Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சதத்துக்குப் பிறகு காயமடைந்தும் ராஸ் டெய்லர் 181 நாட் அவுட்: இங்கிலாந்தின் 335 ரன்களை விரட்டி நியூஸி. வெற்றி 181 நாட் அவுட்! அபார இன்னிங்ஸை ஆடிய ராஸ் டெய்லருக்குக் குவியும் பாராட்டுக்கள். - படம். | ஏ.எஃப்.பி. டுனெடின் மைதானத்தில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் சதங்களைப் பின்னுக்குத்தள்ளியது ராஸ் டெய்லரின் 181 நாட் அவுட். இங்கிலாந்தின் 335 ரன்கள் இலக்கை வெற்றிகரமான விரட்டி நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க இங்கிலாந்து அணி 38-வது ஓவரில் 267/1 என்ற நிலை…

  2. சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு 90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ம…

    • 1 reply
    • 349 views
  3. 159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு 3-வது ஓருநாள் போட்டியில் 34-வது சதம் எடுத்த விராட் கோலி. - படம். | கெட்டி இமேஜஸ் கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தி…

  4. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களை அடித்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனான் கப்ரியல் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டாம் பெஸ் 2 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் முன்னிலை உடன் இ…

  5. சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான்…

  6. சதம் சதமாய்க் குவிக்கும் குமார் சங்ககாரா இங்கிலாந்தில் சரே அணிக்காக ஆடி வரும் குமார் சங்ககாரா கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் இன்று Northamptonshire அணிக்கு எதிராக 101 ஓட்டங்களை எடுத்து உள்ளார். http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804445.html

  7. சதுரங்கத்தில் மட்டுமன்றி கராத்தேயிலும் சளைக்காத ஹரிகிஷன் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய, சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்கiயும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய கண்டி, புனித திருத்துவ கல்ல}ரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், கராத்தேயிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை சோடோகன் கராத்தே கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8ஆவது தேசிய கராத்தே சம்பியன் கிண்ண போட்டி, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்ற…

  8. வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரி குமாராசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், இந்த சதுரங்க போட்டியில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். சதுரங்க விளையாட்டு நற்சிந்தனையாற்றலை விருத்தி செய்வதுடன் கற்றலை தூண்டும் ஒரு அடித்தளமாகவும் இது அமையும்.மேலும் இந்த சதுரங்க விளையாட்டில் ரஷ்ய நாட்டவர்கள…

  9. சத்தமில்லாமல் மற்றுமொரு சாதனையை செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 9 சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், 15 தேசிய அளவிலான போட்டிகள், ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 17 வயதில் 97 பதக்கங்களைப் பெற்றவர். இதில் 81 பதக்கங்கள் தங்கம் என்றால் ஆரத்தியின் சாதனையை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், ஆரத்தியின் சாதனையைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கொரியாவின் யசோவு நகரில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 10-வதாக வந்து சாதனை படைத்துள்ளார் ஆரத்தி. இந்தப் போட்டியில் இந்தியாவின் ச…

  10. சத்திர சிகிச்சையின் பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய ஹார்டிக் பாண்டியா By Akeel Shihab - சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்திய குழாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணியானது கடந்த வருடம் (2019) செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாட…

    • 0 replies
    • 321 views
  11. சந்தர்போலின் மகனை வீழ்த்திய மக்காயா நிட்னியின் மகன் Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 11:02 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சிவ்நரைன் சந்தர்போலின் மகனை தென் ஆபிரிக்காவின் முன்னாள் புயல்வேக பந்துவீச்சாளரான மக்காயா நிட்னியின் மகன் வீழ்த்தியிருந்தமை கிரிக்கெட் அரங்கில் சுவாரஷ்யமிக்க சம்பவமாக பதிவானது. தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென் ஆபிரிக்க அணியுடன் 2 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னோடியாக தென் ஆபிரிக்காவின் …

  12. சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி? அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கான பயிற்சிமுகாமில் சந்தர்போல் இணைக்கப்படவில்லை. பயிற்சிமுகாமுக்கு அழைக்கப்பட்ட 12 வீரர்களில் சந்தர்போலின் பெயர் இடம்பெற்றிருக்காதது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. சந்தர்போலை ஒதுக்கும் முகமான இந்தச் செயற்பாடானது, இளைய வீரர்களை உள்வாங்கும் திட்டத்தோடு மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உணர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மே 29ஆம் திகதியே மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் சந்தர்போலுக்கு இன்னும் இருப்பதற்கான நம்பிக்கை…

  13. சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா? பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் ThePapare.com க்கு தெரியவருகிறது. இலங்கை அண…

  14. சந்திமல், திஸர வெளியே : அகில தனஞ்சய உள்ளே , மலிங்க விளையாடுகிறார் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இதேவ…

  15. சந்திமல், ஹத்துருசிங்க உள்ளிட்ட மூவருக்கு போட்டி தடை இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல் உள்ளிட்ட மூவருக்கு தலா இரு போட்டிகளுக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணிப் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கே குறித்த தடை உத்தரவு ஐ.சி.சி யினால் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக மைதானத்திற்கு வரமறுத்தமை மற்றும் போட்டியை தாமதமாக ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தமை போன்ற செயற்பாடுகளால் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மூவரும்…

  16. சந்திமாலின் தலைமைத்துவத்தை பாராட்டும் குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்ற இலங்கை அணியை வழிநடாத்திய தினேஷ் சந்திமாலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தை பாகிஸ்தான் தமது தாயகமாக தத்தெடுத்துக்கொண்ட பின்னர் டெஸ்ட் தொடரொன்றில் முதற்தடவையாக இலங்கை அணியினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் வரை தமது சொந்த மண்ணில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வியடையாது காணப்பட்டிருந்தம…

  17. சந்திமால் நீக்கப்பட்டமைக்கு ஜயசூரியவை விமர்சித்த அர்ஜுன ரணதுங்க ஜிம்பாப்வேயுடனான முதல் மூன்று போட்டிகளுக்குமான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டமை குறித்து, உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்று தந்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவை விமர்சித்துள்ளார். முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்குமான அணியில் இடம் கிடைக்காத சந்திமாலுக்கு முன்றாவது போட்டியில் இருந்து வாய்ப்பு வழங்குவதற்கு தேர்வாளர்கள் உறுதி அளித்தபோதும் அது நிகழவில்லை. இது குறித்து கிரிக்பஸ் செய்தித் தளத்திற்கு பேட்டி அளித்த அர்ஜுன ரணதுங்க, ‘மஹேல (ஜயவர்தன) மற்றும் குமார் (சங்கக…

  18. சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம் September 1, 2015 09:03 pm தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார். இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார். இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…

  19. சந்திமால், திரிமான மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஜனித் போன்ற திறமையான வீரர்கள் இல்லாமல் இலங்கை எவ்வாறு கிண்ணத்தை வெல்லும்?: அர்ஜுன ஆதங்கம் இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது…

  20. சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை 44 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் இளம் வயதில், கால்பந்தாட்டத்தில் சேர்ந்ததோடு, நாட்டிற்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார். ஆரம்பம் என்ன? …

  21. சந்தேகத்தில் மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் வாய்ப்பு இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததோடு, லிவர்பூல், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருந்தன. மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக சேர்ஜியோ அக்ரோவும் கெவின் டீ ப்ரூனும் கோல்களைப் பெற்றிருந்ததோடு, ஆர்சனல் சார்பாக ஒலிவர் ஜிரோட்டும் அலெக்ஸிஸ் சந்தேஸும் கோல்களைப் பெற்றிருந்தனர். …

  22. சந்தேகத்தில் வில்லியர்ஸின் எதிர்காலம் தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவரும், முக்கியமான துடுப்பாட்ட வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், தனது எதிர்காலம் குறித்த முரண்பாடான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஏபி டி வில்லியர்ஸூம் டேல் ஸ்டெய்னும் வேர்ணன் பிலாந்தரும், சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக, சில செய்திகள் வெளியாகியிருந்தன. தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைகளுக்கு எதிராகவே, வில்லியர்ஸூம் ஸ்டெய்னும் விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றுவதால், அவற்றைக் குறைப்பது பற்றிக் கவனஞ்செலுத்துவதாக, வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், ஓய்வுபெறுவத…

  23. சனத் ஜயசூரிய இராஜினாமா? இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/191279/சனத-ஜயச-ர-ய-இர-ஜ-ன-ம-#sthash.tvokm652.dpuf

  24. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. …

  25. February 26, 2019 இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.