கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ₹250 கடன் வாங்கினான். சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான் . சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டாள். . மனைவியிடம்..நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான். மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... கணவனின் பல மன்றாடுதலுக்குப்பிறகு மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை . 1). *Rs. 2 5 0* 2). *Rs. 2 5 0* ------------------ *Rs. 4 10 0* ------------------ ஆக மொத்தம் ர…
-
- 0 replies
- 545 views
-
-
நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் இன்று வரும் வழியில் பாதிரி செல்லையாவைப் பார்த்தேன். காய்கறி வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்தவர், என்னைப் பார்த்ததும் நிதானித்தார். “பச்சை படியும்விதம் ஷேவ் செய்யப்பட்டு, மீசையற்ற மொழுமொழு கன்னங்கள் கொண்ட ஆண்களைப் பார்த்தால் gay போலவே தோன்றுகிறது” என்றவுடன், திடுக்கிட்டு கன்னத்தைத் தடவியபடி சிரித்தார். எனது வெள்ளைப் பக்கங்கள், அவரது கறுப்புப் பக்கங்கள் மீது இருவரும் பரஸ்பர மரியாதைகொண்டிருந்தோம். உரையாடலைக் காய்கறிகளின் நச்சுத்தன்மையிலிருந்து தொடங்கியவர் பிறகு, சர்ச்சில் சிறு வேலைகள் செய்யும் லாரன்ஸும், விக்டரும் குடித்துவிட்டு சர்ச்சுக்கு வருவது குறித்தும், தேர்தல் காலங்களில் தேவாலயத்தை அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
குணவேறுபாடு சிறுகதை: மேலாண்மை பொன்னுச்சாமி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான். கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு. `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்... இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்…
-
- 0 replies
- 3.9k views
-
-
'பிரேம' அத்தியாயங்கள் ஓய்வதில்லை! அகிலன் செல்போனில் அழைத்தான். ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான். ''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?'' ''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.'' ''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.'' ''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.'' ''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?'' …
-
- 0 replies
- 997 views
-
-
ஒரு கவடு தூரம் -வாசுதேவன் பாரிஸ் முதலாவது குறிச்சியில் உள்ள உணவகமொன்றில் சமையற்காரனாக வேலை செய்யும் கண்ணன் பிரஞ்சுக் குடியுரிமை பெற்றுக்கொண்ட வேகத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுபினராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டிருந்தான். அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்கத்திலும் உறுப்புரிமை பெற்றிருந்தான். தொழிற் சங்கத்தில் இணைந்ததிலிருந்து சிறிது சிறிதாக இடதுசாரிச் சிந்தனை அவனை ஆக்கிரமித்துக்கொண்டது. தொழிற்சங்கக் குறிச்சிப்பொறுப்பாளனான டானியல் ப்ரௌவ்ஸ்கிதான் கண்ணனுக்கு கம்யூனிசச் சிந்தனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டவன். கண்ணனுக்கும் ப்ரௌவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு முக்கியமான பொதுவிடயம் உண்டு. ப்ரௌவ்ஸ்கி பரிசில் கோவில் வீதிய…
-
- 0 replies
- 1k views
-
-
தண்ணீர்... தண்ணீர்... வீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க... வாகனப் போக்குவரத்துக்காக இடம் விட்டு தண்ணீர் லாரிக்காகக் காத்து நிற்கும் பெண்கள்... அக்கம் பக்க கதைகள் பேசுவது ஒருபுறம் என்றால், சீரியல் கதைகள் பேசுவது மற்றொரு புறம். தண்ணீர் லாரி எந்த நேரத்திலும் வந்துவிடலாம். ஆனால் சரியான நேரத்திற்கு முன்பாக ஆஜராகிவிடும் அவர்கள் வீட்டு வேலைக்காரி மகேசுவை இன்னும் காணவில்லை. சாராவின் கணவர் ஜான்சன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சாராவும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். அவர்கள் வீடு நல்ல வசதியுடன் மிக முக்கியமான இடத்தில் இருந்தபோதும், தண்ண…
-
- 0 replies
- 4.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...? ராமன் சற்றே பெரியதாகிப்போன குரலில் பேசத்தொடங்கினார். "இந்த வரன் சரியாவரும்போல தான் இருக்கு...அதான் கொஞ்சம் கவலையாக இருக்கு" ஒன்றும் புரியாமல் மீனாட்சி விழித்தாள். "கவலையா....இது என்ன புதுக்கதை. இருந்து இருந்து உங்க ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு படிஞ்சு பையனை பிடிச்சிருக்கு சொன்னாலும் மறுபடியும் முருங்கமரம் ஏறாமல் இருக்கணுமேன்னு நான் கவலைப்பட...நீங்க மாத்தி இல்ல கவலைப்படறீங்க....?" பக்கத்துரூமில் இது வரை கேட்ட சத்தம் நின்று போனதோடு ஒரு அமானுஷ்ய நிசப்தம் குடி கொண்டது. …
-
- 0 replies
- 688 views
-
-
கடந்த வாரம், பனியால் மூடப்பட்ட ஒரு நாள், ரொறொன்ரோ மருத்துவமனை ஒன்றில் ஹெலன் என்ற பெண்மணியை சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுப்பர்மாக்கெட்டுக்கு வெளியே சந்தித்து இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர் முகத்தை மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். முதுகு எலும்பு எக்ஸ்ரே எடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். தீராத முதுகு வலியால் ஹெலன் 24 மணிநேரமும் வேதனை அனுபவிக்கிறார். அதே துப்புரவுத் தொழிலைத்தான் இப்பவும் செய்கிறார். எந்த நேரமும் வேலை போகக்கூடும். ஆனால் பழைய சிரிப்பு இன்னமும் போகவில்லை. இவரிடம் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. *********"**"**""""************************* இத…
-
- 0 replies
- 1.1k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story ஆனந்த விகடன் வார இதழில் எனது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ சிறுகதை பிரசுரமானபோது இளையராஜாவின் இசைக்குழுவில் 12 ஆண்டுகள் வாத்தியக்கருவி வாசித்த ஒரு இசைக்கலைஞர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கதையைப் பாராட்டிக்கொண்டிருந்தவர், இடையில் தொண்டை அடைத்து, குரல் கம்ம பேச்சை நிறுத்தி, ஃபோனை கட் செய்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசியவர், “என்னால முடியல சார்….” என்றார். உண்மையில் அவர் எதுவும் பேசாத அந்த இரண்டு நிமிடங்கள்தான் அந்தக் கதைக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இக்கதையை பிரசுரித்த விகடன் இதழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நண்பர்களுக்காக அக்கதை: ஒரு சிறந்த இசைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் எரிகிற நெருப்பில்... ச ங்கரனுக்கு மேன…
-
- 0 replies
- 1.5k views
-
-
புதியதோர் உலகம் செய்வோம் - சிறுகதை விஜி, ஓவியங்கள்: ஷ்யாம் 06-11-2028 அனைவரின் உதடுகளும் `நிவேதா’ என்று ஏன் முணுமுணுக்க வேண்டும்? எல்லாத் தொலைத்தொடர்புச் சாதனங்களிலும் ஒரே நிகழ்ச்சி. உலக மக்கள் அனைவரது கவனமும் ஒன்றின் மீதே இருந்தது. கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி அனைத்தும் ஒரே நிகழ்ச்சியைப் பற்றியே கூறின. அனைவரின் சிந்தனைகளும் நிவேதாவைப் பற்றியதாகவே இருந்தன. ஒட்டுமொத்த உலகமும் சாதி மத இன பேதமின்றி நிவேதாவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தது. மனிதகுலம் முழுவதற்கும் இது ஒரு முக்கியமான சவாலாக இருக்கும்போது ஒன்றுகூடியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. கடந்த மூன்று மாதங்களில் கூகுள் தேடலில் முதல் இடத்தைப் பிடித்தது நிவேதாவின் பெயரே! புலனம், முகநூல், முத்…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் சூப்பர் ரெசிப்பி! மனைவி பிறந்த வீட்டுக்குப் போயிருந்தாள். அவள் இல்லாமல் சோத்துக்குத் திண்டாடுவேன் என்பது அவள் எண்ணம். எனக் கென்ன, சமைக்கத் த…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... தமயந்தி, ஓவியங்கள்: ம.செ., ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, 'என் இனிய பொன் நிலாவே...’ பாட்டை வாசிச்சிருக்கணும். ஆனா, இவை ஏதும் இல்லாமத் திண்ணையில உக்காந்து, கடலையை நங்குநங்குனு அடிச்சு உடைக்கிற மாதிரி சொன்னா... 'நான் நாதனைக் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்!' பச்சக் கடலை வாசம் எப்பவும் அலாதியானது. லேசா மண்வாசனையும் எப்பவோ பெய்த மழையோட வாசனையும் நிறைஞ்சுகிடக்கும் அதுல. அதெல்லாம் சும்மா தின்னக் கூடாது. வெல்லக்கட்டியைக் கடிச்சுக் கடிச்சுத் தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நல்ல செய்தி... ஆருயிர் நண்பன் குமார் இறந்த பத்தாம் நாள்... இரவில் தன் பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான் தினகர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரப்பனிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்...! - ஒரு கலகல கடத்தல் அத்தியாயம் ஒரு முறை வீரப்பன் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, மூன்று கோடி ரூபாய் அரசாங்கத்திடம் கேட்கிறார். பல நாள் காத்திருந்த அரசாங்கமும், அவனுக்கு பணம் கொடுக்க ஒரு கட்டத்தில் சம்மதித்துவிடுகிறது. பணம் கொடுக்க வருபவரின் அடையாளம் வெள்ளை சட்டையும், ஒரு இருச்சக்கர மோட்டார் வாகனமும்தான். அந்த காட்டிற்கு மத்தியில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் பாதையில், வீரப்பனும் அவனது கூட்டாளிகளும், பணத்தை பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். அப்போது, அந்த சாலையில் ஒருவர் மிதிவண்டியில் தண்ணீர் பானைகளைக் கட்டிக் கொண்டு செல்கிறார். அவரை ஊன்றி கவனித்த வீரப்பனுக்கு சந்தேகம் வரு…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை. அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக…
-
- 0 replies
- 828 views
-
-
மான்டேஜ் மனசு 9 - காதலுக்கு மரியாதை செய்தவர்கள்! ''எல்லோரோட காதலையும் எழுதுற உனக்கு என் காதல் ஞாபகத்துக்கு வரலையாண்ணே!'' உரிமையுடன் கேட்டான் ஜான். ''அப்படி எல்லாம் இல்லை ஜான்.'' ''என் காதல் எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சும் எழுதாம இருக்கீங்க. உன்னதமான காதலுக்கு நீங்க தர்ற மரியாதை இதுதானா? இது நியாயமா? ஒன்பது கிரகத்திலும் உச்சம் பெற்ற ஒருவன் காதலை நீங்கள் கண்டுகொள்ளாமல் போனால், ஆதாம் உங்க கண்ணைக் குத்திடுவார். பார்க்குறீங்களா? பார்க்குறீங்களா?'' என்று சொல்லிச் சிரித்தான். ''இந்த முறை உன் கதை தான்டா'' என்றேன். ''அப்படி வாங்க வழிக்கு'' என்று குதூகலமாய் பேசினான். ஜான் - ஜெனி காதல் நி…
-
- 0 replies
- 1.6k views
-
-
*****************மானசீகன்**************** நான் முதன்முதலாக சர்ச்சுக்குப் போனது ஒரு காதல் விவகாரமாகத்தான்.என்னுடைய நண்பன் மணிகண்டன் ஒரு கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தான். அவள் பெயர் கேத்தரின். பேரழகி, தேவதை என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை குறைப்பிரசவ வார்த்தைகள். அவள் முகபாவனைகளும், உடலசைவும், உடைகளின் சரசரப்பும் யாரும் அறியாத ஒரு மலரின் வாசனையை இந்த மண்ணில் பரப்பிக் கொண்டிருந்தன.. எல்லாவற்றையும் விட அவள் அழகாகப் பாடுவாள். மைக் முன்பாக அவளைப் பார்க்கையில் , ஒரு நீர்வீழ்ச்சி காலத்தின் கட்டளையால் உறைந்து நிற்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் எஸ். ஜானகியின் பாடல்கள்.அவள் குரலில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடும். எதிர்பாராத தருணங்களில் அதுவே ஒரு சிறுத்தையாக உரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மைக்ரோ கதை தினம் தினம் அம்மா - மனைவியிடையே நடக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, அலுவலக வேலையாக வெளிமாநிலம் வந்தான் சேகர். மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வந்த மனைவிக்கும், தன் வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் கைபேசியில் பேச மனமில்லாமல், தனித்தனியே கடிதங்கள் எழுதினான். "என் அம்மாவின் மோசமான குணம்தான் உனக்குத் தெரியுமே... இன்னும் கொஞ்சம் காலம்தான் அவர்கள் வாழ்வு. அதுவரை பொறுமையாக இரு' என மனைவிக்கும், "என்ன செய்ய? இவளைக் கட்டித் தொலைச்சாச்சு. கொஞ்சநாள் பார்ப்போம். சரி வரவில்லையென்றால் அவள் வீட்டிற்கே விரட்டிவிடுவோம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க'' என்று அம்மாவுக்கும் எழுதிய கடித…
-
- 0 replies
- 818 views
-
-
குருபீடம் - சிறுகதை ஜா.தீபா - ஓவியங்கள்: ரமணன் பேருந்து கிளம்பிவிட்டது. சென்னை எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. சிவகாமியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். சிவகாமிக்கு நீளமான கொட்டாவி வந்தது. தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது சிவகாமிக்குக் கொஞ…
-
- 0 replies
- 7.1k views
-
-
முதுமைப்பசி! காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். தன் குடும்பத்திற்காக உழைத்து, பிள்ளைகளுக்காக வளைந்து, தேவையற்ற பொருளாக தனிமைப்படுத்தப்பட்ட அலமேலுவுக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், தேன் சிட்டுகளை பார்த்து ரசிப்பது மட்டுமே ஆனந்தம். அலமேலுவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்” என்றான். தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் “நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்” என்றான். மேலும் சிறிது தூரம் சென்ற அவர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித யந்திரம்-புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 ) 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கர…
-
- 0 replies
- 996 views
-
-
வழி (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) e-book வடிவில் http://www.padippakam.com/document/ltte/Book/book00042.pdf
-
- 0 replies
- 684 views
-
-
*******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை …
-
- 0 replies
- 981 views
-