கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
நேரம் கிடைக்கும் போது படியுங்கள். தீபாவளி சிறப்புச் சிறுகதைதான். ராணியில் வந்தது. (பெண் குழந்தைகள் தினத்திற்கும் பொருத்தமாக இருக்கக் கூடும்) வந்தாள் மகாலக்ஷ்மி “மகாலஷ்மி இல்லாமல் தீபாவளியா? கூடவே கூடாது” அம்மா திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். மகாலஷ்மி என்று அம்மா குறிப்பிட்டது பத்மா அண்ணியை. பெரிய அண்ணன் ஹரியின் மனைவி. அம்மா அப்படிச் சொன்னதும் அண்ணாவின் முகத்தில் ஏமாற்றம். தன் நான்கு வயது பெண் குழந்தைக்கு ஆசை ஆசையாய் புது கவுனும், விளையாட்டு பொருட்களும், வாண வேடிக்கைகளும் வாங்கி வந்திருந்தான். எல்லோரும் சேர்ந்து கொண்டாடினால்தான் அது பண்டிகை. குழந்தைக்கும் முழு சந்தோஷமும் கிடைக்கும். அனால் அம்மா சொன்னால் சொன்னதுதான். அவள் பேச்சை மீறி யாரும் பண்டிகை கொண்டாட மாட்டார…
-
- 2 replies
- 1.5k views
-
-
மலர்விழியும் புது சுடிதாரும்! ஓவியம்:ஸ்யாம் மலர்விழியின் அம்மா அந்த அலமாரியைத் திறந்து, அடுக்கியிருந்த துணிகளில் இருந்து மலர்விழியின் துணிகளை எடுத்துக் கொடுத்தார். ‘‘மலர், ஸ்கூலுக்குப் போகிறப்ப துணிகளை அயர்ன் பண்ணக் கொடுத்துரு. ரெண்டு டவலா எடுத்துக்கோ.’’ ‘‘அம்மா, இதையே ரெண்டு நாளா சொல்லிட்டிருக்கே. நான் சின்னப் பொண்ணு இல்லை, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். சரியா செஞ்சுப்பேன். நீங்க கவலைப்படாதீங்க’’ என்றாள் மலர்விழி. “இப்பவும் சொல்றேன். ஜெயிச்சுட்டு வரணும்னு மனஅழுத்தத்தோட போக வேண்டாம். ரிலாக்ஸா விளையாடு. வீட்டையே நினைச்சுட்டு இருக்காதே’’ என்றார் அம்மா. சதுரங்கம் விளையாடுவதில் மலர்விழி கெட்டிக்காரி. மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றவள், இப்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
சாந்தமு லேகா - சிறுகதை “ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நட…
-
- 0 replies
- 2.4k views
-
-
அறநீர் - சிறுகதை அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். “தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுக…
-
- 4 replies
- 1.2k views
-
-
டிப்ஸ் தர்மம்! வ ழக்கமாக புதன்கிழமையன்று எனக்கும், மேனேஜருக்கும் ஃபீல்ட் வொர்க் நாள் முழுவதும் இருக்கும். இந்த மேனேஜர் புதியவர். பத்து மணி சுமாருக்கு ஓட்டல் ஒன்றில் இரு வரும் டிபன் சாப்பிட்டோம். பில்லை வைத்த சர்வர் தலையைச் சொறிந்தான். வேறென்ன, டிப்ஸ் வேண்டுகோள்தான்! பர்ஸை எடுத்த என்னைத் தடுத்த மேனேஜர், ‘‘என்னப்பா... சம்பளம் வாங்கா மலா வேலை செய்யறே? போ, போ!’’ என மறுத்து விட்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் ஜஸ்ட் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விஷயங்களில் இப்படிக் கடுமையாக நடந்துகொள்கிறார்களே என்றிருந்தது எனக்கு. இருந்தும் என்ன செய்வது... ஒன்றும் சொல்ல முடியாது. மேனேஜராச்சே! மதிய சாப்பாட்டுக்கு இன்னொரு ஓட்டல். சொல்லிவைத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
அப்பா முகத்தில்... வீடு எப்படி அமைய வேண்டும் என்று அண்ணன், அண்ணி, தம்பிகள், தங்கைகள் எல்லோருடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு பிளான் வரைந்தார்கள். கடைசியாக அப்பாவிடம் கொண்டு காட்டி, ‘‘அப்பா, இது சரியான்னு பாருங்க. ஏதாவது மாற்றம் இருந்தால் செஞ்சுக்கலாம்’’ என்றார் அண்ணன். அப்பா சிறிது நேரம் பார்த்துவிட்டு, ‘‘எல்லாம் சரிதான். முன் பக்கத்தில் மட்டும் முடிந்தால் கொஞ்சம் கார்டன் போட இடம் விடுங்கள். பூச்செடிகள் வைத்து, சாமிக்குப் பறிச்சுப் போடலாம்’’ என்றார். ‘‘சரிப்பா! அப்படியே பண்ணிடலாம்!’’- அண்ணன். தனிமையில் அண்ணனிடம…
-
- 1 reply
- 936 views
-
-
இதழில் கதை கணவன் யார் மீதோ பயங்கர கோபமாக சண்டைக்கு புறப்படுகிறான் என்பதை புரிந்துகொள்கிறாள் மனைவி. அவன் சட்டையை மாட்டிக்கொண்டு மேலிருந்து பொத்தான்களை பொருத்த இவள் மேலிருந்து கழற்ற ஆரம்பிக்கிறாள். "என்ன செய்கிறாய்.."கோபமாக "எங்கே புறப்பட்டு விட்டீர்கள் "அவன் கண்களை வாஞ்சையோடு நோக்கியவாறு கேட்கிறாள் "வெளியே ஒரு வேலை இருக்கிறது" "எனக்கு தெரியும் சண்டைக்கு போகிறீர்கள்.." "ம் என்னையே சீண்டி பார்க்கிறார்கள் அவர்களை அடித்தால்தான் மனம் ஆறும்" "நீங்கள் வீர்ர்தான் ஆனால் அடித்தால் பகை வளரும் வஞ்சம் வைத்து காத்திருப்பார்கள் என்னிலோ குழந்தையிலோ கூட பகைமையை காட்ட முனைவார்கள்" "தொட்டுவிடுவார்களா உன்னையோ பிள்ளையையோ" "என் பேச்…
-
- 4 replies
- 936 views
-
-
முதலாளி முருகேசன் தன் மகன் கார்த்தியுடன் குடோனுக்கு ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததும் முருகேசன் டென்ஷன் ஆகிவிட்டார். ‘‘எதுக்குய்யா வேலை செய்யிற இடத்துக்கெல்லாம் பையனை கூட்டிட்டு வர்றே..?’’ என்று அந்தத் தொழிலாளியை அதட்டிவிட்டு அலுவலகம் திரும்பினார். அங்கே... மேனேஜர் அழைத்து வந்திருந்த அவருடைய ஆறு வயது மகன் அமர்ந்திருந்தான். புன்னகைத்தபடி அவனிடம் கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். கார்த்திக்கு கோபம். உயர் பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... அடிமட்டத் தொழிலாளிக்கு ஒரு சட்டமா? இதை தந்தையிடம் நேரடியாகவே கேட்டான். ‘‘அது அப்படியில்லப்பா... ஒவ்வொருத்தனுக்கும் அவனுடைய அப்பா தெரிஞ்சோ, தெரியா…
-
- 0 replies
- 2.4k views
-
-
தேங்க்ஸ் வாத்தியாரே! ‘‘கதிர் பத்திரிகை நடத்தின ‘சூப்பர் ஹோம் செக்யூரிட்டி டிப்ஸ்’ போட்டியில ஐயாவோட டிப்ஸ் செலக்ட் ஆகி, 250 ரூபா பரிசும் கிடைச்சிருக்கு. இதோ பாரு!’’ என்று பெருமையோடு மனைவியிடம் அந்தப் புத்தகத்தை நீட்டினார் கருப்பையா. ‘‘வீட்டுக்குத் திருட வரும் கொள்ளையர்கள் முதலில் குறி வைப்பது பீரோவைத்தான். எனவே, தங்க நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருள்களை அரிசி டின்னுக்குள் பொட்டலங்களாகக் கட்டிப் போட்டுவிட்டால், பறிகொடுக்காமல் தப்பிக்கலாம். இது, என் சொந்த அனுபவக் குறிப்பாகும்!…
-
- 1 reply
- 1.6k views
-
-
சபாபதி சார்! ஊரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை. வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நேர…
-
- 0 replies
- 993 views
-
-
என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! சிறுகதை என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! ஜ.ரா.சுந்தரேசன் உ றுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா? இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே... சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு! அந்த ரெண்டிலே இது எந்…
-
- 2 replies
- 2.9k views
-
-
மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! இரு வார சிறுகதை கால இயந்திரம் என்று சொல்வார்களே... டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை - கடந்த வினாடி வரை! ஓரிரண்டு ஆங்கில சினிமாக்களில் பார்த்து ரசித்ததுடன் சரி. ஆனால், கால இயந்திரம் என்பதும் நிஜமே என உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால் நம்புவீர்களா..? மதுரை அருகே திருமங்கலத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர் சாமியப்பன். டாக்டர் என்றால்... மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடுபவர் அல்ல. ஊசிக்கும், இவருக்கும் ஊசிமுனையளவு கூட சம்பந்தமில்லை. இவர் விஞ்ஞான விஷயங்களில் எக்கச்சக்கமாய் ஆராய்ச்சி செய்து, தலையெல்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் …
-
- 1 reply
- 2.1k views
-
-
செல்லக் கிறுக்கி - சிறுகதை வரவணை செந்தில் - ஓவியங்கள்: ஸ்யாம் காய்கறி மூட்டைகளுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த `சின்ன யானை’யின் இன்ஜின் ஆயிலை மாற்றிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. அதன் டிரைவர் கியர் மாற்றும்போதெல்லாம், எதிரியிடமிருந்து தப்பிக்கவென கணவாய் மீன்கள் பீய்ச்சும் கறுப்பு மையைப்போல சைலன்சரிலிருந்து குப்பென்று கரும்புகைப் பந்து வெளியாகி, ஒரு கணம் நின்று, பின் காற்றில் கலந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், `இதுதான் கடைசியாகப் போகும் வாடகை வீடு’ என்று மனம்நிறைய நினைத்துக்கொள்ளும் நம்பிக்கை இப்போதும் இருந்தது. `விரைவில் சொந்த வீடு வாய்க்கவிருக்கிறது’ என்ற குரலை, `உங்களை ஏற்றுக்கொள்ளும் பட்டினத்தில் அவர்கள் உங்கள் முன் வைப்பதைப…
-
- 0 replies
- 3.1k views
-
-
உப்பு மூட்டை க ளைத்து வீட்டுக்கு வந்த கதிரிடம் ஓடி வந்தாள் குழந்தை ஷாலினி. ‘‘அப்பா! உப்புமூட்டை..!’’ என ஆவலோடு அவனை நோக்கிக் கை உயர்த்தினாள். ‘‘அவ கிடக்கிறா விடுங்க! நாள் பூராவும் வேலை செஞ்சு களைப்பா வந்திருக்கீங்க. பாவம், நீங்க ஓய்வு எடுங்க’’ என்ற கமலா, ‘‘ஏய், நீ வாடி இங்கே! அப்பாவைத் தொல்லை பண்ணாதே!’’ என்று ஷாலினியை இழுக்க முயன்றாள். ‘‘பாவம், அதைத் தடுக்காதே கமலா! குழந்தைக்கு என்ன தெரியும்... அங்கே அந்தப் பாரம் பொழப்பு. இந்த பாரம் சுகம்!’’ எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நன்றி சுந்தரத்துக்கு நல்ல பசி. காரை விட்டு இறங்கியதுமே, ‘சாந்தி பவன் உயர்தர உணவகம்’ என்ற போர்டைப் பார்த்ததும் ஆறுதலாய் இருந்தது. பசி தீர சாப்பிட்டான். சாப்பாடு மிகவும் அருமை. வீட்டில் சாப்பிடுவதைப் போன்ற உணர்வு. பல ஊர்களில் ஹோட்டலில் சாப்பிட்டவன் என்பதால், இது வயிற்றைக் கெடுக்காத இயல்பான ருசியுள்ள உணவு என்பது அவனுக்கு புரிந்தது. சர்வரைக் கூப்பிட்டான். ‘‘இங்க சாப்பாடு தயார் பண்ற சமையல்காரர் யாரு? அவரோட பேசணும்!’’ ‘‘ஏன் சார்?’’ ‘‘சாப்பாடு ரொம்பப் பிரமாதம். அவரைப் பாராட்டணும்!’’ ‘‘வழக்கமா சமைக்கிறவர் இன்னைக்கு திடீர்னு லீவு. அதனால இன்னிக்கு சமையல் நான்தான் சார்!’’ ‘‘சாப்பாடு ரொம்ப பிரமாதம். எங்க குடும்பத்துக்கு ஒரு சமையல்காரர் தேவை. நல்ல சம்பளம் கொடுப்ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
இங்கேயும் சில பூக்கம் மலரும்! ''வாசுகி... உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லயே... அப்புறம், வந்த பின் குத்தம், குறை சொல்லி, அவங்க மனச நோகடிக்கக் கூடாது...'' ''ரெண்டு பேரும் கலந்து பேசித்தானே இந்த முடிவ எடுத்துருக்கோம்... அப்புறம் எதுக்கு ஆட்சேபிக்கப் போறேன்... நாம சேந்தே போயி, அவங்கள அழைச்சிட்டு வரலாம்...'' என்றாள், என் மனைவி வாசுகி. ''இல்ல... எதுக்கு கேக்குறேன்னா, அழைச்சிட்டு வந்த பின், அவங்க மனசு நோகுற மாதிரி பேசி, ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துடக்கூடாது பாரு... அதுக்குத் தான்...'' என்றேன். ''நீங்க ஒரு முடிவு எடுத்துட்டீங்க; அப்புறம், என்கிட்ட பேசி, என்னை சம்மதிக்க வச்சீங்க; நானும் மறுத்துப…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிறந்தநாள்: ஒரு நிமிடக் கதை இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெற்றதும்... கற்றதும்... சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்) திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
டிஜிட்டல் டிராவல்! ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லலாம்; பைக்கில், பஸ்ஸில், விமானத்தில், கப்பலில் என்று பயணிக்கலாம். செல்லும் விதம் மற்றும் தூரத்திற்குத் தகுந்தவாறு பயண நேரம் மாறுபடும். இந்த பயண நேரத்தை மிச்சப்படுத்தவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்காக, நொடியில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பயணம் செய்வதை சாத்தியமாக்கும் அற்புதக் கண்டுபிடிப்பாக அது பேசப்பட்டது. ஒரு கேமராவும், கொஞ்சம் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் சேர்த்து அந்தக் கண்டுபிடிப்பு உருவாகியிருந்தது. ‘டிஜிட்டல் டிராவலிங்’ என்பது இந்தக் கண்டுபிடிப்பு! அவர்களிடம் இருக்கும் ஒரு விசேஷ கேமராவால், பயணம் செய்யும் நபரையோ அல்லது பொருளையோ ஒரு போட்டோ எடுப்பார்கள், அவ்வளவுதான்! அவ்வளவ…
-
- 0 replies
- 1k views
-
-
குசலா எங்கே? உ மாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்! ஆபீஸ், வீடு, பிள…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை பழக்கம் ‘‘என்னங்க ஆச்சு உங்களுக்கு? ஒரு மாசமா கவனிக்கிறேன்... உங்க பெரியப்பா இறப்புக்கு போயிட்டு வந்ததில் இருந்து ஆளே மாறிட்டீங்க? வழக்கமா வர்ற கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் எதுவுமே இல்ல. யாரையும் கிட்டக்க சேர்க்காதவர், எல்லார்கிட்டயும் அன்பா பழகுறீங்க..?’’ - கணவன் பாண்டியனிடம் சரசு கேட்டாள்.‘‘எங்க பெரியப்பாவோட இறப்புதான்டி என்னை மாத்திடுச்சு. அவர் யார்கிட்டயும் ஒட்ட மாட்டார். உறவுகளை வெறுத்தார். நண்பர்களை சேர்க்க மாட்டார். அவர் இறந்தப்போ மனுஷங்களே வரலை. கிட்டத்தட்ட ஒரு அனாதைப் பிணமாத்தான் போனார். அதைப் பார்த்ததும்தான் இப்படி மாறிட்டேன்!’’‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷங்க!’’ சரசு மகிழ்ந்து போனாள்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை. டூ வீலரில் போகும்போது ஆட்டோ இடித்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை பொண்டாட்டிதாசன் ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா. அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக! இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா. அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா,…
-
- 1 reply
- 1.6k views
-
-
மனைவியின் நண்பன்! இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று நினைத்தபடி, 'மெசேஜை' பார்த்தாள். 'ஹாய்... துாங்கிட்டயா; பேசலாமா...' என்று அனுப்பியிருந்தான். துபாயிலிருந்து பேசுகிறான்; இங்கு இரவு, 10:30 மணி என்றால், அங்கு, இரவு, ௯:00 தான். 'ஓகே...' என்று பதில் அனுப்பினாள். உடனே, 'வாட்ஸ் - அப்' கால் வந்தது. ''ஹாய் நீரஜா... ஹவ் ஆர் யு?'' என்றான…
-
- 1 reply
- 6.1k views
-
-
ஒரு நிமிடக் கதை யாரோ அந்தப் பெண்... அழகான பெண்... உள்ளே வந்தமர்ந்தாள். ‘‘சொல்லும்மா. என்ன ப்ராப்ளம்?’’ டாக்டர் கேட்டார். ‘‘நான் எங்கே போனாலும்... எங்கே வந்தாலும்... எங்கே நின்னாலும்... யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு டாக்டர். யாரோ என் பின்னாடி இருக்காங்க!’’ - அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். ‘‘இது ஒருவித இல்யூஷனோட ஆரம்பக் கட்டம். சரி பண்ணிடலாம். மருந்தெல்லாம் வேண்டாம்’’ என்றவர், சிறிது நேரம் கவுன்சலிங் கொடுத்துவிட்டு, ‘‘அடுத்த வாரம் வாம்மா!’’ என்றார். அவள் வெளியில் சென்றாள். அடுத்த நோயாளியாக இன்னொருத்தி உள்ளே வந்தாள். ‘‘டாக்டர்...’’ ‘‘சொல்லும்மா’’ ‘‘நான் எங்கே போனாலும், எங்கே வந்தாலும், எங்கே நின்னாலும்...’’ ‘‘என்னம்மா அதே மா…
-
- 1 reply
- 724 views
-