விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
குத்துச்சண்டையில் வரலாற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது. நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த ப…
-
- 2 replies
- 431 views
-
-
500-வது டெஸ்ட் போட்டியை காண அசாரூதீனுக்கு பிசிசிஐ அழைப்பு அசாரூதீன் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் கேப்டன்களான சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், காந்த், ராகுல் டிராவ…
-
- 0 replies
- 431 views
-
-
இளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Photo Credit: ICC அயர்லாந்து- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் சுழல் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஃப்கா…
-
- 0 replies
- 431 views
-
-
தேசிய விளையாட்டு விழா முப்பாய்ச்சலில் மீண்டும் தங்கம் வென்றார் சப்ரின் By Mohammed Rishad - 45 ஆவது தேசிய விளையாட்டு விழா பதுளையில் நேற்று (27) நிறைவுக்கு வந்தது. போட்டிகளின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். பல முன்னணி வீரர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டிக்கு சீரற்ற காலநிலையால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனினும், விறுவிறுப்…
-
- 2 replies
- 431 views
- 1 follower
-
-
2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்க…
-
- 1 reply
- 431 views
-
-
இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகி வருகின்றன. இதன்படி, இலங்கை அணியும் தயாராகி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக தமிழ்நட்டைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார்.இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சி…
-
- 0 replies
- 431 views
-
-
47 ஆவது மைலோ பாடசாலைகள் நீச்சலில் ஆண்கள் பிரிவில் புனித சூசையப்பர், பெண்கள் பிரிவில் விசாக்கா சம்பியனாகின By DIGITAL DESK 5 14 DEC, 2022 | 10:46 AM (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் நீர்நிலை சங்கத்தினால் கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடத்தப்பட்ட 47ஆவது அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியும் பெண்கள் பிரிவில் விசாக்கா வித்தியாலயமும் ஒட்டுமொத்த சம்பியனாகின. டைவிங் போட்டியில் ஆண்கள் பிரிவில் றோயல் கல்லூரியும் பெண்கள் பிரிவில் பிஷப்ஸ் கல்லூரியும் சம்பியனாகின. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் …
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
பாக். கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா ஷஹார்யர் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யர் கான் கேட்டுக் கொண்டதால் அப்பதவியில் நீடிக்க அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்காக அந்த அணியினர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். சூதாட்ட புகார் காரணமாக 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நில…
-
- 0 replies
- 431 views
-
-
விக்கெட் இழப்பின்றி ஆடி முடித்த நியூஸிலாந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கார்டிப்பில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழங்க இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூஸிலாந்து அணியின் பந்துகளில் திணறிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறியமையினால், இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்…
-
- 0 replies
- 431 views
-
-
பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER படக்குறிப்பு, “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.” - இது தான் தனது தாரக மந்திரம் என்கிறார் பவானி தேவி. 2 மணி நேரங்களுக்கு முன்னர் “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்” தான் சோர்வடையும் போதெல்லாம் இந்த சொற்களை உச்சரித்து உற்சாகமடைவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். வாள்வீச்சு விளையாட்டில் இந்தியாவின் பெயரை, பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி. அவர் தற்போத…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்காவில் வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் கட்டாயம் தென்னாபிரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகளையும் கறுப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவரல்லாத ஏனையோரும் பின்தங்கியுள்ளமையை நிவர்த்தி செய்யுமுகமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில், வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் இடம்பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் நிர்வாக சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு காரணமாக, நிற ஒதுக்கீடென்பது, உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது. இதில், வெள்ளையரல்லாத 6 பேரில் குறைந்தது இரண்டு பேர், நிச்சயமாக கறுப்பினத்தவர்களாக இருக்க வேண…
-
- 0 replies
- 431 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மல்யுத்தப் போட்டி கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு நடத்தும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவுக்கான மல்யுத்தப் போட்டியில் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கப் பதக்கமும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. மல்யுத்தப் போட்டிகள் டொரிங்டன் உள்ளக அரங்கில் கடந்த 2, 3, 4 ஆம் திகதி களில் நடைபெற்றன. இறுதிப் போட்டி களில் நேற்றைய தினம் நடைபெற்றன. மல்யுத்தப் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ். ரூபிகரனுக்கு தங்கப் பதக்கமும் என். பிரகாஷ…
-
- 0 replies
- 431 views
-
-
நாளை பீபா தலைவருக்கான தேர்தல் பீபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை (26), சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது. கடந்த 18 வருடங்களாக, கால்பந்தாட்ட உலகை ஆளும் கூட்டமைப்பின் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், எந்தவொரு பீபா நடவடிக்கையிலும் ஈடுபட எட்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதியீடு செய்யவுள்ளார். மேற்படி பீபா தலைவருக்கான வாக்கெடுப்பில், பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 209 அங்கத்துவ நாடுகளும் தலா ஒவ்வொரு வாக்குகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இரகசிய வாக்களிப்பு நிலையத்தில் அவை தமது வாக்குகளை அள…
-
- 0 replies
- 431 views
-
-
இலங்கை அரங்குகளுக்கு ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் By Mohamed Shibly - இலங்கையின் ஓய்வு பெற்ற ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களை இரண்டு முன்னணி கிரிக்கெட் மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டி அவர்களை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது. இதேநேரம், பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட…
-
- 0 replies
- 431 views
-
-
வடமாகான பாடசாலைகளுக்கு இடையிலான 19வயதின் கீழ் கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரி சம்பியனானது யாழ்இந்துக்கல்லூரியை இறுதி போட்டியில் சந்தித்த யாழ்மத்தி 51-60 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முகநூல் யாழ் மத்திய கல்லூரி
-
- 0 replies
- 430 views
-
-
சாம்பியன்ஸ் டூ சீட்டர்ஸ்... ஆஸ்திரேலியாவுக்கு இந்த அசிங்கம் தேவைதான்! #SAvAUS #Bancroft இது ஒரு போட்டியின் முடிவு மட்டும்தானா..? இல்லை ஒரு தொடரின் முடிவா...? இல்லை... இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா... நேற்று வரை உலக சாம்பியன் பட்டத்தோடு வலம் வந்தவர்கள், இன்று ஏமாற்றுக்கார முத்திரையோடு முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரே ஒரு சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆணிவேரை ஆட்டிவிட்டது. அவர்களுக்கு அவர்களே அசிங்கத்தைத் தேடிக்கொண்டார்கள். சொல்லப்போனால், இது அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான். டி காக் vs வார்னர், லயான் - டி வில்லியர்ஸ், ரபாட…
-
- 0 replies
- 430 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார். தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார். 24 சதங்கள் இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும…
-
- 3 replies
- 430 views
- 1 follower
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தடையை நீக்ககோரி மனு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின் மேலாளர் ஜோர்ஜ் ஜான் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிகாரி ஒருவர் செய்த தவறுக்காக அணியை முடக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் தடையால் முக்கிய வீரர்கள் அணியை விட்டு சென்றுவிடுவார்கள் என்றும் வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டுவருவது கடினமானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த ஆர்.எம் லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகளுக்கு போட்டியில் …
-
- 0 replies
- 430 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு! நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்ட சில தினங்களுக்குள் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கிரான்ட் எலியாட் தனது ஒருநாள் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மற்ற வகையான (டெஸ்ட், 20 ஓவர்) போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருநாள் உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி…
-
- 0 replies
- 430 views
-
-
டெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் சாதிப்பது கடினம்: கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்பு போல் டெஸ்ட் போட்டியில் சாதிப்பது கடினம் என்று முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட ஊதிய பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணி முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது சாதிப்பது கடினம். தற்போது இளம் வீரர்கள் 20 ஓ…
-
- 0 replies
- 430 views
-
-
Share0 அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் பாசையூர் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயம் ஒரு தங்கப் பதக்கம், இரு வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பெற்றனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் பாசையூர்…
-
- 0 replies
- 430 views
-
-
51 வயதிலும் அதே ஸ்விங்: ஷோயப் மாலிக்கை 2 ரன்களில் வீழ்த்திய வாசிம் அக்ரம் ஷோயப் மாலிக்கை வீழ்த்திய மகிழ்ச்சியில் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகியிருக்கும். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட அவர் தன் வயதையும் முறியடித்து 51 வயதில் தன் பழைய ஸ்வின் பவுலிங்கை வெளிப்படுத்தி தற்போது ஆடிவரும் ஷோயப் மாலிக்கை எட்ஜ் செய்ய வைத்தது, ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான முல்டான் சுல்தான் அணிக்காக காட்சிப் போட்டி ஒன்றில் ஆடினார். அப்போது பந்து வீசிய வாசிம் அக்ரம் தன் 51 வயதையும் பொருட்படுத்தாம…
-
- 1 reply
- 430 views
-
-
பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகள்: காதல் களமானது ஒலிம்பிக் மைதானம் ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை. வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார். …
-
- 1 reply
- 430 views
-
-
அபாரமாக வென்றது பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த லீக் போட்டியில் பார்சிலோனா - ஸ்போர்டிங் கிஜோன் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அந்த அணியின் லூயிஸ் சுவாரஸ் (63, 74, 77, 88வது நிமிடம்) 4 கோல் அடித்து அசத்தினார். நெய்மர் தன் பங்கிற்கு (85வது நிமிடம்) ஒரு கோல் அட…
-
- 0 replies
- 430 views
-
-
எம்.சி.சி உரையாற்றுகிறார் மக்கலம் இவ்வாண்டுக்கான மெரிலிபோன் கிரிக்கெட் கழக(எம்.சி.சி) கிரிக்கெட்டின் உணர்வுக்கான விரிவுரையை, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் ஆற்றவுள்ளார். எம்.சி.சி-இன் தலைமையகமான லோர்ட்ஸ் மைதானத்தில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்த உரை இடம்பெறவுள்ளது. 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எம்.சி.சி உரை, றிச்சி பனர், தெஸ்மொன்ட் துட்டு, இம்ரான் கான், குமார் சங்கக்கார, மார்ட்டின் குரோ, இயன் பொத்தம் ஆகியோரால், இதற்கு முன்னர் ஆற்றப்பட்டிருந்தது. விரைவில் ஓய்வுபெறவுள்ள பிரென்டன் மக்கலம், நியூசிலாந்து அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அவ்வணியைப் பலமான அணிகளுள் ஒன்றாக மாற்றினார் எனப் புகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 0 replies
- 430 views
-