விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை: ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பைக்கான கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி. கால்பந்து அணிகளுக்கு இடையிலான முன்னணி லீக் தொடர்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்த தொடர்கள் நடைபெறுவதற்கு முன்பாக தற்போது அணிகளுக்கு இடையிலான சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நட்பு ரீதியான இந்த தொடரில் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அண…
-
- 0 replies
- 300 views
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா! கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசி…
-
- 0 replies
- 510 views
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்! இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார். இ…
-
- 0 replies
- 357 views
-
-
சர்வதேச சைக்கிள் சவாரி வடக்கு - கிழக்கு அணிகளுக்கு விசேட அழைப்பு எஸ்.ஜே.பிரசாத் 'டீ – கப்' என்ற பெயரில் இலங்கையில் சர்வதேச அணிகளுக்கிடையிலான சைக்கிள் சவாரிப் போட்டி இவ்வருடம் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ளது. இந்தத் தொடரில் வடக்கு, கிழக்கு அணிகள் பங்குபற்ற வேண்டும் என்றும் ஏற்பாட்டுக்குழு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளது. அந்த வகையில் இந்தப் போட்டி சர்வதேச தரத்திற்கு அமைய நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத் துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இவ்வருடம் நடைபெறவுள்ள டீ – கப் சைக்கிள் சவாரியில் 100 பேர் பங்கு…
-
- 0 replies
- 284 views
-
-
Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில…
-
- 2 replies
- 229 views
- 1 follower
-
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள்: கிறிஸ் கெய்லின் தனித்துவ சாதனை கெய்ல். - கோப்புப் படம்.| ஜி.பி.சம்பத் குமார் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை புரிந்துள்ள மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்த முதல் வீரரானார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் சனிக்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் 21 ரன்களில் வீழ்த்தியது மே.இ.தீவுகள். அதில் கெய்ல் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார், இதில் 3 நான்குகள், 4 ஆறுகள் அடங்கும். அப்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்துச் சாதனை புரிந்த முதல் வீரர் ஆ…
-
- 0 replies
- 446 views
-
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையேயான போட்டியில் 97 சிக்சர்கள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்ற…
-
- 1 reply
- 479 views
-
-
சர்வதேச டென்னிஸ் சம்மேளன சம்பியன்களாக இவ்வருடம் ஜோகோவிச், செரீனா தெரிவு இவ் வருடம் தலா மூன்று மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் வருடத்தின் டென்னிஸ் சம்பியன்களாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக இவ் விருதை வென்றுள்ளனர். ஜோகோவிச் இவ் வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் ஆகிய மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களுடன் மொத்தமாக 11 சம்பியன் பட்டங்கள…
-
- 0 replies
- 565 views
-
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 335 views
-
-
... சர்வதேச தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹிமா தாஸ்.. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்
-
- 1 reply
- 654 views
-
-
சர்வதேச தடகள போட்டிகளுக்கு ரஷ்யாவிற்கு தடை: ரியோ ஒலிம்பிக்கிலும் பங்குகொள்ள முடியாது இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம், கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்…
-
- 1 reply
- 356 views
-
-
போலந்தில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். போலந்தின் பிட்கோசெஸ்க் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் 18 வயது நீரஜ், 86.48 மீட்டர் வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீட்டர் துாரம் வீசியதே 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாதனையாக இருந்தது. முதல் முயற்சியில் 79.66 மீட்டர் வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது. இதற்…
-
- 0 replies
- 304 views
-
-
பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்க…
-
- 1 reply
- 712 views
-
-
சர்வதேச போட்டிகளிலிருந்து பிரண்டன் மெக்கலம் ஓய்வு எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான மெக்கலம், 99 டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், 71 டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கலம் தாம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளைக் கவனத்திற் கொண்டு தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே டி20 உலகக்கி…
-
- 0 replies
- 719 views
-
-
சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி Published By: SETHU 29 MAR, 2023 | 11:35 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார். கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் …
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்- பிராவோ அறிவிப்பு மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். பிராவோ ஒருநாள் அணியி;ன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் நான் உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றுள்ளேன் என்பதை கிரிக்கெட் உலகிற்கு அறிவிக்க விரும்;புகின்றேன் என பிராவோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 14 வருடத்திற்கு முன்னர் நான் மேற்கிந்திய அணிக்காக எனது முதல்போட்டியை ஆடிய தருணம் நினைவிலுள்ளது என பிராவோ குறிப்பிட…
-
- 0 replies
- 550 views
-
-
04 OCT, 2023 | 10:25 AM ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/166031
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்…
-
- 3 replies
- 510 views
-
-
சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜோன்சன் லீக் போட்டிகளில் விளையாடிவந்தார். 2016-17 பிக்பாஸ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அவர் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாகயிருந்தார். மேலும் ஜோன் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் உடல்உபாதைகள் தொடர்வதன் காரணமாக அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். என…
-
- 0 replies
- 485 views
-
-
சர்வதேச மக்கள் விருதை வெல்வாரா மெத்தியூஸ் ? இவ் ஆண்டுக்கான எல்.ஜி. சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான எல்.ஜி சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோண்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்கான வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இது இம்மா…
-
- 7 replies
- 794 views
-
-
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:38 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை இந்தோனேசிய வீரர் ஜீட் ப்ரியந்தனா நிலைநாட்டியுள்ளார். கம்போடியாவுக்கு எதிராக பாலி உதயனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை ஜீட் ப்ரியந்தனா படைத்தார். கம்போடியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 16ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா முதல் 3 பந்துகளில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்ததுடன் அதே ஓவரில் கடைசி 2 பந்து…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்து ஹசரங்க சாதனை Published By: Vishnu 12 Jan, 2026 | 02:33 AM (ரங்கிரி தம்புள்ளை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க நிலைநாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது வனிந்து ஹசரங்க இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். தனது 92ஆவது போட்டியில் 90ஆவது இன்னிங்ஸிலேயே 150 விக்கெட்களை…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்த…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 06:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆர்ஜன்டீன வேகப்பந்துவீச்சாளர் ஹேர்னன் ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக் நிகழ்த்திய வீரர்களுக்கான அரிய சாதனை ஏடுகளிலும் அவர் இணைந்துகொண்டுள்ளார். அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உப பிராந்திய அமெரிக்காக்கள் (Americas) தகுதிகாண் சுற்றிலேயே ஆர்ஜன்டீன வீரர் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார். புவனஸ் அயர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கேமன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஹேர்னன் ஃபெனெல்…
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
07 AUG, 2023 | 04:36 PM இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனது ஒய்வை அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். பல வருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்,என அவர்தெரிவித்துள்ளார். இலங்கை அணி நாடு திரும்பினால் கூட நான் அவர்களுடன் இலங்கை வரமாட்டேன், சர்வதேச போட்டிகளில்…
-
- 1 reply
- 420 views
- 1 follower
-