Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. "உன்னை மறக்க முடியவில்லை?" ஒரு பொத்தானை அழுத்தி, அந்த கணமே என் நினைவை உடனடியாக அழிக்க முடியும் என்றால், நான் உன்னுடன் ஒன்றாய் இருந்த தருணங்கள் எல்லாம் மனதில் இருந்து போய்விடும். ஆனால் நான் இப்ப ஒரு தந்தையாக இருந்தும், அழகான அன்பான மனைவி காதல் கிழத்தியாக, விழித்ததும் நான் தேடும் ஆசை முகமாக, மறக்காது நான் ரசிக்கும் வண்ண உடலாக, நித்தமும் நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றாக இருந்தும், இன்னும் உன்னை மறக்க முடியவில்லை? இது என்ன மாயமோ, அது புரியாமல் நான் தவிக்கிறேன். காலம் மாறும் கோலம் மாறும் என்பது பொய்யோ?, நான் அறியேன் பராபரமே! காதல் என்பது உலகில் உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து வரும் தொப்புள்கொடி உணர்வு என்…

  2. "காதல் அழிவதில்லை" யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில் சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்ப…

  3. "நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வை…

  4. "எனக்காக பிறந்தவள்" "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால் அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் துடிக்குள்அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள் துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள் [ குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை] நான் வேலை செய்யும் பணிமனையில், எனக்கு ஒரு உதவியாளராக ஒரு பெண் நாளை தனது பதவியை ஏற்பார் என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி என்றும், இது அவரின் முதல் வ…

  5. "சத்தம் போடாதே" இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு…

  6. "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்க…

  7. "அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் …

  8. "ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்ட…

  9. "அறம் பேசுமா?" அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன். கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது. நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக, அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இ…

  10. "உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை] ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு. நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது. நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை…

    • 8 replies
    • 724 views
  11. "அப்பாவின் பேனா..!" அப்பாவின் படம் சுவரில் அழகாக தொங்குகிறது. அதில் அவரின் சட்டை பையில், அந்த பேனா எட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்று அவரின் நினைவு தினம். நான் அவரின் அந்த படத்துக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு, அவரின், அவர் என்றும் தன்னுடன் எடுத்து செல்லும் அந்த பேனாவை, அவரின் படத்துக்கு அருகில் கொழுந்துவிட்டு எரியும் தீபத்தின் ஒளி அதிலும் படக்கூடியதாக வைத்தேன். அப்படி என்ன இந்த பேனாவில் உள்ளது? இந்த பேனாவின் வலிமை உண்மையில் என் அப்பாவின் எண்ணத்தின் வலிமை, அவரின் சொல்லின் வலிமை! ஆமாம். என் அப்பாவின் பேனா நீதி பேசும் , கதை சொல்லும், கவிதை பாடும், ஏன் புரட்சி கூட செய்யும்!! அது தான் அதன் பெருமை!! பேனா என் அப்பாவின் வாழ்வில் இரண்டறக் கலந்த்துடன் அவரை யா…

  12. போதமும் காணாத போதம் – அறிவிப்பு மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற சோதி ஆளுகின்றதா ?எனது போக்கும் வரவும் புணர்வுமெரிகின்றதா? சிற்றறிவாளும் நினைவுகளை சீண்டியழித்துச் செயலை முடுக்கி தூண்டும் சுடரொளியான சுதந்திரப் பிழம்பாய் மூண்டெழுகிறது நெருப்பு மேலே மேலே இன்னும் மேலே வாலின் நுனியை ஊன்றியெழுந்து வளர்பிறை நிலவைக் குறிவைத்து தூவெளி வானில் சோதி சுடர்த்தி நீலநிறத்துச் சுவாலையை வீசி சீறியெழுகின்ற அரவென நெளிதரு நடனம் நடனம் தீயளி நடனம்! நர்த்தனமாடும் அக…

  13. http://1.bp.blogspot.com/_XsbRJpGRhp0/TFR50OkOdtI/AAAAAAAAAXc/Irhmr0Fwxio/s320/life.jpg ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து. அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார். ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் …

  14. சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில…

    • 1 reply
    • 701 views
  15. யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை ‌எழுப்பி பர…

  16. சித்திரப்பேழைகதைகள் ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் த…

      • Sad
      • Like
    • 5 replies
    • 1.4k views
  17. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த…

  18. செல்லம்மாப்பாட்டி. (சிறுகதை) செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான் காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும் அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும். ச…

  19. மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera) ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதி…

  20. மீனாச்சிபாட்டி(சிறுகதை) பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீ…

  21. ஜூடோ - ப.தெய்வீகன் அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொ…

    • 2 replies
    • 1k views
  22. உடற்றும் பிணி – அருணா சிற்றரசு சிறுகதை | வாசகசாலை வாசகசாலைJanuary 5, 20240 1,060 7 நிமிடம் படிக்க Facebook X Share via Email Print “ உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?” இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை. “வேறொரு பிள்ளை இருக்கிறதா?! மனதைத் தேற்றிக்கொள். உன் மகனுக்கு நாள்பட்ட நோய் ஒன்று உறுதியாகிவிட்டது” என்பதைச் சொல்வதற்கான முன்னோட்டமாகத்தான் அவர் அப்படிக் கேட்டிருப்பார் என்ற உறுதிக்கு மிக அருகில் இருந்தாள். “இந்த மருந்துகளைக் …

  23. திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்க…

    • 2 replies
    • 774 views
  24. என்ர ராசாவுக்கு கிறிஸ்டி நல்லரெத்தினம் யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர். ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்! அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக…

  25. நாடு காத்த சிறுவன் ----------------------------------------------------------------------- அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான் .வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று. இவன் மோகன் தோட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.