விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
கேப்டனாகவும் வீரராகவும் பங்களிப்பு செய்ய தோனியிடம் இன்னமும் திறமை உள்ளது: மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். தொடர்ந்து 3-வது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து தோனியின் கேப்டன்சி பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவரிடம் இன்னமும் அணியை வழிநடத்தவும் வீரராக பங்களிப்பு செய்யவும் திறமை உள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். சிட்னியில் இது குறித்து கிளார்க் கூறும்போது, “தோனியிடம் இன்னமும் நிறைய கிரிக்கெட் திறன் மீதமுள்ளது. அவர் விரும்பினால் கேப்டனாகத் தொடரலாம் ஏனெனில் அதற்கான உரிமையை அவர் வென்றெடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கேப்டன்சியில் சிறந்து விளங்குவதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணி நீண்ட காலம் வெற்றிப்…
-
- 0 replies
- 382 views
-
-
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை அறிவிப்பு 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும். இதில் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் துபாயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி அரங்கேறவுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இறுதியாக இவ்விரு அணிகளும் 2019 இல் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஒன்றையொன்று எதிர்த்து ஆடியது. ஐ.சி.சி. செவ்வாய்க்கிழமை 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணையை அறிவித்ததால் போ…
-
- 0 replies
- 432 views
-
-
சச்சின், டிராவிட் அபார சதம்-புதிய உலக சாதனை வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே. கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிரா…
-
- 0 replies
- 670 views
-
-
லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட் ரொனால்டோ, கரேத் பேலேயின் சிறப்பான ஆட்டத்தால் டெபோர்டிவோ அணியை 7-1 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட். #Laliga #garethBele #Ronaldo #realMadrid லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் புகழ்வாய்ந்த ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மைதானத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண…
-
- 0 replies
- 265 views
-
-
கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து! இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 313 views
-
-
இங்கிலாந்து ‘த்ரில்’ வெற்றி: ஜோஸ் பட்லரின் அற்புத சதத்தால் ‘வொயிட்வாஷ்’ ஆனது ஆஸி சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் - படம்உதவி: ஐசிசி ட்விட்டர் ஜோஸ் பட்லரின் பொறுப்பான சதத்தால் மான்செஸ்டரில் நேற்று நடந்த 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 5-0 என்று ‘வொயிட்வாஷ்’ செய்தது இங்கிலாந்து அணி. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்து (க்ளீன்ஸ்வீப்) தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந…
-
- 0 replies
- 355 views
-
-
வீரர்களின் காயத்தால் சிக்கலில் தவிக்கும் அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அண்மித்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள முன்னணி வீரர்களின் காயம் காரணமாக பல அணிகளும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிலும் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலிய அணி பல சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகிறது. 9 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சைமன்ட்ஸுக்கு கொமன்வெல்த் முக்கோணத்தொடரின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தசைநார் கிழிந்து விட்டதால் அவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உலகக் கிண்ண தொடக்க போட…
-
- 0 replies
- 1k views
-
-
இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளும், கேப்டன் கோலியின் அணித்தேர்வும் கேள்விக்குள்ளாகியுள்ளன. "வீரர்களைத் தேர்வு செய்ததில் கொஞ்சம் தவறுகள் நிகழ்ந்துவிட்டன" என்று லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு தன் தவறை ஓப்புக்கொண்டார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. அடுத்த போட்டிக்கு முன் அவர் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், மாற வேண்டியது அவரது அணுகுமுற…
-
- 0 replies
- 284 views
-
-
உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது? உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த பிறகு. | படம்: ராய்ட்டர்ஸ். 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட் 100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார்.…
-
- 0 replies
- 346 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி March 20, 2019 இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்ப…
-
- 0 replies
- 460 views
-
-
ஆவேசமடைந்தார் இசாந்த், அதனால் வெற்றி பெற்றுக் கொடுத்தார்: அஸ்வின் இசாந்த் சர்மா எல்லை மீறியிருக்கலாம் ஆனால் பாடம் கற்றுக் கொள்வார்... என்று அஸ்வின் தெரிவித்தார். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஆவேசப்போக்கினால் ஒரு போட்டி தடை செய்யப்பட்ட இசாந்த் சர்மா, நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் கூறியதாவது: "ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் இருப்பதே நல்லது. கிரிக்கெட் ஆடும் அனைவருமே ஆக்ரோஷமாக ஆடவே விரும்புவர். சிலர் உள்ளார்ந்து ஆவேசமாக இருப்பர், சிலர் வெளிப்படையாக ஆவேசம் காட்டுவர். ஆனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், பாடம் கற்றுக் கொள்வது அவசியம். இசாந்த் ஆக்ரோஷமடைந்தார், அதனால் நமக்கு போட்டியை …
-
- 0 replies
- 723 views
-
-
இறுதி வரை போராடிய முஷ்பிகுர் ! அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது. 382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடு…
-
- 0 replies
- 874 views
-
-
இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்லாமையினால் விரக்தியடைந்துள்ளாராம் அந்த அணியின் பயிற்சியாளர் சிம் மன்ஸ். இந்த இருவரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்டரும் ஆதரவாக இருக்கிறா ராம். விரைவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யஇருக்கிறது. இந்த தொடரில் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்இ வெய்ன் பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகியோரை சேர்த்தால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வலுவானதாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறி…
-
- 0 replies
- 306 views
-
-
லோட்ஸ் தரப்படுத்தலில் மத்தியூஸ் இடம்பிடித்தார் December 15, 2015 லோட்ஸ் மைதான நிர்வாகம் இந்த வருடத்துக்கான சிறந்த 20 வீரர்களின் தரப்படுத்தலில் மத்தியூஸிற்கும் இடம்கொடுத்துள்ளது. லோட்ஸ் மைதானம் வருடாவருடம் சிறந்த இருபது வீரர்களைத் தெரிவுசெய்து அவர்களை பட்டியல் படுத்தும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான பட்டியலில் மத்தியூஸிற்கு 9ஆவது இடத்தை வழங்கியுள்ளது. ஒருநாள் ஆட்டங்களில் 3ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 100 இலக்குகள் என்ற மைல் கல்லை மத்தியூஸ் எட்டியிருந்தார். இந்த பெறுபேற்றை எட்டும் 4ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். இதுவே அவருக்கு 9ஆவது இடத்தை வழங்க பிரதான காரணம் என்று லோட்ஸின் தெரிவிக்குழு அறிவித்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 332 views
-
-
விளையாட்டு செய்தித்துளிகள்: விராட் கோலி உழைப்பு # ஒரு கிரிக்கெட் வீரராக எனது முன்னேற்றத்திற்காக நான் கடினமாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். ஆடுகளத்தில் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். 7 ஆயிரம் ரன்னை அதிகவேகமாக கடக்க வேண்டும் என திட்டமிடவில்லை. என்னுடைய திட்டம் எல்லாம் அதிக அளவு ரன்கள் குவிக்க வேண்டும், அதன்மூலம் அணிக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதுதான். நான் சாதனையை எண்ணவில்லை. ஆனால், கடவுள் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்று விராட் கோலி தெரிவித்தார். # மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி பினாங்கு நகரில் இன்று தொடங்குகிறது. பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சிறிது ஓய்வுக்கு ப…
-
- 0 replies
- 316 views
-
-
சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கம் இந்தியாவுக்கு வெள்ளி [25 - May - 2008] மலேசியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கப் பதக்கமும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய ஹொக்கி நிர்வாகத்தில் திகழ்ந்த நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த நிர்வாகம் திடீரெனக் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டு முதன்முதலில் நடைபெற்ற சர்வதேச ஹொக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டி பற்றி புதிய இந்திய ஹொக்கி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; "சிறந்த இளம் ஹொக்கி வீரர்கள் இருந்தும் முன்னைய நி…
-
- 0 replies
- 805 views
-
-
ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில அணிக்கெதிரான போட்டி ஆட்டத்தில் தொடர்ந்து ஓட்டங்கள் இல்லாமல் பந்தெறிவதில் ஒரு சாதனை புரிந்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றிப்பதினான்கு நிமிடங்கள் நட்கரிணி ஆங்கிலேய ஆட்டக்காரர்களான பிரயன்பாவூலுசுக்கும் கென் பாரிங்டனுக்கும் எதிராகப் பந்து வீசினார் என்று நினைக்கிறென். நட்கரிணி வீசிய சுழல் பந்தில் அவர…
-
- 0 replies
- 850 views
-
-
சச்சின் டெண்டுல்கர் ஒரு பொய் சொல்லி. மிகவும் மோசமான ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த கிரிக்கெட் வீரரையும் முழு மனதோடு அங்கீகரிக்காதவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பது உலகறிந்த உண்மை. தங்களை விட சிறந்த முறையில் விளையாடும் பிற நாட்டு அணியினரை மட்டம் தட்டுவதும், தங்கள் நாட்டுக்கு அவர்கள் விளையாட வரும்போது முடிந்தவரை கேவலப்படுத்தி அனுப்பி வைப்பதும் அவர்களது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி. கடந்த கால வரலாறுகள் இதை மெய்ப்பித்துள்ளன. இந்த நிலையில் உலகின் தலை சிறந்த வீரர்கள் அனைவராலும் புகழப்படும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்திய கிரிக்கெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிரிக்கெட்: ரிவர்ஸ் ஸ்விங் - கலையும், அறிவியலும் இணைந்த ரகசியம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால், பந்தை எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய முதல் வீரராக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டோம் சிப்லே அறியப்படுகிறார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் நான்காவது நாளில் இந்த சம்பவம் நடந்தது. ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டோம் கவனக்குறைவாக தனது எச்சிலை கொண்டு பந்தை பளிச்சிட செய்தார். தனது விதிமீறல் குறித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உணர்ந…
-
- 0 replies
- 645 views
-
-
வங்கதேச பந்து வீச்சு பயிற்சியாளர் வால்ஷ் கோர்ட்னி வால்ஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ், வங்க தேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் முன்னரே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வால்ஷ் வரும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பந்துவீச்சு பயிற்சியாளராக நீடிப்பார். டெஸ்ட் போட்டிகளில் 519 விக்கெட்களும் ஒருநாள் போட்டியில் 217 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள வால்ஷ், 2001-ம் ஆண்டு …
-
- 0 replies
- 427 views
-
-
ஐ.எஸ்.எல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சச்சின் அணி #KeralaBlasters இரண்டு மாத ஐ.எஸ்.எல் கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்றைய தினம் கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இதையடுத்து இன்றைய தினம் கேரளா - டெல்லி அணிகளிடையேயான அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்று நடந்தது . ஐ.எஸ்.எல் லீக்கை பொறுத்தவரையில் ஒரு அணி இரண்டு சுற்று போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். ஒரு போட்டி சொந்த ஊரிலும், இன்னொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாட வேண்டியதிருக்கும். இரண்டு சுற்றிலும் சேர்த்து எந்த அணி அதிக கோல் அடித்திருக்கிறது. எதிரணியின் ஊரில் விளையாடும்போது எவ்வளவு கோல்களை ஒரு அணி அடித்திருக்கிறது என…
-
- 0 replies
- 608 views
-
-
மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட் மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆலோசகராக என்னை நியமித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஐ.சி.சி. நிகழ்வொன்றுக்கு நான் ஆலோசகராக இருப்பதென்பது விசேடமானது. இலங்கையில் மிகவும் பெறுமதியான பயிற்சியாளர்கள் அணியொன்று…
-
- 0 replies
- 253 views
-
-
தேசிய கபடி போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்கள் கெளரவிப்பு ஜனாதிபதி கனவுடன் உள்ள நாமல் ராஜபக்ஸவின் விளையாட்டுத்துறை தொடர்பான வாக்கெடுப்பின்போது வட, கிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்களை அனுப்பக்கூடிய கழகம் ஒன்றை உருவாக்குமாறு அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேசிய கபடி போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட …
-
- 0 replies
- 224 views
-
-
இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் இத்தாலி பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். மோன்ஸா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.72 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் முன்னாள் சாம…
-
- 0 replies
- 178 views
-
-
பெடரருக்கு அதிர்ச்சியளித்த டெல் போட்ரோ: அரையிறுதியில் நடாலைச் சந்திக்கிறார் யு.எஸ். ஓபன் காலிறுதியில் டெல் போட்ரோவிடம் தோல்வியடைந்த பெடரர். - படம்.| ஏ.பி. யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்டின் டெல் போட்ரோ தகுதி பெற்றார், இன்று நடந்த காலிறுதியில் ரோஜர் பெடரரை 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். ரபேல் நடால் தான் பெடரருக்காகக் காத்திருப்பதாக பேட்டி அளித்திருக்கும் சமயத்தில் யுவான் டெல் போட்ரோ அபாரமான ஆட்டத்தில் பெடரரை வெளியேற்றி நடாலைச் சந்திக்க தயாராகியுள்ளார். யுவான் டெல் போட்ரோ 2009-ல் ந…
-
- 0 replies
- 277 views
-