எண்ணினான். திருமணமாகி இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. சம்பிரதாயமாக திருமணநாளைக் கொண்டாடிவிட்டு தான் பணியாற்றிய படத்தின் இசை வெளியீட்டிற்கு கிளம்பினான். அவன் காரில் ஏறப்போகும் போது, நிரஞ்சனி வாசலிலேயே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், ""என்ன?'' என்றான். "" வரும் போது ஏதாவது வாங்கிட்டு வா...'' நிரஞ்சனி சொன்னாள். ""ஏதாவதுனா...?'' ""ஒண்ணுமில்ல'' என்றவாறே உள்ளே ஓடிவிட்டாள். சிறிது நேரம் அவள் செல்வதை…
-
- 1 reply
- 1k views
-
-
காட்சிப் பிழை மறுபடியும் மாடி ஜன்னல் வழி எட்டிப்பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். அவனை முன்னே பின்னே இதற்குமுன் சபாபதி பார்த்ததில்லை. தூங்கி எழுந்த கையோடு ஜன்னல் திண்டிலிருந்த செடிக்கு தண்ணீர் விடுகையில் தற்செயலாக அவனைப் பார்க்க நேர்ந்தபோது பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அந்த வேப்ப மர நிழலில் இரு சக்கர வாகனங்கள் இருப்பதோ.. அவற்றின் மீது சாய்ந்தவாறே இளைஞர்கள் நிற்பதோ புதிய காட்சி இல்லை. ஆனால் இன்னமும் அங்கேயே நிற்கும் இவன்? காலை உணவை மென்றவாறே மறுபடி ஜன்னலோரம் வந்தபோதும்.. அவனைக் காண முடிந்ததில்... மனசுள் ஏதோ பொறி தட்ட, குழப்பத்தோடே சாய்வு நாற்காலி பக்கம் திரும்பினார். …
-
- 0 replies
- 784 views
-
-
சோதனைச்சாவடி - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் கோடை வெயில், பெட்ரோல் விலையைப் போன்று விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்தின் நடு உச்சிக்கு மேல் கொதித்துக்கொண்டிருந்தான் சூரியன். இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்த வயதான ஒரு புளியமரம், சிதம்பரத்தின் வலதுபுறம் ஒற்றைக் கிளையுடன் நின்றிருந்தது. அதன் வெக்கை, அங்கே மேலும் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. தலைமைக் காவலர் இருவர், சாலையில் வரும் கார்களை நிறுத்தி அதன் டிக்கிகளைத் திறந்து காட்ட, தலையைச் சாய்த்து சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு எரிச்சலாக இருந்தது. சவுக்குத்தோப்புபோல …
-
- 1 reply
- 1.9k views
-
-
வாரணாசி - சிறுகதை நரன் - ஓவியங்கள்: ரமணன் பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கும் படியான வளைவான செருகு ஓடு வேயப்பட்ட வீடுகள் இருக்கும் பழைமையான தெருவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது. எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளை நிறக் கோலங்கள் இருந்தன. பாலாமணி கையைக் காட்டி, கோலமிடப்படாத இடதுபக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான். வெளியே வயதான நான்கைந்து ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இறங்கி, வண்டியின் முகப்பைத் தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சொன்னான். பாலாமணியி…
-
- 1 reply
- 3.1k views
-