விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பேசுபொருளாக மாறியிருக்கும் குசல் பெரேராவின் நீக்கம் By Mohamed Azarudeen - Photo - Getty Images இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நேற்று (14) அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த குழாத்திற்குள் குசல் ஜனித் பெரேரா உள்ளடக்கப்படாமல் போனது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது. கடந்த ஆண்டு (2019) இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்காக தடுமாறிக…
-
- 0 replies
- 504 views
-
-
10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் சிட்னி டெஸ்டில் 13 ரன்னில் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான். 39 வயதான இவர் சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 9964 ஆக உயர்ந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன் எடுத்ததில் யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவர் 13 ரன்னில் ஆட்டம் இழந்ததால் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். யூனுஸ்கான் 115 டெஸ்டில் விளையாடி 9…
-
- 0 replies
- 504 views
-
-
கோலியின் அதி துணிச்சல் ஆட்டம்: ஓர் அலசல் கோலி, கிறிஸ் வோக்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்த அந்த அரிதான, கடினமான ஷாட். இங்கிலாந்துக்கு எதிராக புனே ஒருநாள் போட்டியில் 64/4 என்ற நிலையிலிருந்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கோலி மற்றும் கேதர் ஜாதவ்வின் சதங்களில் கோலியின் ஆட்டம் வேறு ஒரு துணிச்சல் பரிமாணத்தை எட்டியுள்ளது. கேதர் ஜாதவ்வின் வேகமான அதிரடி சதமும் கோலியின் துணிச்சலுக்கு இணையாக அமைந்தது. ஆரம்ப கால சச்சின், பிறகு சேவாக், லாரா, கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, இன்றும் தொடரும் கிறிஸ் கெய்ல், கெவின் பீட்டர்சன் ஆகியோரது அதி துணிச்சல் ரக அலாதியான ஷாட்களை கோலி தனது 122 ரன்களில் ஆடியது குறிப்பிடத்தக்கது. மேற்கூற…
-
- 0 replies
- 504 views
-
-
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர். ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 504 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். பின்னர் மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மூன்று மணிநேரம் நடைபெற்றது. விசாராணைக்கு பின் குருநாத்தை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸ் அறிவித்துள்ளது. கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் …
-
- 3 replies
- 504 views
-
-
19வயதின் கீழ் மும்முனை ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்தை 52 ஓட்டங்களால் வென்றது இலங்கை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகள் பங்குபற்றும் மும்முனை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது முதலாவது வெற்றியை நேற்றுமுன்தினம் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக கெத்தாரம, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சிறந்த பந்துவீச்சின் உதவியுடன் 52 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இப் போட்டியில் 19 வயதின் கீழ் இங்கிலாந்து அணித் தலைவர் ப்றட் டெய்லர் 4 விக்கெட்களைக் கைப்பற்றியபோதிலும் அவ்வணியின் துடுப்பாட்ட…
-
- 0 replies
- 504 views
-
-
100 பந்துகள் கிரிக்கெட்: தோனி, கோலி, ரோகித் சர்மா பங்கேற்பு இந்திய அணி : கோப்புப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. 16 ஓவர்கள் வீசப்பட்டு, கடைசி ஓவரில் மட்டும் கூடுதலாக 4 பந்துகள் வீசப்படுவதே 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியாகும். பொதுவாக இந்திய கிரிக்கெட் வீ…
-
- 0 replies
- 504 views
-
-
SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து இலங்கை மெய்வல்லுனர்களுக்கும் விசேட உடற்தகுதி பரிசோதனையொன்றை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அத்துடன், வீரர்களினது போட்டித் திறனை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விசேட போட்டித் தொடரொன்றையும், அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான சுவட்டை தீர்மானிப்பதற்கான போட்டியொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது. இதன்படி, …
-
- 0 replies
- 503 views
-
-
மைக்கேல் கிளார்க்கிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்கக் கூடாது: இயன் சாப்பல் முதுகுவலியினால் கடுமையாக அவதிப்படும் மைக்கேல் கிளார்க் குணமடைந்து வந்தால் கூட அவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பை அளிக்கக் கூடாது என்கிறார் இயன் சாப்பல். கிளார்க் மீண்டும் வந்தால் அவரை பேட்ஸ்மெனாக மட்டுமே வைத்துக் கொள்வது நலம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் இயன் சாப்பல். சானல் 9-இல் அவர் இது குறித்து கூறியதாவது: “சிறிது காலத்திற்கு ஸ்மித் கேப்டனாக நீடிப்பதை அனுமதிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் சிறப்பாக செயல்பட்டால் மைக்கேல் கிளார்க் திரும்பி வரும்போது அவரிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மித்தை முழு நேர கேப்டனாகத் தொடர அனுமதிக்க வேண்டும். மைக்கேல் கிளார்க் ம…
-
- 0 replies
- 503 views
-
-
பிரேசில் உதைபந்தாட்ட அணிக்கெதிரான சிநேகபூர்வமான போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று ரீதியிலான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நட்பூ ரீதியிலான போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி தலா ஒரு கோலை போட்டு சமநிலை வகித்தன. இதையடுத்து இரண்டாம் பாதியில் விறுவிறுப்புடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு 60 ஆவது நிமிடத்தில் பிராங் லெம்பேர்ட் வெற்றிக் கோலைப் போட்டார். இந்நிலையில் 23 ஆண்டுகளின் பின்னர் பிரேசில் அணி இங்கிலாந்து அணிக்கெதிரான வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. http://www.virakesa…
-
- 1 reply
- 503 views
-
-
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. இந்நிலையில, 8 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகியது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.…
-
- 0 replies
- 503 views
-
-
தோள் பட்டை வலிக்காக டேல் ஸ்டெயினுக்கு வித்தியாசமான சிகிச்சை! தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலிக்காக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் தெனாப்பிரிக்க பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தோள்பட்டை வலி காரணமாக அந்த போட்டியில் இருந்து அவர் விலகினார். அடிக்கடி தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால், இந்த முறை டெல் ஸ்டெயினுக்கு ஹைபெர்பெரிக் முறையிலான ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, முழுவதும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ஒரு தனி சேம்பரில் டேல் ஸ்டெயின் அடைக்கப்பட்டார். இந்த ச…
-
- 0 replies
- 503 views
-
-
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது. தற்போது வரை ஒருநாள் தொடரை 4-0 என முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது. ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், நியூசிலாந்து 107 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. 6 முதல் 10 இடங்களில் முறையே தென்னாபிரிக்கா (101 புள்ளி)…
-
- 2 replies
- 503 views
- 1 follower
-
-
கெயில் உலக சாதனை கரிபீயன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்காத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற கடைசி 90 போட்டிகளில் கெயில் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்கவில்லை. மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தான் அணி யின் வீரர் மாலிக் (89தடவை) இங்கிலாந்தின் ஸ்ரீவன் (82தடவை) டோனி(80தடவை) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/08/05/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
-
- 0 replies
- 503 views
-
-
ஐபிஎல் சஸ்பென்ஸ் முடிந்தது.. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் களமிறக்கம் மும்பை: 2 வருடம் சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்றாக புனே மற்றும் ராஜ்கோட் என்ற பெயரில் இரு அணிகள் தேர்வாகியுள்ளன. 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்போது மேட்ச் பிக்சிங் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி முத்கல், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுதி நீதிபதி லோதா குழுவினர் தங்களது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியது. இதில் சென்னை அணியின், குருநாத் மெய்யப்பனும்,…
-
- 0 replies
- 503 views
-
-
(நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். …
-
- 1 reply
- 502 views
- 1 follower
-
-
விராட் கோலியின் ஆக்ரோஷம் அஸ்வினை ஒட்டிக் கொண்டது: எரபள்ளி பிரசன்னா விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் அஸ்வின் தொடர்ந்து விக்கெட்டுக்கள் கைப்பற்ற உதவும் வகையில் அவரையும் ஒட்டிக் கொண்டது என்று முன்னாள் சுழற்பந்து வீசசாளர் எரபள்ளி பிரசன்னா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 19 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. இதற்கு அஸ்வினின் சுழற்பந்து வீச்சு முதுகெலும்பாக உள்ளது. அவர் கடைசி 9 போட்டிகளில் 61 விக்கெட்டுக்கள் கைப்பற்றியு…
-
- 0 replies
- 502 views
-
-
ரங்கண ஹேரத், ஜனித் பெரேராவிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி..! காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காகவே குறித்த சூதாட்ட தரகர்கள் மேற்படி வீரர்களை அணுகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியு…
-
- 1 reply
- 502 views
-
-
குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: அஸ்வின் உலக சாதனை! இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இது, அந்த அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தும் 4-வது விக்கெட்டாகும் இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின். 31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வி…
-
- 3 replies
- 502 views
-
-
வெற்றியின் போதெல்லாம் எதிரணியினரைப் பகடி செய்யும் வ.தேச அணியின் பாம்பு டான்ஸ்: கோப்பை எங்கே? வெற்றிகள் எங்கே? எங்கே நாகின் டான்ஸ்? | படம்: ட்விட்டர். வங்கதேச அணி குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக எழுந்தது, ஆனால் அதன் புகழ் குறுகிய காலத்திற்கானது. காரணம் சமீபமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் உதை வாங்கியது வங்கதேசம். வெற்றி பெற்ற குஷியில் ஆப்கான் விக்கெட் கீப்பர் ஷஜாத் வங்கதேசத்தைப் பகடி செய்யும் பாம்பு டான்ஸ் அல்லது நாகின் முத்திரையைக் காட்டில் நடனம் ஆடி வெறுப்பேற்றினார். 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய பிறகே உள்ளூர் பத்…
-
- 0 replies
- 502 views
-
-
ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடைய…
-
- 0 replies
- 502 views
-
-
கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டியில் காரைதீவு இளைஞர் தெரிவு! NO COMMENTS ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர். ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் திருகோணமலையில் நேற்று முன்தினம்(6) சனிக்கிழமை கிழக்குமாகாண உ…
-
- 1 reply
- 502 views
-
-
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது…
-
- 0 replies
- 502 views
-
-
உலக கோப்பை தகுதிச்சுற்று - ஜிம்பாப்வேயை வீழ்த்தியது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியிடம் ஜிம்பாப்வே அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ICCWCQ #Zimbabwe #Unitedarabemirates உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஜிம்பாப்வே - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செ…
-
- 0 replies
- 502 views
-
-
அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் நறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 103 ஓட்டங்களையும், டிராவிஷ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் நீஸம், பெர்கஷன் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர். http://www.virakesari.lk/article/14137
-
- 4 replies
- 502 views
-