கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மான்டேஜ் மனசு 5 காதல் கொண்டவர்களின் கதை! மனசுக்கு சுகமில்லாதபோது செல்வராகவன் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி ஒரு மழை நாளில்தான் 'காதல் கொண்டேன்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பிளஸ் 2 முடித்த தருணத்தில் காதல் கொண்டேன் ரிலீஸாகி இருந்தது. படம் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன் ஈஸ்வரன் 'படம் பிரமாதம்' என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வளவு சீக்கிரம் எந்தப் படத்தையும் ஓஹோ என சொல்லமாட்டான். வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை எழுப்பும் புரொபசர் , ''அந்த கணக்கை சால்வ் பண்ணு'' என திட்டி தீர்ப்பார். எந்த அலட்டலும் இல்லாமல் கணக்கு போட்டுவிட்டு கடைசி பெஞ்ச்சில் தூங்குவான் தனுஷ் என சிலாகித்துக்கொண்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட…
-
- 3 replies
- 2.5k views
-
-
களவாணி மழை சிறுகதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
'பிரேம' அத்தியாயங்கள் ஓய்வதில்லை! அகிலன் செல்போனில் அழைத்தான். ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான். ''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?'' ''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.'' ''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.'' ''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.'' ''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?'' …
-
- 0 replies
- 997 views
-
-
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்! எம்.ஏ.சுசீலா மதுரையிலுள்ள பாத்திமாக் கல்லூரியில் 36 ஆண்டுக் காலம் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் இடையில் இரு ஆண்டுகள் துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம், 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து 80 க்கும் மேற்பட்ட இவரதுசிறுகதைகளும், கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், ஆங்கிலம், மலையாளம், கன்னடம்…
-
- 8 replies
- 3.7k views
-
-
முக்தி பவனம்... சிறுகதை: போகன் சங்கர், ஓவியங்கள்: செந்தில் முக்தி பவனம்... அகோபிலத்தில் வைத்துதான் இந்தப் பெயரை நான் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன்.அகோபிலத்துக்கு மழைக்காலத்தில் போவது அவ்வளவு உசிதமானது அல்ல. ஆனால், நான் என் வாழ்க்கையில் எது உசிதமானது... எது உசிதமற்றது என்று எல்லாம், நின்று யோசிக்கிற மனநிலையில் இல்லை. எனக்கு எல்லாவற்றிலும் இருந்து எங்கேயாவது தப்பித்துப்போக வேண்டும்போல இருந்தது. கொஞ்ச நாட்கள் கேரளத்தில் சுற்றினேன். நாராயணகுருவின் ஆசிரமம் இருக்கும் வர்க்கலையில் ஒரு மாதம் இருந்தேன். மனம் கொஞ்சம் அமைதியானதுபோல இருந்தது. அங்கே உள்ள கடற்கரையில் நடுவெயிலில் தோல் பொரிய நிற்பேன். மாலை நேரங்களில் கடலில் குளிப்பேன். அந்த உப்பு நீர் பட்டு …
-
- 0 replies
- 730 views
-
-
குளித்து விட்டு வந்துநின்ற அஞ்சலியை ‘டச்’ பண்ண மறுப்பு நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் kanaga.raj132@gmail.com . வாழைப்பழமுனு சொன்னதுக்கு பிறகுதான் ஞாபகத்துக்கு வருது, நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நியூசிலாந்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஒக்லான்ட் மிருகக்சாட்சிசாலைக்கும் விஜயம் செய்வதற்கு மறந்துவிடவில்லை. பிரதமருக்கு முன்பாகவே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். பிரதமர் தலைமையிலான குழுவினர் ஒரு வாயிலூடாகவும் நாங்கள் மற்றுமொரு வாயிலிலூடாகவும் செல்லவேண்டியதாயிற்று. குறுக்கு வழியில், நாங்கள் அங்கு சென்றுகொண்டிருந்தபோது, நான், ஒரங்குட்டானைக் கண்டேன். ஒரங்குட்டானை கண்டதும், ச…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்! நானும் புருஷோத்தும் பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனியில் அறை எடுத்து தங்கியிருந்தோம். புருஷோத் அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கம்பெனியிலும், நான் ஒரு பத்திரிகையிலும் வேலை செய்ய நாட்கள் நகர்ந்தன. வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமுமே இல்லை என்று அடிக்கடி புருஷோத் சொல்லிக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி நீண்...ட பிரசங்கம் நடத்திய ஒரு மாலைப்பொழுதில் வந்த ஃபோன் கால் புருஷோத்தை புரட்டிப்போடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ... கார்த்தி இருக்காரா?'' என்றது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல். ''நான் அவர் தம்பி பேசுறேன். அண்ணன் ரெடியாகிறார். நீங்க?'' ''…
-
- 0 replies
- 1.4k views
-
-
மான்டேஜ் மனசு 2 - இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்! நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது. கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள் பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்? நான், மணி, உதயன், புருஷோத், …
-
- 0 replies
- 1.4k views
-
-
மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்! | நிஜம் - நிழல் - புனைவு அடங்கிய புதிய ஆன்லைன் தொடர் | ஆறு வருடங்கள் கழித்து அவளிடமிருந்து இப்படி போன் கால் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ'' குரல் கேட்ட சில நொடிகளிலேயே அவள்தான் என்பதை உணர முடிந்தது. ஆனால், நம்ப முடியாதவனாய் சிறிது நேர மவுனத்துக்குப் பின் ஹலோ என்றேன். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, எதையோ சொல்ல வந்தவள் தயங்கித் தயங்கி நின்றாள். அந்த ஒரு நிமிடத்துக்குள் நான் அவளை... முதன்முதலாகப் பார்த்த 22 வயசுப் பையனாகவே மாறியிருந்தேன். நெருடல் உடைத்து சரளமாகப் பேசினேன். ''மணி கிட்டே பேசினேன்'' என்றாள். …
-
- 0 replies
- 1.8k views
-
-
இனிமேல் என்பது இதில் இருந்து... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வண்ணதாசன், ஓவியங்கள்: ஸ்யாம் மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை. கரன்ட் போயிருந்தது. நனைந்த செருப்பில் இருந்து தோல் வாடை அடிப்பதாக, எப்போதோ நுகர்ந்த வாசனை அவள் முகத்துக்குள் வந்தது. புளியங்கொட்டை அளவுகூட இராது... ஒன்றை அடுத்து இன்னொன்றாக குட்டிக்குட்டித் தவளைகள் தெருவில் இருந்து வாசல் பக்கம் குதித்து நகர்ந்து வந்தன. கோமு இதுவரை அசையாமல், தந்தி போஸ்ட் பக்கம் கெட்டுக்கிடையாகத் தேங்கியிருக்கும் தண்ணீரில் மழைப்புள்ளி விழுவதையே பார்த்துக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: எள்ளாமை! வங்கியில் என் உதவியாளர் நாகுவின் யோசனைப்படி, அப்பிரமுகரை நேரில் சந் தித்து காசோலையைப் பெற்றுவரலாம் என்று காரில் புறப்பட்டோம். நாகு சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தார். சற்று நேரத்தில் நாகு என்னிடம், “நீங்கள் காரிலேயே இருங்கள். நான் அவர் எங்கிருக் கிறார் என்று விசாரித்து வரு கிறேன்” என்று சொல்லிச் சென்றார். கார் வணிக வளாகத்தின் எதிர் புறம் நின்றது. வளாகத்தின் முன்புறம் பூக்கடை. அது மகாலிங்கத்தினுடையது.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் மேலாளராக பணி யேற்ற போது, மகாலிங்கம் அவரது பூக்கடைக்காக ஒரு சிறிய தொகையை கடனாகக் கேட்டார். வாராக் கடன் அதிகமுள்ள அக் கிளையில் மேலும் அதை அதி கரிக்க வேண்டாமென்று மறுத…
-
- 0 replies
- 464 views
-
-
தடயம் - சிறுகதை தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு கதவைத் திறக்கும் ஓசை கேட்டதும், வசந்தியின் உயிருக்குள் சிறிய அதிர்வு ஏற்பட்டது. ரயில் வருவதற்கு முன்னர் தண்டவாளம் லேசாக அதிர்வதுபோல, கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தாள். தேவசகாயம், கதவைத் திறந்து நின்றுகொண்டிருந்தான். அதே சுருள் முடிதான். ஆனால், லேசாக நரைத்திருந்தது. `மனதின் அதிர்வுகள் கண்களில் நீராக மொழிபெயர்க்கப்படுமா என்ன? அவன், தன்னையே உலுப்பிக்கொள்கிறான். ``உள்ளே வா தேவா... உட்காரு.'' அவன் கதவைக் கொண்டியிட்டு நேராக நடந்து அவள் அருகே வந்து, கைகளைப் பிடித்துக்கொள்கிறான். வசந்தியின் கண்களில் நீர் வழிந்தபடி இருக்கிறது. கண்களை இறுக மூடிக்கொள்கிறாள் வசந…
-
- 0 replies
- 2.6k views
-
-
நாவல் மரம் சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ம.செ., `அவளை இன்று பார்க்க வேண்டும்' என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப் போன்று சலனமுற்றுக்கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் தணல் என எரிந்தன. நானும் என் சிந்தையும் சாம்பலாகியும், அவளின் கண்களும், மூக்கின் மச்சமும், பூவரசம் இலையின் நரம்புச் சிரிப்பும், எரியாத விருட்சத்தின் வேராக இன்னும் இன்னும் எனக்குள் இறங்கி வளர்கின்றன. அவளின் நினைவுகள், வளரும் நிலம் என மாறிய என் பொழுதுகளில் யுத்தம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எறிகணைகள் விழுந்து வெடித்த வீதிகளில் ஊரே இடம்பெயர்ந்துகொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், கோயில் கிணற்றில் தண்ணீர…
-
- 0 replies
- 1.6k views
-
-
மகாவலி – சாரங்கன் நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு “இஞ்சேரும் இஞ்சேரும்” என்று மனைவி திலகவதியின் தோளை தட்டி எழுப்பினார் ராஜதுரை “இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ” “அது கனவு சும்மா படும் ” மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு வந்தவர்களுக்கு புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன் பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளாலும் மனதில் இருந்து ஓரளவு மறந்திருந்த அந்த மகாவலி போனவாரம் அவர்கள் சென்றிருந்த ஒரு உறவினரின் கலியாண வீட்டு நிகழ்வு ஒன்றில் மீண்டும் கிளறப்பட்டுவிட்டது . “நீங்கள் சுபனின் பெற்றோர் தானே” உங்களை எனக்கு தெரியும் நான் சுபனின் நண்பன் என்று தன்னை அ…
-
- 6 replies
- 2.2k views
-
-
பகை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில் ஒரு நொடி மயான அமைதி. `எங்கே... செல்வம் பதிலுக்கு ஏதாவது சொல்லி, மீண்டும் பெரிய சண்டை மூண்டுவிடப்போகிறதோ' என்ற அச்ச முடிச்சு, ஒவ்வொருவரின் பார்வையிலும் விழுந்திருந்தது. மீண்டும் கத்தினார் குமாரசாமி. “ஏன்டா, இங்கன என்ன கொமரியா கொள்ளையில போயிட்டா? `போறேன் போறேன்'னு இழுத்துக்கிட்டுக்கெடந்த கெழவி, கல்யாணச்சாவாப் போயிருக்கா. ஒம் பொண்டாட்டி நெற மாசமா இருக்காளாம்ல... அப்ப நீ காட்டுப் பக்கம் வரலாமா, ஆகுமா, என்னா இதுக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும் கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுக…
-
- 0 replies
- 818 views
-
-
தாய்வாசம் - சிறுகதை யுவகிருஷ்ணா, ஓவியங்கள்: ம.செ., மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ…
-
- 0 replies
- 2.7k views
-
-
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை ஜெயமோகன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யாநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு `அது சாத்தியமா?' என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையில் இருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை, கஷ்டப்பட்டுத் தான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. கணக்குகள் போடப்படும்போது எல்லா கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை, நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ, விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும்போதுகூட, பத்து நிமிடங்களுக்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத் தகவல் குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ…
-
- 0 replies
- 949 views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!' - யாரோ ஒருவன். அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கி…
-
- 5 replies
- 3.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை. அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக…
-
- 0 replies
- 830 views
-
-
சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி சிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ``தொடர்ந்தாப்ல ஸ்கூல வெச்சு ஏன்தான் உயிர வாங்குறாங்களோ'' என்று அலுத்துக்கொண்டாள் சம்ரிஷ்தா. படுக்கை அறையில் இருந்து அவளை எழுப்பி, கூடத்துக்கு அழைத்துவருவது பெரும்பாடாக இருந்தது அப்பாவுக்கு. ``பின்ன எப்படி ஸ்கூல் வைக்கிறதாம்?'' என்று அவளிடம் கேட்டார். ``திங்கள்-செவ்வாய் ஸ்கூல், புதன் லீவு; வியாழன்-வெள்ளி ஸ்கூல், சனிக்கிழமை லீவு'' என்று கூறினாள். குரலில் அவ்வளவு சந்தோஷம். ``அப்ப, ஞாயித்துக்கிழமை ஸ்கூல் வைக்கலாமா?'' என்று கேட்டார். ``லூஸாப்பா நீ? ஞாயித்துக்கிழமை வார விடுமுறைனுகூடவா தெரியாது உனக்கு?'' - அதைக் கேட்டு அனைவரும் சிரி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடலில் இருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின்மீது சென்றது. ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன். என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள். கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் ‘ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாக கோடைகாலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடைசெய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்டகாலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ‘ஆயத்தீர்வை’ என அழைக்கப்பட்டதாகவும், அது வ…
-
- 2 replies
- 886 views
-
-
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சிறுகதை பொள்ளாச்சி அபி, ஓவியங்கள்: ஸ்யாம் ''ஏய் சரசு... மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!'' - சிவகாமி இரைந்தாள். அதிர்ந்து நிமிர்ந்த சரசு அத்தை, கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, ''தள்ளுங்க... தள்ளுங்க... கொஞ்சம் இருங்க வர்றேன்...'' என்றபடி அவசரமாகக் கைகளால் விலக்கிவிட்டு எழுந்து ஓடினாள். சரசு அத்தைக்கு ஏறக்குறைய 35 வயது இருக்கும். வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருப்பதால், உருவிவிட்டாற்போல கிண்ணென இருந்தாள். படக்கென உட்கார்வதும், நிமிர்வதும்... அப்படியே அம்மாவுக்கு நேர் எதிர். என்ன... நிறத்தில் அம்மாவைவிட கொஞ்சம் கம்மி. அவ…
-
- 0 replies
- 1.8k views
-