விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC By Mohamed Azarudeen சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டு வரும் நோக்குடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது (MCC) பாகிஸ்தான் சென்று அங்கே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடவிருக்கின்றது. MCC என அழைக்கப்படும் இந்த மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது கிரிக்கெட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் தாய்க்கழமாகும். இந்த கழகத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவே, பாகிஸ்தான் சென்றுள்ள MCC அணியின் தலைவராகவும் செயற்படு…
-
- 0 replies
- 371 views
-
-
சிறையிலும் கால்பந்து தொடரை வென்ற ரொனால்டினோ By Mohamed Shibly பரகுவே சிறையில் இருக்கும் பிரேசில் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ கைதிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் ஒன்றில் விளையாடி தனது அணி கிண்ணத்தை வெல்ல உதவியுள்ளார். 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்த 39 வயதுடைய ரொனால்டினோ மோசடி ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக தற்போது பரகுவே தலைநகருக்கு வெளியில் இருக்கும் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்ட சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (13) சிறைக்குள் நடைபெற்…
-
- 0 replies
- 626 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற சீன வீராங்கனை ஈ ஷிவுக்கு, அதே நாட்டை சேர்ந்த “டைவிங்” வீரர் குயின் கை பதக்க மேடையில் வைத்து திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இரத்தினத்திலான மோதிரம் ஒன்றை ஈ ஷிவுக்கு அணிவித்து தனது திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இதனை ஈ ஷிவும் ஏற்றுக்கொண்டு தனது விருப்பத்தினையும் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/othersp…
-
- 0 replies
- 495 views
-
-
இரகசியங்களை வெளியிடுவதும் வெளியிடாததும் டில்ஷானின் விருப்பம் திலகரத்ன டில்ஷான் கருத்துக்களை வெளியிடுவதும் வெளியிடாமலிருப்பதும் அவருடைய விருப்பம். அதில் அமைச்சரான நான் தலையிட முடியாது. அதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நான் கவனம் செலுத்துவேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வீரகேசரிக்கு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு வீரகேசரி விளையாட்டுப் பிரிவுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியின்போது, டில்ஷான் தனக்கு நேர்ந்த அவலங்களை வெளியிடப்போகிறாராமே என்று அவரிடம் கேட்டதற்கு, க…
-
- 0 replies
- 377 views
-
-
சங்காவின் தலைமையில் களமிறங்கும் மஹேல பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இம்முறை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்நிலையில் கராச்சி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரராகவும், அணியின் ஆலோசகராகவும். சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்காரவுடன் இலங்கை அணியின் மற்றுமொரு ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில்…
-
- 0 replies
- 532 views
-
-
ஆங்கிலேய ப்றிமியர் லீக் போட்டியில் செல்சி கழகம் 12 ஆவது நேரடி வெற்றி 2016-12-28 10:56:27 இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஆங்கிலேய ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் செல்ஸி விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை ஈட்டி சாதனை நிலைநாட்டியுள்ளது. போர்ன்மௌத் கழகத்திற்கு எதிராக திங்களன்று நடைபெற்ற ப்றீமியர் லீக் போட்டியில் 3 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியதன் மூலம் இந்த சாதனையை செல்சி கழகம் படைத்தது. இப் போட்டியில் ஒரு தட்டு, இரண்டு தட்டுகள் என்ற பந்து பரிமாற்றங்களுடன் மிக வேகமாக விளையாடிய செல்சி கழகம் எதிரணியை மாத்திரம…
-
- 0 replies
- 283 views
-
-
டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா? அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார். 23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்…
-
- 1 reply
- 556 views
-
-
ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 22 - ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரேச்சலை ஏமாற்றி கோல் அடித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. …
-
- 1 reply
- 585 views
- 1 follower
-
-
மிகச் சிறிய நாடாக சாதனையுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற ஐஸ்லாந்து கடந்த ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து, அதற்கு 18 மாதங்களின் பின்னர் தற்பொழுது உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முதல் முறை தகுதி பெற்றுள்ளது. கொசோவோ அணியுடன் திங்களன்று (09) நடந்த போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலமே ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்துக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. ஐரோப்பாவின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் I குழுவில் ஆடும் ஐஸ்லாந்து, அந்த குழுவில் முதலிடத்தை உறுதி செய்யவே கொசோவோ அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் கில்பி சிகட்சன் மற்றும் இரண்டா…
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட்போட்டிகளில் இனிமேல் நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக மட்டுமே(வேறு எதிலும் கவனம் செலுத்தாது) செயற்படுவார் எனஅறியக்கிடைக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸ், முன்னாள் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியில் விளையாடியிருந்த போது ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அணியின் மத்திய வரிசையினைப் பலப்படுத்தும் வீரர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார். எனினும் சங்கா, மஹேல ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணியில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான மெ…
-
- 0 replies
- 293 views
-
-
உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரிமாணம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற…
-
- 28 replies
- 2.4k views
-
-
நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் அந்த போட்டிக்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சகலதுறை வீரரான அவர் போட்டிகளை வெற்றிபெறச் செய்பவராக வருவார் என்ற நம்பிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் திசர பெரேராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டபோது அது குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தவறாக இருந்தது. அப்போது அணியில் அவரது இடம் பற்றி கேள்வி எழுந்…
-
- 0 replies
- 215 views
-
-
ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினால் இந்தியாவை நிறுத்த முடியாது: ஷோயப் அக்தர் இந்தியா உலக சாம்பியன்கள் என்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக வீசுவது முக்கியம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார். "ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை 2015 உலகக் கோப்பைப் போட்டிகளை மனதில் கொண்டு பயிற்சியில் ஈடுபடச்செய்ய வேண்டும். இந்த மூவரும் உடற்தகுதி அளவில் கட்டுக்கோப்புடன் முழுதும் ஃபிட் என்றால், இவர்கள் சிறப்பாக விசினால் இந்திய அணியை யாராலும் நிறுத்த முடியாது. உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு ஒருமாதம் முன்பாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு அளிப்பது அ…
-
- 0 replies
- 461 views
-
-
FIFA உலகக் கிண்ண வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் -1 By DIGITAL DESK 2 18 NOV, 2022 | 03:41 PM (நெவில் அன்தனி) சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் வேறொன்றையும் ஒப்பிடமுடியாது. ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி உலகக் கிண்ணப் போட்டிகளின் தரத்தை ஒத்ததாக இருக்கின்ற போதிலும் உலகக் கிண்ணத்துக்கு உள்ள மவுசை அது பெற்றுவிட முடியாது. கத்தாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள 32 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றின்போது கால்பந்தாட்டம் எந்தளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்பதை காணக்கூடியத…
-
- 2 replies
- 388 views
- 1 follower
-
-
தமிழில் ட்வீட் செய்து ஹர்பஜன் சிங்கை கிண்டல் செய்த சச்சின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின், ஹர்பஜனுக்கு சற்று வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறிய ஹர்பஜன் அதன் பின்னர் தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழில் பதிவிட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஹர்பஜனை தமிழ்ப் புலவர் என்று அழைத்து வ…
-
- 3 replies
- 801 views
- 1 follower
-
-
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்- ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளினார் செபஸ்டியான் வெட்டல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் லெவிஸ் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். #BritishGP ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ பந்தயம் 21 சுற்றுகளாக (கிராண்ட் பிரிக்ஸ்) நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். அதன்படி 10-வது சுற்று பிரட்டனில் இன்று நடைபெற்றது. இது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் இதற்கான தகுதிச் சுற்று வெள்ளிக்கிழமை மற்றும் சன…
-
- 0 replies
- 231 views
-
-
ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அம்பயராக இருந்த ஹிலல் ஆஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார். இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிலல் ஆஸ்கர்(55). இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான அஷ்தோதில் தேசிய லீக் சீசனின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஹிலல் அம்பயராக இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து வேகமாக வந்து ஹிலலின் தலையில் பட்டது. இதில் கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மறைவ…
-
- 2 replies
- 759 views
-
-
விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் அரையிறுதியில் இலங்கை விழிப்புலனற்றோர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் அரை யிறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு இலங்கை விழிப்புலனற்றோர் அணி தகுதிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்க விழிப்புலனற்றோர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்றதை அடுத்து இலங்கை விழிப்பலன்றோர் அணி உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து விழிப்புலனற்றோர் அணியை 90 ஓட்டங்களால் இலங்கை விழிப்புலனற்றோர் அணி வெற்றிகொண்டிருந்தது. அப் போட்டியில் இலங்கை விழிப்புலனற்றோர் அணி சார்பாக சந்த…
-
- 0 replies
- 464 views
-
-
உலக நீச்சல் சாம்பியன் போட்டி 7 தங்கம் வென்று பெல்ப்ஸ் சாதனை உலக நீச்சல் சாம்பியன் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 7 தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். உலக நீச்சல் சாம்பியன் போட்டி அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் 8 பந்தயங்களில் பங்கேற்றார். நேற்று முன்தினம் ஆண்களுக்கான 400 மீற்றர் தனிநபர் மெட்லேவில் 4:06.22 விநாடியில் இத் தூரத்தை கடந்து தனது பழைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். இது அவர் இந்தப் போட்டியில் வென்ற 7 ஆவது தங்கப்பதக்கமாகும். இதன் மூலம் பெல்ப்ஸ் 2001 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடந்த உலகக் கிண்ண சம்பியன் ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்…
-
- 15 replies
- 2.2k views
-
-
T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியைய…
-
-
- 121 replies
- 9.4k views
- 1 follower
-
-
கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்! தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நாளை சிலியில் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் சிலி அணி முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. 44வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 3 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் சிலி,மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா,பாரகுவே, ஜமைக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா அணிகள் 'சி' பிரிவில் உள்ளன. இதில் மெக்சிகோவும் ஜமைக்காவும் வட மத்திய அ…
-
- 31 replies
- 2k views
-
-
மொஹமத்ஹவீஸின் பந்துவீச்சு முரணானது என அறிவிப்பு இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியின்போது மொஹமத் ஹவீஸின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என மத்தியஸ்தர்களால் முறையிடப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் முகாமைத்துவம் உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஹவீஸ் 10 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவை விதிகளின் பிரகாரம் ஒரே வருடத்தில் ஒரு பந்துவீச்சாளரது பந்துவீச்சுப் பாணி தவறானது என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது ஒரு வருடம் பந்து வீசத் தடை விதிக்கப்படும். அதன் பின்னரே அவர் மீண்டும் பந்துவீசுவதற்கான மேன்முறையீட்டைச் …
-
- 0 replies
- 225 views
-
-
சதம் சதமாய்க் குவிக்கும் குமார் சங்ககாரா இங்கிலாந்தில் சரே அணிக்காக ஆடி வரும் குமார் சங்ககாரா கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் இன்று Northamptonshire அணிக்கு எதிராக 101 ஓட்டங்களை எடுத்து உள்ளார். http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804445.html
-
- 0 replies
- 261 views
-
-
கட்டலான் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : பார்சிலோனாவில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்ட வீரர்! கட்டலான் மாகாணம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை ட்விட்டரில் வெளியிட்ட காரணத்தினால், பார்சிலோனா அணியில் இணைந்த சில மணி நேரத்தில் செர்ஜி கார்டியாலா என்ற கால்பந்து வீரர் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரியல்மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையேயான எல்கிளாசிகோ மோதலின் போது, 'ஹாலா மாட்ரிட் 'என்று கடந்த இரு விண்டுகளுக்கு முன் செர்ஜி ட்விட் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பார்சிலோனா' பி 'அணிக்காக செர்ஜியோ கார்டியாலா ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு செர்ஜி கார்டியாலா மாட்ரிட் அணிக்கு ஆதரவாக வெளியிட்ட ட…
-
- 0 replies
- 453 views
-
-
ஆசை இல்ல பசி சார்... புனே அணியில் ரவிச்சந்திர அஸ்வின் போல் ஒருவன்! ‘எந்தக் குப்பனோ சுப்பனோ இத செய்ய முடியுமா?’- உன்னைப்போல் ஒருவன் படத்திற்காக எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய ஃபேமஸ் டயலாக். நேற்று நடந்த ஐ.பி.எல் ஏலத்தைப் பார்க்கும்போது நமக்கும் இந்தக் கேள்வி நமக்கும் எழுகிறது. தமிழக அணிக்காக வெறும் 3 ரஞ்சி போட்டிகள், இரு 50 ஓவர் போட்டிகள், 6 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடிய ஒரு வீரரால், ஐ.பி.எல்யில் நான்கரைக் கோடிக்கு ஏலம் போக முடியுமா என்று நினைக்கையில் நமக்குள்ளும் அக்கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், அது சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார் அதை எழுதிய வசனகர்த்தாவின் மகன் அஸ்வின் முருகன். ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி இவரை அவ்வளவு பெரிய தொகைக்கு அஸ்வின…
-
- 0 replies
- 462 views
-