விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
... சர்வதேச தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹிமா தாஸ்.. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்
-
- 1 reply
- 654 views
-
-
சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளையாடியதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்கத்தொகையாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியது. இரு தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு முன்னணி அணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றன. பாதுகாப்பு அச…
-
- 1 reply
- 265 views
-
-
லாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இ20 போட்டியை பாகிஸ்தானின் லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒக்டோபர் 29ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்பச் சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது. திங்களன்று இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்த தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத…
-
- 1 reply
- 589 views
-
-
பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…
-
- 1 reply
- 338 views
-
-
உலகின் முதல்நிலை வீரராக வில்லியம்ஸன் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில், துடுப்பாட்டத் தரப்படுத்தலின் முதலிடத்தை, நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த நியூசிலாந்துத் தலைவர் பிரென்டன் மக்கலம், 'அரசர்" என வில்லிம்ஸனை வர்ணித்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வது போல, சிறிதுநேரத்தில் வெளியான தரப்படுத்தலில், உலகின் முதல்நிலை வீரராக வில்லிம்ஸன் அறிவிக்கப்பட்டார். முதலிடத்தில் ஜோ றூட், இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். புதிய தரப்படுத்தலின்படி, கேன் வில்லியம்ஸன், ஜோ றூட், …
-
- 1 reply
- 568 views
-
-
உலக கோப்பை கால்பந்து: டென்மார்க் அணி தகுதி உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி, அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. டுப்ளின் நகரில் நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க் 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக தகுதி பெற்றது. இன்னும் 2 அணிகள் மட் டுமே தகுதி பெற வேண்டும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- ஹோண்டுராஸ், பெரு- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. …
-
- 1 reply
- 501 views
-
-
இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராகிறார் மஹேல இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் போல் பப்ரி காஸ் ஏற்கனவே மஹேலவுடன் பேசியதாகவும், ஆனால் இங்கிலாந்து அணியின் இயக்குனர் அன்ரூ ஸ்ராஸ் இன்னும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் இணங்க வில்லையென் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸும், இலங்கையணிக்கு பயிற்சியாளராகவிருந்த சமயம் மஹே லவுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வருடங்களாக சர்வதேச க…
-
- 1 reply
- 247 views
-
-
டில்ஷானை ஓய்வு பெறுமாறு குடிபோதையில் திட்டிய பார்வையாளர் திலகரத்ன டில்ஷானை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுமாறு குடிபோதையில் இருந்த பார்வையாளர் ஒருவர் திட்டியுள்ளார். இச் சம்பவம் நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது இடம்பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய டில்ஷான் மற்றும் அணியினரை நோக்கி பார்வையாளர் கலரியில் இருந்த குறித்த நபர் டில்ஷானை நோக்கி “ டில்ஷான் நீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த டில்ஷான் ஏன் நீர் வந்து கிரிக்கெட் விளையாடவா ? என்று கேட்டுள்ளார். …
-
- 1 reply
- 572 views
-
-
வொஷிங்டன் சுந்தரா? பெயருக்கு பின்னால் உருக்கமான காரணம் : நன்றி மறவாத தந்தை உண்மையை வெளிப்படுத்தினார் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான தகுதிகான் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இவ்வருட ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்ந்த மும்பை அணி, புனே அணியை இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புனே அணியின் வீரர்களான மஹேந்திரசிங் டோனி மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பையின் வெற்றிக் கனவை தகர்த்து, புனே அணியை இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைக்க உதவினர். டோனியின் துடுப்பாட்டமும் வொஷிங்டன் சுந்தரின் அதிரடி பந்து வீச்சுமே புனே அணியின் வெற்றிக்கு மு…
-
- 1 reply
- 682 views
-
-
டெஸ்டிலிருந்து டுவைன் பிராவோ ஓய்வு ஜனவரி 31, 2015. புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரென ஒய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ, 31. ‘ஆல்–ரவுண்டரான’ இவர் 40 டெஸ்ட் (2200 ரன்கள்) , 164 ஒரு நாள் (2968), 53 ‘டுவென்டி–20’ (936) போட்டிகளில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட புதிய சம்பள ஒப்பந்தத்தை வீரர்கள் ஏற்க மறுத்தனர். இதனால், கடந்த ஆண்டு இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை பாதியில் ரத்து செய்து திரும்பியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த டுவைன் பிராவோ, போலார்டுக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட்…
-
- 1 reply
- 435 views
-
-
அலன் போடர் பதக்கத்தை வென்றார் டேவிட் வோணர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார். சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/164832/%E0%AE%85%E0%AE%B2…
-
- 1 reply
- 463 views
-
-
டெல்லி: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருந்த மோனிகா தேவி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இதனால் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் இந்தியா இடம் பெறுமா என்பது தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டி வரும் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது. பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற ஒரே பெண் வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பீலே மூன்றாவது திருமணம் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தற்போது 75 வயதாகிறது. ஏற்கெனவே பீலே செய்த இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உண்டு. இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை. இந்த நிலையில் 42 வயது மார்சியா சிப்லே அயோகி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கடந்த 1980ம் ஆண்டு பீலேவும் மார்சியாவும் நியூயார்க்கில் சந்தித்துள்ளனர். அந்த பழக்கம் நட்பாக மாறி தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதலே இருவரும் சாபோலோ நகரில் தனியாக சந்திக்கத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமையன்று…
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழ் அருணோதயா கல்லூரி நட்சத்திரங்ககளுடன் ஒரு நிமிடம் கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்கள், தமது வெற்றியின் பின் ஒரு சில நிமிடங்கள் எம்மோடு இணைந்த வேளை
-
- 1 reply
- 745 views
-
-
இலங்கை வந்தடைந்தது தெ.ஆபிரிக்க அணி 0 Submitted by Priyatharshan on Mon, 06/30/2014 - 16:11 இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக ஒருநாள் போட்டிக்கு ஏ.பி. டிவில்லியர்ஸ{ம் டெஸ்ட் போட்டிக்கு ஹசிம் அம்லாவும் தலைமை தாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 9 ஆம் திகதி பகலிரவு போட்டியாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்த…
-
- 1 reply
- 459 views
-
-
பதவி விலகுவதாக ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் அறிவிப்பு: தவறிழைத்தவர்களை மன்னிக்க வேண்டுகோள் செய்தியாளர்கள் சந்திப்பில் டேரன் லீ மேன் உணர்ச்சிவயப்பட்டார். - படம். | ராய்ட்டர்ஸ். பால் டேம்பரிங் சர்ச்சையில் தப்பிய டேரன் லீ மேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியுடன் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோரை ஆஸ்திரேலிய மக்கள் பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டேரன் லீ மேன், “இந்த அறையில் அமர்ந்தவர்களுக்குத் தெரியும் மனதிற்கினியவர்களைப் பிரிந்து பாதிநாள் அணியுடன் பயணம் எவ்வளவு கடினம் என்பது தெரி…
-
- 1 reply
- 294 views
-
-
நியூசி., அசத்தல் வெற்றி: வீழ்ந்தது பாக்., ஜனவரி 31, 2015. வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ராஸ் டெய்லர், எலைட் அரை சதம் விளாச நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பங்கேற்று வருகிறது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அப்ரிதி அரை சதம்: பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), யூனிஸ் கான் (9) ஏமாற்றினர். ஷெகாதத் 15 ரன்களில் திரும்பினார். கேப்டன் மிஸ்பா அரை (58) சதம் கடந்தார். கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் சோகைல் (23), சர்பராஸ் அகமத் (5) வெளியேறினார். அதிரடியாக விளையா…
-
- 1 reply
- 411 views
-
-
நியூஸிலாந்திடம் அடி பணிந்து மூன்று தொடரையும் இழந்தது இலங்கை இலங்கை அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. எடன் பார்க்கில் இன்று ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நியூஸிலாந்து அணியை பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை குவித்தது. 180 என்ற வெற்றியிலக்கை நோக்கடி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 35 ஓட்டத்தினால…
-
- 1 reply
- 904 views
-
-
பந்தை நேரா தலைக்கு வீசினா போய் சேந்துருவேன்லா... இஷாந்த் சர்மா செய்கையால் பரபரப்பு! இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை இலங்கை பந்துவீச்சாளர் தம்மிகா பிரசாத் விரட்டி சென்றதால் கொழும்பு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தொடர்ந்து இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஹெராத்துடன் வாய் தகராறில் ஈடுபட்ட இஷாந்த், நேற்றும் இலங்கை வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். நேற்றைய ஆட்டத்தில் தம்மிகா பிரசாத் 76வது ஓவரை வீசிய போது, தொடர்ச்சியாக 3 பவுன்சர்கள் வீசினார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த இஷாந்த், பந்தை 'எனது ஹெல்மெட்டுக்கு போடு' என்ற…
-
- 1 reply
- 356 views
-
-
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன் June 9, 2019 பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரினை அவு;திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறைய…
-
- 1 reply
- 372 views
-
-
மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை 178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிக…
-
- 1 reply
- 380 views
-
-
பெங்கால் டைகர் கங்குலிக்கு பிறந்தநாள்! ''உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' இதனை கூறியது தத்துவமேதையோ, அறிஞர்களோ அல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான். கால்பந்திலிருந்து கிரிக்கெட்! மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந…
-
- 1 reply
- 343 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை "மகிழ்ச்சி" தராத தமிழர்கள் சென்னை: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழர்களுக்கு இதுவரை எந்த ஒரு பதக்கமும் கிடைக்காமல் போனது ஏமாற்றத்தைத் தருகிறது... ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100க்கும் அதிகமான இந்தியர்கள் முதல் முறையாக தற்போதுதான் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்... இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் நேற்று ஒரே நாளில் …
-
- 1 reply
- 401 views
-
-
விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், ந…
-
- 1 reply
- 404 views
-
-
மைக்கேல் கிளார்க் 66666... அது என்ன? டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 566 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 7 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்துவீச்சில் பல்லான்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக மைக்கேல் கிளார்க் அவுட் ஆனதுதான் சிறப்பம்சம். இந்த போட்டியில் 2வது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. http://…
-
- 1 reply
- 316 views
-