விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல்…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்க டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக ஜப்பானிய வீராங்கனை தகுதி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாட ஜப்பானிய வீராங்கனை நயோமி ஒஸாகா தகுதிபெற்றுள்ளார். கடந்தாண்டு இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்த அமெரிக்க வீராங்கனை மடிஸன் கீஸுக்கு எதிராக அமெரிக்க நேரப்படி நேற்றையதினம் பின்னிரவுவேளையிலும் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் நயோமி ஒஸாகா 6ற்கு 2 6ற்கு 4 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். 20வயதுடைய ஒஸாகா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தனது விருப்பத்திற்குரிய வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்ளவுள்ளார். முன்னதாக செரீனா அரையிறுதி…
-
- 0 replies
- 540 views
-
-
முதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார். எனினும் ஆறாவது விக்கெட்டிற்காக இணைந்த பகர் ஜமானும் பாக்கிஸ்தான் அணியின் தல…
-
- 0 replies
- 348 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்க பேட்டிங்கே என்னை நல்ல பவுலராக்கியது: டேமியன் பிளெமிங் ஷார்ஜா போட்டியில் பின்னால் சென்று வெளுக்கும் சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். ஆஸி. வேகப்பந்து வீச்சாளரை சிக்சருக்கு அடித்த சச்சின். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங், நேர்காணல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது என்றால் என்ன என்பதன் அனுபவத்தை விளக்கிப் பேசியுள்ளார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது பற்றி கூறும்போது, “நான் ஒரு ஸ்விங் பவுலராகவே 1996-ம் ஆண்டு போராடினேன். 1998-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம், அப்போது எங்களிடையே சச்சின்டெண்டுல்கர் …
-
- 0 replies
- 331 views
-
-
பதவி விலகுகிறார் ரொஷான் மஹாநாம சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பேனல் நடுவர் குழுவில் இருந்து ரொஷான் மஹாநாம இந்த வருட இறுதியுடன் விலகவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த வேளை, அந்த அணியில் இடம்பெற்ற முக்கிய வீரர்களில் மஹாநாமவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பேனல் நடுவர் குழுவில் சுமார் 12 ஆண்டுகாலம் சேவையாற்றிருந்த இவர் இந்த வருட இறுதியில் அப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=72606 ரொஷான் மகாநாமா விலகல் தனது குடும்பத்துடனும், தனது வர்த்தக நடவடிக்கைகளுடனும் இலங்கையில் மேலதிக நே…
-
- 0 replies
- 319 views
-
-
ஸ்ரான்லியிடம் வீழ்ந்தது மகாஜன September 26, 2015 யாழ். மாவட்டப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திவரும் 19வயதுக்கு உட்பட்ட அணியின ருக்கான ரி -20 தொடரின் ஆட்டங்களில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி 6 இலக்குகளால் மகாஜனாவை வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி 16 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 114 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பிரணவன் 19 ஓட்டங்களையும், தயூஸ்ரன் 17 ஓட்டங்களையும், ஜசிந்தன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரான்லிக் கல்லூரி அணியின் சார்பில் விதுசன், சுஜிகரன் தலா 3 இலக்குகளையும் விஸ்ணுவானன், பிரசாந் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த…
-
- 0 replies
- 240 views
-
-
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் உலகக்கோப்பை அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பரபரப்பான இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில் ஐசிசி அணியில் இந்தியாவை சேர்ந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: ஜேசன் ராய் ( இங்கிலாந்து) -443 ரன்கள் ரோகித் சர்மா ( இந்தியா) - 648 ரன்கள் கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து) - 578 ரன்கள் ஷாகிப் அல் ஹசன் (வங்க தேசம்) - 606 ரன்கள் மற்றும் 11 …
-
- 0 replies
- 867 views
-
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுத் தொடர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி மோதியது. முதற்பாதி ஆட்ட முடிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கல்லூரி 2: 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் இரண்டு அணியினரும் தலா ஒர் கோலைப் பதிவு செய்தனர். மூன்றாம் இடத்திற்…
-
- 0 replies
- 409 views
-
-
தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 தொடரை தனதாக்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரக்காவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது, இரண்டாவது இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 189 ஓட்டங்களினலும், மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினாலும், நான்காவது போட்டியில் 191 ஓட்டங்களினாலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 342 views
-
-
அடங்காத மலிங்கா! மருத்துவர் காரசார குற்றச்சாட்டு! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்கா தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் எ…
-
- 0 replies
- 390 views
-
-
சொந்த மண்ணில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி [31 - December - 2008] * தென்னாபிரிக்கா அபாரவெற்றி மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாபிரிக்க அணி. 16 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது. தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அக்ரமைக் கடந்த டேல் ஸ்டெய்ன் சாதனையுடன் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா ராஸ் டெய்லரை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன். | படம்: ராய்ட்டர்ஸ். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 2-வது இன்னிங்சில் 195 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு சற்றே கடினமாக இருந்த நிலையில் கன மழை, மைதான நிலைமை காரணமாக கைவிடப்பட்டது. ரிச்சர்ட் ஹேட்லியை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு அபாரமான ஸ்விங் பவுலிங்கை டேல் ஸ்டெய்ன் நேற்று வெளிப்படுத்…
-
- 0 replies
- 480 views
-
-
இங்கிலாந்தில் விளையாடவுள்ள திசர பெரேரா!! இங்கிலாந்தின் க்லோஸ்ட்ரஸயர் பிராந்திய அணியில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் வீரர் திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 20-20 பிராந்திய ஆட்டங்களில் விளையாடவே திசர அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிக்குகே பிரசன்ன பங்களாதேஸ் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஸின் குல்னா டைடன் அணிக்காகவே இவர் விளையாடவுள்ளார். http://uthayandaily.com/story/8893.html
-
- 0 replies
- 254 views
-
-
அறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி. யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்குக் கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்பியனாகும் பெருமை, 1986ம் ஆண்டில் பார்த்திபன் தலைமை தாங்கிய பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்குக் கிட்டியது. இன்று பரி. யோவானின் Principal ஆகத் திகழும் துஷிதரன் அவர்களும், அண்மையில் காலமான நேசகுமார் அண்ணாவும் கூட அந்த உதைபந்தாட்ட அணியில் ஆடியிருந்தார்கள். 1986ல் பரி யோவானின் 1st XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் வேறு யாருமல்ல, 1979 இல் பரி. யோவானின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர் தான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான SOLT (Students Organisation of Liberation Tigers), ய…
-
- 0 replies
- 395 views
-
-
2017இல் உலகின் அதிசிறந்த மெய்வல்லுனர்களாக முடாஸ், தியாம் முடிசூடல் இவ்வாண்டுக்கான சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை கட்டார் நாட்டைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரரான முடாஸ் ஈசா பர்ஸிம் பெற்றுக்கொண்டார். இதன்படி உலக மெய்வல்லுனர் வரலாற்றில் முதற்தடவையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரரொருவர் இவ்விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் (IAAF) மெய்வல்லுனர் விருதுகள் வழங்கும் விழா மொனோக்கோவில் நேற்று (24) மிக விமர்சையாக நடைபெற்றது. இதன்படி, வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரர் மற்றும் வீராங்கனைக்கான மூவரடங்கிய பெயர்ப்பட்டியல் இம்மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதில் அதி சிறந்…
-
- 0 replies
- 308 views
-
-
பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ட்விட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமது தேச அணி தோல்வியுற்றதால் பிரேசில் ரசிகர்கள் சோகத்திலும், தமது தேச அணியின் அபார வேற்றியால் ஜெர்மனி நாட்டினர் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வேளையில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங் என்பவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஜெர்மனியின் வெற்றியை பாராட்டும் விதமாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் நன்று... சபாஷ்! ஹிட்லர் நீடூழி வாழ்க!" என்று கூறியிருந்தார். மலேசிய எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இர…
-
- 0 replies
- 514 views
-
-
பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும் பார்க்க பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது அணிக்கு பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் தீர்மானித்தால், எந்தவொரு தயக்கமும் இன்றி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிற…
-
- 0 replies
- 425 views
-
-
நன்றாக ஆடிய போதும் என்னை அணியிலிருந்து நீக்கியது காயப்படுத்துகிறது: சுரேஷ் ரெய்னா வருத்தம் சுரேஷ் ரெய்னா. - படம். | ஏ.எப்.பி. இந்திய அணிக்காக கடைசியாக கடந்த பிப்ரவரியில் ரெய்னா ஆடியதோடு சரி, அதன் பிறகு சர்வதேசப் போட்டிகளில் ரெய்னா இடம்பெறுவதில்லை. விராட் கோலியின் நீக்கு, தூக்கு கொள்கையின் படி இவரும் தூக்கப்பட்டார். இந்நிலையில் தான் நன்றாக ஆடிய போதும் அணியிலிருந்து தூக்குவது தனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்துவதாக சுரேஷ் ரெய்னா வருத்தமடைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரெய்னா மீண்டும் நீல உடையில் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி…
-
- 0 replies
- 569 views
-
-
இங்கிலாந்துக்கு எதிராக எங்கு போய் ஒளிந்து கொள்வது? - பிரமிப்பிலும் ஏமாற்றத்திலும் ஏரோன் பிஞ்ச் சதமெடுத்த ஏரோன் பிஞ்ச். முதலில் பேட் செய்ய இங்கிலாந்தை அழைத்தால் ஸ்கோர் 500 பக்கம் செல்கிறது, சரி நாம் முதலில் பேட் செய்வோம் என்று முடிவெடுத்து 310 ரன்களை அடித்தாலும் இங்கிலாந்து 45 ஓவர்களில் அந்த இலக்கை ‘ஃப்பூ’ என்று ஊதித்தள்ளுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு என்னதான் வழியிருக்கிறது என்கிறார் அதன் தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச். 4-0 என்று ஆஸ்திரேலியா இன்னொரு ஒயிட்வாஷுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டினார் பிஞ்ச். …
-
- 0 replies
- 389 views
-
-
ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…
-
- 0 replies
- 373 views
-
-
‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா?’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் கூட, கிரிக்கெட் போட்டிகளில் சிறுவயதில் ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் இருவரும் தேர்வு செய்யப்பட்டபின் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். உலக அணிகள…
-
- 0 replies
- 365 views
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா! கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசி…
-
- 0 replies
- 505 views
-
-
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கான குழாம்கள் அறிவிப்பு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் 16 இணை உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் ஜூலை 9 முதல் 26வரை நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள 16 நாடுகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ளன. இந்த தகுதிகாண் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு இணை உறுப்பு நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் வகிக்கும் பத்து நாடுகளுடன் இணைந்து உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். தகு…
-
- 0 replies
- 228 views
-
-
இன்றைய மோதல்கள் September 26, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி- 20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச்சங்கம் 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையே நடத்திவரும் துடுப்பாட்டத்தொடரின் லீக் ஆட்டங்கள் யாழ்.மத்திய கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத்தொடரில் மத்தியின் மைதானத்தில் இன்று இடம் பெறும் ஆட்டங்களில் காலை 9 மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்குக்கு ஸ்ரான்லிக் கல்லூரி அணியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி மோதவுள்ளது. சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்.மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு வட்டுக்க…
-
- 0 replies
- 251 views
-
-
சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட ஆலோசகரானார் மார்வன் சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்கயா நிற்னி சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1981
-
- 0 replies
- 547 views
-