Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சமையல் கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த ‘சமையல் திலகம்’ சரஸ்வதி, அரக்கப் பரக்கக் குளித்து ஒரு வாய் காபி மட்டும் போட்டுக் குடித்தாள். நேற்று இரவு ஒரு சமையல் போட்டிக்கு நடுவராகச் சென்றவள் வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமில்லை. முகம் உப்பியிருக்க, மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். சரஸ்வதியின் கார் அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் அடுத்த வார ‘நளபாகம்’ எபிசோடுக்கு ஆயத்தமானாள். கேமரா முன் சிரித்தபடியே, ‘மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?’ என்று செய்து காட்டினாள். முடித்ததும் மணியைப் பார்த்தால் மதியம் பன்னிரண்டு. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது தலையைச் சுற்றியது. ஸ்டூடியோவில் கொடுத்த கா…

    • 1 reply
    • 1.1k views
  2. அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1 “அக்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர். நுகர்வு கலாசாரம் "ரெ…

    • 25 replies
    • 6k views
  3. காட்சி பெட்டிக்கடை மணிக்கு அப்பாசாமியைப் பார்த்தாலே எரிச்சல்தான். தினமும் பஸ் ஏற வருபவர், ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து அன்றைய செய்தித்தாள், பத்திரிகைகள் என எல்லாவற்றையும் ஓசியிலேயே வாசித்துவிட்டுத்தான் கிளம்புவார். ஒரு நாள் கட்டு வர லேட்டானாலும், ‘‘ஏம்பா, இன்னைக்கு அந்தப் பத்திரிகை வரணுமே... வரலையா?’’ என முதல் போட்ட முதலாளி மாதிரி கேள்வி வேறு! ‘இது கடையா, இல்லை கண்காட்சியா? எல்லாரும் இப்படியே ஓசியில் படிச்சிட்டு படிச்சிட்டு போனா தொழில் என்னாகுறது?’ மனம் புழுங்குவான் மணி.ஆனால் அன்று அப்பாசாமி கடைப் பக்கமே திரும்பவில்லை. செய்தித்தாளையும் புரட்டவில்லை. சோகமாக எங்கோ பார்த்தபடி நின்றார். ‘‘என்ன சார்... ஒரு மாதிரியா இருக்கீங்க..?”…

    • 1 reply
    • 977 views
  4. யார் இந்த ஆட்டோ ஷங்கர்? தொடரும்...

  5. பாஷை பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு. பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார். ‘‘எதுக்கு இப்பட…

    • 1 reply
    • 689 views
  6. அது ஒரு மிளாகாலம் நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம். மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திரு…

    • 1 reply
    • 1k views
  7. உதவி ‘‘பத்மா, இந்த ‘பேன்ட் ஷர்ட்டெல்லாம் பழசாயிடுச்சு.. அக்கம் பக்கத்து ஏழைங்களுக்குக் குடுத்துடு!’’‘‘என்ன பீரோவுல பழைய புடவை நிரம்பி வழியுது? ஒவ்வொண்ணா எடுத்து வேலைக்காரிக்குத் தந்துட வேண்டியதுதானே!’’ - இப்படித்தான் சொல்வார் கார்த்திகேயன். ஆனால் இன்று அவரே சொல்கிறார்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் கொடுக்க வேண்டாமாம்!பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னாயிற்று இவருக்கு?’ கேட்டே விட்டாள். ‘‘என்னங்க... கட்டின துணியோட உயிர் பிழைச்சா போதும்னு நடுரோட்டுல வந்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க ஜனங்க. சாப்பாடு இல்ல... குடிக்கிற தண்ணி இல்ல... பலவீனப்பட்டு வேதனையோட நிக்கிறாங்க. எப்பவும் பழைய துணிகளைக் கொடுக்கச் சொல்ற நீங்க இப்ப வேண்டாம்ங்கறீங்களே ஏன்?’’ …

    • 1 reply
    • 1.6k views
  8. மீச - சிறுகதை தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் வானம் இன்னும் அடைசலாகத்தான் இருந்தது. சில நேரம் மனதின் நிறங்களுக்குத் தக்க, சூழலின் நிறங்கள் மாறும் என இவள் திண்ணமாக எண்ணினாள். புதிதாக அரைத்த காபித்தூள் வாங்கி வந்து மணத்துடன் கொதிக்க வைக்கும்போது ஒரு ப்ரவுன் கலர் பூனை ஜன்னலில் கடக்கும். அது ஏன் ஒரு வெள்ளைப் பூனையாக இல்லாமல், காபி நிறத்திலான பூனையாக இருக்க வேண்டும். அப்படியானால் அந்த காபி நிறப் பூனைதான் கடவுளா? ஒருமுறை இதை செபாஸ்டியனிடம் சொன்ன போது அவன், அவள் நெற்றி முடியை ஒதுக்கியவாறு ``கர்த்தாவே... உனக்கு மட்டும் எப்படித் தோன்றுகிறது இப்படி. கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைச்சிருக்கார் கர்த்தர் ஒன்ன படைக்கிறப்ப'' என்றான். அவன் நக்கல் அவளுக்கு விருப்பமாயில்லை. ஒ…

  9. ஒரு நிமிடக் கதை: மதிப்பெண் பாஸ்கரின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராகவன் கிளம்பிச் சென்றதும், மனைவி ரோகிணியிடம் வந்தார் பாஸ்கர். “பக்கத்து வீட்டுக்காரரான ராக வனோட நாம நல்லாத்தான் பழகு றோம். ஆனாலும் அவருக்கு நம்ம மேல அசூயையும் பொறா மையும்தான் இருக்குபோல!” சொன்னார் பாஸ்கர். “ஏன் அப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுப் போனார்” நிதானமாகக் கேட்டாள் ரோகிணி. “நல்லா பேசிட்டிருந்தாரா? இவ் வளவு நேரம் தன்னைப் பற்றியும் தன் தம்பிகளைப் பற்றியுமே கர்வமா பேசிட்டிருந்தாரு. கவ னிச்சல்ல?” “ஆமா கேட்டுட்டுத்தான் இருந் தேன். அவர் எப்படி மளிகை கடை நடத்தி முன்னுக…

    • 1 reply
    • 2.8k views
  10. துணிச்சல் நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது. நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எ…

  11. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்டாங்களே! அதனா…

    • 1 reply
    • 1.6k views
  12. ஆறாயிரம் சதுர அடியில் அமைந்த தனது பிரமாண்ட பங்களாவின் போர்ட்டிகோவில் சாய்மர நாற்காலியில் அமர்ந்து இங்கிலீஷ் பேப்பரை வரி விடாமல் மேய்ந்துகொண்டிருந்தார் ராஜமன்னார். பக்கத்து காலி இடத்தில் புது பங்களா உருவாகிக் கொண்டிருந்தது. ஏழடி மட்டம் கட்டிடம் உயர்ந்திருக்க, லிண்டல் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தார்கள். பணியாட்களின் சத்தம், மேஸ்திரியின் புலம்பல்... இதற்கு நடுவே சித்தாள்களின் பீடி புகை நாற்றம்... வாடை குமட்டியது ராஜமன்னாருக்கு. ‘கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கிறானே! கூப்பிட்டுக் கண்டித்துவிட வேண்டியதுதான்’ - தீர்மானத்தோடு அவர் எழுந்திருக்க, அப்போது அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்ட்டிகோவில் வந்து நின்றது அரசு அலுவலக கார் ஒன்று. …

    • 1 reply
    • 1.5k views
  13. காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக் கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்...’’ மூச்சுவிடாமல் பேசினாள். ‘‘ரொம்ப நன்றி!’’ ‘‘உங்களை ஒரு முறை... ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும் ஸார். இதுவரை உங…

    • 1 reply
    • 2.1k views
  14. தமிழில் எத்தனையோ வரலாற்றுப் புதினங்கள் இருந்தாலும் 67 ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தை விட்டு அகலாமல் இருப்பது கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் மது குடித்த வண்டுகளைப் போல அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவந்துவிட முடியாது. நாவல் தொடர்பான விஷயங்களைத் தேடவைக்கும், படிக்கவைக்கும் சக்தி அந்த நாவலுக்கு இருக்கிறது. அப்படியொரு தேடுதல் பயணத்தை மேற்கொண்டு, வித்தியாசமான அனுபவங்களோடு திரும்பியிருக்கிறார்கள் நான்கு தோழிகள். ஆசிரியர் ஜெயபிரியா ஆதிமுருகன், பட்டயக் கணக்கர் நித்யா சீதாராமன், யோகக்கலை நிபுணர் பத்மா கணபதி, மனிதவள அதிகாரி தீபா நவீன் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழிகள். ஜெயபிரியா திருவண்ணாமலையிலும் மற்றவர்கள் சென்னையிலும் வசி…

    • 1 reply
    • 743 views
  15. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் சம்மர் ``சம்மரில் உங்கள் குழந்தைகளுக்கு டிராயிங்.. ஹேண்ட் ரைட்டிங்...அபாகஸ் எனக் கற்றுத் தருகிறோம், வாருங்கள்..'' என்ற விளம்பரத்தில் நடித்து முடித்த ஹீரோ, மனைவி குழந்தைகளுடன் புறப்பட்டார், சுற்றுலாவுக்கு! - சி.சாமிநாதன் கண்டிஷன் `மணமகன் தேவை' விளம்பரத்தில் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கக் கூடாது என்ற கண்டிஷனையும் சேர்த்தாள். - ரேகா ராகவன் உதவி ``உதவிக்கு நர்ஸ் இருக்காங்க. பயப்படாதீங்க ...'' என பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, வேலைக்குக் கிளம்பினான் மகன்! பெ.பாண்டியன் பார்வை ``தப்பு செஞ்சா மேலே இருந்து ஒருத்தன் பார்ப்பான்!" என்றதும், "கேமிர…

  16. கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் காலில் முள் குத்தியிருக்கிறது; கல் குத்தியிருக்கிறது; துரு பிடித்த ஆணி,குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. மனுசனாய் பிறந்தவன்வாழ்வதற்காக அனுபவிக்கிற தொந்தரவுகளில் இதுவும் ஒன்று. பிறந்ததில்இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப்பனுக்கு அவையெல்லாம்ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்குவருத்தமாகிவிட்டது. மனுசனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிடஆடு மாடாக பிறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன்.எருமையாகப் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் செருப்பு வாங்கும்தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்கும். நாலு கால் எருமைக்குமுரட்டுக் குளம்பு இருக்கிறத…

    • 1 reply
    • 1.2k views
  17. உயிர் சோறு - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம் சரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே. வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக…

  18. அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானா மதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்…

    • 2 replies
    • 9.7k views
  19. இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் ம…

  20. தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு... உன் பையன் பேசுறான்!’’ சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’ - அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கி…

    • 1 reply
    • 1.4k views
  21. பயங்கரமான அலுப்பு… தனியார் வைத்தியக்கல்லூரிக்கு எதிராக பதினைந்து கிலோ மீட்டர்கள் கால் தேய்த்தது, அதற்கான பலனை கொடுத்துக்கொண்டிருந்தது. அடமென்ரியம் உலோகத்தை உருக்கி காலுக்குள்ளே வார்த்தது போல் மலையாய் கனத்தது கால். ஆறு மணி நேர அளவான நித்திரை ஒன்றே அப்போதைக்கு என்னுடைய ஒரே தேவையாக இருப்பதை உணர்ந்து கொண்டு ஹொஸ்டலுக்கு ஏறும் மலைப்படிகளை ஊன்றிக்கொண்டிருந்தேன்… பேராதெனிய என்ற சிங்கள வார்த்தையால் பேராதனை என்ற தமிழ் உரு கொடுக்கப்பட்டிருந்த பிரதேசம் அது. மத்தியமாகாணத்தில் அதிக ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அதை கண்டி மாவட்டத்தில் இருந்து தெற்குப்புறமாக ஆறுகிலோ மீட்டர்கள் சென்றால் அடையலாம்.. அதை என்பதை விட அவள் என்று விளித்தல் ரசமாக இருக்கும்.. எனக்கு நன்றாய்த்தெரிந்த வன…

    • 0 replies
    • 739 views
  22. கீதையடி நீயெனக்கு… (குறுநாவல்) மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன். சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான். அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். த…

  23. வேதியின் விளையாட்டு (சிறுகதை) ‘ அது சரிவராது போலத்தான் இருக்கு…,’ என்ற மனைவியின் பதிலால், பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது! பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர…

    • 0 replies
    • 1k views
  24. குணா “அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே. ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை. நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கை…

    • 1 reply
    • 1.7k views
  25. மாங்குடி மைனர் - சிறுகதை சிறுகதை: பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் `மாங்குடி மைனர் இறந்துவிட்டார்' என்றது பேட்டை வாழ் பெருமக்களுக்கு அத்தனை மகிழ்வானதொரு செய்தியாகத்தான் இருந்தது. முக்கியமாக மைனரின் மூன்று மனைவிகளுக்கும் நெஞ்சம் குளிர்ந்து, முகம் ஒருவிதப் பூரிப்படைந்திருந்தது. தனது எண்பத்திரெண்டு வயதில் இத்தனை ஆன்மாக்களை சந்தோஷமடையச்செய்த மாங்குடி மைனர், பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தபடி முறுக்கிய மீசையில் ஜபர்தஸ்தாக காட்சியளித்்தார், அகன்று விரிந்த முகத்தில் பட்டையைப் போட்டு நடுவில் வட்டமாகப் பொட்டு வைத்திருந்தனர். டுப்பு டுப்பு என்று ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த மைனரின் புல்லட்டை பேரன்களும் பேத்திகளும் ஏறிக்கொண்டு ஓட்டுவதாகப் பாவனை செய்து கொண்டிருந…

    • 1 reply
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.