Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம் சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சி…

  2. சிந்திக்க முடியாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது: கிரெக் சாப்பலை விளாசிய ‘தாதா’ கங்குலி கங்குலி, கிரெக் சாப்பல். - கோப்புப் படம். | வி.கணேசன். ‘எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ‘தாதா’ கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலை கடுமையாகச் சாடியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக வருவதை பெரிதும் விரும்பியவர் கங்குலி, ஆனால் கங்குலி கேப்டன்சி போனதோடு, அணியிலும் நீடிக்க முடியாத நிலை கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டது. 2005 முதல் 2007 உலகக்கோப்பை வரை …

  3. வவுனியா காத்தார் சின்னக்குளம் அ.த.க.பாடசாலையின் வருடார்ந்த மெய்வன்மைப் போட்டி, பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக காத்தார் சின்னக்குளம் கிராமஅலுவலர் க.தர்சன், சிறப்பு விருந்தினராக பிரதேச்சபை உறுப்பினர் யோகராசா , கெளரவ விருந்தினர்களாக சமாதான நீதவான் ந.ரவீந்திரன் , கங்கேஸ்வரி முன்பள்ளி ஆசிரியை திருமதி டட்லி,ச மூக சேவையாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். …

  4. சின்னச் சின்னதாய் செய்திகள்: ‘2024 ஒலிம்பிக்’ 4 நகரம் விருப்பம் பாரிஸ், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், புதாபெஸ்ட் என நான்கு நகரங்கள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பெருநாட்டின் லிமா நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் விஜேந்தர் போட்டி உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் ஆசிய பட்டத்துக்கான போட்டி இந்தியாவில் வரும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் கலந்துகொள்கிறார். …

  5. சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்? 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAURENCE GRIFFITHS/GETTYIMAGES படக்குறிப்பு, மனத் தடை நீங்கி, மன நலம் காத்து... அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்ததற்காக பாராட்டப்படுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் அணி இறுதிப் போட்டியில் இருந்து பைல்ஸ் வெளியேறிவிட்டார். அமெரிக்க ஒலிம்பிக் அணித் தலைவர், பல ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களும் பைல்ஸின் இந்த முடிவை மனம்திறந்து ஆதரித்துள்ளனர். தனது மன ஆரோக்கிய…

  6. சிம்பாப்வே - இலங்கை 4 ஆவது ஒருநாள் போட்டி : துடுப்பெடுதாடி வருகிறது இலங்கை இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. http://www.virakesari.lk/article/21648

  7. சிம்பாப்வே அணி வீரர் பிரைன் விட்டோரியின் பந்துவீச்சில் சந்தேகம் சிம்பாப்வே அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரி ஐ.சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை - சிம்பாப்வே மோதிய முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் பிரைன் விட்டோரி விதிமுறையை மீறி 15 பாகைக்கும் அதிகமாக கையை மடித்து பந்தை வீசுவதாக போட்டி அதிகாரிகள் சிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் விட்டோரி 52 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார். விட்டோரி இவ்வருடம் ஜனவரியில் பங்களதேஷ் அணிக்கெதிரான டி20 போட்டியில் ஐ.சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவது கண்டறியப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி …

  8. சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் சிம்பாப்வே அணிககி;டையிலான 3, 4, 5 ஆவது போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இலங்கை அணிகுழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் இன்று அறிவிக்கப்பட்ட…

  9. சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி! சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம், சிட்டங்கொங் மை…

  10. சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.. இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில், சிம்பாப்வே அணி 151 ஓட்டங்களால் …

  11. சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ... 1. தனஞ்சய டி சில்வா 2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. உபுல் தரங்க (தலைவர்) 5.குசால் மெண்டிஸ் 6. செஹான் ஜயசூரிய 7. அசேல குணவர்தன 8. சசித்ர பத்திரன 9. நுவான் குலசேகர …

  12. சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட ஆலோசகரானார் மார்வன் சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்கயா நிற்னி சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1981

  13. காயம் காரணமாக சர்கர் விலகல் November 07, 2015 சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர். நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக…

  14. சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளை­யா­டி­ய­தற்­காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்­கத்தொ­கை­யாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்­டங்­களில் விளை­யா­டி­யது. இரு தொட­ரையும் பாகிஸ்தான் கைப்­பற்­றி­யது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்­தா­னுக்கு சென்­றி­ருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் நேரடி தாக்­குதல் நடத்­திய சம்­ப­வத்தை தொடர்ந்து, அங்கு முன்­னணி அணிகள் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றன. பாது­காப்பு அச…

  15. சிம்பாப்வே செல்கிறது இந்தியா மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும். மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது. எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-2…

  16. சிம்பாப்வேயின் துடுப்பாட்ட பயிற்சியாளராக வட்மோர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சிம்பாப்வே அணி இழந்ததால் பயிற்சியாளராக பதயேற்ற 5 ஆவது மாத்திலேயே ஸ்டீபன் மான்கோனோ நீக்கப்பட்டார். உலகக்கிண்ண போட்டி இடம்பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பயிற்சியாளரை நீக்கியதால், அந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோரை புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளரான டக்ளஸ் ஹோண்டா உலகக்கிண்ண போட்டி வரை வட்மோருக்கு துணையாக இருப்பதற்காக அவரது பதவ…

  17. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டு, முக்கோணத் தொடர் நடத்தும் முன்னாயத்தங்களே மேற்கொள்ளப்பட்ட நிலையில் இப்போது டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 29 ம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 6 ம் திகதியும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து …

  18. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் இனிங்ஸால் பங்களாதேஷ் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: சிம்பாப்வே சிம்பாப்வே: 265/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் எர்வின் 107, பிறின்ஸ் மஸ்வெளரே 64, றெஜிஸ் சகபவா 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 4/70, அபு ஜயெட் 4/71, தஜியுல் இஸ்லாம் 2/90) பங்களாதேஷ்: 560/6 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 203, மொமினுல் ஹக் 132, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 71, லிட்டன் தாஸ் 53, தமிம் இக்பால் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஐன்ஸ்லி என்டொல்வு 2/170, சார்ள்டன் ஷுமா 1/85, விக்டர் நயுச்சி 1/87, டொனால்ட் ட்ரிபானோ 1/96, சிகண்டர் ராசா 1/111) சிம்பா…

    • 0 replies
    • 364 views
  19. சிம்பாப்வேயை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான் October 23, 2015 சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 3 இலக்குகளால் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடர் 2:2 என்று சமநிலையாகியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிம்பாப்வேயின் முன்னணி வீரர்கள் எவருமே பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சிப்கபா மட்டும் சிறிது நிதானித்து 26 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் சிம்பாப்வே 82-6 என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அணியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் ரசா. பின்வரிசை வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போக 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சிம்பாப்வே 1…

  20. சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில்…

  21. அன்வர் அலிக்காக ஆமீர் யமின் சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார். ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர். எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்…

  22. சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவராக மத்தியூஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக சுரங்க லக்மால் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அணிவிபரம்-அஞ்சலோ மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா , குசல் மெண்டிஸ் ,கௌஷல் சில்வா ,திமுத் கருணாரத்ன , தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்லா ,ரங்கன ஹேரத் ,டில்ருவான் பெரேரா , லக்ஸன் சண்டகன், கசுன் மதுஷங்க , லஹிரு குமார,லஹிரு கமகே,சுரங்க லக்மால், அசேல குணரத்ன http:/…

  23. சிம்பாவே வீரருக்கு தடை 25-12-2014 சிம்பாவே அணியின் பந்துவீச்சாளர் மல்கொம் வொலர், பந்துவீச முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வொலர், விதிமுறைகளை தாண்டி வீசுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது பந்துவீச்சு பாணியை பரிசோதனை செய்த நிபுணர்கள், அவரின் ஓஃப் ஸ்பின் பந்துவீச்சுக்கள் யாவும் 15 பாகை கோணத்தை விட அதிகமாக இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/136406#sthash.finQ10tv.dpuf

  24. சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - ©AFPPhoto by Vipin Pawar / Sportzpics for BCCI பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு மற்றும் லெண்டில் சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியது. …

    • 0 replies
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.