Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா இடையிலான டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க அணி அசாத்திய சாதனை புரிந்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆடடத்தில் ரன் மழை பொழி…

  2. உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் பட மூலாதாரம்,BFI 25 மார்ச் 2023, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்கா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீட்டி பூராவுக்கு இது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம். சீனாவின் வாங் லினாவை அவர் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். …

  3. பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள் Published By: VISHNU 24 MAR, 2023 | 01:46 PM (நெவில் அன்தனி) ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில் ஆரம்பித்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடு நிலவியது. பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நட…

  4. காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 மார்ச் 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது. மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'. கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணி…

  5. பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம் Published By: SETHU 21 MAR, 2023 | 02:58 PM பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார், இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது. பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற…

  6. டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2023 மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன. தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்? கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேல…

  7. "ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட் மைதானத்தில் தேர்ட் மேன் பகுதியில் ஊன்றுகோல் உதவியுடன் ஃபீல்டிங் செய்ய முடியுமா? ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோல் உதவியுடன் பேக் ஃபுட்டில் கட்ஷாட் அடிக்க முடியுமா? சாத்தியமே இல்லை என்கிறீர்களா? ஆனால், இந்த சூப்பர் பெண்களுக்கு இது எல்லாமே சாத்தியம்தான். பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதெல்லாம் கிடக்கட்டும், அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தானது எனக் கருதப்படும் ஜார்கண்ட் மாநிலம் வாசிப்பூரி…

  8. உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ் Published By: VISHNU 15 MAR, 2023 | 06:37 PM (என்.வீ.ஏ.) மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தொடர் வெற்றியை பங்களாதேஷ் ஈட்டியது. முதல் இரண்டு போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுடன் தொடரை தனதாக்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கடைசிப் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்க…

  9. ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" - இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தை…

  10. இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர் Published By: DIGITAL DESK 5 15 MAR, 2023 | 03:36 PM (நெவில் அன்தனி) இலங்கை வலைபந்தாட்டத் தின் சொத்து தர்ஜினி சிவலிங்கம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவும் தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சாதிப்பதற்கு அவரது பிரசன்னம் மிகவும் அவசியம் எனவும் 'வீரகேசரி'க்கு அவுஸ்திரேலிய வலைபந்தாட்ட உதவிப் பயிற்றுநர் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் தெரிவித்தார். அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தர்ஜினியின் வலைபந்தாட்டத் திறன் குறித்து கேட்டபோதே அவர் இந்தப் பதிலைக் கூறினார். …

  11. பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக ஆனது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'இதற்கு முன்பு நான் இந்தியாவில் இரண்டு சுற்றுப்பயணங்களைச் செய்தேன். அந்த எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான் மைதானத்திற்கு ட்ரிங்ஸ் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு இந்தப்பயணம் மிக நீண்டதாக இருந்தது.’ வியாழனன்று மாலை உஸ்மான் கவாஜா இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் நிம்மதி உணர்வு தெளிவாகத் தெரிந்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் (நரேந்திர மோதி ஸ்டேடியம்) அபாரமாக விளையாடி 180 ரன்கள் குவித்த உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணத்த…

  12. 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் உலக சாதனை Published By: SETHU 10 MAR, 2023 | 04:50 PM பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். சிட்னியில் இன்று ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள், 03.14 விநாடிகளில் நீந்திய புதிய உலக சாதனையை கெய்லி மெக்கோவ்ன் நிலைநாட்டினார். அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் 2019 ஆம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது. 21 வயதா…

  13. நியூஸிலாந்துடனான முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இலங்கை; திமுத், குசல் அரைச் சதங்கள் குவிப்பு Published By: NANTHINI 09 MAR, 2023 | 01:42 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து, 305 ஓட்டங்களை பெற்றிருந்தது. மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் 75 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது…

  14. ஒன்பது வயதில் உலக சாதனைகள் படைத்த கனேடிய சிறுமி Share கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி படைத்துள…

    • 0 replies
    • 434 views
  15. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி Published By: DIGITAL DESK 5 08 MAR, 2023 | 10:02 AM "வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை (09) முற்பகல் 8.30 மணிக்கு இடம்பெற்று போட்டி முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் எ…

  16. 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி Published By: DIGITAL DESK 5 07 MAR, 2023 | 04:31 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதியன்று பங்களாதேஷின் மிர்பூரில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓ…

  17. ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட 75 வயது பாட்டி Published By: DIGITAL DESK 5 07 MAR, 2023 | 09:50 AM யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அண்மையில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் போது பழைய மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் , பாடசாலை பழைய மாணவியான 75 வயதான புனிதவதி எனும் பாட்டியொருவரும் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். குறித்த ஓட்ட போட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாட்டிக்கு பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றன…

  18. பெண்களுக்கான ஐந்தம்ச (பென்டத்லன்) போட்டியில் நஃபிசாடோ தியாம் உலக சாதனை Published By: SETHU 06 MAR, 2023 | 11:38 AM பெண்களுக்கான ஐந்தம்ச போட்டியில் (பென்டத்லன்) பெல்ஜியத்தின் நஃபிசாடோ தியாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். துருக்கியில் நடைபெறும் ஐரோப்பிய உள்ளக மெய்­வன்மை விளையாட்டு விழா­வில், நேற்றுமுன்தினம் தியாம் 5,055 புள்ளி­களுடன் தங்கப்பதக்கம் வென்றார். இது ஐந்தம்ச போட்டி­களில் புதிய உலக சாதனை­யாகும். 2012 ஆம் ஆண்டு உக்ரே­னின் நடாலியா டோபிரின்ஸ்கா 5,013 புள்ளி­களைப் பெற்றிருந்தமையே மகளிர் ஐந்தம்ச போட்டிகளில் முந்‍தைய உலக சாதனையாக இருந்தது. இவ்வருட ஐரோப்பிய உள்ளக விளை­யாட்டு …

  19. எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர…

  20. மெஸ்ஸியின் குடும்ப பேரங்காடி மீது சூடு: வீரருக்கு அச்சுறுத்தல் செய்தி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி ம…

    • 0 replies
    • 591 views
  21. யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 02:10 PM யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற …

  22. நான்காவது இடத்தை பெற்றார் லூசியன் புஷ்பராஜ் அமெரிக்க – ஒஹியோவின் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற அர்னால்ட் கிளாசிக் 2023 உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஓஹியோவில் நடந்த சம்பியன்ஷிப் போட்டியில் லூசியன் புஷ்பராஜ் சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் பங்கேற்றார். அர்னால்ட் கிளாசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை வீரர் லூசியன் புஷ்பராஜ் என்பதோடு, கடந்த 2022 உடற்கட்டமைப்பு போட்டியிலும் லூசியன் புஷ்பராஜ் நான்காவது இடத்தைப் பெற்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதலாது தடவையாக மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்ற லூசியன் புஷ்பராஜ் ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு இலட்சத்…

  23. சறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல்கீப்பராக’ வளர்ந்த இளைஞன் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று. அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம். வில்லாவின் பாடிமூர் ஹீத் பயிற்சி மைதானத்தில் உள்ள அதே லாக்…

  24. ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச் Published By: DIGITAL DESK 5 01 MAR, 2023 | 12:18 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 378 தடவைகள் முதலாவது இடத்தை கைப்பற்றிய சேர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நொவாக் ஜோகோவிச், அதிக தடவைகள் முதலாவது இடத்தை பிடித்தவர் என்ற ஜேர்மனியின் ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வீர, வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை கடந்த 28 ஆம் திகதியன்று வெளியிட்டது. இதில் சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் 3980 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பிடித்து தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். இதன்படி, 378 தடவைகள் சர்வத…

  25. அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி Published By: VISHNU 28 FEB, 2023 | 05:20 PM (நெவில் அன்தனி) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் விழாவில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளியான மாசின் ஒலெக்சி அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 'அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் 2022' விழாவில் உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒற்றைக் கால் வீரரான மாசின் ஒலெக்சி இந்த விருதை வென்று முழு உலகினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். கால்பந்தாட்ட விற்பன்னர்களான லியனல் மெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.