கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: பணம்! “மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள். “சரிம்மா!” என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது. ‘பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தரவேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப் பயிற்சியை முடித்துவிட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார். வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் …
-
- 0 replies
- 1.2k views
-
-
சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார். சபா மாமா என்றாலே எனக்கு நடுங்கும். சபா மாநிலத்தில் போலிஸ் வேலை செய்யப்போனவர், மேலதிகாரி ஏதோ திட்டினான் என்பதால் நான்கு அறையும் கூடவே வேலையையும் திரும்ப கொடுத்துவிட்டு தீபகற்பத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். சபாவில் குறிப்பிட்ட ஒரு இன பெண்களுக்குக் கறுத்த கட்டை என்றால் கொள்ளை …
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரம்மோபதேசம் சுப்பிரமணியனுக்கு உபநயனம்! அதாவது பூணூல் கல்யாணம் என்கிற பிரம்மோபதேசம். முகூர்த்த நாள் எல்லாம் குறித்தாகிவிட்டது. ஒற்றைப் படை வயதில்தான் பூணூல் போட வேண்டும் என்பது சம்பிரதாயம்! ஏழாவது வயதில் பூணூல் போடுவது சிலாக்கியம். காமம் மனதில் நுழைவதற்கு முன் பூணூல் போட்டு விட வேண்டும். சுப்பிரமணியனுக்கு இப்போது பதின்மூன்று வயது பிறந்திருக்கிறது. கல்யாண முஹூர்த்தம் எளிதில் கிடைத்துவிடும் பூணூலுக்கு முஹூர்த்தம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. "எல்லாருக்கும் சொன்னோம். ஆனால் அண்ணாவுக்கு சொல்ல வேண்டாமா?' என்றாள் அம்மா. அம்மாவின் ஒரே அண்ணா ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் மிகவும் ஆச்சாரமானவர். அடுத்தவர்கள் வீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜூட் - அனோஜன் பாலகிருஷ்ணன் வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு ஏதும் இல்லாத தற்செயலான ஒன்றாகவே கொள்ளமுடியும். அவசரமாக பல…
-
- 0 replies
- 771 views
-
-
கனவு மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில் என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது. டேய்..! எந்திரி..மணி எட்டாகுது சே..! பயங்கரமான கனவு. என்னடா இ…
-
- 0 replies
- 854 views
-
-
ஆவி எதை தேடியது ? - நடேசன் நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த வீடுகள் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும். வயதானவர்கள் பெரிய வீட்டை விற்றுவிட்டு, மற்றும் ஒரு சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி, குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வாழ வந்தவர்களால் அவுஸ்திரேலியர்களின் இந்த மனப்பான்மையை நம்ப முடியாது. நமது நாடுகளில் நூறு வருட வீடுகள் இடிந்து உடையும்வரை, பல தலைமுறைகளாக வாழ்வார்கள். அப்படிப் பல த…
-
- 0 replies
- 555 views
-
-
நிலமதி - சிறுகதை சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ஸ்யாம் நெடுநேரம் அவளோடு இருந்த நாளாக நேற்று இருந்தது. பருவத்தின் வசந்த நடை காற்றில் இருந்து கழன்று, எம் இருவரிலும் விழித்துக்கொண்டதாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். தான்தோன்றியாகவே மழைத்தூறலில் நனைவதைப்போல அவளது கண்கள் அசைந்தன. அவளின் ஜீவ ஆற்றல்மிக்க விரல்களை அளந்து கொண்டிருந்தேன். அந்தக் கணங்கள், என்னை இப்போதும் திகைக்கச் செய்கின்றன. அலங்கோலமான வாழ்வில் அசையும் ஆகாயத்தில் எழுந்து பறக்கும் சாம்பல் நிறப் புறாக்களைப்போல் அல்லவா இருந்திருக்கிறோம். கடைசிச் சந்திப்பின் இறுதியில், நிலமதி தந்த பொதிக்குள் பலகாரங்களும் இரண்டு ஷேர்ட்களும் இருந்தன. இருவரின் பிரிவுக் களைப்பு, அந்தப் பொதியில் அரூபமாகக் கனத்துக…
-
- 0 replies
- 2.6k views
-
-
பயணங்களின் முடிவில்! சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன. உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று! உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கண…
-
- 0 replies
- 922 views
-
-
அந்தரங்கம் புனிதமானது கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். “ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”- அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”“இல்லே… அதைப்பத்தி… வ…
-
- 0 replies
- 1k views
-
-
நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: பெண் புத்தி "கதவைப்பூட்டிக்கொள். ராத்திரி சமையல் போனிலே சொல்றேன். எங்கேயும் வெளியே போகாதே " சாந்தி அலுவலகம் கிளம்பிய பத்தாவது நிமிடம் ராஜி பக்கத்துவீட்டுக்குக் குதித்தபடி சென்றாள். * மாமி, சமையல் முடிச்சுட்டீங்களா....ஓ.. ஆரம்பிக்கிறீங்களா...கொடுங்க நான் காய் வெட்டித்தரேன்.... குழம்புக்கா..." கேட்டபடி வேலை செய்யத்தொடங்கினாள். " என்ன ராஜி...நேத்து என்ன ஏதாவது முக்கியமா நடந்துதா?" வம்பு கேட்கத்தொடங்கினாள் மாமி. இது அன்றாடம் நடப்பது தான். ராஜியை சாந்தி வீட்டில் முழு நேர வேலைக்கு வைத்திருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதபோது, ராஜி பக்கத்துவீட்டுக்கு…
-
- 0 replies
- 1k views
-
-
துரோகங்கள் - சிறுகதை அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம் இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்... சார்...” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான். “இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான். “பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.” நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சி…
-
- 0 replies
- 3.1k views
-
-
காபி - இள.சிவபாலன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு லலிதா புரண்டு படுத்தாள். அதிகாலையின் வெளிச்சம், மூடப்பட்டிருந்த சன்னல் கதவுகளுக்கிடையே கசிந்து கொண்டிருந்தது. மெலிதாக போர்வையை விலக்கிப் பார்த்தாள். கணவன் அந்த கட்டில் முழுக்க அலங்கோலமாக படுத்துக் கிடந்தான். அவனிடமிருந்து நன்றாக விலகி அவள் ஓரமாகப் படுத்திருந்தாள். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். யாரும் திறப்பது போல் இல்லை. யாரும் எழுந்து விட்ட மாதிரியும் தெரியவில்லை. அவளுக்கு சுடச் சுட காபி குடிக்கவேண்டும் போலிருந்தது. இதே அவளது வீடாக இருந்தால் அப்பா காபி போட்டு கொண்டு வந்து அத்தனை வாஞ்சையுடன் அவளை எழுப்பியிருப்பார். திருமணம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. நேற்றிரவுதான் அவளது வீட்டில் இருந்து கிளம்பி கணவனோடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்மைலி – அனங்கன் கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள். எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே…
-
- 0 replies
- 433 views
-
-
நாடு தொலைத்தவனின் பயணக் குறிப்புக்கள் அனுபவம் : அகிலன் நடராஜா உலகத்தின் திசையெங்கும் விரிந்த ஈழத்தவர்களின் அகதிப் பயணங்களில் மலேசியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. கனடா ஆகட்டும், லண்டன் ஆகட்டும், பிரான்ஸ் ஆகட்டும் பயண வழியில் மலேசியா ஒரு சத்திரம். அப்படித்தான் எனக்கும். பயணங்கள் பற்றி என்னிடமும் நிறையக் கனவுகள் இருந்தன. ஆனால் காலம்- நிலம், நீர், ஆகாயமென ஆபத்தான பயணமொன்றை என்னில் திணிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. நம்பிக்கைகளின் அழிவில் அது தனது வேலையைக் காட்டுகிறது. 2009 மார்ச் மாதத்தில் வலைஞர் மடத்தில் இராணுவம் புகுந்தபோது எல்லாம் முடிந்தது என்று தலையில் கைவைத்து உட்கார்ந்த அண்ணர் ஒருவரிடம், “ஏன், முள்ளிவாய்க்கால் இன்னமும் இருக்குத்தானே..” என்…
-
- 0 replies
- 789 views
-
-
மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்- சந்திரபோஸ் சுதாகர் மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத்தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள். சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது. கண்களின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன. மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று. குருதியும் தசையும் மண்டிய புதிய ஓவியங்கள் அவனுள்; தொங்கின. மழை தூறத்தொடங்கிவிட்டது. கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழிப்படிகின்றவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்கள் போல தங்களால் அட…
-
- 0 replies
- 733 views
-
-
கடை - சிறுகதை ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமைய…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஏகாந்தம் என்பதும் உனது பெயர் இளங்கோ வழமை போல வேலைக்குப் போவதற்காய் நிமலன் ஆறு மணிக்கு எழும்பியிருந்தான். இரவு திரைச்சீலையை மூடாததால் சூரிய ஒளி அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இன்றைக்கும் வேலைக்குப் போக வேண்டுமா என நினைக்க இன்னும் சோம்பல் கூடியது. சட்டென்று இன்று வேலைக்குப் போகாவிட்டால் என்ன எனவும் தோன்றியது. நல்ல விடயங்களை பிற்போடக்கூடாது என்று யாரோ சொன்னது நிமலனுக்குள் ஒலிக்க, உடனேயே மானேஜரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வேலைக்கு வரமுடியாதிருக்கின்றது எனத் தன் குரலைப் பதிவு செய்தான். சோம்பலாய் விடிந்த பொழுது இப்போது நிமலனுக்கு உற்சாகமாய் மாறியிருந்தது. கட்டிலிலிருந்தபடி இன்று என்ன என்ன செய்யலாமென பட்டியலிட முயற்சித்தான்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: தொலைவு “என்னங்க, உங்க அம்மாவோட எழுபதாவது பிறந்தநாளைக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கலாம்க” என்றாள் வசந்தின் மனைவி அகிலா. வசந்த் ஒரு நிறுவனத்தின் மேலாளர். வீட்டுக்கு மூத்தவன். தந்தையின் மறைவுக்கு பின் அவன் இரு இளைய சகோதரிகளுக்கும் உள்ளூரிலே திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டான். சகோதரிகளும் அவர்கள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருந்தனர். வசந்தும், அகிலாவும் வேலைக்குச் சென்றபின் அம்மா மட்டும் தனியே வீட்டில் டிவி பார்த்துகொண்டோ, கோவிலுக்கு சென்றோ பொழுதை போக்குவாள். அவ்வப்போது மகள்களும், பேரக் குழந்தைகளும் அவளை பார்க்க வந்து போவார்கள். வசந்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு கனவு ஒரு கனவு இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா கண்டபடி பேசி திட்டுவாங்கலாம். சார் இவங்க எண்ணம் எல்லாம் நம்மளை நம்பி இருக்கறவங்கதானே, கூப்பிட்டா வரணும், அப்படீங்கற எண்ணம். கிடக்கட்டும் சார், ஏதோ கூலியா கொடுக்கறாங்க, கொடுக்கறாங்க என்ன போடறாங்க, இந்தா பிழைச்சு போ அப்படீங்கற மாதிரி, நாங்களும் வெட்கமில்லாம அதை ஏத்துக்க வேண்டியிருக்குதே. என்னுடைய அனுபவத்துல சொல்றேன் சார் எப்பவும் ஒரு இடத்துல இருந்துட்டே இருந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க சார், இடம் விட்டு இடம் மாறிகிட்டே இருக்கணும். ஆனா பயமா இருக்கே சார், வேற இடத்துக்கு போயி செட்டிலாகலாமுன்னா அங்கிருக்கறவங்க, நம்மளை எதிரியா ப…
-
- 0 replies
- 664 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் http://www.vikatan.com
-
- 0 replies
- 887 views
-
-
விழாக்கோலம் பூண்டிருந்தது, சிவதாணுவின் வீடு. 'தாத்தா...' என, ஓடி வந்த பேரன் ராம், சிவதாணுவின் மடியில் ஏறி உட்கார்ந்தான். ''ராம்... மெதுவாக ஓடி வரணும்; இப்பப் பாரு மூச்சு வாங்குதில்ல... சரி, எதுக்கு இப்ப ஓடி வந்தே?'' என்று கேட்டார், சிவதாணு. ''வெளிநாட்டுலருந்து, சித்தப்பா இன்னைக்கு வர்றாராமே...'' ''ஆமா... உனக்கு எப்படி தெரியும்...'' ''பாட்டி சொன்னாங்க... சித்தப்பா வெளிநாட்டுலருந்து எனக்கு பொம்மை, சாக்லேட் எல்லாம் வாங்கி வருவாராம்; உங்களுக்கு எதுவுமே வாங்கி வரமாட்டாராம்,'' என்றான். ''ஏன் எனக்கு வாங்கி வரமாட்டானாம் உன் சித்தப்பா?'' ''நீங்க தான் சித்தப்பாவ திட்டி, அடிச்சு, வீட்டை விட்டே விரட்டினீங்களாம்...'' என்றான். ''அப்படிக் கேளுடா என் பேராண்டி... இனி…
-
- 0 replies
- 528 views
-
-
இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் சிறுகதை - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைக…
-
- 0 replies
- 598 views
-