விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பிளட்டர், பிளட்டினியின் குற்றம் உறுதியானது சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் வெளிச்செல்லும் தலைவர் செப் பிளட்டர், அதன் உப தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் தலைவருமான மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தடைக்கெதிராக மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டில், அவர்களது குற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிளட்டினிக்கு செப் பிளட்டர் வழங்கிய 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கொடுப்பனவில், அவர்களிருவருமே குற்றம் இழைத்தார்கள் என, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழு அறிவித்தது. எனினும், அவர்களு…
-
- 0 replies
- 457 views
-
-
இலங்கை கிரிக்கெட் கண்ட இளம் நட்சத்திரம் குஷல் மெண்டிஸ் அண்மையில் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் மற்றும் முக்கோண ஒருநாள் தொடர் என்பவற்றில், இலங்கை அணி முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில், அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட குழாமினை வைத்து இரு தொடர்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. இந்த வெற்றிகளுக்கு இளம் வீரரான “மொரட்டுவையின் இளவரசர்” என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் 21 வயதேயான குஷல் மெண்டிஸ் பெரும் பாங்காற்றியிருந்தார். இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கைக்குறிய வீரரான குஷல் குறித்தும், அவர் கடந்து வந்த பாதைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காக thepapare.com அவருடன் பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடத்தி…
-
- 0 replies
- 457 views
-
-
சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் சிம்பாப்வே அணிககி;டையிலான 3, 4, 5 ஆவது போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இலங்கை அணிகுழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் இன்று அறிவிக்கப்பட்ட…
-
- 4 replies
- 457 views
-
-
தேசிய ரீதியிலான கிளிநொச்சி மாணவன் சாதனை! தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார். https://athavannews.com/2022/1314484
-
- 0 replies
- 456 views
-
-
கசாப்புக் கடைக்காரனின் ஜீவகாருண்யப் பேச்சு -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பான சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. இதற்கு முன்னரே, மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்துக்கான துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட போதும்கூட, இவ்வாறான நிலைமை தான் ஏற்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை, குறிப்பாக அதன் தலைவர் திலங்க சுமதிபாலவைப் பொறுத்தவரை, இலங்கை அணியின் முன்னாள் வீரரான முரளி, இலங்கைக்கெதிரான தொடருக்கு முன்பாக, அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து செயற்படுவது, நெறிமுறைகளுக்கு எதிரானது. …
-
- 0 replies
- 456 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி. முதல்பாதியில், பிரிட்டன் அணியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 29-0 என்ற புள்ளிக்கணக்கில் பிஜி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில்தான், பிரிட்டன் அணி போராடி 7 புள்ளிகளை பெற்றது. இறுதியில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது பிஜி . கடந்த 1956 ம் ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பிஜி பங்கேற்று வருகிறது. 12 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றும் ஒரு முறை கூட பிஜி வீரர்கள் 'போடியம் 'ஏறியது கிடையாது. ஆனால் இந்…
-
- 2 replies
- 456 views
-
-
(ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)
-
- 0 replies
- 456 views
-
-
சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் பேசமாட்டார்: சச்சின் ருசிகரப் பதிவு படம். | விபின் பவார். இப்போது ட்விட்டரில் கலக்கி வரும் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உண்மையில் ஒரு கூச்ச சுபாவமான மனிதர், அதிகம் பேச மாட்டார் என்று கூறினால் அது இப்போது நம்பும்படியாக இருக்காது, ஆனால் கூட இருந்த சச்சின் சேவாக் பேசமாட்டார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், சேவாக் இருவரும் தங்களது கால பழக்கங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். தொடக்க வீரர்கள் களத்தில் மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் தங்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம், இதே போல்…
-
- 0 replies
- 456 views
-
-
யாழ்ப்பாணம்தென்மராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கைதடி நாவற்குழி அ.த.க. பாடசாலை பெண்கள் அணி வெற்றிபெற்றது. சாவகச்சேரி மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நடப்பாண்டு சம்பியனான கைதடி முத்துக்குமாரசுவாமி பாடசாலை அணியை எதிர்த்து கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை அணி மோதியது. 15 :11 என்ற செற் கணக்கில் கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை சம்பியன் கிண்ணத்தை தமதாக்கி கொண் டது. https://newuthayan.com/story/17/நாவற்குழி-அ-த-க-மகளிர்-அணி.html
-
- 0 replies
- 456 views
-
-
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்…
-
- 0 replies
- 456 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு திலங்க சுமதிபால தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை மஹேல ஜயவர்தன, ப்ரெண்டன் குருப்பு, ரொஷான் மஹநாம ஆகியோர் நிராகரித்துள்ளனர். இந்த மூவருடன் அரவிந்த டி சில்வா, க்ரேம் லெப்ரோய் ஆகியோரை தெரிவுக் குழுவில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கடும் பிரயத்தனம் எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டை மீள் எழுச்சி அடையச் செய்யும் முயற்சியாகவே இந்த முயற்சியில் ஹலங்கா கிரிக்கெட் நி…
-
- 0 replies
- 456 views
-
-
அவுஸ்திரேலியாவை வென்றது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிராக மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரொன்றை விளையாடி வருகின்ற நிலையில், டேர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அவ்வணி சார்பாக விக்கெட் காப்பாளர் பீற்றர் நெவில்லும் புறச் சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பாவும் அற…
-
- 0 replies
- 456 views
-
-
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது. குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்…
-
- 0 replies
- 456 views
-
-
ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து திருப்தியடைகின்றேன்: – குமார் சங்கக்கார 2014-12-15 09:54:48 ''இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரானது இலங்கையில் எனது கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பது நிச்சயம். உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சிந்திப்பேன்'' என இலங்கையின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் முன்னாள் அணித் தலைவருமான குமார் சங்கக்கார குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக கண்டி பல்லேகலையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆறாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சங்கக்கார 112 ஓட்டங்களைக் குவித்ததன் பலனாக 90 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டி முடிவடைந்த …
-
- 0 replies
- 456 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரைஇறுதியின் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அபார வெற்றி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘ஹாட்ரிக்’ கோலால் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட்: ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் மொனாக்கோ எப்.சி. (மொனாக்கோ), யுவென்டஸ் (இத்தாலி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)…
-
- 0 replies
- 456 views
-
-
[size=3] நாடற்றவன் (Guor Marial) [/size] [size=3] South Sudanese refugee to run Olympic marathon as an independent [/size] [size=3] ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அண [/size][size=3] ிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலே…
-
- 0 replies
- 456 views
-
-
சர்வதேச கிரிக்கெட் பந்துவீச்சில் டேன் சாதனை இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஒன்பதாம் நாளான ஞாயிறன்று எட்டு மகளிர் அணிகளும் விளையாடிய போட்டிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்களது பந்துவீச்சாளினிகளின் அதீத திறமையைக் கொண்டு வெற்றிகளைப் பதிவு செய்தன. தென் ஆபிரிக்க அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சாதனை மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக லெஸ்டர் க்றேஸ் றோட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அபூர்வ சாதனை ஒன்றை நிலைநாட்டினா…
-
- 0 replies
- 456 views
-
-
‘மக்கள் கேப்டனாக’ அம்பயரிடம் ரிவ்யூ கேட்ட தோனி! - வைரல் வீடியோ இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவரான மகேந்திர சிங் தோனி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பைத் துறந்திருந்தாலும், வார்ம் அப் போட்டி ஒன்றில் இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கினார் தோனி. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. செப்டம்பர் 24, 2007-ம் ஆண்டு உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி ஜெயிக்க, உடனடியாக அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டிராவிட் பதவி விலகினார்.…
-
- 0 replies
- 456 views
-
-
Print this ஜோன் ஆப்ரகாமுடன் இணையும் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் ‘லீக்’ போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து ‘லீக்’ போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18–ம் திகதி முதல் மார்ச் 30–ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 22 வீரர்கள் இடம்பெறுவார்கள். 10 வெளிநாட்டு வீரர்கள் உள்பட ஒரு முன்னணி வீரரும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள். ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடிவு செய்து…
-
- 0 replies
- 456 views
-
-
சிம்பாப்வே செல்கிறது இந்தியா மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும். மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது. எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-2…
-
- 0 replies
- 456 views
-
-
அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்…
-
- 0 replies
- 456 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம் By Akeel Shihab - தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க மண்ணில் வைத்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகை…
-
- 0 replies
- 456 views
-
-
சங்கக்கார - மஹேல மோதல்! இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பிராந்தி யப் போட்டியில் சசெக்ஸ் பிராந்திய அணிக் காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன விளையாடவு ள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலுள்ள உள்ளூர் அணியொன்றான சசெக்ஸ் பிராந்திய அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்ப ட்டார். இதன்படி அந்த அணிக்காகக் களமிறங்கவுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் சகவீரரான குமார் சங்கக்கார சரே பிராந்திய அணி சார்பில் விளையாடி வருகின்றார். இதனால் சங்கக்காரா விளையாடும் அணிக்கு எதிராக ஜயவர்தன விளையாடவு…
-
- 0 replies
- 456 views
-
-
மீண்டும் இருபது-20 போட்டிகளில் டில்சான் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார். இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார். இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 455 views
-
-
ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர…
-
- 1 reply
- 455 views
-