Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வ…

  2. இலங்கை வீரர் ஒருவருக்கு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா : தயாசிறி அதிர்ச்சி தகவல் இலங்கை கிரிகட் வீரர்களுக்கு ஒரு ஓட்டத்திற்கு மாத்திரம் சுமார் 27 ஆயிரம் ரூபாவை இலங்கை கிரிகட் நிறுவனம் வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்தில் மாத்திரம் இலங்கை கிரிகட் அணியின் வீரர் ஒருவர் 5 கோடிக்கும் அதிகமான பணத்தை கிரிகட் நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளார். இதன்படி குறித்த வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அணியின் தலைவருக்கு ஒரு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. எனினும் அணி தோல்வியடைந்தாலும் குறித்தப் பணம் வீரர்களுக்கே சென்றடைக…

  3. உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருக்கும் டோனியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டோனி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று வி்ட்டார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த ஓய்வு நேரத்தில் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடுவதில்லை. இதனால் ஓய்வை கழித…

  4. இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இலங்கை மேசை பந்து சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். யாழில் மேசைப்பந்தாட்டம் அறிமுகம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  5. இந்தியக் கிரிக்கெட் அணியின் அஸ்வின் புதிய சாதனை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/116992093_gettyimages-1228368442-3-720x450.jpg இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார். அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந…

  6. பாக். சுப்பர் லீக் : முதல் வெற்றியை பதிவுசெய்தது கராச்சி (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய போட்டியில் சங்கக்காரவின் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட கராச்சி அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டி மழைக்காரணமாக 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி 8 விக்கட்டுளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 9.4 ஓவர்களில் 75 ஓட்டங்களை…

  7. விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்ன? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ரன் மிஷின் என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 என எல்லா ஃபார்மெட்டிலும் கேப்டனாக இருந்த மனிதர், தற்போது இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு மட்டுமே தலைவராகத் தொடர்கிறார். அவர் கீழ் விளையாடிய ரோஹித் ஷர்மா தற்போது இந்திய கிரிக…

  8. ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ் சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார். ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். …

  9. இளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Photo Credit: ICC அயர்லாந்து- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் சுழல் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஃப்கா…

  10. சம்பியனானது சென்றலைட்ஸ் கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் கிரிக்கெட் தொடரின் வெள்ளி விழாக் கிண்ணத்தை, ஜொனியன்ஸ் அணியை வீழ்த்தி யாழ். சென்றலைட்ஸ் அணி கைப்பற்றியதுடன், இத்தொடரை அதிக தடவைகளாக ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக தம்மை மாற்றிக் கொண்டது. யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடர், இம்முறை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இவ்வாண்டு தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி, சென்றலைட்ஸ…

  11. ஹியூக்ஸின் மறைவு எமது அணிகளை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: மெத்யூஸ், குக் கூட்டாக தெரிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹியூஸின் மறைவு தங்ளது அணிகளைப் பெருந்துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டெயார் குக்கும் தெரிவித்தனர். இலங்கை ­ இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தொடர்பான ஆயத்தங்கள் குறித்து செய்தியாளர்ளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றபோது இரண்டு அணிகளிதும் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர். ஏஞ்சலோ மெத்யூஸ் 'பிலிப் ஹியூஸின் மறைவு குறித்த செய்தியை நேற்று காலை அறிந்தபோது பயிற்சியில் ஈட…

  12. சச்சினை முந்தியாச்சு டிசம்பர் 23, 2014. புதுடில்லி: சமூகவலைதளமான ‘டுவிட்டரில்’ அதிக ரசிகர்கள் பின்பற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை இளம் நட்சத்திரம் கோஹ்லி முந்தினார். ‘டுவிட்டரில்’ சச்சினை 48 லட்சத்து 69 ஆயிரத்து 849 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். கோஹ்லியை 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்தப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் தோனி (33,27,033 லட்சம்), சேவக் (31,80,081 லட்சம்) முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 5 மற்றும் 6வது இடம் முறையே யுவராஜ் (27,23,090 லட்சம்), ரெய்னா (26,17,828 லட்சம்) வகிக்கின்றனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 7வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களா…

  13. ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…

  14. 1975 முதல் உலகக் கோப்பை: கவாஸ்கரின் காலடியில் கொட்டப்பட்ட உணவு முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் ஒரு விதத்தில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். கிரிக்கெட்டை மக்களிடையே பரவச் செய்வதில் ஒரு நாள் ஆட்டங்கள் பெரும் பங்கு வகித்தன என்றால் அந்த ஒரு நாள் ஆட்டங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது 1975-ல் நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர்தான். இந்தத் தொடருக்கு முன்பாக 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளே நடைபெற்றிருந்தன. ஒரு நாள் கிரிக்கெட் என்ற அம்சமே புதுமையாகப் பார்க்கப்பட்டது. ஆட்டம் என்னமோ அதே பாணியில்தான் நடந்தது. கிட்டத்தட்ட டெஸ்ட் அணியே ஒரு நாள் போட்டியிலும் ஆடியது. டெஸ்ட் பாணியிலேயே இதுவும் ஆடப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 60…

  15. இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …

  16. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் காபூல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே அடியாக மூழ்கிப் போய் ஆர்வ மிகுதியால் ஜெயிப்பதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி, வங்க தேசத்தை வீழ்த்தியதாக டுவிட் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம். ஆப்கானிஸ்தான் - வங்க தேசத்திற்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியானது கான்பெராவில் இன்று நடைபெற்று வருகின்றது. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் போர்களுக்கு பெயர் போன நாட்டின் கிரிக்கெட் களமும் பல கோடி பேரினை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வளைதளங்களில் கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலையில், நடைபெற்று வருகின்ற…

  17. சாதனைகளின் புதிய பெயர் சங்கா ​ நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம். கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்தவாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும் சாதனைகளும் அமைந்திருக்கின்றன. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு …

  18. இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…

  19. 'எனது கட்டுப்பாட்டில் இருக்காத விடயங்களுக்காக பழியை ஏற்று களைப்படைந்துள்ளேன்': பிளாட்டர் ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்…

    • 0 replies
    • 275 views
  20. ஐபிஎல் சூதாட்டம்: 14-ல் தண்டனை அறிவிப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை அறிவிக்கிறது. குருநாத், குந்த்ராவுக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தண்டனை விவரமும் 14-ம் தேதி வெளியாகிறது. இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ர…

  21. முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ணத் தொடர் எதிர்­வரும் 7ஆம் திகதி ஆரம்­பிக்­கி­றது. 2012ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆ­வது முறை­யாக நடை­பெறும் முரளி ஹார்­மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணி­களும், 8 பெண்கள் அணி­களும் பங்­கு­பற்­று­கின்­றன. இந்தப் போட்­டிகள் அனைத்தும் வடக்குப் பகு­தி­யி­லுள்ள மைதா­னங்­களில் நடை­பெ­றுகின்­றமை விசேட அம்­ச­மாகும். யாழ்ப்­பாணம், ஒட்­டுச்­சுட்டான், மாங்­குளம், கிளி­நொச்சி ஆகிய பிர­தேச மைதா­னங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்­லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூரி, மலி­ய­தேவ கல்­லூரி, மொனரா­கலை ஆகிய அணி­கள…

  22. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை…

  23. சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…

  24. 20வது ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர்! - அறிமுகப் போட்டியில் சாதித்த சைனி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஜான் கேம்பல் விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் எல்வின் லூவிஸ் வெளியேறினார். மறுமுனையில் 2 சிக்ஸர்கள் விளாசி அதிரடியாகத் தொடங்கிய பூரன், நவ்தீப் சைனி பந்துவ…

  25. பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.