விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கெய்ல்: 2 வருடத்திற்குப் பிறகு இடம் பிடித்தார் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். 37 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பிடித்ததில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழ…
-
- 0 replies
- 394 views
-
-
றியல் மட்ரிட், சிற்றி வென்றன ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொ…
-
- 0 replies
- 488 views
-
-
வார இறுதி ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி செய்திகள் வென்றது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எவ்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது. மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய சேர்ஜியோ அகுரோ, போட்டியின் இறுதிக் கணங்களில் பெற்ற கோல் காரணமாகவே, ஆரம்பத்தில் ஒரு கோல் பின்தங்கியிருந்தபோதும் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது. காலிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுன…
-
- 0 replies
- 469 views
-
-
கிராமத்தை கூட ஹை டெக் சிட்டியாக மாற்ற முடியும் என்பதற்கு நெய்மரே சாட்சி !!! கால்பந்தில் இன்னைக்கு ஒரு ஆப்ரிக்கன் டீம் விளையாடுதுன்னா அதுல ஆடுர வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் பந்து வாங்க ஷீ வாங்க வழி இல்லாமல், பயிற்சியாளர் இல்லாமல் தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பாங்க. பிரேசிலின் நெய்மரும் அப்படி வந்தவர்தான். நெய்மர் பிறந்த இடம் ஒரு மலை வாழ் மக்கள் வாழ கூடிய பகுதி தான். சுருக்கமா சொன்னா பிரேசிலில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடம். குப்பைகளை மொத்தமாக கொட்டி எரிக்கும் ஒரு பகுதி. அங்கு மைதானங்கள் பள்ளிகள் புட் பால் மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி …
-
- 0 replies
- 714 views
-
-
பார்சிலோனாவில் இணைந்தார் விடல் @AFP சிலி கால்பந்து அணியின் மத்தியகள வீரர் ஆர்டுரோ விடல் மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் பயேர்ன் முனிச் கழக அணியில் இருந்து ஸ்பெயினின் பலம்மிக்க பார்சிலோனா கழகத்தில் திங்கட்கிழமை (06) உத்தியோகபூர்வமாக இணைந்தார். விடல், லா லிகா சம்பியனான பார்சிலோனாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். எனினும், அவரது ஒப்பந்தத் தொகை வெளியிடப்படவில்லை. அது 20 தொடக்கம் 30 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்பொழுது 31 வயதுடைய விடல் இன்டர் மிலான் கழகத்துடன் இணைவதற்கு நெருங்கிய போதே கடைசி நேரத்தில் அவரை பார்சிலோனா தனதாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 485 views
-
-
சுனில் நரைனுக்கு மீள் பரீட்சை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நில…
-
- 0 replies
- 417 views
-
-
திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. மதுபோதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரண்டிச் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக, தி…
-
- 0 replies
- 573 views
-
-
சிஎஸ்கேவை காப்பாற்று.. சேப்பாக்கம் நோக்கி மஞ்ச சட்டையோடு ஆரவாரமாக கிளம்பும் ரசிகர்கள் சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிசிசிஐ அமைப்பை வலியுறுத்துவதற்காக SaveCSK என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் திறந்துள்ளனர் சென்னை ரசிகர்கள். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்த உள்ளனர். ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதை பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் ஆய்வு செய்து அறிவித்திருந்தன. இந்நிலையில்தான், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி லோதா கமிட்டி அளித்த தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுவதாக தெரி…
-
- 0 replies
- 401 views
-
-
உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது. ஜோசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணிக் குழாமில் பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிரித்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த அணிக் குழாமில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிட…
-
- 0 replies
- 609 views
-
-
கிரிக்கெட்: இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்! கிரிக்கெட் விளையாட்டை இந்தியா, ஆஸ்திரேலிய நாடுகளின் வாரியங்கள் அழித்து வருவதாக, ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஓவல் மைதானத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன், இங்கிலாந்து எம்.பி டெமியன் கோலின்ஸ் தலைமையில், 100க்கும் மேற்பட்டவர்கள் ஓவல் மைதானத்திற்கு வெளியே திரண்டனர். பின்னர் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டு வாரியங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தலா ஒரு நாட்டுக்கு ஒரு நிமிடம் வீதம் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செல…
-
- 0 replies
- 364 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
உபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா? By Mohammed Rishad - தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியி…
-
- 0 replies
- 426 views
-
-
St. John’s அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறும் சௌமியன் பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலை கிரிக்கெட் போட்டியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு மற்றும் அணியின் வெற்றிக்கான காரணம் என்பவற்றை விளக்கும் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் நாகேந்திரராஜா சௌமியன்.
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவராக திலகரட்ன டில்ஷான் By Mohamed Azarudeen - இந்த ஆண்டில், கிரிக்கெட் விளையாட்டானது ஒரு புதிய அத்தியாயத்தினை எடுக்கும் தருணத்தை உருவாக்கியிருக்கின்றது. ஆம், வீதி பாதுகாப்பு தொடர்பிலான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கும் T20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 7ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கின்றது. இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னாள் வீரர்கள் அடங்கிய கிரிக…
-
- 0 replies
- 367 views
-
-
மத்தியின் வர்ண இரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ள வர்ண இரவு விருதிற்கான விண்ணப்பங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் அறிவித்துள்ளார். மத்திய கல்லூரியில் கல்வி கற்று விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வியமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட தேசிய மட்ட சங்கங்கள் போன்றன நடத்திய தொடர்களில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய, தேசிய அணியில் இடம் பெற்ற, சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்ட, சர்வதேச போட்டிகளில் வெற்றியீட்டிய பழைய மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவங்களையும் ச…
-
- 0 replies
- 292 views
-
-
தினேஸ் சந்திமால் வைத்தியசாலையில்..! (படங்கள் இணைப்பு) இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்னதினம் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளான சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே இவருடைய உடல் நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கிரிக்…
-
- 0 replies
- 570 views
-
-
கிரிக்கெட் போட்டியில் மற்றுமொரு விபரீதம் : மைதானத்துக்குள் நுளைந்த அம்பூயலன்ஸ் : பாகிஸ்தான் வீரர் வைத்தியசாலையில்! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக போட்டியின் போது விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் அஹமட் சேஷாட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் செமியல்ஸ் ஆகியோர் மோதிக் கொண்டதில் சேஷாட்டின் கழுத்துப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்துக்குள் அம்புயூலன் கொண்டுவரப்பட்டு, சேஷாட் வைத்தியசாலைக்…
-
- 0 replies
- 219 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரண்டு சீன வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இரண்டு சீன வீரர்களை பெஷாவர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த வருடத்திற்கான பி.எஸ்.எல். சீசனில் இரண்டு சீன வீரர்கள் விளையாட உள்ளனர். இருவரையும் பெஷாவர் ஷல்மி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அணிகள் உள்ளன. இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை. பெஷாவர் ஷல்மி அணியின் உர…
-
- 0 replies
- 340 views
-
-
அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன் 08 NOV, 2022 | 09:35 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார். இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும். இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania) பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
மனைவிகளுக்கும் தடை, காதலிகளுக்கும் தடை.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! மும்பை: உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களுடன் அவர்களது மனைவியரும், காதலிகளும் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடித் தடை விதித்து விட்டது. இதனால் வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம். குறிப்பாக விராத் கோஹ்லி இனிமேல் அரை சதம் அடிக்கும்போதும், சதம் போடும்போதும் பெவிலியனைப் பார்த்து காதலி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தங்களைப் பறக்க விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாம் இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிப்ரவரி 14ம் தேதி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிரஷரை…
-
- 0 replies
- 392 views
-
-
பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி இலங்கை கிரிக்கெட் அணியை அழைத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எவையும் இடம் பெற்றிருக்கவில் லை. தற்போது சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0…
-
- 0 replies
- 296 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்கக்கார பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் , இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இணைந்துள்ளார். கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, கெவின் பீற்றர்சன், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள், 5 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவர். சங்கக்காரவின் ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் தலைவர் நஜம் சேதி, 'சங்கக்கார, உலகத்தரம் மிக்க ஒர வீரர். அவரை இணைத்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏராளமான அனுபவத்தை அவர் இந்தத் தொடருக்குக் கொண்டு வருகின்றார். அவரது இணைப்பானது, தொடரின் வீரர் தெ…
-
- 0 replies
- 200 views
-
-
யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம் (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது மைலோ அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது. 13, 15, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின. இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒரே ஒரு அணியான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை உயன்வத்தை மைதானத்தி…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
பிசிசிஐ பாராட்டு விழாவில் தோனி பெயரை மறந்த சேவாக் டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சேவாக்கிற்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர். அருகில் ஷேவாக்கின் தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பிசிசிஐ சார்பில் சேவாக்கிற்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சேவாக் தனது கேப்டன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேவேளையில் தோனியின் பெயரை அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த அக்டோபர் 20ம் தேதி சேவாக் ஓய்வு பெற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 818 views
-