Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இ…

  2. 31 OCT, 2023 | 10:41 AM 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்களுமாக 60 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி 8 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் இடம்பெற்ற உலகக் கி…

  3. இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார். இவர் தனது 87ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார். R Tamilmirror Online || பெர்ஸி அபேசேகர காலமானார்

  4. தென்னாப்ப்ரிக்காவின் குவிண்டன் டி காக் உலகின் தலைசிறந்த ஒருநாள், டி-20 மட்டையாளர்களில் ஒருவர். இந்த 2023 உலகக்கோப்பையில் அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அளித்திருக்கிறார். மிகச்சிறந்த ஆட்டநிலையில் உள்ள அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடி, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமையை காரணங்களாக அவர் குறிப்பிட்டாலும் உலக அளவில் நடக்கும் டி-20 தனியார் ஆட்டத்தொடர்களில் ஆடும் விருப்பமும், அதனால் கிடைக்கும் பெருஞ்செல்வமும் ஏற்படும் நேரமின்மையுமே இந்த துரித ஓய்வுக்கு நிஜக்காரணம் என்பது வெளிப்படையானது. ஏற்கனவே இந்த டி-20 கூட்டநெரிசலில் மே.இ அணியின் கணிசமான நட்சத்திர வீரர்கள் தம் நாட்டுக்காக ஆடுவதில்ல என முடிவெடுத்ததில் அந…

  5. உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 8 நாடுகள் முன்னேறியுள்ளன Published By: VISHNU 12 OCT, 2023 | 07:27 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சம்பியனான தென் ஆபிரிக்கா, போட்டி ஏற்பாடு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஆர்ஜென்டீனா, அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் பிஜி ஆகிய 8 நாடுகள் முன்னேறியுள்ளன. டி குழுவுக்கான லீக் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தீர்மானமிக்க போட்டியில் ஒரேயொரு ஆசிய நாடாக பங்கேற்றிருந்த ஜப்பான் 27 க்கு 39 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த…

  6. பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி, கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியில் தோற்கடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செஸ் உலகத்தின் கதாநாயகனாக கொண்டாடப்படும் நார்வே நாட்டு விளையாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி(24), கத்தார் மாஸ்டர்ஸ் 2023 என்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் போட்டியில் தோற்கடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா…

  7. ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது. குறித்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்தாட்டம், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. 141-வது சர்வதேச ஒலிம்பிக்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான ஹெபடாத்லான் பிரிவில் இந்தியாவுக்காக ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார். கட்டுரை தகவல் எழுதியவர், அபய் குமார் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்தன. ஆனால் கோவிட் -19 காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன் 1951 முதல் 2018 வரை 18 முறை ஆசிய விளையாட்டுப் போட்டி…

  9. பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது 06 NOV, 2022 | 07:04 AM இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்…

  10. 04 OCT, 2023 | 10:25 AM ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/166031

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷகீல் அக்தர் பதவி, பிபிசி உருது.காம், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து 'ட்ரீம் 11' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, 'ட்ரீம் 11' நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொ…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 42 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன. …

  13. பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER படக்குறிப்பு, “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.” - இது தான் தனது தாரக மந்திரம் என்கிறார் பவானி தேவி. 2 மணி நேரங்களுக்கு முன்னர் “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்” தான் சோர்வடையும் போதெல்லாம் இந்த சொற்களை உச்சரித்து உற்சாகமடைவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். வாள்வீச்சு விளையாட்டில் இந்தியாவின் பெயரை, பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி. அவர் தற்போத…

  14. ஆசிய கோப்பை 2023: போட்டிகள், இடங்கள் தொடர்பில் அறிவிப்பு ஆசிய கோப்பை 2023 ஒகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 17 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 13 ஒருநாள் போட்டிகளில் நடைபெறவுள்ளன. நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் இந்த போட்டி கலப்பின மாதிரியில் நடத்தப்படுகின்றது. 2023 பதிப்பு இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறு…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “தலைவிதியில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். இன்று என் தலைவிதியில் எழுதியிருக்கிறது என்னுடைய நாளாக மாறிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை” எந்தவிதமான அலட்டலும், கர்வமும் இல்லாமல், தற்பெருமையின் வாசனை கூட இல்லாமல் வந்த இந்த வார்த்தை, இந்திய அணி 8-வதுமுறையாக ஆசியக் கோப்பையை வெற்றி பெற காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேசியதாகும். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தை ஒரு தரப்பாக மாற்றி, இலங்கை அணியை தனது பந்து…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், அப்போது வலிமையான அணியாகத் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. கபில்தேவ் தலைமையிலான இந…

  17. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே முதன் முதலாக பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை யாழ் பல்கலைக்கழக மாணவிகள் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273303

  18. 14 SEP, 2023 | 10:13 AM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ரிட்ஸ்பறி 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்பநாளான புதன்கிழமை (13) 4 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் சாதனைகள் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுவர்கள் பிரிவில் 3 புதிய சாதனைகளும் சிறுமிகள் பிரிவில் ஒரு சாதனையும் நிலைநாட்டப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ரி. மெண்டிஸ…

  19. Published By: RAJEEBAN 13 SEP, 2023 | 12:03 PM பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இலங்கையின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வீரர் ஒருவர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி டுனித் வெல்லாலகே என்ற இளம் வீரரைகண்டுபிடித்துள்ளதுபோல சாருஜன் சண்முகநாதனும் இலங்கையின் எதிர்கால வீரர் என வக்கார் யூனுஸ்தெரிவித்துள்ளார். வெல்லாலகே எவ்வளவு திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட வீரர் எதிர்காலத்திற்கான ஒருவர் என தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ் இலங்கையில் திறமைக்கு என்றும் குறைவில்லை. இந்த சிறிய ச…

  20. ஸ்பெயின் நாட்டின் கால் பந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ்(46) தான் பதவி விலகப் போவதில்லை என்று ஒரு பக்கம் அடம் பிடித்துக் கொண்டிருக்க மறு புறம் அவரது தாயார், தனது மகனுக்கு எதிரான ‘இரத்த வேட்டையை நிறுத்துங்கள், நடந்த சம்பவத்தின் உண்மையைச் சொல்ல ஜெனிபர் ஹெர்மோசோவை அழைத்து வாருங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்து தேவாலயத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். மகளிருக்கான உலகக் கால் பந்து விளையாட்டுப் போட்டியில் (20.08.2023) ஸ்பெயின் அணி, இங்கிலாந்து அணியை 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டின் கால் பந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ், ஆட்ட வீராங்கனையான ஜெனிபர் ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டிருந…

  21. ”அலப்பறை கெளப்புறோம்”; சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் இன்று வரை சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ள டேவிட் வார்னர் இந்திய பாடல்களுக்கு டிக்டாக் செய்வதன் மூலம் இந்திய ரசிகர்களிடையே தனக்கான இடத்தையும் பிடித்துள்ளார். நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந…

  22. 07 SEP, 2023 | 10:16 AM இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் முதல் தடவையாக இங்கிலாந்தை வென்றுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தத…

  23. சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும…

  24. பட மூலாதாரம்,FIDE 21 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். அரையிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை டைபிரேக்கர் ஆட்டத்தில் அவர் வீழ்த்தினார். பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதுகிறார். அரையிறுதியில் பிரக்ஞானந்தா அசத்தல் பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2…

  25. அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இந்தப் பழுதூக்கும் போட்டி இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டரில் ஸ்டீபன் 18 வயதுக்குட்பட்ட 74 கிலோ எடைப்பிரிவில் 155 கிலோவைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றதோடு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் செல்வராஜா அக்ஸயன் 20 வயதுக்குட்பட்ட 59 எடைப் பிரிவில், 110 கிலோ எடையினை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார். https://thinakkural.lk/article/271007

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.