விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுஜன கூட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பை நீடித்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவிருந்த 'Tour de France' சைக்கிள் ஓட்டப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் திங்களன்று பொது நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளானது 2020 ஜூலை மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என்று அறிவித்தார். குறித்த சைக்கிள் ஓட்டப் போட்டியானது ஜூன் 27 ஆரம்பமாகி ஜூலை 19 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது. டூர் டி பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்சில் நடைபெறும் வருடாந்திர ஆண்களின் பல நிலை சைக்கிள் பந்தயமாகும். தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர்களுக்கான ஒரு பிரெஞ்சு சைக்கிள் பந்தயம் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் சுமார…
-
- 0 replies
- 441 views
-
-
யூரோ 2016 : கோல் லைன் டெக்னாலஜி அறிமுகம்; யூஃபா அறிவிப்பு (வீடியோ) யூரோ 2016 கால்பந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 'கோல் லைன் டெக்னாலஜி' நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யூஃ பா அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது ஜெர்மனிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்ட் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டு எல்லைக் கோட்டைத் தாண்டியது. ஆனால் நடுவரால் சரியாக அதனை கணித்து கோல் என்று அறிவிக்க முடியவில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக உக்ரேன் வீரர் ஷிவ்சென்கோ அடித்த கோலும் இதே கோலும் இதே போல் …
-
- 1 reply
- 441 views
-
-
300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் தோனி : ஆசியக் கோப்பை இந்தியாவின் சாதனைகள்! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. அவற்றை பார்ப்போம்... டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் டக்அவுட் ஆன இரண்டாவது கேப்டன் மொர்டஷா. இதற்கு முன் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டியில் போர்ட்டர்ஃபீல்ட் இதே போல் டக் அவுட் ஆகியுள்ளார். இருவருமே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதும் இதில் விஷேசம். ஆசியக் கோப்பையை இரு முறை வென்ற 3வது கேப்டன் என்ற பெயரை தோனி பெறுகிறார். இதற்கு முன் முகமது அசாருதீன், மகிலா ஜெயவர்த்ததேன ஆகியோர் இரு முற…
-
- 1 reply
- 441 views
-
-
லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா? ஜோஸ் மவுரினோ தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்றிரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- சவுதாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக ஜோஸ் மவுரினோ உள்ளார். மான்செஸ்டர்…
-
- 2 replies
- 440 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்ன் விருப்பம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தன்னை அழைத்தால் நிச்சயம் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வேன் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணியுடன் பணியாற்ற எனக்கு மிகவும் விருப்பம். இந்த அணி திறமை மிக்க அணி, பணியாற்ற மகிழ்ச்சியளிக்கும் அணி. இந்திய வீர்ர்களுக்கு நெருக்கடி அதிகம், கோடிக்கணக்கானோர் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே வாய்ப்பு வந்தால் நான் நிச்சயம் இது பற்றி பரிசீலிப்பேன். என் வாழ்க்கையில் நான் எதையும் இதுவரை மறுத்ததில்லை. இந்திய அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் அல்லது ஐபிஎல் அணியை பயிற்சி செய்வதிலாகட்டும்…
-
- 0 replies
- 440 views
-
-
இரட்டை சதம் அடித்தார் ஆம்லா: 552 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா டிக்ளேர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்த்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹஷிம் ஆம்லா 208 ரன்கள் எடுத்தார். அவர் 475 நிமிடங்கள் நின்று 371 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகளுடன் 208 ரன்களை எடுத்து சுலைமான் பென் பந்தில் ஒருவழியாக ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்காவின் வான் ஸில் என்பவரும் 130 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 552 ரன்கள். இந்நிலையில் ஆம்லா டிக்ளேர் செய்தார். நேற்று 141 ரன்களில் இருந்த ஏ.பி.டிவிலியர்ஸ் இன்று 152 ரன்களில் பென் பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தில் மே.…
-
- 2 replies
- 440 views
-
-
கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி சாதிக்க காரணம் என்ன? - கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில், கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி வீர, வீராங்கனைகள் வரலாறு படைத்திருந்தனர். இந்த வெற்றிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த கல்லூரியின் கோலூன்றி பாய்தல் பயிற்றுவிப்பாளர் கோ. கணாதீபன். http://www.thepapare.com/video-all-island-school-games-2019-kanatheepan-kopalan-exclusive-interview-tamil/
-
- 0 replies
- 440 views
-
-
ஜனாதிபதியை விஞ்சவிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம்! இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ரூ.12 கோடியாக உயர்த்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருமானம் ஈட்டும் வாரியங்களில் ஒன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே இதற்குக் காரணமாகும். போட்டி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்ஷர்ஷிப், ஐ.பி.எல் எனப் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது, இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் …
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை அணிக்கு எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு தலைவர்தான் இனிவரும் அனைத்து விதமான போட்டிகளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்பிடிக்கப்படவுள்ளது. அதேநேரம் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸும் உப தலைவராக தினேஷ் சந்திமாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 என 3 வகையான போட்டிகளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்படு வார். இதுதான் எமக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலைவர்களை எடுத்து பார்த்தால் அவர்களிடம் சிறந்த…
-
- 0 replies
- 440 views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி - யார் அந்த பெண்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHAKTIVAHINI ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் 70 வீடுகள் மட்டுமே கொண்ட ஹெசல் கிராமம் பற்றி தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்த கிராமம் பற்றிய பேச்சு இப்போது மேலும் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் 17 வயதான புண்டி சாரு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வளரும் ஹாக்கி வீரர்களில் புண்டி சாருவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிடில்பரி கல்லூரியில் கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். புண்டி சாருவின…
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
யுஎஸ்.- சனிக்கிழமை ஒகையோவில் இடம்பெற்ற ஆர்னொல்ட் விளையாட்டு விழாவில் மனிதனுக்கும் சிறுவர்க்குமான சதுரங்க ஆட்டத்தில் இந்த நிகழ்வு நடந்தது. தலையில் ஒரு ஊதா பூவை அணிந்து கொண்டு எம்மா செங் முன்னாள் body builder-ம் கலிபோர்னியா ஆளுநருக்கும் எதிராக போட்டியில் கலந்து கொண்டாள். ஆர்னொல்ட்டும் ஒரு சதுரங்க ஆர்வலர். செங் யுஎஸ்சில் ஒன்பது வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டாளர்களில் நான்காவதாக கணிக்கப்பட்டவள். ஆத்துடன் ஒகையோவிலுள்ள சகல மாணவர் களிடையேயும் மூன்றாவது தரத்திலும் உள்ளவள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஸ்வார்ஸ்னேக்கர் விளையாட்டை கைவிட்டு விட்டு வேறொரு பிள்ளையுடன் இரண்டாவது விளையாட்டை விளையாட சென்றதால் குறுகிய தாக்க…
-
- 0 replies
- 440 views
-
-
Afghanistan v West Indies - ICC Cricket World Cup 2019 2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய குல்பதின், தனது தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற்றுத்தர முடியாமல் தமது அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனையடுத்து ஏமாற்றமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆல்ரவுண்டர் ரஷீத் கானை அனைத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம் செய்தது. மேலும், குல்பதின் நயிப்புக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆஸ்கர் ஆஃப்கானை அனைத்து மூன்று தரப்பு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவரது தலைமையில் 9 போட்டிகளில் விளையாடிய …
-
- 0 replies
- 440 views
-
-
சாதனை நிலைநாட்டிய ஜொய்சனின் குதிக்காலில் ஐந்து தையல்கள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை நிலைநாட்டிய அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், குதிக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஐந்து தையல்கள் போட நேர்ந்தது. இப் போட்டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது மெத்தையில் சிக்குண்டு குதிக்காலில் காயத்திற்குள்ளானதாக அவரது பயிற்றுநர் பாகீஸ்வரன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 440 views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 440 views
-
-
சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்! கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை எடுத்துள்ளார். 29 வயது கோலி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து மேலும் 350 இன்னிங்ஸ்களை விளையாடி, தற்போது உள்ளதுபோல ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடுகிறபட்சத்தில் சர்வதேச க…
-
- 0 replies
- 440 views
-
-
தொடர் ஊழலின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் தலைவர் கைது December 17, 2015 சர்வதேச கால்பந்து சபையின் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் முன்னாள் தலைவர் ரெய்னால்டோ வாஸ்க்வெஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் ரெய்னால்டோ நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3.20 மணியளவில் கொஸ்டா டெல் சொல் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் ரெய்னால்டோ சரணடைவதற்கு எல் சல்வடோர் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. சட்டவிரோத செயற்பாடுகளுக்காக ரெய்னால்டோ கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் கு…
-
- 0 replies
- 440 views
-
-
கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத…
-
- 4 replies
- 440 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …
-
- 1 reply
- 439 views
-
-
இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள் இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள் சுதந்திரக் கிண்ண T-20 தொடரின் ஆறாவது போட்டியில் பங்களாதேஷ் அணியினர் இலங்கை அணியினை கிண்டல் செய்யும் விதமாக பாம்பு நடனம் ஆடியது, இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தினை விட்டு வெளியேறுவது போன்று அச்சுறுத்தல் விடுத்தது, ஓய்வறைக் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டது போன்றவை கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. இது மாதிரியாக கடந்த காலங்களிலும் இலங்கை அணியுடனும், இலங்கை வீரர்களுடனும் ஏனைய நாட்டு அணிகளும், வீரர்களும் முறுகல் நிலையினை தோற்றுவித்த சம்பவங்கள்…
-
- 0 replies
- 439 views
-
-
ஜந்து நாள் தொடரில் இங்லாந் அணி முதலாவது இனிங்சில் 67 ஓட்டம் all out , ஒரு பலமான அணி இப்படி சுதப்பி விளையாடுவது வெக்கக் கேடு , அவுஸ்ரேலியா இரண்டாவது வெற்றியையும் பெற போகுது , சிமித் அணியில் இல்லாம விளையாடியும் அவுஸ்ரேலியா நல்ல நிலையில் நிக்குது , அவர்களின் வெற்றி உறுதி , அவுசின் பந்து வீச்சை இங்லாந் வீரர்களால் சமாளிக்க முடியல / தடுமாற்றம் நிலைச்சு நின்று விளையாடினம் இல்லை இங்லாந் வீரர்கள் 😉😁😂 /
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
மெத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று, சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்தார். பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிகெட் சபையிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டதாக, மெத்தியூஸ் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/164146/%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9…
-
- 1 reply
- 439 views
-
-
ரொனால்டோ ஹாட்ரிக்: கிளப் உலகக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ஜப்பான் கிளப் அணியை வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை ரியல் மாட்ரிட் கைப்பற்றியது. கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜப்பானில் உள்ள யோகோஹாமாவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட்- ஜப்பானின் கஷிமா அன்ட்லெர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக கஷிமா அன்ட்லெர்ஸ் அணியின் ககு ஷபாசகி அடுத…
-
- 1 reply
- 439 views
-
-
தென்னாப்ப்ரிக்காவின் குவிண்டன் டி காக் உலகின் தலைசிறந்த ஒருநாள், டி-20 மட்டையாளர்களில் ஒருவர். இந்த 2023 உலகக்கோப்பையில் அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அளித்திருக்கிறார். மிகச்சிறந்த ஆட்டநிலையில் உள்ள அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடி, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமையை காரணங்களாக அவர் குறிப்பிட்டாலும் உலக அளவில் நடக்கும் டி-20 தனியார் ஆட்டத்தொடர்களில் ஆடும் விருப்பமும், அதனால் கிடைக்கும் பெருஞ்செல்வமும் ஏற்படும் நேரமின்மையுமே இந்த துரித ஓய்வுக்கு நிஜக்காரணம் என்பது வெளிப்படையானது. ஏற்கனவே இந்த டி-20 கூட்டநெரிசலில் மே.இ அணியின் கணிசமான நட்சத்திர வீரர்கள் தம் நாட்டுக்காக ஆடுவதில்ல என முடிவெடுத்ததில் அந…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் குறும்பட்டியலில் ரொனால்டோ, மெஸி ஐரோப்பாவின் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்கான குறும்பட்டியலில் ரியல் மட்றிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோன வீரர் லயனல் மெஸி ஆகியோர் உட்பட பத்து வீரர்கள் குறும்பட்டியலில் இடம்பெறுகின்றனர். ஐரோப்பாவின் அதி சிறந்த வீரர் விருதை கடந்த வருடம் வென்றெடுத்த லயனல் மெசி இவ் வருடமும் அவ் விருதை வெல்வாரா என்பது உறுதியில்லை. ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் ரியல் மெட்றிட் கழகம் 11ஆவது தடவையாக சம்பியனானபோது அதன் வெற்றியி…
-
- 0 replies
- 439 views
-
-
பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி By Mohamed Arshad - கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் கோலாகலமாக நடந்தேறியது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களின் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார். கடந்த பருவகாலத்தில் ரியல் மட்ரிட்டில் இருந்து பிரிந்து இத்தாலியின் ஜுவன்டஸ் அணிக்காக ஆடி Serie A கிண்ணத்தை வென்று கொடுத்தவரும் போர்த்துக்கல்லின் அணித் தலைவருமாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இம்…
-
- 0 replies
- 439 views
-