கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
இன்னொரு நந்தினி - சிறுகதை ஆத்மார்த்தி, ஓவியங்கள்: ஸ்யாம் பெருமழைக் காலத்தின் ஆரம்பக் கணங்களை, பெரிய கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ். `பார்க்கணும்டா!' - ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக்கொண்டு, மழையைப் பார்க்க மறுபடி வந்தேன். இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை. மழைக்கு முந்தைய காற்றும் லேசாகத் தெறிக்கும் தூறலும் மட்டுப்பட்டாற்போல் தோன்றியது. அடுத்த விநாடி மீதான அறியாமைதான் எத்தனை அழகு! நகரத்தின் முக்கியமான சாலையில் அவ்வளவாகப் பரபரப்பு இல்லை. இன்று ஏதோ லோக்கல் விடுமுறை. இல்லாவிட்டால், சாலையை இந்நேரம் விழுங்கியிருக்கும் பள்ளிக்கூடக் கூட்டம். காது அருகே, ``இன்னிக்கு மழ…
-
- 0 replies
- 2.6k views
-
-
குலசாமியைக் கொன்றவன் சிறுகதை: கணேசகுமாரன்ஓவியங்கள்: ஸ்யாம் திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை 'கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு 'க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி 'கி’ இடைவெளி 'ரா’ இடைவெளி 'ம’ இடைவெளி 'ம்’... அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் அய்யனார் கோயில் வாசலில் குழுமியிருப்பதன் காரணம் நமக்கு முக்கியம். பூட்டப்பட்ட கோயில் வாசலில் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்ட…
-
- 0 replies
- 3.3k views
-
-
ஒரு நிமிடக் கதை வாய்ப்பு ‘‘ஓவியம் வரையறதை விட்டுட்டு வேற ஏதாவது உருப்படியான வேலையைப் பாரு!’’ என்று அப்பா திட்டியபோதெல்லாம் வராத ஞானோதயம் மகேந்திரனுக்கு இப்போதுதான் வந்தது.வந்து என்ன புண்ணியம்? அவனுக்கு ஓவியம் தவிர வேறு எதுவும் தெரியாது. ‘இதற்கு மேல் பட்டினியைத் தாங்க முடியாது’ என்ற நிலையில் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஐம்பது ரூபாய் எப்படித் திரட்டுவது எனத் தீவிரமாக யோசித்தான்.‘எந்த நேரத்திலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’ என்ற அவன் தாத்தாவின் வார்த்தைகள் மனதுக்குள் வந்து போயின. தான் வரைந்த ஓவியத்தை எடுத்து, அதன் கீழ் எதையோ கிறுக்கிக்கொண்டான். இருப்பதிலேயே நல்ல உடையை எடுத்து அணிந்து கொண்டவன், பெரிய பங்களாக்கள் இருந்த ஏரியாவில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினான்…
-
- 0 replies
- 565 views
-
-
வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன் ஓவியங்கள் : ரமணன் வாப்பா தன்னுடைய ஆறாவது மகளின், அதாவது என்னுடைய வீட்டை அபீர் தெருவின் கடைக்கோடியில் கட்டி முடித்தார். அப்போது வாப்பாவுக்கு இன்னும் ஒரேயொரு வீடு மிச்சமிருந்தது. தங்கை பஷீராவின் வீட்டைக் கட்டி அவளுக்கொரு துணை தேடிக் கொடுத்துவிட்டால் வாப்பா சந்தோஷமாக ஹச்சுக்குப் புறப்பட்டுப் போய்விடுவார். அந்தப் புனிதமான யாத்திரையைக் காட்டிலும். கடமையைக் காட்டிலும் தன்னுடைய மகள்களுக்கு நல்ல ஒரு வரனும் ஒரு வீடும் அமைத்து கொடுப்பதைத்தான் வாப்பா தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதியிருந்தார். நான் இவரை மணமுடித்த பிறகு, வாப்பாவைப் பார்க்க அபீர் தெருமுனையிலிருந்த எங்களுடைய வீட்டுக்கு மூன்று மாதங்கள் கழித்து போயிருந்தப…
-
- 0 replies
- 1.6k views
-
-
அழகி - க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு எமது திருமணம் வலிந்தே நடத்தப்பட்டதை ஓர் காரணமாகச் சொல்லலாம். எனக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாம் கிடைத்தபோதும் இந்தத் திருமணக் கேள்வியில் உண்மையிலேயே ஓர் குருடனாக இருந்துவிட்டேன். ஆம், திருமணத்துக்கு முன்னர் எனக்கு அவளது முகம் தெரியாது. அவளது மனத்தின் ஆசைகளும் தெரியாது. ஆம், என்னைப் பெற்றவர்கள் கேட்ட சீதனத் தொகை என்னைக் குருடனாக்கியது என்பதுதான் உண்மை. அவள் அழகி என்பதுகூட திருமண முதல் நாளில்தான் எனக்குத் தெரியும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகத்துக்கானவர்கள் ஒவ்வொரு நாளையும் வருத்ததுடனும் சோகத்துடனும் தொடங்கி அன்றைய நாளுக்கான அலுவல்களில் மூழ்கி (அலுவல்களில் பின்னால் ஒளிந்து கொண்டு என்பதே பொருந்தும்) சிறிது மறந்திருந்து உறங்கச் செல்லுகையில் மனதின் பாரம் பாதியாய்க் குறைந்து, மறுநாள் காலை தினமும் மறதியைக் காரணம் காட்டித் தப்ப முயலும் அக்குற்றவுணர்வு முழுவதுமாக என்னை ஆட்கொள்வதுமாகக் கழிந்த சில பல நாட்களின் முடிவாகிப் போன ஏதோ ஒரு நாளில்தான் நான் அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘உலக நடப்புகளை இனி கவனிப்பதில்லை’ – கண்களை இறுக மூடிக் கொள்ளும் முட்டாள்தனத்தைச் செய்ய எத்தனித்தேன்…. உலகம் இருண்டு விட்டது என்று நினைக்க அல்ல; உலகமெங்கும் உவகையும் வெளிச்சமுமே நிறைந்து இருக்கிறது என்று நம்புவதற்கு…
-
- 0 replies
- 957 views
- 1 follower
-
-
எழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை அதிஷா, ஓவியங்கள் ஸ்யாம் இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது. என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன். முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின…
-
- 0 replies
- 2.1k views
-
-
இலையுதிர் காலம் - சிறுகதை சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டான். என்றைக்காவது லோடு வரும் நாள்கள் இப்படிக் கடையிலேயே தங்குவதுண்டு. வாசல் முன் விரவியிருந்த சருகுகளைப் பெருக்க முனைந்தான். இரவின் பனியினால் சருகுகள் நமத்துப்போயிருந்தன. இதுவே மாலையாக இருந்தால் பகல் வெயிலால் காய்ந்த சருகுகள் மொறுமொறுவென இருக்கும். அதன் மீது அங்குமிங்கும் சரக் சரக்கென்று நடப்பான். இலைகள்…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒரு நிமிடக்கதை: தீபாவளி அன்று அலுவலகத்தி லிருந்து வரும்போதே மிகவும் சந்தோஷமாக இருந்தார் அகிலன். “கல்பனா..! போனஸ் வந்தி டுச்சு.. தீபாவளி செலவுக்கு பட்ஜெட் போடுவோம். ஜவுளிக் கடையில பழைய பாக்கியை அடைச்சிடுறேன். தீபா, விஷ்ணு..! லேட்டஸ்டாக வந்த டிசைன்ல உங்களுக்கு என்ன பிடிக்குதோ வாங்கிக்கங்க.. கல்பனா..! ஹேண்ட்லூம்ல கிரடிட்ல உனக்கு பிடிச்ச பட்டு சேலை வாங்கிக்க. மாசாமாசம் என் சம்பளத்துல பிடிச்சுக்குவாங்க.” “தீபாவளிக்கு முறுக்கும், அதிரசமும் பண்ணலாம்னு இருக் கேன். சொந்தக்காரங்களுக்கும், பிரண்ட்ஸ்க்கும் நிறைய கொடுக் கணும்..” என்றாள் கல்பனா. “சரி.. மளிகைக்கடை பாக் கியை செட்டில் பண்ணிடுறேன். புதுசா என்னென்ன …
-
- 0 replies
- 648 views
-
-
மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு ''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.'' ''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''. ''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.'' ''சரிம்மா. அவசியம் வர்றேன்.'' பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆனைக்கிணறு தெரு - சிறுகதை உதயசங்கர் - ஓவியங்கள்: ரமணன் பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும். நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்…
-
- 0 replies
- 3.6k views
-
-
சுமித்ரா - சிறுகதை மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத வயசாச்சு. இன்னும் மனசுக்குள்ளயே படிச்சி பாடத்தைப் புடிச்சி வச்சிக்கத் தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டே இரண்டாவது மகளின் - வாணிக்கு நேர் மூத்தவளின் - கூந்தலில் ஈருளியைவிட்டு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசம். “வயசுக்கு வந்து ஆறேழு வருஷம் ஆச்சு...…
-
- 0 replies
- 3.1k views
-
-
நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள்; பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த ஒரு தகுதியே போதும், குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எழுதுவதற்கு. குழந்தைகள் புத்தகத்தில் குழந்தைகளுக்காக எழுது வதைவிட, குழந்தைகள் உலகத்துக்கும் வளர்ந்தவர் களுக்கான உலகத்துக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதுதான் முக்கியம். ஏதாவது ஒரு வகையில், குழந்தைகளுக்கான எல்லாப் புத்தகங்களும் இந்த இடத்தைக் கடந்தாக வேண்டும். பெரியவர்களுக்கான உலகில் நமக்கான இடம் எது, நாம் எப்படி நடத்தப்படு கிறோம் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் குழந்தையாக இருந்ததற்கும் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இடையே சுவாரசியமான பல வேறு பாடுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதும்…
-
- 0 replies
- 689 views
-
-
நான் ஓர் ஈழத் தமிழன். எமக்கு எனத் தனித்துவமான பேச்சுத் தமிழ் உண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்துகிற பல சொற்களை நாம் பயன்படுத்த மாட்டோம். சொற்களைப் பயன்படுத்துவதில் இரு பிரதேசத் தமிழர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு வந்த ஆறு மாத காலத்துக்குள் இங்கு உள்ள பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், அரசுத் தரப்பு சித்திரிப்புகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலங்கைத் தமிழர் பயன்படுத்தாத, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இருந்தே ஒப்புதல் வாக்குமூலம் என் சொல் படி எழுதப்படவில்லை என்பதும், அவர்களின் இஷ்டத்துக்குத் தகுந்தபடி எழுதப்பட்டது என்பதும் அப்பட்டமாகத் …
-
- 0 replies
- 564 views
-
-
ஸ்லீப்பர் செல்' தீபாவளி! விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு... ''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பார…
-
- 0 replies
- 1.4k views
-
-
குள்ளன் பினு - சிறுகதை சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன் 11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான். பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க. ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க. பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன் சொன்னான். சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு.... கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க. அப்படி குதிக்கும்போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும் கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல. கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான். "உனக்கொன்னு, எனக்கொன்னு" "உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு" இதை கேட்ட அவனுக்கு போதை மொத்தமும்…
-
- 0 replies
- 882 views
-
-
மத்திய சிறைவாசி எண்: 3718 - சிறுகதை அன்புள்ள விஜி… நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்கச் சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொரு முறை உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும், சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய். எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவை அடிக்கடி பார்க்கப்போறம்மா?’ என ஆதிரா கேட்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தையே பதிலாகச் சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அநேகரும் என் முதுகுக்குப் பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்துவைத்திருப்பது போல் சிரித்துக்கொள்கிறார்கள். இப்போது எல்லாம…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை கடவுள் ஒரு கணக்கன்! கிழித்த நாராக ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தாள் உமா.…
-
- 0 replies
- 1.1k views
-
-
சோதனை மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் சார்பிலுமான வேண்டுதலைத் துவங்கினாள். ‘‘அம்மாவுக்கு மூட்டு வலி தொடங்கி இருக்கு. அது அதிகமாகாமல் சரியாயிடணும். இதற்கு உன் அருள் வேண்டும்...’’ கூடத்தில் அம்மா வாய்விட்டு எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள். ‘‘இப்ப பார்த்து இந்த மாலதிக்கு நொய்டாவுக்கு மாற்றலாகியிருக்கே. அது எங்கேயோ தில்லியைத் தாண்டி இருக்காமே. பதவி உயர்வு இப்ப ரொம்ப அவசியமா? சோதனைகளைத்தான் வேண்டிய மட்டும் அனுபவிச்சாச்சே...’’ கூடத்தில் அம்மா இப்படி தனக்குத்தானே அடிக்கடி உரத்துப் பேசிக் கொண்டிருப்பதும் அதனால் பூஜை அறையில் மாலதிய…
-
- 0 replies
- 834 views
-
-
ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள் போன ஆகஸ்ட்டில் அம்மா இறந்து விட்டாள். திடுமென்று இறந்துவிட்டாள். இப்போது அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மா கண்டிப்பானவள். அவள் பார்வையே ஒரு தினுசாக இருக்கும். எதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். டிரஸ் சரியாகப் போட்டுக் கொள்ளவில்லை என்றால் திட்டுவாள். "ஏன் எல்லாம் தெரியும்படி டிரஸ் செய்துக்கிறே?'' என்பாள். நான் வயதுக்கு வருவதற்கு முன்னாலேயிருந்து அம்மாவின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்போது எனக்குக் கல்யாணம் ஆகி என் பெண் பத்மஜா பெரியவளாகப் போகிறாள். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: விழுதுகள் தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி. “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா. அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார். அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆ…
-
- 0 replies
- 724 views
-
-
மம்மூதன் - சிறுகதை வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம் பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன். ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.…
-
- 0 replies
- 3.3k views
-
-
பாதை - சிறுகதை கவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம் திங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு. தாம்பரம் போகும் டிரெயின், மூன்றாவது நடைமேடையிலிருந்து கிளம்பக் காத்திருக்கிறது. ஏற்கெனவே லேடீஸ் ஸ்பெஷலைத் தவற விட்டுவிட்டாள். இது சூப்பர் ஃபாஸ்ட். `சட்டென மாம்பலம் ஸ்டேஷன் போய்விடலாம்’ என, மனக்கணக்கு வேகமாக ஓடியது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
அவளை நீங்களும் அறிவீர்கள்! - ச.பாலமுருகன் ச.பாலமுருகன் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அவளை நீங்களும் அறிவீர்கள்! நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத…
-
- 0 replies
- 819 views
-