கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
கற்பு! 'வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது...' என்று, 30 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, தன்னிடம் சொன்ன இடத்தில், அவளுக்காக காத்திருந்தார், செல்வம். ''என்னோட வரவுக்காக, வழிமேல் விழி வெச்சு காத்திருக்கீங்க போல...'' என்ற குரலை நோக்கி, ஆர்வத்துடன் திரும்பிய செல்வத்தை பார்த்து, மென் முறுவல் பூத்தாள், லட்சுமி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். முதிர்ச்சியின் அடையாளமாய், உருவம் மாறி, கேசம் நரை கண்டிருந்தது. ''ஆரம்பிச்ச இடத்துலேயே ஆரம்பிக்கலாமா...'' குழந்தையின் குதுாகலத்துடன் கேட்டார், செல்வம். முகவுரையையும், முடிவுரையையும் குழந்தைத்தனமாய்தான் படைத்திருக்கிறான், இறைவன். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உயிர்ப்பு கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது. ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு…
-
- 1 reply
- 1.6k views
-
-
காலம்தோறும் - சிறுகதை சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் இன்னும் இருள் பிரியவே இல்லை. ஆனால், அருகில் இருந்த பூங்காவிலிருந்து கூட்டுக்குரலாகச் சிரிப்பலை வெடித்தது. அவளுக்கு வழக்கம்போல எரிச்சல் ஏற்பட்டது. அவர்கள் சரியான பித்துகள் அல்லது அசாதாரணமானவர்கள். சந்தேகமில்லை. அவர்களது சிரிப்பை வைத்து அவளால் நேரத்தைக் கணிக்க முடியும். 6:30 மணி. கோடைக்காலம் என்றால் யாரும் குறைகாணத் தேவையில்லை. நடுங்கும் குளிர்காலமாக இருந்தாலும் அது நேரம் தப்புவதில்லை என்பதில்தான் இருக்கிறது விஷயம். டெல்லி குளிர். இருள் விலகாதபோது, `இன்னும் கொஞ்ச நேரம்’ என, கண்களைத் திறக்க மனமில்லாமல் ரஜாய்க்குள் சுருண்டிருக்கும் வேளையில் அந்தச் சிரிப்பு. பூங்காவில் நடக்கும் யோகா வகுப்புக்கு …
-
- 0 replies
- 2k views
-
-
எப்படியும் வாழலாம்! சுஜாதா உங்களுக்கு வயசு எத்தனை?” ”செரியாச் சொல்ல முடியாதுய்யா!” ”உங்க அப்பாஅம்மா?” ”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.” ”உங்க சொந்த ஊரு?” ”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.” ”த…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! எஸ்.ராமகிருஷ்ணன் ஜி. சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்…
-
- 0 replies
- 783 views
-
-
சங்கு மீன் 'கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. தன் கணவன் சண்முகத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டாள். கடிதத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தார் சண்முகம். அவரது தங்கை கோமதியின் கையெழுத்துதான். அவளின் கையெழுத்து அவருக்கு நன்றாகவே தெரியும். கோமதி, 10 வருடங்களுக்கு முன்னர், தேர்த் திருவிழாவின்போது சரஸ்வதியிடம் இருந்து தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனாள். மீனாட்சி திருக்கல்யாணம் அன்று…
-
- 0 replies
- 2.8k views
-
-
மோன் (சிறுகதை ) அகரமுதல்வன் கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்…
-
- 4 replies
- 886 views
-
-
ஒரே ஒரு பாடல் ட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் நந்து. வீட்டின் மாடியிலிருந்து மென்மையாய் ‘அனுராகினீ... இதா என் கரளில் விரிஞ்ஞ பூக்கள்...’ என்று ஸ்பீக்கரில் வழிந்த குரல் படிகளில் இறங்கி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்தது. அதனுடன் சேர்ந்து பாடும் மனோகரின் குரலும். சரிதான். மனோகர் இசை மயக்கத்தில் திளைத்திருக்கிறார் போலும் என்று கேட்டைத் திறந்து ஒரு மலர்ந்த புன்னகையுடன் படியேறினான் நந்து. மாடியை அடைந்து அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் சற்றே ஆச்சரியமடைந்தான். நவீன் விஜயனும் அங்கு இருந்தார். அவரை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை அவன். “ந…
-
- 0 replies
- 786 views
-
-
சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்- - புகலிட அனுபவ சிறுகதை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வே…
-
- 1 reply
- 1.2k views
-
-
தாய்லாந்துக் காதல் சிறுகதை: மாத்தளை சோமுஓவியங்கள்: ஸ்யாம் மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை 8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். 'பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், 'பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும் முடிவுரை எழுத, அந்த முடிவுரைக்கே முடிவுரை எழுதியதுபோல் அவன் பிறந்தான். அவனுக்குப் பிறகு எவரும் பிறக்கவில்லை. அவன் ப…
-
- 0 replies
- 2.5k views
-
-
எட்டாப் புத்தகம்! பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.. .மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன. .மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாண்டிபஜார் பீடா 'ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், …
-
- 1 reply
- 599 views
-
-
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1 தாலா பானுவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை என்பதால் அவர் கணவர் முகமது மூலமாகவே அவர்கள் கதை வெளியுலகுக்கு வந்திருக்கிறது. அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள். பர்மா என்று சொல்லும்போதே அவர் கண்கள் மினுமினுப்போடு விரிகின்றன. பர்மா என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு நாடல்ல, குட்டி சொர்க்கம். கனவில் மட்டுமே காணக்கூடிய மயக்கமூட்டும் காட்சிகளை ஒருவர் பர்மாவில் அசலாகக் காணமுடியும். விக்டோரியன் கட்டடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நவீன வர்த்தக வளாகங்களும் நிரம்பியிருந்தாலும் பர்மாவை நவீனத்துவம் இன்னமும் முழுக்க முழுங்கிவிடவில்லை. அழகிய ஓடைகள், பச்சைப் பசேலென்று விரிந்திருக்கும் கானகப் பகுதிகள், ஒருவேளை பொம…
-
- 17 replies
- 5k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் எதிர்முனையில் எவனோ ஒருவன்..! காலையில்.…
-
- 0 replies
- 1k views
-
-
பரமேஸ்வரி - சிறுகதை பரமேஸ்வரியின் மகனுக்கு, மாமனாரின் பெயரைத்தான் சூட்டியிருந்தனர். மரியாதை காரணமாக, எவரும் `உலகநாதன்’ என்று அழைப்பதில்லை. பரமேஸ்வரியின் கணவர் ராமச்சந்திரன், `மணி’ என்றுதான் அழைப்பார். பரமேஸ்வரி, ``என் சர்க்கரைக்கட்டி... என் பூந்திக் குஞ்சே!” என இஷ்டம்போல் கொஞ்சுவாள். கணவர் ராமச்சந்திரனுக்கு, ஊர் ஊராகச் சென்று பிரின்டிங் ஆர்டர் எடுக்கும் வேலை. மாமா உலகநாதன், கலெக்டர் ஆபீஸில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். பரமேஸ்வரி, ராமநாதபுரம் அலையாங்குளத்துக்காரி (அழகன்குளம்தான் அவ்வளவு அழகாக உருமாறியிருக்கு!). சாதுவாக, அப்பிராணியாக இருந்தாலும் போக்குவரத்தெல்லாம் அடிதடிக் குடும்பங்களோடுதான். பேச்சு அதாட்டியமாக இருக்கும், பயப்பட மாட்டாள். ஆண…
-
- 1 reply
- 12k views
-
-
ஊனம் விடைபெற வேண்டும்! ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை. மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் சாலையில், நிமிர்ந்தும், சரிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அது, சிவகுமாருக்கு எரிச்சலாகவும், அவனது மனைவிக்கும், மகனுக்கும் புது அனுபவமாகவும் இருந்தது. பரந்து விரிந்து கிடந்த பொட்டல் க…
-
- 0 replies
- 966 views
-
-
பிறை நிலா சிறுகதை பிறை நிலா நியதி வரதன் காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது . சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் ப…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஒரு கோப்பை காபி - சிறுகதை சிறுகதை: ஜெயமோகன், ஓவியங்கள்: ஸ்யாம் நான் மார்த்தாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவள் கணவன்தான் எடுத்தான். மார்த்தா ஓய்வு நாளில் செல்பேசியைப் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட வார இறுதி. ``ஹாய், நான் சாம்’’ என்றான். என் பெயரைச் சொன்னதும், உற்சாகமாக ``ஹாய், எப்படி இருக்கிறாய்?” என்றான். நான் உற்சாகத்தைக் காட்ட முயன்றாலும் என் குரல் காட்டிக்கொடுத்தது. ``நலமாக இருக்கிறேன்...” என்றேன். “எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.” அவன் ``என்ன ஆயிற்று? நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றான். ``எடுத்துச் சொல்லும்படி நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால்...’’ என்று தயங்கினேன். ``நான் மார்த்தாவைச் சந்திக்க வேண்டும…
-
- 1 reply
- 2.9k views
-
-
களத்தினர் மன்னிக்கவும்... தற்போது குறிப்பிடும் படியான செய்திகள் எதுவும் இல்லை... செய்திகள் வரும் பொழுது தெரிவிக்கபடும்... ஆவலோடு வந்தவர்களுக்காக... சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது... கடந்த ஏழு வருடங்கள் திரியில் "சார்ட்டில் எழுதி வைத்த பாடங்கள் (Subject) மறைந்து போனது" என்ற கால கட்டத்தில் நடந்தவை... அந்த திரியில் போன வருடம் என்று தவறுதலாக குறிப்பிட்டிருப்பேன்... அது ஒரு ஆறேழு மாதங்களுக்கு முன் நடந்தவை... இன்னும் தெளிவாக கால நிலையை கூற வேண்டும் என்றால் அமெரிக்கா, சீனா தாங்கள் உருவாக்கிய ராக்கெட் ஏவுவதில் பிரச்சனை என்று செய்திகள் வந்த சமயம்... கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்... சரி, செய்திக்கு என்பதை விட நிகழ்வுக்கு வருவோம் என்று ஆரம்பிக்கிறேன்... …
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் எரிகிற நெருப்பில்... ச ங்கரனுக்கு மேன…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
ஒரு நிமிடக் கதைகள் https://www.vikatan.com
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆசை கனவே... அதிசய நிலவே! ஆசை கனவே... அதிசய நிலவே! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் க ண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண்ணிட்டிருந்தா தூக்கம் வரும்’ என்று யாரோ கூறியது ஞாபகத்துக்கு வர, மனதுக்குள் எண்ண ஆரம்பித்தேன். ‘‘ஒண்ணு...’’ …
-
- 1 reply
- 1.3k views
-
-
புரொபசர் சகல சந்தேக நிவாரணி! புரொபசர் சகல சந்தேக நிவாரணி! பாக்கியம் ராமசாமி ப க்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் - ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
நெஞ்சம் மறப்பதில்லை அந்த அரச மரம் அங்கிருக்கிறதா? என்று என் கண்கள் தேடியது. ""அந்தப் பக்கமெல்லாம் இப்ப போக முடியாதுண்ணா... புதர் மண்டிக் கிடக்கு'' என்றான் என் தம்பி. ""அது ரொம்பப் பெரிசாச்சே கொஞ்சம் தள்ளி நின்னு கூடப் பார்க்கலாமே. சுத்தி வரக் கல் பாவியிருக்கும் பாரு. அதப் பார்க்கணும் எனக்கு'' என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அந்த ஒளியைக் கண்டு கொண்டானோ என்னவோ? நினைப்பு தந்த சந்தோஷத்தை மலர்ச்சியை முகத்தில் கண்டிருக்கலாம். ""சரிண்ணா... வாங்க போவோம்'' அவனோடு நடந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்று விட்டான். ""இந்த எடம் எதுன்னு தெரியுதா?'' சுற்று மு…
-
- 1 reply
- 1.1k views
-