விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
செல்சியில் நகைச்சுவை, கேலிக்குத் தடை இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களாக செல்சி அணி, இப்பருவகாலத்தில் மோசமான தொடக்கமொன்றைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியின் பயிற்சிகளின் போது நகைச்சுவையான கேலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த 29 வருடங்களில், செல்சி அணி சந்தித்த மிக மோசமான பருவகால ஆரம்பத்தையடுத்தே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் 5 போட்டிகளில், வெறுமனே 4 புள்ளிகளை மாத்திரமே செல்சி அணி பெற்றுள்ள போதிலும், நெருக்கடி நிலைக் கூட்டங்களுக்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் அக்கழக வட்டாரங்கள் அறிவிக்கின்றன. செல்சியின் முகாமையாளராக மொரின்கோ பதவியேற்றுக் கொண்ட பின்னர், பயிற்சிகளின் போது …
-
- 0 replies
- 371 views
-
-
செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட் By Mohamed Shibly - செல்சி அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் இலங்கை நேரப்படி இன்று (18) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் அந்த அணி 3 புள்ளிகளாலேயே பின்தங…
-
- 0 replies
- 362 views
-
-
செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி! “அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல். பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரி…
-
- 0 replies
- 514 views
-
-
செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR எட்டு பார்சிலோனா வீரர்கள் கோல்போஸ்ட் அருகில் டிஃபண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த மிட்ஃபீல்ட் யூனிட்டும் பாக்ஸுக்கு அருகில்தான் இருந்தது. வில்லியனின் காலில் பந்து. ஏற்கெனவே சிலமுறை பார்சிலோனா வீரர்களை ஏமாற்றி கோல் பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார். அதனால், அனைத்து பார்கா வீரர்களும் கீழே இறங்கி ஆடினார்கள். இடதுபுறமிருந்து வலது நோக்கி முன்னேறுகிறார் வில்லியன். பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷாட் அடிக்கிறார். தன் நீண்ட கால்கள் கொண்டு அதைத் தடுக்க முற்படுகிறார் செர்ஜியோ பொஸ்கிட்ஸ். ஆனால், முடியவில்லை. …
-
- 0 replies
- 229 views
-
-
சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான இலங்கையருக்கு தங்கப்பதக்கம்! அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், ‘நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார். தனக்கு 23 வயதாக இருந்தபோத…
-
- 12 replies
- 1.4k views
-
-
செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை! இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவு…
-
- 0 replies
- 367 views
-
-
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை 12 MAR, 2024 | 11:47 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று …
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை …
-
- 0 replies
- 546 views
- 1 follower
-
-
செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட நிறைவு விழாவில் பதக்கங்களுடன் குதூகலித்த இளம் வீரர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@FIDE_CHESS படக்குறிப்பு, முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். …
-
- 3 replies
- 446 views
- 1 follower
-
-
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டம…
-
- 1 reply
- 554 views
- 1 follower
-
-
சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொ…
-
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
சேத்தன் ஷர்மா ஸ்டிங் ஆபேரேஷன்: இந்தியக் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அவரை விரட்டிய ஃபுல்டாஸ் ஆதேஷ்குமார் குப்தா விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒரு தனியார் சேனலின் ஸ்டிங் நடவடிக்கையில் சேத்தன் ஷர்மா, விராட் கோலி மற்றும் செளரவ் கங்குலி இடையேயான உறவு மற்றும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசுவதைக் காண முடிந்தது. கடைசியில் எதிர்பார்த்தது நடந்தது. இந்திய கிரிக்கெட் …
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
சேனநாயக்கவிற்கு பந்து வீச ஐ.சி.சி. அனுமதி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. சச்சித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சுப் பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அதிருப்தியேற்பட்டதையடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் சேனநாயக்க மீள்பரிசோதனை க்குட்படுத்தப்பட்டார். இதன்போது பந்துவீச்சுப் பணி விதிமுறைகளுக்குட்பட்டிருந்ததையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/12/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%A…
-
- 0 replies
- 329 views
-
-
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் யாழ். மாவட்டப் பாடசாலைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். …
-
- 0 replies
- 335 views
-
-
சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும், நிகழ்த்தப்பட்டதுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன் ராஜ், 15 வயதுக்கு உட்ப…
-
- 0 replies
- 595 views
-
-
சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே, கண்டிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகள் நினைவிற்கு வரும்.ஃபைனலில் கோப்பை வென்றது ஒருபுறம் என்றால், அந்த பவுல் அவுட் போட்டி வேற லெவல். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனக்குப் பிடித்த போட்டி என பவுல் அவுட் போட்டியைத்தான் குறிப்பிட்டு இருந்தார் முன்னாள் வீரர் சேவக், "இரு பெரும் அணிகள் மோதும் முதல் போட்டி, இப்படி ட்ராவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.போட்டிக்கு முன்னராகவே பலமுறை ஸ்டம்ப்புகளை அடித்து பயிற்சி செய்துகொண்டு இருந்தோம். நான், உத்தப்பா, ஹர்பஜன் மூவரும் அதிகமுறை பவுல் அவுட்…
-
- 0 replies
- 605 views
-
-
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தென்னாபிக்க இந்திய அணிகள் டெஸ்ட் போட்டியில் முன்றாம் நாளான இன்று சேவாக் 300 ஓட்டங்களை கடந்தார் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 540 ஓட்டங்களை பெற்றது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் சளைக்காமல் ஆடித்தாட ஆரம்பித்து 102 ஓவர்களில் 1 விக்கட்டை இழந்து 455 ஓட்டங்களை தற்சமயம் பெற்றுள்ளது. சேவாக் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்.
-
- 3 replies
- 1.4k views
-
-
சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் பேசமாட்டார்: சச்சின் ருசிகரப் பதிவு படம். | விபின் பவார். இப்போது ட்விட்டரில் கலக்கி வரும் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உண்மையில் ஒரு கூச்ச சுபாவமான மனிதர், அதிகம் பேச மாட்டார் என்று கூறினால் அது இப்போது நம்பும்படியாக இருக்காது, ஆனால் கூட இருந்த சச்சின் சேவாக் பேசமாட்டார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், சேவாக் இருவரும் தங்களது கால பழக்கங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். தொடக்க வீரர்கள் களத்தில் மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் தங்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம், இதே போல்…
-
- 0 replies
- 456 views
-
-
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட் சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து ம…
-
- 0 replies
- 391 views
-
-
சைக்கில் ஓட்டியபடி 'ரூபிக்ஸ் கியூப்' விளையாட்டில் சாதனை! (வீடியோ) சாதனை புரிவதே கடினம்; அதிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது என்பது இன்னும் கடினம். அந்த வகையில், சி எம் சி மருத்துவக்கல்லூரியில் Msc மெடிக்கல் ஃபிசிக்ஸ் பயின்று வரும் வேலூரை அடுத்து பாகாயத்தை சேர்ந்த வின்பிரண்ட்ஸ் மைக்கேல் என்பவர், 'ரூபிக்ஸ் கியூப்' என்ற விளையாட்டில், உலகளவில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் பெங்களூரை சேர்ந்த ஒருவர், 2014-ல் ரூபிக்ஸ் விளையாட்டில், 1 மணி நேரத்தில் 66 முறை செய்ததே கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம் பிடித்தது. இந்த போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால், 1 மணி நேரத்தில் 30 முறை செய்து முடிக்க வேண்டும். ஆனால் பாகாயம் மைதானத்தில்,…
-
- 0 replies
- 578 views
-
-
சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...! முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம்…
-
- 0 replies
- 598 views
-
-
சைமண்ட்சுக்கு மனநல பாதிப்பு? : சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை சர்ச்சை நாயகன் சைமண்ட்ஸ், மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மன நல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவது அவருக்கு உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் மருத்துவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது.…
-
- 4 replies
- 2.1k views
-
-
சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…
-
- 0 replies
- 396 views
-
-
சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி Courtesy - Getty Images ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது. நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர்…
-
- 0 replies
- 423 views
-
-
சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்காவுக்கு அந்நாட்டு அரசு தடை! 2016-04-27 10:55:28 இன ஒடுக்கல் காரணமாக பல்லாண்டுகளுக்கு முன்னர் 21 வருடத் தடைக்கு உட்பட்டிருந்த தென் ஆபிரிக்காவுக்கு இப்போது மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. கிரிக்கெட் நிருவாகத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளுக்கு அமைய மாற்றங்களை செய்யத் தவறியதால் கிரிக்கெட் தென் ஆபிரிக்காவுக்கு (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உயர்மட்டக் குழுவினரால் அமைச்சர் மட்ட சுயாதீனக் …
-
- 0 replies
- 441 views
-