கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
10 செகண்ட் கதைகள் ஷாக் ட்ரீட்மென்ட் ``சின்னப் பிரச்னைதான், ஸ்கேன் ரிப்போர்ட்ல பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை’’ என்று சொன்ன டாக்டர், ``முப்பதாயிரம் ரூபாய்க்குள்ள முடிஞ்சிடும்’’ என்றார்! - ந.கன்னியக்குமார் கொண்டாட்டம் ``என்ன ஆச்சுன்னு தெரியலை... காலையிலேர்ந்து கரன்ட்டே இல்லை. ஒரு டி.வி புரோகிராம்கூடப் பார்க்க முடியலை. இந்தப் பொங்கல், பொங்கல் மாதிரியே இல்லை’’ - அலுத்துக்கொண்டாள் மாளவிகா! - அஜித் விலை மகனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதைக் கேட்டு, ``என்னாச்சுப்பா..?’’ எனக் கனிவோடு விசாரித்த அப்பாவிடம் ``மொபைல்ல லேசா ஸ்க்ராட்ச், லேப்டாப்புக்கு ஒண்ணும் ஆகலை. ஹெட்போன்தான் அறுந்துருச்சு’’ என்றான் விக்னேஷ்! - எஸ்கா இது டாப் 10 அல்ல.…
-
- 0 replies
- 1.2k views
-
-
பச்சைக்கிளி - சிறுகதை கண்மணிகுணசேகரன், ஓவியங்கள்: ஸ்யாம் அந்திவெயில், நடையைத் தாண்டி அருகால் படியின்மேல் ஏறிக்கொண்டிருந்தது. கதவுக்கும் தெற்காலப் பக்கமாக மேற்கில் தலைவைத்து பச்சைக்கிளியைக் கிடத்தி, சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள். நூலாக நொடிந்துபோன தேகம், நைட்டிக்குள் ஒடுங்கிக்கிடந்தது. மக்கியக் கொழுக்கொம்பை வளைத்திருக்கும் காய்ந்த அவரைக்கொடிபோல், மெலிந்த கைகளில் லேசாகப் புடைத்தபடி நரம்புகள் ஓடியிருந்தன. வெளுத்த முடிகள், அழுக்கேறிய தலையணையில் பாவி இருந்தன. குடவுகொண்ட கண்களில் கோடாகத் தெரிந்த இடைவெளியில் மிகவும் பரிதாபமாக அவளின் விழிகள், பக்கத்தில் அமர்ந்திருந்த கொஞ்சிக் குப்பத்தார் இளைய பெருமாளைப் பார்த்து, திரும்பத் திரும்பக் கெஞ்சிக்கொண்டிருந்தன. …
-
- 1 reply
- 4.3k views
-
-
மாகாளி ”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி. ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார். பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும் அவங்களுக்கும் இடையில!....இருக்குன்னு முழுசா நம்புனீருன்னா, திரை விலகிடும்” என்றார். ஆட்டோ ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லையில் இருக்கும் காலனிப் பகுதி கண்ணிற்குத் தெரிந்தது. ராமசாமிக்கு பேயோட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: சொத்து ஒரேயொரு சிறிய வீட்டை வைத்துக் கொண்டு எட்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தன் அப்பா மீது இனம்புரியாத கோபம் கோபாலுக்கு. பொதுச் சொத்தாய் இருந்த பூர்வீக வீட்டை விற்று கிடைத்த பணத்தை தன் சகோதர, சகோதரிகள் ஏழு பேருடன் பங்கு பிரித்ததில் கோபாலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைத்தது. தன் நண்பன் சுரேஷை நினைத்துப் பார்த்தான்… ‘சுரேஷ் ஒரே பிள்ளை என்பதால் வெகு சுலபமாக எந்த முயற்சியும் இன்றி தன் அப்பாவின் எழுபது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகிவிட்டான். நான்? ஒரு சிறிய ஃபிளாட் வாங்குவதற்கு லோன் வாங்கி இன்னும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…’ யோசிக்க யோசி…
-
- 2 replies
- 1k views
-
-
முக்குளி வாத்துகளின் கதை சிறுகதை: மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சின்ன முட்டிகளின் மீது நெற்றியை வைத்துக்கொண்டு ஒரு நத்தை ஊர்வதைப் போல மெள்ள நகர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தினங்களின்மீது, குட்டி முயல் பார்வைகொண்ட தேவதையாகக் காத்திருக்கும் என் பரிபூரணமான ஸ்ரீ குட்டியே... நீ என் வேர்களுக்கு இடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நம் மண் எத்தனை செழிப்பானது என்பதற்கு, நம் முற்றத்தில் திடீரென முளைத்திருக்கும் இந்த மாமரமே சாட்சி. நீ கொஞ்சம் அப்படியே இரு. அதோ மெள்ள ஊர்ந்துபோகும் அந்த நத்தையைப் பார்த்துக்கொண்டே இரு. அது தன் கூடு அடைவதற்குள், நான் உனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். பதற்றப்படாதே... கதை என்றதும்…
-
- 0 replies
- 5.6k views
-
-
மசாஜ் ம. நவீன் மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன. நான்கு மாதங்களுக்கு முன் திரு என்னை முதன…
-
- 1 reply
- 1.6k views
-
-
நிழல்கள் - ஆதவன் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது; பிரிய வேண்டிய இடம் வந்து விட்டது. அவளுடைய ஹாஸ்டல் கேட் உயரமான இரும்புக் கிராதிகளாலான கேட். அந்தக் கேட்டருகே நிற்கும்போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர் களாகவும் தோற்றமளித்தார்கள்! ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப் பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம், கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட்டிருந்தது. எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல்களும், அந்தக் கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றின் மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன. ''நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன'' என்றான் அவன். அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தா…
-
- 0 replies
- 879 views
-
-
சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை பாவண்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம் ``இன்னிக்கு என்ன பூமழையா? இப்படி ஏராளமான பூக்கள் விழுந்து கெடக்குது!” இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாசற்கதவைத் திறக்கும் வரையில் தமிழுடன் பேச்சை எப்படித் தொடங்குவது என்ற குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால், சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும், சுவருக்கும் வீட்டுவாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்துகிடக்கும் பழைய பூக்களின் குவியல் மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால், மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது. அதற்குள் ``எல்லாம்... `வருக …
-
- 1 reply
- 3.3k views
-
-
நாக்குகள் “சாந்தி, நேத்து தான் தங்க மலர் சினிமாவுக்குப் போயிருந்தேண்டி.” “அப்படியா? நல்லாருக்குதா?” “ஓ.. ஒரு பணக்காரன் பொண்ணு தன் அந்தஸ்துக்கு கீழே இருக்கற ஒரு வேலைக்காரனை லவ் பண்றாடி. ஆனா பாவம், வழக்கம் போல அவளோட அப்பாவும், அம்மாவும் கலயானத்துக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசியிலே எப்படியோ ரெண்டு பேரும் ஏதோ ட்ரிக் பண்ணிப் பெரியவங்களைச் சம்மதிக்க வச்சுடறாங்க. அதுதான் கதையிலே சஸ்பென்ஸ்...” “என்ன ட்ரிக்டி பண்றாங்க?” “அதைச் சொல்லிட்டா அப்புறம் நாலைக்கு நீ படம் பார்க்கிறப்ப என்ன சுவாரஸ்யம்டீ இருக்கும்? நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா? கொஞ்சூண்டு இருக்கற சஸ்பெ…
-
- 0 replies
- 807 views
-
-
ஒரு நிமிடக் கதை: ஆத்திரம்! “இந்தாடா பிறந்த நாள் கேக். முந்நூறு ரூபாய்… மூணாவது படிக்கிற, உனக்கு இது தேவையா? நீ என்ன பெரிய மனுஷனா? உங்க டீச்சருக்கு பிறந்த நாள்னு உங்க வகுப்பில் உள்ள முப்பது பையன்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாயா முப்பது ரூபாய வசூல் பண்ணி வைச்சுக்கிட்டு கேக் வாங்கித் தாங்கன்னு அடம்பிடிக்கிறே. முப்பது ரூபாய்க்கு கேக் வாங்க முடியுமா? இதெல்லாம் யாரு ஏற்பாடு பண்ணச் சொன்னா?” கடுப்பாகக் கேட்டார் செல்லையா. “நாங்களாகத்தான் ஏற்பாடு செய்யுறோம். எங்க கமலா டீச்சருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு அவங்களே சொன்னாங்க. ‘பிறந்த நாளுக்கு நீங்க எனக்கு என்ன பண்ணப்போறீங்க?’ன்னு வேற கேட்டாங்க. அதுதான் நா…
-
- 0 replies
- 497 views
-
-
-
- 47 replies
- 5.1k views
-
-
மான்டேஜ் மனசு 19: லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்! அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது. குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார். ''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...'' ''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.'' ''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?'' ''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?'' அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன். சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் விஷ மருந்து டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு, மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்! - தக்கலை லீலாஇராம். பிரார்த்தனை `சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை விற்கும் சிறுவன்! - வினோத் குமார். கால்ஷீட் “ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா, அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார் தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்! - பெ.பாண்டியன் செல்ஃபி நேரம் மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தத…
-
- 0 replies
- 865 views
-
-
ஒரு நிமிடக் கதை: பணம்! “மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள். “சரிம்மா!” என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது. ‘பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தரவேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப் பயிற்சியை முடித்துவிட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார். வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இமயா - சிறுகதை அராத்து, ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி லங்காவி தீவு. நள்ளிரவைத் தாண்டி இரவு தனக்கான தனி கேரக்டரை வடிவமைத்துக்கொண்டிருக்கும் நேரம். `அன்கான்ஷியஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த பப்பில், அப்போதுதான் அறிமுகமாகி இருந்த இருவர், அடி பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் ட்ரம்ஸ் இசைக்கும், `ஒன்மோர் டிரிங்க் ப்ளீஸ்’ என உரசிக்கொண்டிருக்கும் பெண்களின் நச்சரிப்புகளுக்கும் இடையில் பேசிக்கொண்டு இருந்தனர். வீடு, வாசல், பிசினஸ் தாண்டி குழந்தைகள் பற்றி பேச்சு வந்ததும், இன்னும் கவனமாகவும் சத்தமாகவும் பேச ஆரம்பித்தனர். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். விட்டதைப் பிடிப்போம் என, குழந்தைக்குட்டியான பிறகும் லங்காவி டூர் வந்திருக்கின்றனர். ஒரு தந்தையின் பெய…
-
- 0 replies
- 2.7k views
-
-
அப்சரஸ் வந்திருந்தாள் தனது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள் அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு மூச்சு முட்டியது.. அப்போதுதான்…
-
- 0 replies
- 1.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஹோம்வொர்க் ‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு! - சாய்ராம் கஷ்டம் இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன். அதான் கஷ்டப்படுறேன்.” - வைத்தீஸ்வரன் பாலகிருஷ்ணன் லைக் “ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்! - எஸ்கா …
-
- 0 replies
- 1k views
-
-
ஈடுகள் ஐநூறு ரூபாய்க்குப் பக்கமான தொகையை அவர் நீட்டினார். அவன் வாங்கி கொண்டான். ஒரு பரம்பரைச் சொத்தின் மிச்சம் அது! எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது அவனைப் பெற்றவள் புதியவாடகை வீட்டின் மோட்டு வளையில் பார்வையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு வகை பயம் கலந்த மௌனத்துடன் ஐநூற்றுச் சொச்சத்தை அவன் அவள் முன்னால் வைத்தான். அவள் அதைத் தொடவேயில்லை. மாறாக விழிகளில் கண்ணீர் கொப்பளிப்புடன் அவனைப் பார்த்தாள். "தயவு செஞ்சு அப்படிப் பார்க்காதம்மா... நான் இப்ப முன்ன மாதிரி இல்ல. மாறினவன்..." - அதைக் கேட்ட அவள் வாய் விட்டுச் சிரிக்க விரும்பி பின் தோற்று மெலிய சிரித்து ஆழ ஒரு பெருமூச்சை …
-
- 1 reply
- 774 views
-
-
BY: லதா சரவணன் என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன். ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன். என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள். …
-
- 1 reply
- 994 views
-
-
தேர்பலி - சிறுகதை என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம் முதல் சாமம் கடந்த அகாலம். இருட்டு கட்டிய வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. கல்தீப விளக்குகள் அணைந்துபோயிருந்தன. பின்வீதியில் எங்கோ குருட்டு ஆந்தைகள் சத்தமாகக் குடுகின. நெட்டையாண்டி, எட்டுவைத்து நடந்தான். வீட்டின் வெளி மதில் கதவு திறந்தே கிடந்தது. விளக்குமாடத்து அகல் ஒளி, கீழ்திசைக் காற்றுக்கு நடுங்கியவண்ணம் இருந்தது. கல்நிலவு வாசற்படியில் தலை வைத்துப் படுத்திருந்த கனகா, காலடி அரவம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தாள். நெட்டையாண்டிக்கு முன்னே ஓடி, சமையல்கட்டுக்குள் கோரைப் பாயை விரித்துப் போட்டாள். பித்தளைச் சொம்பு நீரை நீட்டினாள். கை அலம்பிவிட்டு வந்த நெட்டையாண்டி, பாயில் சம்மணமிட்டு அமர்ந்தான். அகல் …
-
- 2 replies
- 3.7k views
-
-
கள்ளந்திரி சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் “ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...” மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன். நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு. அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது. எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண…
-
- 1 reply
- 1.3k views
-
-
மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகு குமார் செல்போனில் அழைத்தான். ''என்ன பண்ற மாப்ள'' ''அலுவலகத்துல இருக்கேன் டா. என்ன விஷயம்?'' ''நானும் சென்னையிலதான் இருக்கேன். உன் ஆபிஸ் எங்கே?'' ''மவுன்ட் ரோடு'' ''சூப்பர் மாப்ள. நான் தேனாம்பேட்டையிலதான் வீடு எடுத்து தங்கி இருக்கேன். வந்து ஒரு மாசம்தான் ஆச்சு'' ''சூப்பர் டா. சந்திக்கலாமா'' ''நிச்சயமா'' ''சரி சாயந்திரம் பேசுறேன்'' என்று உரையாடலுக்குத் திரையிட்டு பணிகளில் கவனம் செலுத்தினேன். இன்றைய இரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தபோ…
-
- 1 reply
- 2.5k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் 18 வயது ‘‘பிறந்த நாள் அதுவுமா ஏன்டா சோகமா இருக்க?” என்ற நண்பனிடம், ‘‘எனக்கு 18 வயசு ஆகிருச்சுடா... இனிமே போலீஸ், கோர்ட் எல்லாம் பார்த்து, ரொம்ப பத்திரமா இருக்கணும்டா” என்றான் முருகன்! - உதயகுமார் ஆசுவாசம் தேர்வு முடிந்ததும் துள்ளிக்குதித்து விளையாடியது, பாடம் சொல்லிக்கொடுத்த அம்மாவின் மனம்! - கி.ரவிக்குமார் இது சத்தியம் கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவரிடம் பகவத் கீதையைக் காட்டி, `‘இதன் மீது ஆணையாக...’’ என சத்தியம் செய்யச் சொன்னார்கள். ‘`நான் இதைப் படித்ததே இல்லையே, பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் கூண்டில் நிற்பவர்! - எம்.ஆர். மூர்த்தி விளம்பரம் …
-
- 0 replies
- 951 views
-
-
மகாவலி – சாரங்கன் நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு “இஞ்சேரும் இஞ்சேரும்” என்று மனைவி திலகவதியின் தோளை தட்டி எழுப்பினார் ராஜதுரை “இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ” “அது கனவு சும்மா படும் ” மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு வந்தவர்களுக்கு புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன் பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளாலும் மனதில் இருந்து ஓரளவு மறந்திருந்த அந்த மகாவலி போனவாரம் அவர்கள் சென்றிருந்த ஒரு உறவினரின் கலியாண வீட்டு நிகழ்வு ஒன்றில் மீண்டும் கிளறப்பட்டுவிட்டது . “நீங்கள் சுபனின் பெற்றோர் தானே” உங்களை எனக்கு தெரியும் நான் சுபனின் நண்பன் என்று தன்னை அ…
-
- 6 replies
- 2.2k views
-
-
உயிர் நண்பன் ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற் பட்டது. அப்போது ஒருவன் மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆனால் அறை வாங் கியவன் அதற்கு கோபப் படாமல், அமைதி யாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்” என்று எழுதினான். அதைப் பார்த்த மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும் மீண்டும் நடந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். அங்கு…
-
- 1 reply
- 1.8k views
-