விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரபெல் நாடல் அதிரடியாக வெற்றிபெற்றார். ஸ்பெயின் வீரர் மோயா, அவுஸ்திரேலியாவின் ஹெவிட் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். பெண்கள் பிரிவில் செரீனா, ஷரபோவா அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். இந்தியாவின் சானியா மிர்ஷா தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் - 2 வீரரான ஸ்பெயினின் ரபெல் நாடல், 117 ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் பிளாவியோ சிபோலாவை சந்தித்தார். இதில் அதிரடியாக விளையாடிய நாடல் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-…
-
- 0 replies
- 1.1k views
-
-
நானே ராஜா: கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா என மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, மக்கள், என்னை டி20 கிரிக்கெட்டின் ராஜா என்று புகழ்கிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்சதங்கள் அடித்துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்களும்கூட அடித்துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா. டெஸ்ட் போட்டி என்பது அற்புதமானது. உங்களுடைய மனநிலையைப் பரிசோதிக்கும். டி20 கிரிக்கெட்டால் பல புதிய ரசிகர்கள் இந்த விளையாட்டுக்குக் கிடைத்திருக்கிறார்கள். ஆகவே டி…
-
- 0 replies
- 407 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - செப்டம்பர் மாதத்தில் முடிவு படம்: ஏ.எஃப்.பி. புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு அணிக்கும் முழு நேர பயிற்சியாளர் தேவை. நாங்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்கிறோம், செப்டம்பர் மாதம் பயிற்சியாளர…
-
- 0 replies
- 210 views
-
-
மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர் November 09, 2015 இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன். நேற்றுச சனிக்கிழமை கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான கே. விஜிதரன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார். இவர் சர்வதேச மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் தரம்1, தரம்2 பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார். மற்றும் இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பயின்றுள்ளார். வவுனியா மாவட்ட மெய்வன்மை பயி…
-
- 0 replies
- 244 views
-
-
இந்திய அணிக்கு இனித்தான் உண்மையான சவால் காத்திருக்கிறதென்கிறார் லாரா [14 - March - 2008] அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணிக்கு உண்மையான சவால் இனித்தான் தொடங்குகிறது என்று லாரா கூறியுள்ளார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் பிரைன் லாரா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது; இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்குத் தனித்தனியாக புதிய கப்டன்கள் நியமிக்கப்பட்டனர். இருந்த போதிலும் இந்திய அணி அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், தோல்வி கண்ட அவுஸ்திரேலியா வலுவான அணியாக வீறு கொண்டு எழுந்து இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும். எனவே, இந்தியாவுக்கு …
-
- 0 replies
- 818 views
-
-
இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கூடாது: வாசிம் அக்ரம் வேண்டுகோள் வாசிம் அக்ரம். | கோப்புப் படம். இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க கூடாது என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இரு அணி களுக்கு இடையேயான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபும் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் ஆடுவதற்கு இந்திய க…
-
- 0 replies
- 396 views
-
-
இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அப்ரிடி டி20 சபதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி சபதம் எடுத்துள்ளார். 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 7 நகரங்களில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (குரூப்2) இடம் பெற்றுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் மார்ச் 19-ம் தேதி நடக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் அப்ரிடி அளித்துள்ள…
-
- 0 replies
- 530 views
-
-
அதிரடி நீக்கம்.. எல்லோரும் நல்லபடியா போயிட்டு வாங்க.. 5 வீரர்களை வழியனுப்பி வைத்த சிஎஸ்கே! சென்னை : 2020 ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்து ஐந்து வீரர்களை நீக்கி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் மாற்றம் செய்துள்ளன.சிஎஸ்கே அணியால் நீக்கப்பட்ட அந்த ஐந்து வீரர்களும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் இடம் பெறுவார்கள். முக்கிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே தங்கள் அணியில் நீண்ட காலமாக இருக்கும் வீரர்களை விட்டுக் கொடுத்ததில்லை. அவர்கள் பார்ம் அவுட் ஆனால் கூட அவர்களை ஆதரித்து சிறப்பாக ஆட வைப்பார் கேப்டன் தோனி. நீக…
-
- 0 replies
- 729 views
-
-
தனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 207 ஓட்டங்களை குவித்துள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 13 ஓவருக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும், 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த இவன் லிவ…
-
- 0 replies
- 505 views
-
-
குப்திலை முந்திய டில்ஷான் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 2ஆவது இடத்துக்கு (1676 ஓட்டங்கள்) முன்னேறியுள்ளார். நியூஸிலாந்து வீரர்கள் பிரெண்டன் மெக்கல்லம் (2140 ஓட்டங்கள்) முதலிடத்திலும், மார்டின் குப்தில் (1666 ஓட்டங்கள்) 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்கலத்தை (199 பவுண்டரிகள்) டில்ஷான் சமன் செய் துள்ளார். இந்த ஆண்டில் விளையாடியுள்ள 7 இருபதுக்கு 20 இன்னிங்ஸ்களில் டில்ஷானின் சராசரி ஓட்டக் குவிப்பு 12.28 ம…
-
- 0 replies
- 620 views
-
-
பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் உயிரிழப்பு கிரிக்கட்டின் குரல் என்று அனைவராலும் போற்றப்பட்ட வர்ணனையாளர் டோனி கோசியர் உடல்நிலை பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு 75 வயது. சமீபகாலமாக கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டோனி கோசியர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எழுத்தாளரர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார். 1965ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியா சென்ற போது தனது வர்ணனையாளர் பணியை தொடங்கிய அவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வர்ணனை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். டோனி கோசி…
-
- 0 replies
- 359 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 2 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். பெண்கள் நீச்சல்: தங்கப்பதக்கத்தை வென்ற 2 வீராங்கனை ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் சிமோன் மானுவே, கனடா வீராங்கனை பென்னி ஜாலகஸ்கே இருவரும் பந்தய தூரத்தை சரியாக 52.70 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். இதனால் இருவருக்கும் முதல் இடம் வழங்கி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 2 பேர் தங்கம் வென்றதால் வெள்ளி பதக்கம் வழங்கப்படவில்லை. வெண்கல பதக்கத்தை சுவீடனை சேர்ந்த சாரா ஜோஸ்ரோம் வென்றார். இதேபோல், எப்போதாவது ஒருமுறை தான் ஒலிம்பிக்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.s…
-
- 0 replies
- 369 views
-
-
மன்செஸ்டர்களின் மோதல்: யுனைட்டெட்டை வென்றது சிற்றி இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில், இவ்வருடத்தின் பாரிய மோதலாக வர்ணிக்கப்பட்ட பெப் குவார்டிலோ, ஜொஸே மொரின்யோ ஆகியோரிடையேயான மோதலில், முதலாவது சுற்றில், குவார்டிலோ வெற்றி பெற்றுள்ளார். மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில், 1-2 என்ற கோல்கணக்கில், மன்செஸ்டர் சிற்றியிடம் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது. சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, கெலெச்சி லெஹாஞ்சோ ஆகியோர் முதற்பாதியில் கோல்களைப் பெற்றிருந்தனர். இந்நிலையில், சிற்றி, 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றி…
-
- 0 replies
- 381 views
-
-
குசல் மெண்டிஸ் என்னைவிடத் திறமையானவர் – குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இளம் வீரரான குசல் மெண்டிஸ் அவரது தற்போதைய வயதில் அடைந்திருக்கும் (சாதனை) அடைவுமட்டத்தினை தான் அப்போதைய தனது வயதில் பெற்றிருக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றார். மேலும், குசல் மெண்டிஸ் தனது இளவயதில் வெளிக்காட்டிய திறமைகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, தற்போதைய மெண்டிசின் வயதில் தான் இருந்த போது தான் வெளிக்காட்டிய ஆட்டத்தினை விட மிகவும் முன்னேற்றகரமான ஆட்டத்தினை அவர் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார். குசல் மெண்டி…
-
- 0 replies
- 396 views
-
-
மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் இடம்பெறமாட்டார். ஜிம்பாப்வே அணி இலங்கையில சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்னை சேஸிங் செய்து ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே…
-
- 0 replies
- 216 views
-
-
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்! மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அதிக ரன்களைக் குவிக்கும் எண்ணத்தோடு முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் ரவுத் முறையே 6 மற்றும் 14 ரன்கள் எடுத்தனர். பின்னர், களத்துக்கு வந்த கேப்டன் மித்தாலி ராஜ், பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மித்தாலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன…
-
- 0 replies
- 511 views
-
-
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரி குமாராசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், இந்த சதுரங்க போட்டியில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். சதுரங்க விளையாட்டு நற்சிந்தனையாற்றலை விருத்தி செய்வதுடன் கற்றலை தூண்டும் ஒரு அடித்தளமாகவும் இது அமையும்.மேலும் இந்த சதுரங்க விளையாட்டில் ரஷ்ய நாட்டவர்கள…
-
- 0 replies
- 433 views
-
-
தொடர்ந்து வசையில் ஈடுபட ஆண்டர்சனுக்கு அறிவுரை இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆண்டர்சன் தொடர்ந்து வசையில் ஈடுபட வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். "4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் ச…
-
- 0 replies
- 657 views
-
-
வெளியேற்றப்பட்டது மன்செஸ்டர் யுனைட்டெட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டது. தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவிடம் தோற்றதைத் தொடர்ந்தே சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது. செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய முதலாவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலைய…
-
- 0 replies
- 379 views
-
-
தெ.ஆ. ரசிகர்கள் மகிழ்ச்சி: மூன்றாவது டெஸ்டில் விளையாட ரபாடாவுக்கு அனுமதி! மூன்றாவது டெஸ்டில் விளையாட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ…
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர் Published By: DIGITAL DESK 5 15 MAR, 2023 | 03:36 PM (நெவில் அன்தனி) இலங்கை வலைபந்தாட்டத் தின் சொத்து தர்ஜினி சிவலிங்கம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவும் தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சாதிப்பதற்கு அவரது பிரசன்னம் மிகவும் அவசியம் எனவும் 'வீரகேசரி'க்கு அவுஸ்திரேலிய வலைபந்தாட்ட உதவிப் பயிற்றுநர் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் தெரிவித்தார். அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தர்ஜினியின் வலைபந்தாட்டத் திறன் குறித்து கேட்டபோதே அவர் இந்தப் பதிலைக் கூறினார். …
-
- 0 replies
- 747 views
- 1 follower
-
-
இங்கிலாந்து கப்டன் வோகன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு உடனடியாக முழுக்குப் போட வேண்டும் என்று முன்னாள் வீரர் தோர்ப் வலியுறுத்தியிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கப்டன் மைக்கேல் வோகன் டெஸ்ட் போட்டியில் ஓரளவு ஜொலித்தாலும், ஒரு நாள் போட்டியில் சோபிப்பதில்லை. தவிர அடிக்கடி காயமும் அடைகிறார். இதுவரை 86 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவரது ஆட்டம் மோசமாக இருந்தது. 9 போட்டியில் 209 ரன்கள் ( சராசரி 20. 90 ) மட்டுமே எடுத்திருந்தார். இதனால் வோகன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இருந்து வோகன் ஓய்வு …
-
- 0 replies
- 853 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி இன்று ஆரம்பம் January 14, 2019 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான இந்தப் போட்டி வரும் 27-ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகிய 4 முன்னிலை வீரர்களும் கிண்ணத்தினைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். கடந்த வருடம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் கிண்ணத்தினையும் , நடால் பிரெஞ்சு ஓபன் கிண்ணத்தினையும் ; ரோஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தினையும் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்…
-
- 0 replies
- 528 views
-
-
இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி ஒரு கோடி வரை மோசடி: கிரிக்கெட் வீரருக்கு சிறை! இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்ப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த சோமர்செட்,லாங்ஷயர், டெர்பிஷயர் ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்தவர் ஆன்டி ஹேஹர்ஸ்ட். தற்போது 52 வயதான இவர் கிரிக்கெட்டில் பல்வேறு நிதிமோசடிகளில் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் லாங்ஷயர் கிரிக்கெட் போர்டு இயக்குனராக இருந்த போது 77 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்களை வரை மோசடி செய்த புகாரில் சிக்கினார். அதுபோல் வோர்ஸ்லி கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதா…
-
- 0 replies
- 274 views
-
-
சாதித்துக் காட்டிய கோஹ்லி - நெருக்கடியில் தோனி மிகவும் ‘கூலாக’ செயல்படும் தோனிக்கு நேர்மாறாக உள்ளார் கோஹ்லி. களத்தில் ‘ஹாட்’ தலைவராக காணப்படும் இவர், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். டெஸ்டில் களமிறங்கும் அணிகள் பெரும்பாலும் நான்கு முக்கிய பந்துவீச்சாளர்கள், 6 துடுப்பாட்ட வீரர்கள், ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் தான் களமிறங்கும். முந்தைய தலைவர் தோனி கூட இப்படித் தான் செய்தார். இவ் விஷயத்தில் தலைவர் கோஹ்லி, தாக்குதல் பாணியில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள், ஒரு விக்கெட் காப்பாளர் என களமிறங்கினார். இத்திட்டம் காலி டெஸ்டில் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டது. இருப்பினும், தனது முடிவில் உறுதியாக இருந்த கோஹ்லி, அடுத்…
-
- 0 replies
- 357 views
-