கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது. மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான். இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந…
-
- 5 replies
- 895 views
-
-
காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை! - சிறுகதை மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! 'நிறைக்குலத்தான்’ - இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன். பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உங்கள் கண்கள் தீப்பிடித்து எரிந்து கசங்குகின்றனதானே! அப்படி ஒரு மொட்டை ஆலமரம்…
-
- 0 replies
- 2.5k views
-
-
புறாப்பித்து - சிறுகதை சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப…
-
- 2 replies
- 2.7k views
-
-
ஒரு நிமிடக் கதை: விழுதுகள் அ+ அ- தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி. “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா. அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார். அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட் கார் A 4 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டயர்களைத் தேய்த்தபடி நின்றது. லேசான கால் நடுக்கத்தோடு பின் இருக்கையிலிருந்து ஜானகி பாட்டி இறங்கினாள். உடல் ஒரு ஆட்டம் ஆடி சம நிலைக்கு வந்தது. "அய்யோ பாட்டி கீழே விழுந்து கிழுந்து வெச்சுடப்போற... நில்லு, என் கைய புடிச்சுகிட்டு வா" போனில் தன் ப்ரமோஷனுக்குத் தேவையான பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் காக்கி உடையை விட அதிக மொறமொறப்புடன் விழித்துக் கண்களை உருட்டினார். ஒரு பக்கத்து ஐப்ரோவையும் ப்ரியா வாரியர் கணக்கா மேலே தூக்கி என்ன விஷயம் என்று பேசாமல் பேசினார். "இந்த அம்மா, ரோட…
-
- 1 reply
- 1k views
-
-
அவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி ஓவியங்கள் : ரமணன் சுவரின் மறுபக்கம் அவை உறுமத் தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால், அந்த ஒலியே அவளை மருளவைத்தது. கைகள் இரண்டையும் மடித்து, உடலைக் குறுக்கிச் சுவரோரமாகப் பம்மிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்றுவிடலாம். ஆனால், அது வெகுசில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறிவிடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பதுபோலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும்போது, ஏதும் தட்டுப்படுவதில்லை. ஆனால், அதுகூட வெகுசில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படித்தானோ... சுவரோடு காதை நெருக்கிவைத்துக்கொண்டாள். இல்லை... அவை நடமாடுகின்றன. அவளைக் கண்காணிப்பதற்குத் தோதான இடத்தைத…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை. அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன்,…
-
- 0 replies
- 919 views
-
-
ஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இமையம், ஓவியங்கள்: பாலு சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை. கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் ட…
-
- 1 reply
- 3.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: பெண் புத்தி "கதவைப்பூட்டிக்கொள். ராத்திரி சமையல் போனிலே சொல்றேன். எங்கேயும் வெளியே போகாதே " சாந்தி அலுவலகம் கிளம்பிய பத்தாவது நிமிடம் ராஜி பக்கத்துவீட்டுக்குக் குதித்தபடி சென்றாள். * மாமி, சமையல் முடிச்சுட்டீங்களா....ஓ.. ஆரம்பிக்கிறீங்களா...கொடுங்க நான் காய் வெட்டித்தரேன்.... குழம்புக்கா..." கேட்டபடி வேலை செய்யத்தொடங்கினாள். " என்ன ராஜி...நேத்து என்ன ஏதாவது முக்கியமா நடந்துதா?" வம்பு கேட்கத்தொடங்கினாள் மாமி. இது அன்றாடம் நடப்பது தான். ராஜியை சாந்தி வீட்டில் முழு நேர வேலைக்கு வைத்திருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதபோது, ராஜி பக்கத்துவீட்டுக்கு…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.. அ+ அ- சத்தமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி. "என்ன ஐபிஎல்தானே..” என்று கேட்டபடி , ரிமோட்டைப்பிடுங்கி "படக்" என்று தொலைக்காட்சியை நிறுத்தினார். "தண்ணீருக்கு போறாடறாங்க , விளையாட்டு இப்ப கேக்குதா?" அய்யப்பனுக்கு வேண்டுதல் போல் கறுப்பு வேட்டி , கறுப்புச்சட்டை. அவர் கைகளில் கறுப்புப்புடவை. "இந்தா, இத கட்டிக்கிட்டு வாக் போகலாம் புறப்படு" மனைவி நடக்க , சகாக்களுடன் மரத்தின் நிழலில் அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமைதியாக ஒரு நாள்! ம னசு அபூர்வமாக ஒரு தினம் அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அன்றைய தினம் மனைவி வீட்டில்தான் இருந்தாள். வீடும் பழைய வீடுதான். சமையலும் மாமூல் சமையல்தான். டெலிபோனிலோ தபாலிலோ வாய்வழிச் செய்தியாகவோ செய்தித்தாளிலோ என் சம்பந்தப்பட்ட எந்த மகிழ்ச்சித் தகவலும் கிடையாது. பின், எதனால் அந்த மகிழ்ச்சி என்று தெரியவில்லை. ஊமைக்காயம் என்பது போல் ஊமை மகிழ்ச்சி. இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமையோ வேறு லீவு நாளோ இல்…
-
- 0 replies
- 708 views
-
-
நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
வெளிச்சக்கொடி - சிறுகதை சிறுகதை: சந்திரா, ஓவியங்கள்: செந்தில் திருச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது, அம்மாவும் நானும் விழித்துக்கொண்டோம். அந்தக் கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் தோகை விரித்துப் பறந்து வரும் மயில்தான் எனக்கு ஞாபகம் வரும். குழந்தைகள் கற்பனை செய்துகொள்ளும் தேவதைக் கதைகளில் வருவதைப்போல, அப்பாவின் முகத்தோடு மயில் பறந்துபோகும் காட்சி சில சமயங்களில் என் நினைவில் வந்துபோகும். கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, இப்படிக் கிறுக்குத்தனமான அல்லது பகுத்தறிவற்ற சில விஷயங்களில் ஆழமான நம்பிக்கை உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில…
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்னும் ஓர் அம்மா! அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான். பாத் ரூமிலிருந்து " தடால்' என்று ஒரு சத்தம். அவன் வீட்டில் இல்லை. தெருக்கோடியில் உள்ள நெல்லை குசலம்பாள் காய்கனிக்கடை கடைக்குச் சென்று இருக்கிறான். காய் ஏதாவது வாங்கி வரலாம் என்றுதான் போயிருக்கிறான். அவன் மனைவி அச்சத்துடன் பாத்ரூம் அருகே சென்றாள். என்ன சத்தம் என்று பார்த்தாள். "மாமா மாமா என்ன ஆச்சு, கதவைத் திறங்கோ'' நான்கு முறை கத்தி நிறுத்தினாள். "அம்ம்ம்மா.... அம்ம்ம்ம்மா'' என்று இரண்டு தடவை ஈன சுவரத்தில் ஒரு குரல். பாத்ரூமிலிருந்து வந…
-
- 0 replies
- 2.3k views
-
-
வலி நேற்று இரவு முதலே கொஞ்சம் படபடப்புதான். சரியான தூக்கம் கூட இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து இருப்புக்கொள்ளவில்லை. டிபன் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வந்தது. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆட்டோவில்தான் கிளம்பினோம். அம்மா நிமிஷத்திற்கொரு முறை ஆட்டோக்காரரிடம் மெதுவாகப் போகும்படி கேட்டுக்கொண்டார். வேகத்தடை வரும் இடங்களில் எல்லாம் நான் என் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டேன். ஆம். 15 நாட்களுக்கு முன்தான் அதை உறுதிப்படுத்தினார்கள். அன்று அம்மா எல்லாருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தாள். இந்த சந்தோஷத்திற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் வற்புறுத்தவில்லை எனினும் ‘என் ஆபீஸ் டிரைவருக்குக் குழந்தை பிறந்திருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
நடந்தது நடந்துவிட்டது! ‘‘ச ரி... நடந்தது நடந்து போச்சு! இனிமே நடக்கறது நல்ல தாவே நடக்கும். நம்பிக்கை யோடு இரு. ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. எது ஒண்ணும் நிரந்தரமில்லே. வர்றப்ப யார் கூட வந்தே? நினைச்சுப் பார். நம்ம கூடவே யாரும் இருக்கப் போறதில்லே, கடைசி வரைக்கும்! அவங்க அவங்க காரியம் முடிஞ்சதும் புறப்பட்டுப் போயிட்டே இருக் கிறதுதான் உலக நியதி! கீதையிலே சொன்னாப்ல, ‘இருக்கிறது இல்லாமல் போவது கிடையாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள் வ.ஐ.ச.ஜெயபாலன் 1990 களின் ஆரம்பத்தில் எழுதபட்ட குறுநாவல். திண்ணை வாசகரின் மீழ் வாசிப்புக்காக பதுசெய்வதில் மகிழ்ச்சி செக்குமாடு குறுநாவல் ஒஸ்லோ பல்கலைக் களகத்தில் மானிட இயலில் கலாநிதிப் பட்ட (Phd) ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது கலாநிதி ஒய்விண்ட் புக்ளரூட்டால் எனது வாய்மொழி ஆங்கிலம் பெயர்பின்மூலம் நோர்வீஜிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. அது அவரது (Life on the Outside - Oivid Fuglerud) ஆய்வில் விரிவாகப் பயன்படுத்தப் பட்டது. கனடாவைச் சேர்ந்த மானிடவியலாளரான தோழி றொபின் ஓக்லே என் வாய்மொழி ஆங்கில மொழிபெயர்ப்பினூடாக செக்குமாட்டை மொழியாக்கம் செய்தார்.(Beast of Burden (Chekku Madu): The Power of the Wandering Poet Among th…
-
- 0 replies
- 756 views
-
-
மண்ணை தொடாத மழைத்துளி! எல்லாம் முடிந்து விட்டது; கால்கள் துணியாய் துவள, அந்த பருத்த மரத்தின் மீது சாய்ந்து நின்றாள், மீனாட்சி. அனிச்சையாக விழிகள் நீரை சிந்தின. துடைக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லை. சில பார்மாலிட்டிகளை முடிக்க, வக்கீலுடன் அப்பா போய் விட, தனியே நின்றாள், மீனாட்சி. 'மிச்சமிருக்கிற வாழ்க்கை மொத்தமும் தனியாத்தான் நிற்கணுமா...' உள்ளே ஏதோ புரண்டு வந்தது. எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும், ஆற்றமாட்டாமல் அடிவயிறு குழைந்தது. ஆசை ஆசையாய், தொங்கத் தொ…
-
- 1 reply
- 624 views
-
-
வாடாமலர் மங்கை ''மங்க... அடி மங்க... இஞ்ச... எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா'' என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி. ""இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல'' என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை. ""அடி மகராசியா இருப்பே, அந்தப் போகணில தண்ணியைக் கொண்டா கையக் கழுவோணும்'' என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி. ""இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக?'' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டு வந்தாள் மங்கை. கையைக் கப்பில் விட்டுச் சுழற்றிக் கழுவிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார்கள் வாடாம…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாகீரதி... பாகீரதி... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: அரஸ் 'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. 'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்…
-
- 1 reply
- 2.4k views
-
-
தேவதையின் கதை - சிறுகதை சிறுகதை: குமாரநந்தன், ஓவியங்கள்: ஸ்யாம் மாதம்மாள் ரக ரகமான அரிசிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, சந்தைகளுக்குப் போவாள். ஒவ்வொரு சந்தையிலும் பிரதான இடத்தில் அவள் கடை இருக்கும். மூட்டைகளை இறக்கி அடுக்கும்போதே வியாபாரம் ஆரம்பித்துவிடும். வேலைப்பாடு மிக்க வெள்ளிக்காப்பு அணிந்த கைகளால் படியில் அரிசியை அளக்க ஆரம்பித்தால், இரவு சந்தை கலையும் வரை ஓய்வே இருக்காது. காசுக்குக் கொண்டு வந்து தருகிறவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதிய நேரம் வண்டிக்கார முத்துவிடம் “சித்தநேரம் கடைய பாத்துக்குங்க, சாப்பிட்டு வந்துடறேன்” என, அதிகாலையில் ருக்மணி அம்மாள் ஆக்கித் தந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அதே களையுடன் வந்து கடையி…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் தாய்+அம்மா தாயம்மா செத்துட்டா. ஊரே திர…
-
- 0 replies
- 976 views
-
-
கனவுக் கன்னி 'கனவுக்கன்னி' என்ற வார்த்தை எப்போது தமிழில் அறிமுகமாகியிருக்கும்? நிச்சயம் அது தனித் தமிழ் வார்த்தை கிடையாது. எல்லோருக்குமே தான் நேசிக்கும் நடிகைகள் கனவில் வந்து விடுகிறார்களா என்ன? எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் நடிகை கஜோல் என்னுடைய கனவில் வந்து ஆச்சரியம் தந்தார். கஜோலை எனக்கு அவ்வளவு பிடிக்கும். இப்போது அவர் கொஞ்சம் குண்டாகி விட்டார். என் கனவில் ரொம்பவே ஒல்லியாக, கௌபாய் உடை அணிந்து, தற்காப்பு வித்தைகளை எனக்கு செய்து காட்டினார். கௌபாய் உடை என்றாலும் அந்தத் தொப்பியை அவர் அணிந்திருக்கவில்லை. கராத்தே ஸ்டெப்சுகளை செய்து காட்டி விட்டு, என்னைத் தாக்க வரும் போது, நான் திருப…
-
- 1 reply
- 1.2k views
-
-
கண்ணாடி ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்…
-
- 1 reply
- 3.9k views
-
-
“உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும் யோசனை பண்ணிப் பார்த்துட்டு நேரா உங்கிட்டயே ஒரு வார்த்தை கேட்டுப்போடலாம்னுதான் கேக்குறேன். என்னெக் கட்டிக்கிறியா மஞ்சு?” செல்வம் விஜயமங்கலத்தில் மேக்கூர்க்காரன். சொந்தமாக தறிக்குடோன் வைத்திருக்கிறான். குடோனில் ஒரு டஜன் தறிகள் இரவு பகலென்று ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா காலமாகி எழு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. குடோனை ஒட்டி இருந்த வீட்டில் இவனும் இவன் அம்மாவும் மட்டும்தான். குடோனில் தார் போட நான்கு வருடங்களாகவே வந்து கொண்டிருக்கும் அம்சவேணியின் ஒரே மகள்தான் மஞ்சு. அம்சவேணியும் மேக்கூர்தான். இரண்டு வருடங்களுக்கும் முன்பாக செல்வத்தின…
-
- 0 replies
- 801 views
-