விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
9 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு?: சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9 மில்லியன் டாலர் அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், விளம்பரங்கள் மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதுபோன்று சம்பாதித்த வருமானத்திற்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என்ற விமர்சனம் எழ…
-
- 0 replies
- 372 views
-
-
ஆபிரிக்காவின் கடைசி அணிகளாக மொரோக்கோ, துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு தேர்வு ஐவோரி கோஸ்டை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மொரோக்கோ அணி 2018 FIFA உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதிபெற்றதோடு மற்றொரு வட ஆபிரிக்க நாடான துனீஷியாவும் அடுத்த உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்ல முன்னேற்றம் கண்டது. இதன் மூலம் ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. ஏற்கனவே நைஜீரியா, எகிப்து மற்றும் செனகல் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியுள்ளன. ஐவோரி கோஸ்ட் தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ண போட்டியில் முன்னேறும் நோக்குடனேயே நேற்று (11) மொரோக்கோவை சொந்த மண்ணில் எதிர்கொண்டது. எனினும் கோல் காப்பாளர் சில்…
-
- 2 replies
- 372 views
-
-
நியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இங்கிலாந்து அணி 2:3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று 'Mount Maunganui' யில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஆரம்பானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 வி…
-
- 0 replies
- 372 views
-
-
எனது பந்துவீச்சு முறை கடவுள் எனக்கு அளித்தது: இடது கை அதிசய ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் ஷிவில் கவுஷிக். | படம்: கே.வி.எஸ். கிரி. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமாதிரியான ஆக்சனுடன் வீசிய குஜராத் லயன்ஸ் இடது கை ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் என்பவரை பலரும் கண்டிருக்கக் கூடும். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு நேரடியாக நுழைந்தவர், இன்னமும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடது கையை உயர்த்தி உடம்பை தாறுமாறாக வளைத்து பந்தை தனது ரிஸ்டின் உதறலுடன் சரியான லெந்தில் வீசி அசத்திய ஷிவில் கவுஷிக், அசப்பில் தென் ஆப்பிரிக்காவில் இதே போல் வீசிய பால் ஆடம்ஸ் என்ற இடது கை ஸ்பின்னரை நினைவு படுத்துகிறார். இடது கை லெக் ஸ்பின், கூக்ளி, என்று ப…
-
- 0 replies
- 372 views
-
-
18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல் தொடரின் 11ஆவது பருவகாலப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இம்முறைப் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் பெங்ளுருவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்தது. இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக 1,122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று(20) உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதன்படி, 578 வீர…
-
- 0 replies
- 372 views
-
-
இரு கையாலும் ஸ்பின் வீசும் பந்துவீச்சாளர்: புலம்பும் வர்ணணையாளர்கள்! (வீடியோ) ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச வருகிறார். இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என வர்ணணை சொல்லப்படுகிறது. வந்தவர் 4 பந்து இடது கையில வீசுகிறார். 5வது பந்தை வலது கையில் வீசினால் என்ன செய்வீர்கள். இப்படியும் ஒருத்தர் இலங்கை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் 19 வயதுக்குட்பட்ட அணியில் உள்ள கமிண்டு மெண்டிஸ்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைக்கிறார். அதாவது வலது கை பேட்ஸ்மேன் என்றால் இடது கையாலும் இடது கை பேட்ஸ்மேன் என்றால் வலது கையாலும் பந்துவீசி கமிண்டு அசத்துகிறார். ஏன்யா இப்படினு கேட்டால் ''கிரிக்கெட்டில் வலது கை பேட்ஸ்மேன் திடீரென்று இடத…
-
- 0 replies
- 372 views
-
-
10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ் இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எஞ்சலோ மெத்தியூஸ் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். போட்டியின் நான்காவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனத…
-
- 0 replies
- 372 views
-
-
136ஆவது ரோயல் - தோமியன் 'பிக் மெட்ச்' போட்டி ஆரம்பம் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 136 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் உலக கிரிக் கெட் வரலாற்றில் நீண்டகாலமாக இடை விடாது நடத்தப்பட்டுவரும் பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டியாகும். இவ்விரு கல்லூரிகளினதும் உத்தியோகபூர்வ வர்ணம் நீல நிறமாகக் காணப்படுவ தால் நீலங்களுக்கிடையிலான சமர் என அழைக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 372 views
-
-
மீண்டும் அணியில் இணைந்தார் மலிங்க : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவராக மலிங்க தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியும் அவரிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/16421
-
- 1 reply
- 372 views
-
-
2016-ன் நம்பர் ஒன் டி20 பவுலர் எத்தனை மெய்டன் ஓவர் வீசியிருக்கிறார்? #2016Rewind டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பங்கு அளப்பரியது; கடினமானதும் கூட . சிக்ஸர் விளாச வேண்டும் என வெறியோடு கிரீஸை விட்டு இறங்கி ஒருவரை ஏமாற்ற வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் சிங்கிள் அடிக்கத் துணிபவருக்கு, ஆசை காட்டி அவுட்டாக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பந்தையும் பலவாறாக யோசித்துச் சிறப்பாக பந்துவீச வேண்டும். அப்படி இந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசியவர்கள் பட்டியல் தான் இது. 10. ஃபால்க்னர் :- அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார் என இவர் மீது எப்போதும் ஒரு வருத்தம் ஆஸி ரசிகர்ளுக்கு இருக்கும். அதே சமயம் விக்கெட்டுக…
-
- 0 replies
- 372 views
-
-
பார்முலா 1 கார் பந்தயம்: ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரோஸ்பெர்க் முதன் முறையான சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் (உதாரணம்: ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ்). இதுவரை 20 போட்டிகளின் முடிவில் மெர்சிடெ…
-
- 1 reply
- 372 views
-
-
‘பார்முலா 1’ கார் பந்தயம்: 4-வது முறையாக இங்கிலாந்து வீரர் ஹேமில்டன் சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன், ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மெக்சிகோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார் பந்தயம். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம். 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது போட்டியான மெக்சிகன் கிராண்ட் பிரீ பந்தயம் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ் டேபன் வெற்றி பெற்றார். போட்ஸ்வால் டெரி போடஸ் 2-வது இடத்தையும், கிமிரெய்க்கோன் (பின்லாந்து) 3-வது இடத்…
-
- 0 replies
- 372 views
-
-
ஜிம்பாப்வேயிலும் போய் கேவலப்பட தயாராக இல்லை.. இந்திய அணியின் பயணம் திடீர் ரத்து! டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது…
-
- 0 replies
- 372 views
-
-
மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…
-
- 0 replies
- 372 views
-
-
மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம் கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 21 வயதுக்குட்பட்டோருக்கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதுஇ திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில…
-
- 1 reply
- 372 views
-
-
தொடர்ச்சியான 100 ஆவது டெஸ்ட் போட்டி சாதனையை நோக்கி பிறெண்டன் மெக்கலம் 2016-02-12 11:14:45 அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணித் தலைவர் ப்றெண்டன் மெக்கலமின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ஒரு நூற்றாண் டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலா ற்றில் பிறெண் டன் மெக்கலம் அரும் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். நியூஸிலாந்தின் வெலிங்டன் விளையாட்டரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் நாணயச் சுழற்சிக்காக அரங்கினுள் செல்லும்போது பிறெண்டன் மெக்…
-
- 1 reply
- 372 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி சகநாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நியூயார்க்: ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை பெண்கள் ஒற்றையர் பிரி…
-
- 0 replies
- 372 views
-
-
சங்ககாரவும் ஓய்வும் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து குமார் சங்ககார, ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் சிரேஸ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன, ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாலும் தற்போது சங்ககாரவும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் இலங்கை அணியை அது பலவீனப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வாளர்களும…
-
- 0 replies
- 372 views
-
-
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன் June 9, 2019 பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரினை அவு;திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறைய…
-
- 1 reply
- 372 views
-
-
இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஏழு வாரத் தொடர் ஜூலை 6இல் ஆரம்பம் மேற்கிந்தியத் தீவுகளுக்கான, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 9ஆம…
-
- 0 replies
- 372 views
-
-
ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு? ஜானவி மூலே பிபிசி மராத்தி 17 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP படக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. "உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வ…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
2022 இருபது - 20 உலகக் கிண்ணத்திலும் இலங்கைக்கு போராட்டமே ! (துபாயிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியிலும் இலங்கை முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்திலுள்ளதாலேயே அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடத்தைப் போன்று முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பின்னர் சுப்பர் 12 சுற்றில் பங…
-
- 0 replies
- 372 views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்! சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வே வீரர் மாக்னெஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். சவுதியின் ரியாத் நகரில் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்ஸெனை எதிர்கொண்டார். வெறும் 34 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார். பின்னர் டை பிரேக் (tie-break) முறையில் ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். இறுதியில் ஆறு வெற்றிகள், 9 சமன்கள் (draw) என வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம்…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க வருகிறார் அலன் டொனால்ட் இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவித்தலை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரையே அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு ஆலோசகராக செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 வயதாகும் அலன் டொனால்ட் தென்னாபிரிக்க அணியில் 1992ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட…
-
- 0 replies
- 371 views
-
-
ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் – அப்ரீடியின் டுவிட்டர் பதிவினால் சர்ச்சை ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்இ 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில்இ முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்இ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிர…
-
- 0 replies
- 371 views
-